தூபமிடும் வானம்
டம்ளர் நீருடன்
காலைச் சிற்றுண்டியாய்
இரவின் உண்ணாவிரதம்
கலைக்கப்படும்
உணவுண்ணல் சிரமத்துக்காய்
நாள்தோறும் விசேட உணவு
வாய் என்ற குறிகாட்டிக்கு
எட்ட வைத்தே
இலக்கு வைத்தடிக்க
கடலை என்ற பெயரில்
விடலைகளை மந்த மாக்கும்
மதிய உணவினிலே
குழம்பிற்கிடும் பயற்றம்- துண்டுகளை
ஒப்பிட்டு நினைக்கையில்
கறிக்கிடும் உப்புக்கட்டிகள்
எண்ணி்கையில் வென்றுவிடும்
கள்ளியை அறியாத
பருப்புக் கறிதான் பாணுடன் எமக்கு
வெறுப்பாய் மாறிவிடும்
உவகையின்றி மிண்டி உண்டு
இரவுப்பொழுதினிலே
கூடாரங்களை தூக்கியெறிவோம்
இரசாயன போர் ஒன்றால்.
குறிப்பு - இந்த ஆக்கத்தை போருக்கு ஆதரவானவர்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம்..
22 கருத்துகள்:
ரொம்ப உருக வைக்குது உங்க வரிகள்.
சொப்பின்க் பாக்குக்குள் சோறு போட்டு
சுட்டெரிக்கும் வெயிலில் லைனில் விட்டு
வந்தாரை வாழ வைக்கும் எங்களுக்கே
வாய்க்கு அரிசி போட்டாள் போல்
உணவு தந்தார்
உண்மை தான் மதி
அனால்
எதிர்பாராத தொகையில் மாக்கள் வந்த நேரம்
தமது சக்திக்கு மீறிய செயல் என் தெரிந்தும்
முன் அனுபவம் முன் ஆயதம் குறைந்த நிலையில்
மக்களுக்காய் உணவு தர முன்னின்ற
நிறுவனங்களை மறக்ககுடாது
அன்பரசன் said...
நன்றி சகோதரா...
யாதவன் said...
அண்ணா உப்பிட்டவரை உள்ளளவும் நினையென்பர் நான் சாகும் வரை அவர்களை மறக்க மாட்டேன்..
வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி அண்ணா...
மனதை உருக்கி வலியை ஏற்படுத்தும் வரிகள்.
சீக்கிரமே நிலைமை மாறும் பாருங்க.
எஸ்.கே said...
நன்றி சகோதரம்...
jagadeesh said...
நன்றி சகோதரம்... எமக்கு நிம்மதியான வாழ்வொன்றோ போதும்.. கஞ்சியாவது குடித்து வாழத் தயார்..
என்று கிடைக்கும் இந்த கருத்துச் சுதந்திரம்??
உங்களுக்கு மட்டுந்தான்.. இத உரக்க சொல்லும் உரிமை இருக்கு..
அருமை..
ஒவ்வொரு வரிகளும் உண்மையை சொல்கிறது, அதையும் கவியாய் உலகுக்கு நீங்கள் சொன்னாவிதம் அருமை
வாழ்த்துக்கள்
உண்மையை உரத்து சொல்கிறீர்கள் நன்றி
ரொம்ப உருக வைக்குது.
உருக்கம்.
கலக்கம்.
தேக்கம்.
கவிதை ரசனை. கரு, பொருள் அழத்தோன்றுது.
வேதனை அறிவேன் தமிழ் இரத்தம் எனக்கும்
மைந்தன் சிவா said...
வருகைக்க நன்றி சகோதரா தங்கள் ஆதங்கம் புரியுது...
Cool Boy கிருத்திகன். said...
ஃஃஃஃ...உங்களுக்கு மட்டுந்தான்.. இத உரக்க சொல்லும் உரிமை இருக்கு..
அருமை...ஃஃஃஃ
நன்றி கிருத்தி.... தப்பு எல்லோருக்குமே இருக்கிறது.. ஆனால் சிலர் ஒருவரின் முன்னெற்றத்தை ஒரு சில தடுப்பால் தடுக்கிறார்கள்..
மகாதேவன்-V.K said...
ஃஃஃஃஃ...ஒவ்வொரு வரிகளும் உண்மையை சொல்கிறது, அதையும் கவியாய் உலகுக்கு நீங்கள் சொன்னாவிதம் அருமை...ஃஃஃஃ
வருகைக்க நன்றி சகோதரா
தியாவின் பேனா said...
ஃஃஃஃ...உண்மையை உரத்து சொல்கிறீர்கள் நன்றி...ஃஃஃஃ
நன்றி சகோதரி... உண்மையைவிட அனுபவமும் கொஞ்சம் அதிகம் தான்...
சே.குமார் said...
ஃஃஃஃ...ரொம்ப உருக வைக்குது...ஃஃஃ
நன்றி சகோதரா.. நிஜங்கள் அப்படித்தான்.. ஏசி க்குள் இருந்து தமிழிழம் கேட்பவர்கள் இதற்குள் வரத்தயாரா... என்று கேட்டுச் சொல்ல முடியுமா..?
றமேஸ்-Ramesh said...
ஃஃஃஃஃ....உருக்கம்.
கலக்கம்.
தேக்கம்.
கவிதை ரசனை. கரு, பொருள் அழத்தோன்றுது.
வேதனை அறிவேன் தமிழ் இரத்தம் எனக்கும்...ஃஃஃஃ
ஆம் சகோதரா தங்களின் பதிவுகளே அதை நிருபிக்கிறது.
நெஞ்சை உருக்கியது...வலி ஊடுருவுகிறது..
மனதை உறுத்துகிறது உமது வரிகள்
கருத்துரையிடுக