ஞாயிறு, 1 மே, 2011

அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

PM 11:33 - By ம.தி.சுதா 44

                 சில விடயங்கள் அறியப்படாததன் விளைவுகள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதனடிப்படையில் தான் இந்த Paracetamol Poisoning ம் உள்ளடங்குகிறது. சிலர் தற்கொலை முயற்சிக்காக இதை நாடினாலும் அதனால் வரும் வேதனையே அவர்களை மரணத்தின் வாயிலில் ரணப்படுத்திக் கொல்லும்.
        முதலில் பனடோல் என அழைக்கப்படும் Paracetamol பற்றி அறிவோம். இது 1950 ம் ஆண்டளவில் தான் உலகளவில் சாதாரண பாவனைக்கு விடப்பட்டது. இது காய்ச்சல் ( antipyretic, உடல் வலி (analgesic ) போன்றவற்றுக்காக பாவிக்கப்படுகிறது. பிரித்தானியாவில் வருடமொன்றுக்கு 70,000 பேர் தற்கொலை முயற்சிக்காக இதை பயன்படுத்தகிறார்கள். அதனால் 1998 ம் ஆண்டிலிருந்து இதன் விற்பனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நோயாளிக்கு 16 மாத்திரைகளே பரிந்துரைக்கலாம். 32 வரை கடைகளில் விற்பனை செய்யலாம்.

எப்போது இது நஞ்சாகிறது ?
ஒருவர் 10 கிராமிற்கு மேலாதிகமாகவோ அல்லது  200 mg/kg என்ற உடல் நிறைக்கு அதிகமாக பெறுவதோ ஆபத்தானது.


ஒருவரது இறப்புக்கு 20 கிராமிற்கு மேல் தேவையென இ.மெடிசின் (emedicine) சொல்கிறது.

விளைவு
                  இதன் விளைவால் பெரிதும் பாதிக்கப்படவது ஈரல் தான் ( liver) இதன் விளைவால் hepatotoxicity ஏற்படுகிறது. உடனடியாக இதன் விளைவுகள் வெளிப்படுவது அரிதான சம்பவமாகும். முதற்கட்டமா வாந்தி மற்றும் குமட்டல் (nausea , vomiting) ஏற்படுகிறது. ஆனால் 24 மணித்தியாலம் வரை கூட எந்தவித அறிகுறியும் இல்லாமல் இருந்தாலும் 72 மணித்தியாலத்திற்குள் பாரிய விளைவுகள் எற்படலாம். காரணம் இங்கே பாதிக்கப்படவது ஈரல் தான். ஈரல் கலங்கள் பாதிக்கப்படுவதால் இயற்கையான குளுடாதியோன் (glutathione) அழிவடைகிறது. அத்துடன் ஈரல் கலங்களும் அழிவடைவதால் ஈரல் செயலிழக்கிறது (hepatic failure). உடலின் தொழிற்சாலை (FACTORY OF BODY) என அழைக்கப்படும் ஈரல் இல்லவிடில் அடுத்தது உயிரிழப்புத் தான்.
          அத்துடன் பரசிட்டமோலானது குருதியுடன் கலப்பதால் அதன் பிளாஸ்மாவில் (plasma) செறிவு அதிகரிக்கும் இதனால் குருதியின் அமில காரத்தன்மை பாதிக்கப்பட்டு குருதி உறைதலும் தடைப்படும்.

அதிகம் பாதிக்கப்படுவோர்.
அதிகளவு மது பாவனையாளர், உணவின்றியிருப்போர், வேறுமாத்திரைகளையும் பயன்படுத்துவோர் போன்றவர்களாகும்.

அதன் விளைவை வரைபடம் சொல்கிறது பாருங்கள்
               இதன் சிகிச்சையாக உட்கொண்டு 30 நிமிடத்திற்கு உட்பட்டவராயின் activated charcoal அதாவது கரியை அருந்தக் கொடுப்பார்கள் இதனால் அகத்துறிஞ்சல் தடைப்படும். அதுவும் கடந்த நிலையில் குளுடாதியோன் (glutathioneசெலுத்தி இழந்ததை ஈடு செய்ய முனைவார்கள். ஆனால் இது எந்தளவுக்கு பதிலளிக்கும் என்பது அவரடைந்துள்ள நஞ்சாக்கத்திலும் அவரது உடல் உறுதியிலுமே இரக்கிறது.
         தெரிந்தோ தெரியாமலாவது யாராச்சும் இனி போடுவிங்களா ? சாதாரணமாக 500 மில்லி கிராம் கொண்ட மாத்திரையாகையால் 20 மாத்திரைகளே நச்சூட்ட போதுமானதாகும். ஆனால் அதனால் வரும் இறப்பின் போது வரும் வேதனை உங்களை மட்டும் வாட்டாது உங்களை கண்கூடு பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருத்தரையும் வாட்டும்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

44 கருத்துகள்:

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

அய்யோ,பயம் வந்திட்டு,பகிர்விற்கு நன்றி.

Unknown சொன்னது…

இவ்வளவு விஷயம் அடங்கியுள்ளதா தம்பி? இதுமாதிரி பதிவுகள் அடிக்கடி போடுங்கள் எல்லோருக்கும் உதவியாக இருக்கும்.

Unknown சொன்னது…

வழமையான வாக்குகள் போட்டாச்சு தொடரட்டும் சேவை....

Adriean சொன்னது…

தகவலுக்கு நன்றி. Paracetamol விட Aspirin நல்லதா அல்லது இரண்டும் ஒரேமாதிரியானதா?

ராஜ நடராஜன் சொன்னது…

அடுத்த தடவை தலைவலி வந்தா என்னத்த முழுங்குறதுன்னு தெரியலையே!

என்ன சுதா இப்படி வெருட்டி வைத்திருக்கிறீர்கள்?

Unknown சொன்னது…

சுதா தம்பி சும்மா எதோ புருடா விடுது..
நீங்க பயமில்லாம யூஸ் பண்ணுங்கோ ஹிஹிஹி

Unknown சொன்னது…

வரைபு எல்லாம் போட்டு சொல்லுறதால,உண்மையெண்டு நம்புறம்...
இல்லையெண்டா வீடு முன்னால ஆர்ப்பாட்டம் தெரியுமெல்லோ??!!

வலைச்சரம் மூலம் நீங்கள் டாக்டர் என அறிந்தேன்.. நர்ஸ் பற்றி ஒரு பதிவு போடவும் ஹா ஹா

உணவு உலகம் சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் said...
வலைச்சரம் மூலம் நீங்கள் டாக்டர் என அறிந்தேன்.. நர்ஸ் பற்றி ஒரு பதிவு போடவும் ஹா ஹா//
ஆரம்பிச்சாச்சா?

உணவு உலகம் சொன்னது…

நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வு. நன்றி. தொடர்ந்து இதுபோன்ற பகிர்வுகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

அமைதி அப்பா சொன்னது…

தொடர்ந்து பாராசிட்டமால் பயன்படுத்துவது ஆபத்து. இது இல்லாமல் காய்ச்சலை விரட்டுவது கடினம். ஆஸ்பிரின் ஏற்படுத்தும் பக்கவிளைவுகளை ஒப்பிடும் போது பாராசிட்டமால் சிறந்த மருந்து.

'விருந்தும் மருந்தும்,மூன்று வேளை'
என்பார்கள்.


//வலைச்சரம் மூலம் நீங்கள் டாக்டர் என அறிந்தேன்.. //

அட, இது தெரியாமப் போச்சே. வணக்கம் சார்!

ஆகுலன் சொன்னது…

நீங்க கலக்குங்க..................

ஒரு தரமான விழிப்புணர்வு பதிவு தந்ததற்கு நன்றிகள் நண்பரே,,

நிரூபன் சொன்னது…

அளவுக்கு மிஞ்சினால்...
என்பது போன்று தான் இந்த பரசிற்றமோலின் விளைவும்,
அருமையான தகவல்(டெம்பிளேட் பின்னூட்டம் அல்ல)
நன்றிகள் சகோ.

சிசு சொன்னது…

நல்ல பகிர்வு. நன்றி சுதா...

தனிமரம் சொன்னது…

நல்லச்சொல்லுறீங்க சுதா ஆனால் இது தானே உடனடி நிவாரனம் ஏழைகளுக்கு!தொப்பிக்காரர்கள் இதையும் தடைப்பொருள் பட்டியலில் சேர்த்தது இதனாலா?

கவி அழகன் சொன்னது…

இதுக்கெல்லாம் பயப்பட போறதில்லை சோறு தின்னிற மாதிரி பரிசிதமோல் சாப்பிடுவம்

ADMIN சொன்னது…

பதிவுக்கு நன்றி.. அனைவருக்கும் பயன்படும் விதமாய் இருக்கிறது.. வாழ்த்துக்கள் மதிசுதா.. அவர்களே..!!

பாலா சொன்னது…

நல்ல விழிப்புணர்வு கட்டுரை. தேவை இல்லாமல் டாக்டர் ஆலோசனை இன்றி மருந்து உட்கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும்.

சசிகுமார் சொன்னது…

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு

Jana சொன்னது…

அதிகளவு மது பாவனையாளர், உணவின்றியிருப்போர், வேறுமாத்திரைகளையும் பயன்படுத்துவோர்.....
:)

Jana சொன்னது…

சிறப்பான ஒரு விழிப்புணர்வு மருத்துவ பதிவு

ஊரான் சொன்னது…

பக்க விளைவுகள் இல்லாத அலோபதி மருந்துகளே கிடையாது. பராசிட்டமோல் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி!

மருத்துவத் துறையைப் பற்றிய மேலும் சில முக்கிய உயிராதாரமான விவரங்களுக்கு...
"மனித உயிர் உலோகத்தைவிட மலிவானதா?"
http://hooraan.blogspot.com/2011/04/blog-post_27.html

இளங்கோ சொன்னது…

Thank you for awareness.

நல்ல விழிப்புணர்வு பதிவு டாக்டர் சுதா!! விழித்துக் கொள்வோம்!!

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

விழிப்புணர்வு பதிவு

Unknown சொன்னது…

விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி மாப்ள!

தமிழ் உதயம் சொன்னது…

ஆரோக்கியமான, விழிப்புணர்வுடன் கூடிய பதிவு.

TJ சொன்னது…

ஆக இப்படி வேறு இருக்கா...

pepsi or cola உடன் சில மாத்திரைகளை கலந்து குடிப்பதால் வெறிப்பதாக கூறுகின்றரே அதுபற்றி

Philosophy Prabhakaran சொன்னது…

வந்துக்கொண்டு தான் இருக்கிறேன்... ஆனால் சமயங்களில் என்ன பின்னூட்டம் போடுவது என்று தெரியவில்லை... பகிர்வுக்கு நன்றி என்று போட்டால் டெம்ப்ளேட்த்தனமாக இருக்கும்... எனவே பின்னூட்டமிடாமல் சென்றுவிடுகிறேன்...

சின்ன கண்ணன் சொன்னது…

சிறப்பான ஒரு விழிப்புணர்வு மருத்துவ பதிவு, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு

நன்றிகள் நண்பரே,,

பெயரில்லா சொன்னது…

அடேயப்பா இவ்வளவு தகவல்களா

பெயரில்லா சொன்னது…

இந்த மாத்திரையில இவ்வளவு விச(ய)ம் இருக்கா

பெயரில்லா சொன்னது…

நல்ல அருமையான விழிப்புணர்வு பதிவு

விழிப்பை ஏற்படுத்தியதற்கு நன்றி சகோ.

Unknown சொன்னது…

பயன் உள்ள பதிவு
இவற்றுக்கு பதிலாக வேற எந்த மாத்திரை பயன் படுத்துவது
...at G.H for all disese they give only this tablets.what to do..?

Unknown சொன்னது…

வந்துக்கொண்டு தான் இருக்கிறேன்... ஆனால் சமயங்களில் என்ன பின்னூட்டம் போடுவது என்று தெரியவில்லை... பகிர்வுக்கு நன்றி என்று போட்டால் டெம்ப்ளேட்த்தனமாக இருக்கும்... எனவே பின்னூட்டமிடாமல் சென்றுவிடுகிறேன்..//ethai nanum valimolikren...

S.T.Seelan (S.Thanigaseelan) சொன்னது…

ம்ம்ம்.... மிகவும் பயனுள்ளதாகவும், ஆய்வுபூர்வமாகம் இருக்கிறது...

சாகம்பரி சொன்னது…

பாராசிட்டமால் நாட்கள் இடைவெளியில் பயன்படுத்தினாலும் லிவர் பாதிக்கப்படும்தான். இது உடனேயே தெரியாது, பித்தம் அதிகரிப்பது ஹைபர் அசிடிட்டி ஏற்படும். வலி நிவாரணியான ப்ருஃபென்னிற்கும் இதுதான் பின்விளைவு.( febanil,ibugesicn, brufen). இது அனுபவ கருத்துரை.

Unknown சொன்னது…

ஆளை கொல்றதுக்கு ஐடியா குடுத்த மாதிரி தெரியுதே!!??

தாங்கள் ஒரு மருத்துவரா? சொல்லவே இல்லை............தற்கொலை செய்பவர்கள் எத்தனை மாத்திரை பாவிக்கலாம் அண்ணா..?

மிக்க நன்றியுங்க
உங்கள நல்லாபபுடிச்சிருக்கு
எனது வலைப்பதிவு பட்டியல்ல
இணைச்சிருக்கிறேன்

Inam சொன்னது…

அண்ணா நான் 15 பனடோல் குடிச்சிட்டேன் நா செத்துருவனா? என்னால வயிற்றுவலி தாங்க முடியல.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top