ஓவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்க வேண்டிய செய்தியாகும். முக்கியமாக பதிவர்கள், வாசகர்கள் மற்றும் இணைய உரிமையாளர்கள் ஒத்துழைப்பு நல்குங்கள்.
பாதிக்கப்பட்டவர் |
இது அசினின் பிள்ளையார் பிடிக்க குரங்கு வந்த கதையாகும். இதில் உள் குற்றம் வெளிக் குற்றம் பார்க்கக் கூடாது தான் அனால் பாதிக்கப்பட்டது ஏழைகளல்லவா. திரையில் ஏழைகளுக்கு உதவத் துடிக்கும் நடிகர்களோ அல்லது அவர்கள் ரசிகர்களோ இதை கவனத்திலெடுங்கள்.
சம்பவம் என்னவென்றால் சில நாட்களிற்கு முன் யாழ் வந்திருந்த அசின் இங்குள்ள 300 வறியவர்களுக்கு விழிவெண்படல அறுவைச்சிகிச்சை இலவசமாக செய்து கொடுத்தார்.
இதை அவர் என்ன நோக்கத்திற்காக செய்தாரென்பது அவருக்குத் தான் வெளிச்சம் ஆனால் இதனால் பத்திற்கு மேற்பட்ட வறியவர்கள் பார்வையை இழந்திருக்கிறார்கள். இதற்கு அசின் பதில் கூற முடியாது தான் அப்படியானால் யார் பதில் கூறுவது. அப்படியானால் செய்த மருத்தவரின் கழுத்தைப் பிடிப்போமா..? (அவர் ஒப்பம் அருகே காட்டப்பட்டள்ளது)
மருத்துவர் ஒப்பம் |
அந்தப் பெரியவரை அணுகிய போது அவர் பல விடயங்களைச் சொன்னார். எனக்கும் அந்த ஒலிப் பதிவை இணைக்கத்தான் விருப்பம் ஆனால் அதை கேட்க முடியாது. அவற்றில் சிலதை கத்தரித்து எழுதுகிறேன்
1) எங்களுக்கு அசின் பார்க்க வரும் போது தான் தெரியும் அவர் தான் இதை செய்வீக்கிறார் என்று. முதலில் அரசாங்கம் செய்வதாகத்தான் நான் நினைத்தேன்.
2) இது இந்திய அரசாங்கத்தின் சதி 87 ல் ஒப்பரெசன் லிபரேசன் என்று வந்து எங்களைக் கொன்றார்கள். ராஜீவ் செத்தும் திருந்தல இப்ப இப்படி வாறாங்கள்...
இப்படி பல தமிழில் சொன்னார். அவருடன் சம்பவம் சம்பந்தமாக மேலும் கேட்டபோது
“எனக்கு ஒப்பேசன் நடந்து அடுத்த நாள் பலரை விடுவித்தார்கள். எனக்கு முழுதாகப் பார்வை வரவில்லை. எனக்கு மட்டுமல்ல பலருக்கு இதே நிலைதான். என் மகன் தான் எனக்கு துணைக்கு நின்றார் சிலருக்கு யாருமே இல்லை. மருத்துவரைக் கேட்டபோது இது மருந்தின் விளைவு தான் ஓரிரு நாளில் சரியாகிவிடும் என்றார் மறு நாள் ஓரளவு சரி வந்தது ஆனால் பார்க்க முடியாது இருந்தது. இப்போது ஒன்றுமே தெரியவில்லை இப்படி பத்துப்பேருக்கு மேல் இருக்கிறொம். இறுதியாக கிளினிக்கில் டொக்ரர் சொன்னார் லென்ஸ் மாற்றி வைத்துவிட்டார்கள் மாற்ற வேண்டும் 4500 ருபாய் கட்டுங்கள் கட்டினால் ஒப்ரெசனுக்கான டேட் (திகதி) தாறன் என்கிறார். அவரிடம் தனிப்பட செய்தால் 25000 ரூபா தேவைப்படும் கட்டினால் மறு நாளே செய்து கொள்ளலாம்” இப்படிச் சொன்னார் அனால் அவரிடம் 4500 ரூபாய் கூட இப்போது இல்லை போல் தான் தெரிகிறது.
இதற்கு முடிவென்ன..?
யார் பதில் சொல்லப் போகிறீர்கள்...?
தமிழராகிய எங்களால் இதற்கு என்ன செய்ய முடியும்...?
தயவு செய்து சிந்தியுங்கள். இவர் ஏற்கனவே வன்னிப் போரில் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர். இவரிடமும் பணம் இல்லை. இராமருக்கு உதவிய அணில் போலாவது ஏதாவது செய்யுங்கள். இந்தத் தகவலை உலகிற்கு சேருங்கள் முடிந்தால் சம்பந்தப்பட்டவருக்குச் சேருங்கள். இது எம் உறவுக்கு ஏற்பட்டுள்ள அவலம் என்பதை மறக்க வேண்டாம்.
இதற்கு சகல பதிவர்களும், வாசகர்களும், இணையத்தள உரிமையாளர்களும் ஒத்துழைப்புத் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
இந்தத் தகவல் பலரை சென்றடையணும் எனக் கருதினால் வாக்கிட்டு விட்டுப் போகுமாறு கேட்டுக்கொள்கிறேன்
குறிப்பு - தயவுசெய்து இக்கட்டுரையை யாரும் அசினுக்கெதிராகப் பயன்படுத்த வேண்டாம் இது எம் பிரச்சனை இதற்கு அவர் மட்டும் பொறுப்பாளியல்ல. அதை அசட்டை செய்தால் தான் அவர் மீது குற்றம். முதலில் எம் மலத்தை நாம் கழுவுவோம் பின்னர் அடுத்தவருடையதுக்காய் மூக்கை பொத்துவோம்.
96 கருத்துகள்:
இது இந்திய அரசாங்கத்தின் சதி 87 ல் ஒப்பரெசன் லிபரேசன் என்று வந்து எங்களைக் கொன்றார்கள். ராஜீவ் செத்தும் திருந்தல இப்ப இப்படி வாறாங்கள்..
haha.. super :D
இப்படி சமூகப்பணி செய்பவர்களை குறை கூறினால், பிறகு யார் வந்து உதவ போறார்கள். யாரும் தீங்கு செய்ய சமூக சேவை செய்வது கிடையாது, இதில் நீங்கள் இந்தியர்களை குறை சொல்லாமல், உதவி கேட்டிருக்கலாம்.
S.Sudharshan said...
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சுதர்சன்...
jagadeesh said...
உங்கள் கருத்தை ஏற்க முடியாது நாங்கள் தமிழ் நாட்டின் ரத்த உறவுகள் அனால் வடக்குகாரனின் எதிரிகள்.. சிலவேளை உங்களுக்கு என்னவோ தெரியல.. நான் சமூகப்பணி செய்பவரை குறை கூறுவதாக சொல்கிறீர்கள் முதலில் கட்டுரையை வடிவாக வாசியுங்கள் சகோதரா..
ஃஃஃஃ....இது அசினின் பிள்ளையார் பிடிக்க குரங்கு வந்த கதையாகும். இதில் உள் குற்றம் வெளிக் குற்றம் பார்க்கக் கூடாது தான் அனால் பாதிக்கப்பட்டது ஏழைகளல்லவா...ஃஃஃ
நீங்கள் இதைக்கவனிக்கலியா..?
உதவியா கேட்டிருக்கலாம் என்கிறீர்கள்.. அது சரி எங்களுக்கு தலைவிதி அது தானே பிறந்ததிலிருந்து பிச்சை தான் எடுக்கிறோம்.. சரி இப்ப கேட்கிறேன் .. (பிச்சையாக) உங்களால் ஆவன செய்ய முடியுமா..?
Pavam kannai ezhantha periyavargal, Varuththamana visayam.
Asin tamil padaththil nadikkum oru malaiyali. avar nalla ennaththil seithirukkalam. maruththuvarkalin thavaraga irukkum patchathil inthiyargalai thavaru solvathil niyayamillaiye sagothara?
தம்பி இது அசினின் ஒரு பசப்பு வேலை... முடிந்தால் இந்த வக்காளத்த வாங்குறவங்கள்... நடவடிக்கை எடுங்கள்...
விளம்பரத்துக்காய் அசின் செய்த வேலை வினையாய் முடிந்து விட்டது,
அவர் நல்ல எண்ணத்தில் செய்திருந்தாலும் பார்வை இழந்தது பெரியவர் தானே.
சே.குமார் said...
வருகைக்கும் நன்றி சகோதரம்..
தப்பாக நினைக்கிறிங்கள் நான் இந்தியரைக் குறை கூறவில்லை.. எமக்கு உடுக்க உடையில்லா நேரம் நீங்கள் வன்னியில் தந்த நிவாரணாத்தை நான் மறக்கவில்லை.
அடுத்த பதிவையும் எதிர்பார்க்கிறேன்.
உங்களை யாரப்பா உதவி கேட்டது. இந்தியா என்பது என்றும் ஈழத்தவர்களுக்கு உதவியும் செய்ததுகிடையாது, உபத்திரவம் செய்யாது இருந்ததும் கிடையாது. இந்த அவலத்திற்கு முற்றுமுழுதான காரணமே இந்தியாவேதான்.
அசின் சமுகப்பணி செய்யட்டும் யாரும் அவரைக்கேட்கவில்லைத்தான் என்றாலும் செய்வதாயின் சிறப்பாக செய்திருக்கலாம். ஆனால் அவர் சிலரால் கச்சிதமாக பயன்படுத்தப்பட்டார் என்பதே உண்மை.
சமுகசேவை செய்யுங்கள். ஆனால் தமிழர்களைக்கொன்றவர்களுடனேயே வந்து சமுகப்பணி செய்கின்றேன் என்றால் உலகத்தில் உள்ள தமிழன் எல்லாம் என்ன இன்னும் வட இந்தியா நினைத்துக்கொண்டிருப்பதுபோல சோத்துமாடுகளா என்ன?
எதிர்காலத்தில் சீனாவிடம் அடிவாங்கி இந்தியா குறிப்பாக வட இந்தியா சுடுகாடு ஆகட்டும், ஈழத்தமிழர்கள் எல்லோரும் அப்போது வந்து அங்கு சமுகப்பணி செய்கின்றோம்.
சூடான பதிவு , கருத்துகள் பலமாக உள்ளது
தவறு யார் பக்கம் இருந்தாலும் பாதிக்கப்பட்டவரின் நிலை? மனம் வலிக்கிறது. பெரும்பாலும் இப்படி ஏற்படுவது ஏழைகளுக்குதான் எனும்போது உள்ளதை விட மேலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அருண் said...
வருகைக்கு நன்றி சகோதரம்... நாங்கள் தமிழ் நாட்ட உறவுகளை என்றும் மறக்க மாட்டோம்..
Jana said...
அண்ணா உங்கள் கருத்திலும் நியாயம் இரக்கிறது.. அசின் இங்கு வரும் போது இப்படி முடிவெடுக்கவில்லை... அதை தான் பெரியவர் சொன்ன கருத்தே சொல்கிறது..
யாதவன் said...
ஃஃஃ...சூடான பதிவு , கருத்துகள் பலமாக உள்ளது...ஃஃஃ
ஆம் அண்ணா ஆனால் பலர் தப்பாக எடுக்கிறார்கள்... ஆனால் எங்கள் வீட்டுக் கோழிகளின் முட்டையில் மயிரே இருப்பதில்லை..
எஸ்.கே said...
நன்றி சகோதரா.... உண்மை தான் அவர்களிடம் பணம் இரந்தால் ஏன் இலவசத்தை எதிர் பார்த்து போகணும்..
வேற ஏதாவது ஓட்டு பட்டை இருக்கா? அனைத்திலும் ஓட்டு போட்டாச்சு
இவ எல்லாம் சமூக சேவை செய்யலைன்னு யார் அழுதா?கொஞ்சூண்டு சீன் காட்டிட்டு ஆயிரம் பேட்டி கொடுத்து லட்சம் பேருக்கு புத்திமதி சொல்லிகிட்டு திரியறா..அசின் ஒழிக...
கொடுமைகள்!!
யாரிடம் போய் நீதி எதிர்பார்ப்பது இனி??
மரத்தால் விழுந்தவனை மாடு குத்தின கதையாகிவிட்டது
"வலிக்கு மேல் வலி"
எப்படியெல்லாம் சோதனையும் வேதனையும் எம்மைச் சுற்றி வருது??
.....மருத்துவரின் கவனக்குறைவு - ஏனோதானோ என்ற மனநிலையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட பாதிப்பு..... மாற்று சிகிச்சை செய்து, கண் பார்வை கிடைக்க, வழி விரைவில் கிடைக்க வேண்டும்.
இந்த நடிகையை வரவழைத்து உலகை தமிழரை ஏமாற்ற சிங்கள கொலை வெறி அரசு செய்த சுதது மாத்து. ஏன் இந்தியாவில் கேரளாவில் ஏழைகள் கண்ணில் கோளாருள்ளவர்கள் இல்லையா? அவர்களுக்கு செய்தால் என்ன? இங்கு வந்து தமது தவறுகளை மூடி மறைக்க முயலும் அரசுகளுடன் சோந்து கூத்தடிக்க வேண்டுமா? படங்களில் நடிப்பதை விட்டு விட்டு எம் மக்களின் கண்ணீரிலும் துன்பத்திலும் இன்பம் காண நடிக்கா வேண்டாம். தமிழன் ஏமாந்தகாலம் மலையேறி விட்டது.
மிகவும் வேதனையான நிகழ்வுகள்தான்....
ராஜபக்சேயின் கூத்தடிக்க வரவழைத்த நடிகை அவள்.. அவள் பற்றி எழுதுவது கூட நமக்கு அசிங்கம் நண்பா....
ராஜபக்சேயின் கூத்தடிக்க வரவழைத்த நடிகை அவள்.. அவள் பற்றி எழுதுவது கூட நமக்கு அசிங்கம் நண்பா....
நொந்து போயுள்ள தமிழ் மக்களுக்கு உதவுங்கள் என உலகமே கோரிக்கை விட்டுக் கொண்டிருக்கும் போது, யாரப்பா உதவி கேட்டது என பதிவர் ஜனா இடுகையிட்டது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
சமூகப் பணியென கிடைக்கும் உதவிகள் அனைத்தும் எம்மவருக்கு கட்டாயம் தேவையானவையே, கண் சிகிச்சைக்கான செலவைத் தான் நடிகை அசின் ஏற்றுள்ளார், இதில் அவருக்கு எந்த விதமான வருமானமும் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை, இலங்கைக்கு வந்ததால் தமிழக திரைப்படத்துறையே நடிகையுடன் பகைத்துக் கொண்டது, இதில் விளம்பரம் எம்மாத்திரம்.
இப் பிழை ஏற்படக் காரணம் அந்த அறுவையை நடாத்திய வைத்தியரையே சாரும், ஆகவே வைத்தியரை நொந்து கொள்ளாமல் "எய்தவன் இருக்க அம்பை நோவானேன்".
அருமையான பதிவு, இப்படிப்பட்ட பதிவுகளைத் தொடருங்கள் மதி.
வாழ்த்துக்கள்.
கொடுமையான விசயம்தான்.
சசிகுமார் said...
நன்றி சகோதரா... தங்களுக்கு மட்டுமல்ல ஓட்டுப் போட்டு தமிழின ஒற்றுமையை வெளிக்காட்டிய அனைத்து உறவுகளுக்கும் சேர்த்து சொல்லிக் கொள்கிறேன்.
ஆர்.கே.சதீஷ்குமார் said...
வருகைக்கு நன்றி சகோதரா...
அசினுக்காக
ஃஃஃசெய்வன திருந்தச் செய்ஃஃஃ
மைந்தன் சிவா said...
நன்றி சகோதரம்
ஃஃஃ கடவுள் ஏன் கல்லானான்ஃஃஃ
மகாதேவன்-V.K said...
வருகைக்கு நன்றி சகோதரா...
ஃஃஃகொடுத்ததெல்லாம் கொடுத்தான்ஃஃஃ
Chitra said...
நன்றி அக்கா...
சிலவேளை அசின் மிகுதிப்பணம் கொடுக்கவில்லையோ...
rk guru said...
வருகைக்கு நன்றி சகோதரா...
கே.ஆர்.பி.செந்தில் said...
வருகைக்கு நன்றி சகோதரா...
ஈழவன் said...
வருகைக்கு நன்றி சகோதரா...
தங்களின் வெளிப்படையாக கதைக்கும் பண்பு மிகவும் பிடித்திருக்கிறது... ஒவ்வொருவரும் தங்கள் மனதில் பட்டதை எழுதியுள்ளார்கள் அது போல் தான் சகோதரன் ஜனாவும்... அவருக்கும் இவற்றால் பாதிப்புகள் இருக்கலாம்... அதை அவர் வெளிப்படையாக சொல்லியுள்ளார்..
அன்பரசன் said...
வருகைக்கு நன்றி சகோதரா...
//இப் பிழை ஏற்படக் காரணம் அந்த அறுவையை நடாத்திய வைத்தியரையே சாரும், ஆகவே வைத்தியரை நொந்து கொள்ளாமல் "எய்தவன் இருக்க அம்பை நோவானேன்".
//
அதுவேதான் என்கருத்தும்
Subankan said...
வருகைக்கு நன்றி சகோதரா...
அசினுக்காக
ஃஃஃசெய்வன திருந்தச் செய்ஃஃஃ
ஈழவன் said
நொந்து போயுள்ள தமிழ் மக்களுக்கு உதவுங்கள் என உலகமே கோரிக்கை விட்டுக் கொண்டிருக்கும் போது, யாரப்பா உதவி கேட்டது என பதிவர் ஜனா இடுகையிட்டது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
சமூகப் பணியென கிடைக்கும் உதவிகள் அனைத்தும் எம்மவருக்கு கட்டாயம் தேவையானவையே,
அருமையான நியாயமான கருத்து நன்றி ஈழவன்.
இதை வெளியிடட் உங்கள் துணிவைபாராட்டுகிறேன். ஊடகமும் ஒருவகை ஆயுதம்.
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
///...அருமையான நியாயமான கருத்து நன்றி ஈழவன்...///
ஃஃஃ...சமூகப் பணியென கிடைக்கும் உதவிகள் அனைத்தும் எம்மவருக்கு கட்டாயம் தேவையானவையே,...ஃஃஃ
நீங்கள் சொல்வது சரியென்றால் இப்போது நடந்திருப்பது போல் உதவி பெற்று எல்லோரும் பார்வையிழக்கணுமா...?
நிலாமதி said...
///...இதை வெளியிடட் உங்கள் துணிவைபாராட்டுகிறேன். ஊடகமும் ஒருவகை ஆயுதம்.
வெற்றிக்கு வாழ்த்துக்கள்...///
நன்றி சகோதரி..
Anonymous said...
பதிவர் ஜனா சொன்னது இருக்கட்டும் இப்படியான உதவிகளை எப்படி எதிர்பார்ப்பது.. இவற்றிலும் பார்க்க உணவில்லாமல் இறப்பதே மேல் போலுள்ளது...
எனது பதிவுகளை பார்வையிட,
www .lerociyan .blogspot .com
வைத்தியம் செய்த மருத்துவர்களை நாடவேண்டும்.
நான் அசின் இரசிகன் கிடையாது என்றாலும், அவர் நோக்கம் என்னவாக இருந்தாலும் (அது அசினைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது) இந்த நேரத்தில் அசினை நேரடியாக விரலை நீட்ட முடியாது.
குறித்த சத்திரசிகிச்சை செய்த வைத்தியர்களையும், வைத்தியசாலையையும் நாடவேண்டும்.
// இது அசினின் பிள்ளையார் பிடிக்க குரங்கு வந்த கதையாகும். //
அசின் பிள்ளையார் வாங்கிக்குடுங்கோ எண்டு சொல்ல குரங்கு வாங்கிக்குடுத்திருக்கிறாங்கள்....
சிறிய சந்தேகம்:
// 300 வறியவர்களுக்கு விழிவெண்படல அறுவைச்சிகிச்சை இலவசமாக செய்து கொடுத்தார். //
விழிவெண்படல அறுவைச்சிகிச்சை செய்ய முன்னர் கண் தெரிந்ததா? அல்லது மங்கல் மட்டுமா?
சத்திரசிகிச்சைக்குப் பின் lens வைக்கப்பட்டதா?
lens வைக்கப்பட்டபின்னரும் சிலருக்கு மூக்குக்கண்ணாடி அணிய வேண்டி வருமே?
கண் தெரியாமல் போய்விட்டது என்று யார் முடிவெடுத்தது?
கன்கொன் || Kangon said...
///...விழிவெண்படல அறுவைச்சிகிச்சை செய்ய முன்னர் கண் தெரிந்ததா? அல்லது மங்கல் மட்டுமா?
சத்திரசிகிச்சைக்குப் பின் lens வைக்கப்பட்டதா?
lens வைக்கப்பட்டபின்னரும் சிலருக்கு மூக்குக்கண்ணாடி அணிய வேண்டி வருமே?
கண் தெரியாமல் போய்விட்டது என்று யார் முடிவெடுத்தது? ...///
வருகைக்க நன்றி சகோதரா.. தங்கள் கெள்வி நியாயமானதே.. இந்தப் பெரியவர் நான் நீண்ட காலம் நன்கு அறிந்தவர்.... இது சம்பந்தமாக பார்த்த மருத்துவர் யாழில் உள்ள பிரபல கண் அறுவைசிகிச்சை நிபுணர் தான்..
'மிகச்சிறந்த sharing button'- tell a friend sharing button for every posts in your blog
http://ramasamydemo.blogspot.com/2010/09/sharing-button-tell-friend-sharing.html
(Hi, people can share your essays with my friends using email post link icon u have now in every posts only if they know their friends email id in their mind's memory...so place the tell a friend button below every posts as said in the above link of my dummy blog.)
நான் உங்களை யாரப்பா உதவி கேட்டது என்று சொன்னது இந்தியாவைத்தான். நண்பர் ஈழவன் அவர்களே இந்தியா உதவி என்று வந்தாலும் அதற்குள் ஆயிரம் உபத்திரவம் மறைந்திருக்கும். வரலாறு எமக்கு கற்பித்தது ஒரு சந்தாப்பம் அல்ல. அதைத்தான் கூறவந்தேன். ஒரு உதவிக்குள் ஆயிரம் உபத்திரவம் தேவையா என்ன? இப்பொழுது புரிந்திருக்கும் என நினைக்கின்றேன்.
இதைவிட, பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்ற நாடுகள் ஸ்தாபனங்கள் தொண்டு நிறுவனங்கள் என்பன எந்தவித விளம்பரமும் இல்லாமல் மில்லியன் கணக்காக உதவிகளை செய்துகொண்டிருக்கின்றார்கள்.
ராமர் மசூதி இடிக்கப்பட்டதற்கு தீர்ப்பாம்! அப்படி என்றால், 1987 முதல் 1990களின் முற்பகுதிவரை ஈழமண்ணில் இந்திய இராணுவத்தின், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, இறைமைமீறல்களுக்கெல்லாம் ஏப்போது தீர்ப்பு?
@ அனானி அறிவாளி -
// இதில் உள்ள அரசியலைபார்க்காமல் வைத்தியரின் கோளாறு என்று மட்டும் பொத்தாம் பொதுவாக பார்க்க முடியாது. //
அறிவு.
சனத்துக்கு கண் தெரியாமப் போனதும் மகிந்தவின்ட சதி எண்டு சொல்லுவீர் போல கிடக்கு?
இந்தப் பதிவு சத்திரசிகிச்சையின் பின் சத்திரசிகிச்சை வெற்றியளிக்கவில்லை என்ற கருத்துத் தொடர்பாக மட்டும்.
// இலங்கை அரசின் எதிர்ப்பை சரி செய்யவும் அசின் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகளை உருவாக்குகிறது //
அசினின்ர அப்பா, அம்மா சிங்களம் எண்டுறியளோ அண்ண?
உருவாக்கிறது எண்டா என்னண்ண?
// அசின்கு இதில் கிடைத்த லாபங்கள் பல உண்டு. //
உங்களுக்கும் பங்கு தந்தவாவோ?
ஆதாரத்தோட கருத்துகள வெளியிடுங்கோ பாப்பம்?
// தன்னை காப்பற்றி கொள்ள ஈழ தமிழர்களை பகடை காயாக ராஜபக்சேவுடன் இணைந்து செய்யல பட்டு இருக்கிறார் //
சரியாச் சொன்னியள் பாருங்கோ.
இனி ராஜபக்சே ஆளுற நாட்டில உழைப்பு வேணாம்.
இங்கால படத்த அனுப்பாம ராஜபக்வ புறக்கணிப்போம்.
// இதற்க்கு ஆதரவாக தமிழகத்தில் ஈழ மக்களின் விடுதலை போருக்கு ஆதரவாக இருந்த திரைப்பட சங்கத்தை பிளவு படுத்தி இருகிறார்கள். //
அண்ணே!
எந்த நாட்டில அண்ண இருக்கிறியள்?
போர் முடிஞ்சு ஒண்டரை வருசமாகுது.
இனி விடுதலை எல்லாம் கிடையாது.
இனி சனம் உயிரோட வாழுற போராட்டம் தான் சனத்துக்கு.
போருக்கு ஆதரவளிச்சுப்போட்டு போர் முடிஞ்சுது எண்டோண்ண அதுக்குப் பிறகு என்னண்ண செய்தவை உவ?
// அசின் அப்பாவி அல்ல. //
நீங்கள் அப்பாவியோ?
அப்பாவியா இருந்திருந்தா உங்கட பெயரோட வந்து நேர்மையாச் சொல்லியிருப்பியளே?
நான் கூட அப்பாவி இல்ல. நானும் அனானி தான்.
// ஈழ மக்களுக்கு உதவி செய்யகாதிருக்கும் செஞ்சிலுவை சங்கத்தை,ஐ.நா பிரிவுகளை அனுமதிக்காமல் //
பாகிஸ்தான் அண்மையில் இந்தியாவின்ர நேரடி உதவிகளை நிராகரிச்சுப்போட்டு ஐ.நா சபையூடாக அதே உதவிகளைப் பெற்றது ஞாபகம் இருக்கோண்ண?
தன்ர நாட்டுக்குள்ள யார் யார் வரோணும் எண்டு அந்த நாட்டு அரசாங்கம் தன்ன எதிர்க்காதவங்களத்தானே உள்ளுக்குள்ள விடும்?
// சர்வதேச ஊடகங்களை அனுமதிக்காமல் //
அவங்கள் வந்து சனத்துக்கு சாப்பாடு குடுப்பாங்களோ?
// அசின்க்கு மட்டும் அனுமதி கொடுத்தது எப்படி? எதற்கு? //
அறிவு!
அசின் இங்க வந்தது படப்பிடிப்புக்கு அண்ண.
இங்க அண்ணன் சீமான் வந்திருக்கிறாக, அண்ணன் விவேக் ஓபராய் வந்திருக்கிறாக... மணிரத்னம் வந்திருக்கிறாக, அண்ணன் மாதவன் வந்திருக்கிறாக, அக்கா பாவனா வந்திருக்கிறாக, பிரகாஷ்ராஜ் வந்திருக்கிறாக, அக்கா சிம்ரன் கூட வந்திருக்கிறாக... இவ்வளவு பேரும் முந்தி வந்தாக்கள்.
இப்ப சல்மான்கான் வந்திருக்கிறாக, மற்றும் அவர்தம் படக்குழுவினரெல்லாம் வந்திருக்கிறாக...
என்னண்ண அசின மட்டும் ஏன் விட்டது எண்டு காமடி பண்ணுறியள்?

அசின் வாழ்க...
சொந்த சரக்கை எழுதலாமே? ஏன் பிற தளங்களிலிருந்து ஈயடித்து எழுத வேண்டும்? இது ஏற்கனவே newjaffna.com இல் அதன் இணை எழுத்தாளரும், யாழ் செய்தியாளருமான பிரகாசன் எழுதிய செய்தி.. சொந்தமாக எதையாவது எழுதுங்கள் தோழா. மற்றவர்களின் முயற்சிக்கு உங்களின் பெயரினைப் போட்டு சுயலாபம் தேட வேண்டாம்.
http://newjaffna.com/fullview.php?id=NDg3
இனிமேல் இவ்வாறான பதிவுகளை போடும் போது எங்கிருந்து எடுத்தது என்று எழுதினால் நன்றாக இருக்கும்.
மூன்றுவேளை மூக்கைப்பிடிக்கத் தின்றுவிட்டு, தினமும் ஐந்துவேளை அடுத்தவனைத் திட்டத்தானே தமிழனுக்குத் தெரியும்? இதிலே அசின் செய்த தவறு என்ன என்று தெரியவில்லை. தலைப்பில் அசினைப்போட்டு ஹிட்ஸ் தேடும் முயற்சியாகவே இதைப் பார்க்க முடிகிறதேயன்றி உதவிசெய்யும் மனப்பாண்மையை உங்களிடத்தில் காணமுடியவில்லை. மன்னிக்கவும்.
உலகமே யுத்தத்தில் சிக்கிக்கொண்டுள்ள மக்களுக்கு உதவி செய் என்று கேட்டபொழுது. உதவி செய்ய வந்த எவரையும் அனுமதிக்கவில்லையே? அப்படி உலகமே கேட்ட சம்பவம் நடந்து பல மாதங்களின் பின்னர்தான் அசின் சீன் ஓடியது.
ஐ.நாக்கு கொடுக்காத அனுமதி, பிற நாடுகளுக்கு கொடுக்காத அனுமதி. அசினுக்கு கொடுக்கப்பட்டு, முதல்பெண்மணியே கூட வருகின்றார். இங்கே சிலபேர் ஞாயங்கள் பேசுறதுதான் வேடிக்கை.
அந்த ஆள் கேட்டது உண்மைதான். உங்களை யார் உதவி செய்யச்சொல்லி கேட்டது?
ஐ.நாவை கேட்டோம், மேற்கத்தைய நாடுகளை கேட்டோம். அவ்வளவே.
@பிரகாசன்
//சொந்த சரக்கை எழுதலாமே? ஏன் பிற தளங்களிலிருந்து ஈயடித்து எழுத வேண்டும்? //
அடங்கொய்யா... அதுதான் சில ஜென்மங்களுக்கு எழுதமுதல் அதை சற்று யொசித்துப்பார்க்கும் அறிவு அறவே கிடையாது. மதி.சுதா இதை எழுதியது நேற்று அதில் உள்ளது இன்று. அதுகூட கீழே மதி.சுதா என்றுதான் உள்ளது.
பிரகாசன் said...
அடங்கொய்யால இப்படி ஒரு தனித்துவமானவர் மீது குற்றம் சுமத்த உங்களுக்கு எப்படி மனது வந்தது. நான் எப்போதாவது கொப்பியடிப்பதை உறுதிப்படுத்தினால் அன்றிலிலிந்து என் வலைப் பதிவை நான் கைவிடுகிறேன். நீங்களும் சராசரித் தமிழன் என்பதைக் காட்டிவிட்டீர்கள்... என் மனதைப் புண்படுத்திவிட்டீர்கள்.. பரவாயில்லை இனியாவது மற்றவரிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.. எனக்காக வாதிட்ட அனாமிக்க மிக்க நன்றி...
ஃஃஃ...மூன்றுவேளை மூக்கைப்பிடிக்கத் தின்றுவிட்டு, தினமும் ஐந்துவேளை அடுத்தவனைத் திட்டத்தானே தமிழனுக்குத் தெரியும்? இதிலே அசின் செய்த தவறு என்ன என்று தெரியவில்லை. தலைப்பில் அசினைப்போட்டு ஹிட்ஸ் தேடும் முயற்சியாகவே இதைப் பார்க்க முடிகிறதேயன்றி உதவிசெய்யும் மனப்பாண்மையை உங்களிடத்தில் காணமுடியவில்லை. மன்னிக்கவும்...ஃஃஃ நீங்கள் அனாமியில்லாமல் சொல்லியிருந்தால் நீங்கள் யாரென்று தெரிந்திருக்கும். என்னைப் பொறுத்த வரை எனக்கு தகுதியிருக்கிறது. என்னை அளப்பதற்கு உங்களிடம் என்ன அளவு கோல் இருக்கிறது. எனது புறோபைலை பாருங்கள்..
A sin.
ஜெரி ஈசானந்தன். said...
வருகைக்கு நன்றி சகோதரா...
ஒரு அனாமி தலைப்பை பற்றி கருத்திட்டள்ளார்.. ஏற்றுக் கொள்கிறேன் அனால் நீங்கள் வடிவாக ஒரு முறை கட்டுரையை வாசிக்கவும்.
கொத்துக் கொத்தாய் குண்டுகள் போட்டு கொல்லும் போது ஒரு ஒரு நாயும் காப்பாற்ற வரவில்லை. உதவி புரிய வந்த சில மனிதநேய அமைப்புக்களை கூட விடவில்லை. எல்லாம் முடிந்தபின் கூழுக்கு மாரடிக்க வந்த நடிகையின் செயல் இது. இவர்கள் இங்கு வந்தது உதவி செய்யவா? அல்லது குற்றுயிராய் கிடக்கும் மிச்சத் தமிழனையும் அழிக்கவா? யாழ்
புறக்கணிக்கனும்னு நான் கொஞ்ச நாள் முன்னால எழுதும்போது ஓடி ஓடி வாதம் பண்ணாங்க.
எல்லாம் ராஜபக்சே செய்யற ஃபிலிம் வேலைன்னு சொன்னா யாருக்குப்புரியுது?
நடிகை அசின் இதில் முதல் குற்றவாளியாகிறார்...நிச்சயம் அவர் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்..இதை மக்களிடம் கொண்டு சேர்க்க என்னாலான பங்களிப்பை செய்கிறேன் நண்பரே..
to jana:
இலங்கைக்கு வந்து ராவணனையே கொன்றவர்கள் நாங்கள். சீனாவெல்லாம் எம்மாத்திரம். வயிற்ருக்கு சோறு இல்லனாலும், வெட்டிப் பேச்சுக்கு மட்டும் குறைவில்லையே
ஐயோ என்ர இணைய இணைப்பு மெதுவாக் கிடக்கூ எல்லாம் ராஜபக்ஷ செய்யிற வேலை.
ஐயோ எனக்குப் பசிக்குது - எல்லாம் ராஜபக்ஷ பண்ணுற வேலை.
ஐயோ எனக்கு நித்திரை வருது - எல்லாம் ராஜபக்ஷ பண்ணுற வேலை.
ராஜபக்ஷ ஒழிக.
//jagadeesh said...
to jana:
இலங்கைக்கு வந்து ராவணனையே கொன்றவர்கள் நாங்கள். சீனாவெல்லாம் எம்மாத்திரம். வயிற்ருக்கு சோறு இல்லனாலும், வெட்டிப் பேச்சுக்கு மட்டும் குறைவில்லையே
//
ரொம்பத்தான் துள்ளாதீங்கப்பு, முடிஞ்சா ஊழலில்லாம ஒரு போட்டிய ஒழுங்கா நடத்திக் காட்டுங்க. வாழ்க்கை ஒரு வட்டம். செய்த பாவங்கள் ஒரு காலமும் சும்மா விடாது
தவறாக நினைக்கவேண்டாம், கோககோல அனுசரணையில் இடம்பெற்ற விளயாட்டு நிகழ்வில் கலவரம் ஏற்பட்டு சிலர் பாதிக்கபட்டால் அதற்க்கு அனுசரணையாளரான கோககோலாவா பொறுப்பு? இந்த பதிவிற்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை நன்பரே. இதில் அசினின் தவறு என்று எதை கூறுகிறீர்கள் என்பதை எனக்கு புரியும்படியாக கூறுங்கள்.
முகிலன் said...
///..புறக்கணிக்கனும்னு நான் கொஞ்ச நாள் முன்னால எழுதும்போது ஓடி ஓடி வாதம் பண்ணாங்க...///
நன்றி... சகோதரம் தங்கள் லிங்கையும் போட்டிருந்தால் எனக்கு சில விசயங்களுக்க உதவியாக இருந்திருக்கும்..
padaipali said...
ஃஃஃ...நடிகை அசின் இதில் முதல் குற்றவாளியாகிறார்...நிச்சயம் அவர் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்..இதை மக்களிடம் கொண்டு சேர்க்க என்னாலான பங்களிப்பை செய்கிறேன் நண்பரே....ஃஃஃ
நன்றி சகோதரா நான் என் எழுதினேன் என்று உங்களுக்கு மட்டும் தான் புரிந்திருக்கிறது..
jagadeesh said...
ஃஃஃ...இலங்கைக்கு வந்து ராவணனையே கொன்றவர்கள் நாங்கள். சீனாவெல்லாம் எம்மாத்திரம். வயிற்ருக்கு சோறு இல்லனாலும், வெட்டிப் பேச்சுக்கு மட்டும் குறைவில்லையே...ஃஃஃ
நீங்கள் ஜனாவுக்கு செல்கிறீர்களா அல்லது ஒட்டு மொத்தமாக சொல்கிறீர்களா..? நாங்கள் பிச்சை எடத்த தின்பவர்கள் தான் அதற்காக மற்றவனின் எச்சில் கையை நக்கமளவுக்கு பசி தாங்கத் தெரியாதவர்கள் இல்லை... வட நாட்டானுக்கெதிராக 12,31 நாள் பசியிருந்தவரும் இருக்கிறார்கள்... பழநெடுமாறனின் புத்தகத்தை வடிவாக வாசித்து விட்டு எம்மை விமர்சியுங்கள்...
கன்கொன் || Kangon said...
நன்றி கான்கோன் நான் ஏன் எழுதினேன் என்று யாருக்குமே புரியுதில்லையே...
எப்பூடி.. said...
சகோதரம் உங்களுக்கு எப்படிப் பதில் சொல்வதென்று தெரியவில்லை தான்... தலைப்பை நான் சாதாரணமாகப் போட்டிருந்தால் இந்தத் தகவல் உலகிற்கு சேர்ந்திருக்குமா..? பத்தோடு பதினொன்று தான்.. அண்மையில் ஒரு கண்ணன் பக்தரே கீதையைப் பற்றி தரக் குறைவாக தலைப்பிட்டு பதிவெழுதியத அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்...
ஃஃஃஃஃ...அனுசரணையாளரான கோககோலாவா பொறுப்பு? இந்த பதிவிற்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை நன்பரே. இதில் அசினின் தவறு என்று எதை கூறுகிறீர்கள் என்பதை எனக்கு புரியும்படியாக கூறுங்கள்....ஃஃஃஃஃ
அசினைப் பற்றி சொல்வதை விட எமது நல்லுர் ஆலயத்தில் நடப்பதையே எடுத்துப் பாருங்கள்...
to jagadeesh:
கண்மூடித்தனமாக தங்கள் கருத்தை முன்வைக்காதீர்கள். தங்களின் நாட்டுப் பற்றைக் காட்ட இது தருணமல்ல. நானும் ஒரு இந்தியத் தமிழன் என்ற முறையில் பேசுகிறேன்.
இலங்கைத்தமிழர்களின் உள்ளத்தைப் புண்படுத்தி தங்களின் பேச்சாற்றலைக் காண்பிக்க முயல்வது அறுவருக்கத் தக்கது.
***********************
வாழிய செந்தமிழ்!
வாழிய தமிழ் மக்கள்!
வாழிய தமிழ்வாழ்விடங்கள்!

@jagadeesh
இலங்கை வந்து ராவணை வென்றனீங்களா? போங்கடா போக்கத்தவனுகளே. கதைக்கத்தெரியும் என்று எல்லாவற்றையும் கதைக்க கூடாதுடி.
யாருக்கடா சோத்துக்கு வழியில்லை. உங்களைமாதிரி மானங்கெட்ட சோத்தை தின்னுபுட்டு. வோட்டு போடுற ஆளுகள் இல்லைடா ஈழத்தமிழர்கள்.
வாய்யாலம் வேண்டாம் அப்பு. பாகிஸ்தான் என்றதும் பம்முறதும், சீனா வந்தால், இழிக்கறதும் உலகத்திற்கே தெரியும். பொறுத்திருந்துபார். சீனாக்காரன் உங்களை ஓட அடிக்காட்டி.
முதல்ல உதயநிதியின் படத்துக்கு பின்னால ஒழிந்திருந்து வெட்டுவேத்துக்கதை பேசுவதை நிறுத்திவிட்டு தைரியம் இருந்தால். உன் படத்தை போட்டு பேசு. அப்புறம் உன் வீரம் மதிக்கப்படும்.
இந்திய நண்பர்களுக்கு,
இங்கு உங்களுக்கு எதிராக கேவலமானமுறையில் வைக்கப்படும் கருத்துக்கள் இங்குள்ளவர்களின் பொதுக்கருத்துக் கிடையாது.
ஒரு சிலரின் தனிப்பட்ட குரோதக் கருத்துகளே அவை.
புரிதல் இருக்கும் என்று நம்புகிறேன்.
மிதுன் said...
வருகைக்கு நன்றி மிதுன்...
ராவணன் said...
வருகைக்கு நன்றி சகோதரா...
கன்கொன் || Kangon said...
ஃஃஃ...இந்திய நண்பர்களுக்கு,
இங்கு உங்களுக்கு எதிராக கேவலமானமுறையில் வைக்கப்படும் கருத்துக்கள் இங்குள்ளவர்களின் பொதுக்கருத்துக் கிடையாது.
ஒரு சிலரின் தனிப்பட்ட குரோதக் கருத்துகளே அவை.
புரிதல் இருக்கும் என்று நம்புகிறேன்...ஃஃஃ
நன்றி கான்கோன் நான் சொல்ல நினைத்ததை நீங்களே சொல்லிவிட்டீர்கள்...
//// சொந்த சரக்கை எழுதலாமே? ஏன் பிற தளங்களிலிருந்து ஈயடித்து எழுத வேண்டும்? இது ஏற்கனவே newjaffna.com இல் அதன் இணை எழுத்தாளரும், யாழ் செய்தியாளருமான பிரகாசன் எழுதிய செய்தி.. சொந்தமாக எதையாவது எழுதுங்கள் தோழா. ////
newjaffna மற்றவர்களின் தளங்களில் இருந்துதான் பிரதி எடுத்து பிரசுரிக்கிறார்கள். அவர்கள் தான் யாரிடமிருந்து சுட்டோம் என போடுவேண்டும் நண்பரே.
சகோதரா ,
அசின் இதற்கு முன்பே சமுக நோக்கத்துடன் நெறைய நல்ல விசயங்களை செய்துள்ளார்.
அசின் அதுபோலவே இதையும் நல்ல நோக்கத்துடன் தான் செய்து இருப்பார்.சில பொறுப்பற்ற தனத்தால் இவ்வாறு நடந்து விட்டது.அசின் இதற்கு ஒரு விதத்தில் பொறுப்பு .
நமது இனம் ஒரு புறம் அழிந்து கொண்டிருந்த வேளையில் நாம் அனைவரும் பாப்கார்ன் சாப்பிட்டு விட்டு ரஜினி படமோ , நமிதா படமோ பார்த்து விட்டு இடை இடையே செய்தியில் இந்த கொடுமையை பார்த்து உச் கொட்டி விட்டு மறந்து இருப்போம்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு எத்தனையோ தமிழ் மக்கள் துடிதுடித்து இறந்தார்கள்.
அந்த ஈன செயலை வெறும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நாம் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் பொறுப்பு தான்.
இது எதோ ஒரு தமிழனோ சில கூட்டமோ தட்டி கேக்க வேண்டிய விசயமில்லை.நாம் தேர்ந்தெடுத்த அரசு இதை செய்ய வேண்டும் அல்லது செய்விக்க வேண்டும் ...
தற்போது நம்மை ஆட்சி செய்யும் அரசாங்கம் சிங்க கூட்டம் அல்ல ...குள்ள நரி கூட்டம்..........
இந்த மாதிரி ஒரு கூட்டதிடம் நாம் மாட்டி கொண்டது நம் துரதிஷ்திடம்........
ராஜ பக்சே போன்ற ஒரு மனிதனை (!) நமது அரசாங்கமே பல் இளித்து வரவேற்பது கொடுமை ....
உணர்ச்சி வசப்பட்டு ஒருத்தரை ஒருவர் திட்டி கொள்ளவது தான் நமது தற்போதைய லாபம் ....
சகோதரா,தாங்கள் இலங்கை தமிழ் மக்களை நேரில் சந்தித்து எதவாது தங்களால் முடிந்த உதவி செய்து கொண்டு உள்ளீர்களா ??
@ தனி காட்டு ராஜா said...
////...சகோதரா,தாங்கள் இலங்கை தமிழ் மக்களை நேரில் சந்தித்து எதவாது தங்களால் முடிந்த உதவி செய்து கொண்டு உள்ளீர்களா ??....////
வருகைக்கு நன்றி சகோதரா... தங்கள் கேள்வி மிகவும் நியாயமானது.. யாரும் என்னை ஏன் கெட்கவில்லை என நினைத்த விடயம்... இப்படி நான் அசின் ரசிகரை பகைக்க ஏன் துணிந்தேன் (உண்மையில் தலைப்பில் மட்டும் தான் அவரை கேவலமாக எழுதினென் ஏனென்றால் அப்படி எழுதாவிடில் இந்த விசயம் ஒர சிலருக்கத் தான் போயிருக்கும்) வன்னிப் போரில் இறுதிக் காலம் வரை ஒரு தனியார் மருத்துவனாக இருந்தவன்.. தடுப்பு முகமிலிருந்து ஒரு சில மாதங்களின் மன் தான் யாழ் வந்தவன் மேலும் அறிய என் லேபிளில் உள்ள வன்னி என்பதை சொடுக்கி பாருங்கள் சகோதரா....
//வன்னிப் போரில் இறுதிக் காலம் வரை ஒரு தனியார் மருத்துவனாக இருந்தவன்.. தடுப்பு முகமிலிருந்து ஒரு சில மாதங்களின் மன் தான் யாழ் வந்தவன்//
என்னை போன்று எதோ கொஞ்ச நேரம் இப் பிரச்சினை பற்றி பேசி விட்டு மீண்டும் பிழைப்பை பார்க்க சென்று விடும்(சூழ்நிலை கைதி ??) ஆயிர கணக்கான தமிழனை போல் அல்லாமல் ..தாங்கள் நேரிலே நெறைய விசயங்களை பார்திருப்பீர்கள் ...உணர்திருபீர்கள் .....முடிந்த உதவி செய்து இருப்பீர்கள்..... தங்கள் நற்பணி தொடரட்டும் ....
தமிழ் நாட்டையே தாங்கி பிடிக்கும் அரசியல் வாதிகள் போல தமிழ் வலையுலகத்தை தாங்கி பிடிக்கும் பிரபல பதிவர்கள் ஒரு கருத்தும் சொல்ல காணோம் ....ஒரு வேலை இந்த செய்திய அசின் கிட்ட சொல்ல முயற்சிசெய்து கொண்டு உள்ளார்களோ ......
இந்த மாதிரி செய்திகளை பற்றி பேசவே என் போன்று நெறைய பேர் யோசிக்கும் வேளையில் ...உங்கள் முயற்சிக்கு உரிய பலன் கிடைக்கட்டும் .......
சகோதரா ,
கழுகு தளத்தை தொடர்பு கொண்டால் இது போன்ற செய்திகள் வேகமாக பரவும் .....நானும் மெயில் செய்கிறேன் ...
http://kazhuhu.blogspot.com/
தனி காட்டு ராஜா said...
நன்றி சகோதரா...
அன்பு நண்பர்களுக்கு,
பார்வை இழந்த உறவுகள் எவ்வளவு எதிர் பார்ப்புடன் சிகிச்சைக்கு சென்றிருப்பார்கள்.அவர்களின் நிலமையில் மாற்றத்திற்கான வழி வேண்டும்.ஆனால் மதிசுதா வைத்தியர்கள் அல்லது பாவிக்கப்பட்ட மருந்துகளின் பிழையால் எற்பட்ட பிரச்சனையை வைத்துக்கொண்டு இவ்வளவு பேர்களை மோத வைத்த திறமைக்கு வாழ்த்துக்கள்.ஆனால் ஒன்று இந்த பிரச்சனைக்கு எல்லாம் இராவணணை கூட்டிக்கொண்டு வந்தது ரெம்ப ரெம்ப ஓவர்......
ரொம்ப கொடூரம்.
படைப்பாளியின் வலைப்பூவில் நீங்கள் சொல்லாமல் இருந்தால் இதை நான் இழந்திருப்பேன்.
நன்றி படைப்பாளியையும் சேறும்.
உலக தமிழ் உறவுகளேளே...!
அசின் யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது நேரில் சென்றவன் என்பதாலும் தமிழினத்தில் பிறந்தவன் என்பதாலும் என் கருத்தை கூறுகின்றேன்...
யாழ்மக்களின் வாழ்க்கையை பார்வையிட வந்த ஒரே நடிகை என்பதாலும் வந்து கலைநிகழ்ச்சியோ ஊடக சந்திப்போ(புகைப்படம் கூட எங்கள் கமிராவில் தென்னிலங்கையிலிருந்து வந்தவர்களே எடுத்து தந்தார்கள்) நடத்தாமல் வைத்தியசாலைக்கு சென்றதை வரவேற்கிறன்.
இப்பதிவை எழுதியவர் முள்ளிவாக்கால் வரை சென்று வைத்தியதுறையில் பணிபுரிந்து மீண்டுவந்தவர் என் அவர் சொல்லியிருப்பதால் சில விடையங்களை எடுத்துக்கூற முழு அவருக்கு தகுதியும் இருக்கிறது. சிலரது கருத்துகள் அவர்களின் தனிப்பட்ட மனநிலையை பிரதிபலிக்கின்றது.
3 நேரம் சாப்பிட்டுவிட்டு சாவதே வாழ்க்கை என்று நினைப்பவர்களினதும் பயனுள்ள வாழ்ககையை வாழவேண்டும் என நினைப்பவர்களின் கருத்துக்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.
8 கோடி தமிழரில் இருக்கும் சில குணங்கள் ஒன்றரைக்கோடி போர் உள்ள இனத்தில் இல்லாமலிருப்பதே எமது இன்றய நிலைக்கு காரணமாகும்...
நல்ல தாயின் வயிற்றில் பிறந்தவர்கள் எந்த அரசியலுக்கும் விலைபோகாது கவரிமான் கருத்துகளையே வெளியிடுவார்கள்.
சில சைக்கோகளின் கருத்துகளுக்கு கோபப்படுவது செவிடன் காதில் ஊதிய சங்குக்கு சமம்.
இன்னும் இரண்டு தலைமுறையின் பின்னர் நம் சந்ததியினர் நாம் பேசும் மொழியையே பேசுவார்களா என சிந்தியுங்கள்... நமக்குள் வேற்றுமை வேண்டாமே!
நன்றி

இலங்கை வந்து ராவணனை கொன்ற நல்ல உள்ளங்ககளுக்கு
நீங்கள் வந்தபோது இலங்கையில் எந்த இனம் இருந்திருக்கிறது எனவும் ஆராய்ந்து சொல்லுங்களேன்..
எனக்கெண்டா தமிழர் இல்லை போலிருக்கிறது...
அகதிகளாக தஞ்சமடைந்து இந்தியாவையும் பகைத்து இலங்கையையும் எதிர்த்து சோத்துக்கே அலையும் உங்களுக்கே இவ்வளவு வாய்க்கொழுப்பு இருக்கும் போது உங்களுக்கு புகழிடமும் தந்து நிவாரணமும் அனுப்பி உங்களுக்காக பாராளுமன்றத்தில் பரிந்து பேசிய எங்கள் ஊர்க்காரர்களை என்னவென்று சொல்வது..?
இனியும் செய்திகளில் அனுதாபத்தை சம்பாதித்து பிளைப்பு நடத்த பார்க்கிறீர்கள்.
தீவிரவாதம் ஒழிந்தபிறகும் எதற்காக தமிழ்நாட்டிலேயே ஒட்டிக்கொண்டுள்ளீர்கள்?
Anonymous said...
5 October 2010 00:52
சகோதரா ஜகதீசுக்கு சொன்னதையே உங்களுக்கும் சொல்லிக் கொள்கிறேன்... தங்களின் செயலால் இந்திய நண்பர்களிடம் இருக்கும் இலங்கைத் தமிழர் உறவுக்கு பங்கம் ஏற்படுத்தப் பார்க்கிறீர்கள்... தயவு செய்து என் இந்திய நண்பர் யாரெனும் இவருக்குப் பதிலளிக்கவும்....
////Anonymous said...////
நீயெல்லாம் ஒரு தமிழ் நாட்டுக்காரனா..? இங்கு நீயிருப்பதால் தான் எமது இடம் பாவ உலகமாகக் கிடக்கிறது... ஈழத்தமிழனை பற்றிக் கதைக்கிறியே அவர்கள் செத்தாலாவது 10 நாட்டுக்குத் தெரியும் நாங்கள் செத்தால் எந்த நாயிற்காவது தெரியுமா... காந்தியிருந்திருந்தால் அவரே உன்னைக் கொன்றிருப்பார்...
தமிழ்மணத்தில் வாக்களித்துள்ளேன் வெற்றிபெற வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக