இது இதுவரை உண்மை புலப்படாத ஒரு உவமைக் கட்டுரையாகும். இதில் மக்களுக்கு பெரியளவு பாதிப்புகள் இன்னும் வரவில்லையானாலும் ஒரு தொகை நட்டம் இருப்பது நிச்சயம் உண்மை தான்.
இங்கிருக்கும் புகைப்படத்தைப் பார்த்தால் உண்மை தெரியும். இது நகை அடகு வைத்தமைக்கான பற்றுச்சீட்டாகும். அதுவும் ஒரு வார கால இடைவெளியில் வைக்கப்பட்டதாகும். ஒரு பற்றுச்சீட்டில் தவறியதாக ஆங்கிலத்தில் குறிக்கப்பட்டுள்ளது. மற்றையதில் இவர்கள் செலுத்த வேண்டிய வட்டிப் பணம் குறிக்கப்பட்டிருக்கிறது.
அவர் இழந்ததாகக் கருதப்படும் நகையின் அளவு 20 பவுண்கள் ஆகும். வங்கிகள் இப்போது நட்ட ஈடு கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. அது முற்று முழுதாகக் கிடைக்குமா என்பது சந்தேகத்திற்கிடமானதே..?
இதில் நெருடலான விடயம் ஒன்று என்னவென்றால். பெரும்பாலான நகைகள் இறுதிப் போர் நடந்த இடத்திற்கு எடுத்துச்செல்லப்படவில்லை.
நான் உதாரணம் காட்டிய பற்றுச்சீட்டுக்கள் கிளிநொச்சி வங்கியில் அடகு வைக்கப்பட்டது. நான் அறிந்த வரை உடையார்கட்டுப் பகுதிவரை மீளளிப்பு நடபெற்றது. அதன் பின்னரான இடங்களில் அவை வவுனியாவிற்கு அனுப்பப் பட்டு விட்டதாகச் சொன்னார்கள்.
இந்த இடைப்பட்ட இடத்தில் நகைகளுக்கு ஏதோ நடந்திருக்கிறது. என்ன நடந்திருக்கும்..? எனக்கு மஜா திரைப்படம் தான் நினைவிற்கு வருகிறது.
இதை உலகத்தவர் எல்லோரும் அறியணும் என்று நீங்கள் கருதினால் ஒரு வாக்குப்போட்டுப் போங்கள்.
16 கருத்துகள்:
I think you forgot to submit to Indli.
இந்த இடைப்பட்ட இடத்தில் நகைகளுக்கு ஏதோ நடந்திருக்கிறது. என்ன நடந்திருக்கும்..?
.....நகைகள், தானாக ஓடியா போய் இருக்க முடியும்? ம்ம்ம்ம்......
@ Chitra said...
//......நகைகள், தானாக ஓடியா போய் இருக்க முடியும்? ம்ம்ம்ம்......//
யார் எடுத்திருப்பார் என்று தெரியுது தானே....
@ Chitra said...
அக்கா எப்படி நான் இடுகை போடுவது உங்களுக்குத் தெரிகிறது....
இப்ப சரி..
@ Chitra said...
//......நகைகள், தானாக ஓடியா போய் இருக்க முடியும்? ம்ம்ம்ம்......//
யார் எடுத்திருப்பார் என்று தெரியுது தானே....
repeat Chitra madam.
@ சே.குமார் said...
வருகைக்கு நன்றி சகோதரா....
இழந்த மக்களையே இன்னும் தேடிக்கொண்டிருக்கிறோம்..இழந்த நகைகளா வீடு வரப் போகிறது..
@ padaipali said...
//..இழந்த மக்களையே இன்னும் தேடிக்கொண்டிருக்கிறோம்..இழந்த நகைகளா வீடு வரப் போகிறது..//
ஆம் சகோதரா... ஆனால் இழந்தவரை பெற முடியாது... இருப்பவரை மீட்பதற்கும் வெளிநாட்டவர் விடுகிறார்கள் இல்லையே....
படைப்பாளியின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்.
@adhithakarikalan said...
//...படைப்பாளியின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்...//
வருகைக்கு நன்றி சகோதரா.... இறந்தவரில் தேடுவதற்கு ஒன்றுமே இல்லை... சில நாட்களின் முன் தெரிந்த ஒருவருக்கு கிரியை செய்வதற்காய் தாட்ட இடத்தில் போய் பார்த்தால் எலும்பைக் கூட காணவில்லை...
i agree to Chithra said...
@ அஹமது இர்ஷாத் said...
//..i agree to Chithra said...//
நன்றி சகோதரா... உண்மைகள் ஓர் நாள் வெளிவரும் தானே...
I too agree what Chitra said...
@ தகவல் said...
வருகைக்கு நன்றி சகோதரா
நகைகள் இதோ இங்கே இருக்கின்றன.
http://www.tamilwin.com/view.php?2e2IPV00bRjoq2edQG1h4bch98Mcd4E2F3dc27pi3b420QH3e23nLW20
பார்க்கவும்.
ஜவர்லால் நேரு said...
சகோதரா முதலில் நாம் எம் மலத்தைக் கழுவுவோம் அதன் பின் மற்றவருடையதற்கு மூக்கை பொத்துவோம்.. ஏனெனில் நிங்கள் குறிப்பிட்ட லிங்கில் சொல்பவருக்க அதைச் சொல்ல எந்தளவு தகுதியிருக்கிறது.....
கருத்துரையிடுக