ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

கிருஷ்ணரும் கிறிஷ்துவும் ஒன்று தானே (ஒரு ஒப்பீடு)...

10:38 AM - By ம.தி.சுதா 29

                                     சில காலம் ஒய்ந்திருந்த மதப்போர் மீண்டும் இணைய வழியில் புது உருப்பெற்று தலை எடுக்க அரம்பித்துள்ளது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை தானே
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"

                                     இவை எப்போதோ நான் கேட்ட ஒரு சில தகவல்களை வைத்து மிகுதியை தொடர்ந்திருக்கிறேன். இன்றைய ஞாயிற்றுக் கிழமை நாளில் இதை வெளியிடுவது சிறப்பாக இருக்குமென்பதால் எனது இவ்வார ஆன்மீகப் பதிவாக இடுகிறேன்.
                                      கிருஷ்ணர் கிறிஸ்து இரண்டு பேயரையும் ஒப்பிட்டுப் பாருங்கள் இரண்டையும் திருப்ப திருப்ப சொல்லும் போது ஒன்று போல் தான் தெரியும். இருவரும் வாழ்ந்த காலப்பகுதி வேறென்று சொன்னாலும் வரலாறு ஒன்றாகத்தான் தெரிகிறது..
                                       கிறிஸ்துவின் பிறப்பால் ஏரோதுவிற்கு ஆபத்தென்று முன்னமே தெரிவிக்கப்பட்டது. அதே போல் தான் கிருஸ்ணரின் பிறப்பால் கம்சனுக்கு ஆபத்தென்று முன்னமே தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இருவரின் கர்ப்பத்தரிப்பம் ஒரே விதமானது தான்.
                             இருவரின் தாயார்களும் தம் பிள்ளைகளைப் பெற்றெடுக்க படாத பாடு பட்டார்கள். கடைசியில் மாட்டுத் தொழுவம் தான் இருவருக்கும் பொது இடமாகப் போனது. இருவருக்காகவும் தந்தையர் பட்ட பாடு இருக்கிறதே அதுவும் மிகவும் கடுமையானது.
                           இது மட்டுமல்ல முக்கியமாக ஒரு விடயம் இருவரின் ஜனன முடிவும் இரத்த இழப்பால் தான் ஏற்பட்டது. கிறிஸ்து சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டார். கிருஷ்ணருக்கு வேடன் விட்ட அம்பு அடிப் பாதத்தில் துளைத்தது.
                            இருவரையும் பொதுவாக எந்த நாளில் வணங்குகின்றோம் இன்றைய ஞாயிற்று கிழமை தானே
                           இவை எனக்கு தெரிந்தவை இன்னும் பல இருக்கலாம். நான் கூறியவை சில வேளை பல முரண்பாட்டை தோற்றவித்திருக்கலாம். அப்படி இருந்தால் வெளிப்படையாகவே சுட்டிக்காட்டுங்கள். மத நல்லிணக்கம் கொண்டோர் யாராவது இருந்தால் முடிந்த வரை இதை தொடருங்கள்.

இப்பதிவு பலரை சென்றடைய வேண்டுமென்று கருதினால் ஒரு ஓட்டுப் போட்டுவிட்டு செல்லுங்கள்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

29 கருத்துகள்:

Nanbarey...

ungal karuththu nandru. but valaippookalil athigam mathaam aakiramitththulla nilaiyil ungal karuththukku pala ethiruppukkal varalam.

ம.தி.சுதா சொன்னது…

@ சே.குமார் said...
பதிவிட்ட மறுகணம் ஓடி வந்து வாழ்த்தி செல்கின்றமைக்க நன்றி... சகோதரா நீங்க சொல்வது சரி தான்... ஆனால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மதத்தை தலையில் வைத்து கொண்டாடுகையில் நம்மை போன்றவர் பொது மதம் ஒன்றை ஆதரிப்பதில் தப்பில்லை தானே...

சுதர்ஷன் சொன்னது…

நல்ல கருத்து சுதா .. ஏதோ ஒரு ஆரம்பத்தில் இருந்து சுட்டால் இப்படி தான் எல்லாம் ஒரே மாதிரி இருக்கும் .. கிறிஸ்தவ கதை கிரேக்கர்களிடம் இருந்து வந்தது ...கிருஷ்ணர் கதை எங்கிருந்தோ தெரியவில்லை .. இவ்வாறான மதங்கள் ஒன்றென இவர்களுடன் வாதிடுவதை விட ..மதமே இல்லை என்று மனிதத்தில் கடவுளை காண்பது மேல் .... மனிதம் என்ற ஒரே மதத்தை உருவாக்குவது மேல் .

பெயரில்லா சொன்னது…

மதங்கடந்த மனிதாபிமான கட்டுரை தோழி.


அந்தக் காலத்துலயும் கதைப் பஞ்சம் போல..ஒருத்தர் கதையை இன்னோர்த்தர் சுட்டுட்டார்..ஹீரோ பேரு மட்டும் வேற..வேற..ஹா..ஹா..

ம.தி.சுதா சொன்னது…

@ S.Sudharshan said...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுதர்சன்...

ம.தி.சுதா சொன்னது…

@ padaipali said...
சகோதரர் குமார் சொன்னது போல் ஏற்றுக் கொள்வார்களோ எனக்குள் ஒரு குழப்பமிருந்தது.... ஆனால் இப்ப இல்லை...

Subankan சொன்னது…

தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்தது எப்போர்மற்று அப்போர் - தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையாதிருப்பாரே
அவ்வண்ணம் ஆழியானாம்.
- பொய்கை ஆழ்வார்

ம.தி.சுதா சொன்னது…

@ Subankan said...
நன்றி சுபா.... நல்ல எடுத்துக்காட்டு ஒன்று...

பெயரில்லா சொன்னது…

NALLA ENNAMUM,NALLA MANAMUM IRUNTHAL ELLAME ORE KULAMTHAN
NALLATHE SEEVOM NALLATHI ENNUVUM

VAALTHUKKAL
THODRATUM UNGAL PATHIVU..

Bavan சொன்னது…

//சில காலம் ஒய்ந்திருந்த மதப்போர் மீண்டும் இணைய வழியில் புது உருப்பெற்று தலை எடுக்க அரம்பித்துள்ளது//

ம்ம்.. ஆனால் மதங்கள் தோன்ற முன்னர் தோன்றியவன்தான் மனிதன். மனிதன் தோன்றிய பின்னர் தோன்றியவைதான் மதம், இனம், சாதி, சம்பிரதாயம் என்பவை. ஒன்று பழையவற்றை மனதார நினைத்துப்பார்த்தால் மனிதன் திருந்த ஒரு நொடி போதும், ஆனால் யார் அப்படிச் செய்யப்போகிறார்கள்.

ஆனால் எனக்கு மிகப்பெரிய சந்தேகம் ஒன்று இன்னும் இருக்கிறது, கடவுள் என்பது யார்? எங்கே இருக்கிறார்..:)

அண்ணாமலை..!! சொன்னது…

அன்பால் எல்லாரும் ஒருவரே!
உங்கள் பதிவுக்கு நன்றிகள்!

:)

Robin சொன்னது…

இன்னும் பல ஒற்றுமைகள் உண்டென்று படித்திருக்கிறேன்.
வேற்றுமைகளும் உண்டு. வேற்றுமைகளைப் பற்றி சொன்னால் இங்கேயும் மதப்போர் ஆரம்பித்துவிடும் :)
//"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"// சரியாகச் சொன்னீர்கள்.
//இப்பதிவு பலரை சென்றடைய வேண்டுமென்று கருதினால் ஒரு ஓட்டுப் போட்டுவிட்டு செல்லுங்கள்// போட்டுவிட்டேன்.

ம.தி.சுதா சொன்னது…

@ Bavan said...
சகோதரா என் தள வருகைக்க மிக்க நன்றி
///...ஆனால் எனக்கு மிகப்பெரிய சந்தேகம் ஒன்று இன்னும் இருக்கிறது, கடவுள் என்பது யார்? எங்கே இருக்கிறார்..:).../// வேண்டாம ஏற்கனவெ பதிவில் பல சிக்கல் வந்திருக்கு...

ம.தி.சுதா சொன்னது…

@ அண்ணாமலை..!! said...
உண்மை தான் சகோதரா... வருகைக்கு நன்றிகள்...

ம.தி.சுதா சொன்னது…

@ யோ வொய்ஸ் (யோகா) said...
சகோதரா என் தள வருகைக்க மிக்க நன்றி. என் சக இலங்கைப்பதிவர்கள் என் தளம் நுழைவதையிட்டு பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது...

ம.தி.சுதா சொன்னது…

@ Robin said...
சகோதரா... வருகைக்கு நன்றிகள்...

ம.தி.சுதா சொன்னது…

@ Anonymous said...
வருகைக்க வாழ்த்துக்கள்...

பெயரில்லா சொன்னது…

மதமே வேணாங்கறோம், நீங்க மத நல்லிணக்கம் பத்தி சொல்றிங்க, இருந்தாலும் உங்க ஒப்பீடு நல்லாத் தான் இருக்கு...

பெயரில்லா சொன்னது…

மதமே வேணாங்கறோம், நீங்க மத நல்லிணக்கம் பத்தி சொல்றிங்க, இருந்தாலும் உங்க ஒப்பீடு நல்லாத் தான் இருக்கு...

Lingeswaran சொன்னது…

Very good article. Iruvarum ondraaga irukka neraiya vaaippugal ullana...Neengal " Oru Yogiyin Suyasaritham " endra noolai padithaal melum idhu thodarpaaga neraiya vivarangal kedaikkum...Author is Paramahamsa Yoganandar.

Lingeswaran சொன்னது…

Andha noolil Jesus and Krishna..iruvaraiyum compare seidhu pala vishayangal sollappattullana..

ம.தி.சுதா சொன்னது…

@ adhithakarikalan said...
வருகைக்கு நன்றி சகோதரா... குடிப்பவனை நிறுத்து என்றால் கேட்க மாட்டான் முதலில் குறை என்று தான் சொல்ல வேண்டும்...

ம.தி.சுதா சொன்னது…

@ Lingeswaran said...
நன்றி சகோதரா... அந்தப் புத்தகத்தை தேடுகிறேன் கிடைத்தால் கட்டாயம் வாசிக்கணும்... இன்னொன்று நீங்கள் வாசித்திருந்தால் இதை தொடர்பதிவாக எழுதுங்களேன்... எல்லாருக்கும் பெரு உதவியாக இருக்கும்...

Ilakkuvanar Thiruvalluvan சொன்னது…

வெவ்வேறு மொழியில்உள்ள பெயர்களை ஒப்பிட்டு ஒற்றமை காண்பது தவறு. கிருட்டிணன் என்றால் கருப்பன் என்றுதான் பொருள். தமிழில் கண்ணன் என்று சொல்வதே சரி. எனவே, பெயர் ஒற்றுமை பொருந்தாது. இருவரும் தாய்மாரின் கணவன்மாருக்கப் பிறக்கவில்லை என்று சொன்னால்தான் உதைக்க வருவார்கள். இடையர் குலத்தைச் சேர்ந்த இருவரும் ஆடுமாடுகளை மேய்ப்பதுபோல் உலக மக்களை மேய்த்துப் பேணினார்கள் என்று நல்ல வகையில் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். கிறித்து மனிதர்க்காக வாழ்ந்து தெய்வ நிலையை எட்டியவர். கண்ணன் பல பெண்களுடன் உறவு கொண்டு கற்பு நெறி தவறிய கற்பனைப் பாத்திரம் என்று சொன்னால் பற்றாளர்கள் சினமடைவார்கள். கடவுளாகக் கற்பிக்கப்படும் கண்ணன் குறுக்கு வழிகளில்தான் தன்னை நம்பியவர்களுக்கு அவர்கள் பக்கம் நீதி இல்லை யென்றாலும் உதவி வெற்றி தேடித்தந்தான் என்று சொன்னாலும் உண்மையை ஆராயாமல் கண்ணை முடிக்கொண்டு அடிக்க வருவார்கள். நடுநிலையுடன் ஒப்பிட முடியாத பொழுது எதற்கு இந்த வீ்ண் வேலை. நான் ஒப்பீ்ட்டில் இறங்க விரும்பவில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ம.தி.சுதா சொன்னது…

thiru said...
வருகைக்கு நன்றி சகோதரா...

பெயரில்லா சொன்னது…

கிருஷ்ணன் என்பது பெயர். கிறுஸ்து என்பது பெயரல்ல். இயேசு என்பதுதான் பெயர். கிறுஸ்து என்பது அவருக்கு அவர் தொண்டர்கள் இட்ட மதிப்புக்குரிய சிறப்பு அடை.

கிருஷ்ணன் போன்ற இந்துக்கடவுள்கள் பிராமணத்தி வயிற்றிலதான் பிறப்பார்கள். மற்ற ஜாதியனரால் எடுத்து வளர்க்கப்படலாம். கிருஷ்ணன் பிறப்பும் அவ்வாறே. பிராமண்ருக்கு மட்டுமே தெய்வங்களைப்பெற்றெடுக்க தகுதி என்பது சட்டம்.

கி்ருஷ்ணன் வளர்ப்பால்தான் இடையர் ஜாதி. எனவே இடைத்தொழில் அவர் குலத்தொழில் அல்ல.

கிருஷ்ணன் மக்களை குலவாரியாகப்பிரித்து, தன் பிறந்த பிராணகுலம் இறைவன் வாயிலிருந்து வந்தவர்வ்ர்கள் என்று பகவத்கீதை சொன்னான்.

இயேசு அப்படி செய்யவில்லை.

கிருஷ்ணன் சாவில் எந்த்வொரு சிறப்புமில்லை. இயேசு தன்கொள்கைளுக்காக கொல்லப்பட்டார்.

எனவே இருவருக்கும் ஒப்பீடு செய்யமுடியாது.

ம.தி.சுதா சொன்னது…

Anonymous said...
தங்களின் ஆதங்கம் எனக்கு புரிகிறது. நீங்கள் இந்துவா..? வைஸ்ணவமா..? என்று முதலில் சொல்லங்கள் உங்களுக்கு தகுந்த விளக்கம் தருகிறேன்... இல்லாவிட்டால் என் புறோபைலை பார்த்து விட்டு வரவும்...

Athisaya சொன்னது…

சுதாண்ணா நல்லதொரு முயற்சி.ஆனால் எனக்குத்தெரிந்த வரை ஞாயிறு தான் கிறிஸ்துவிற்குரிய நாள் என்பதற்கில்லை.யூதர்களிடம் நிலவி வந்த திருச்சட்ட முறைப்படி ஞாயிறு ஓய்வு நாள்.அதாவது தமது வேலைகளை எல்லாம் மிட்டு அந்நாளை இறைவனுக்காக அர்பணிக்க வேண்டுமென்பது சட்டம்.யூதமதத்திலிருந்து கிளைமதமாக கிறிஸ்தவம் உருவானதாலும்ஈகிறிஸ்து பிறப்பால் யூதன் என்பதாலும் ஞாயிறு வழிபாட்டு முறைமை கிறிஸ்தவத்திலும் புகுந்து கொண்டதே தவிர,இறையியல் ரீதியான காரணம் எதுவும் அதில் இல்லை என்பதே எனக்குத் தெரிந்தது....

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top