வாருங்கள் வாசகப் பெருமக்களே தலைப்பைப் பார்த்தவுடன் தலை சுற்றுகிறதா..? என்ன செய்வது எனது கட்டுரையின் கனத்தை குறைக்க கூடாது என்பதற்காகவே இருவிசயத்தையும் தொடர்புபடுத்தி எழுதுகிறேன்.. உள்ளே இருப்பது முக்கியமான சமூகப்பிரச்சனையாகும்.
முதலில் என்னை நட்சத்திரப் பதிவராக்கிய யாழ்தேவிக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் (தலைப்பை தப்பாகப் புரிந்தால் நான் பொறுப்பில்லை).
இந்த அந்தஸ்துக்கு காரணமான கடவுளுக்கும், என் குடும்பத்தாருக்கும முக்கியமாக என் உடன் பிறந்த எழுத்தாளர் அண்ணனுக்கும், என்னை அங்கிகரித்திருக்கும் இணைய வாசகர்களுக்கும் மிக்க நன்றிகள்... எனக்கு இச்சந்தர்ப்பம் எப்படிக்கிடைத்தது என்பது அதிசயம் தான் தினக்குரல் பத்திரிகையில் இணையத்தில் எம்மவர் பகுதி ஆரம்பிக்கும் போது நான் வன்னித் தடுப்பு முகாமில் இருந்தேன். அப்போது பத்திரிகைகள் ஏதாவது பொதி உறையாகத் தான் எம்மிடம் வரும். பத்திரிகையில் ஒவ்வொரு எழுத்தாக மேயும் எனக்கு ஆரம்பத்தில் இது என்னவென்றே தெரியாது.. போகப் போகத்தான் நானும் இப்படி எழுதலாமா என்று ஆசை கொண்டேன்... ஆனால் அப்போது இது நப்பாசை தான் ஏனெனில் அப்போது தட்டச்சு தெரியாது... பத்திரிகை, வானொலிக்கு மட்டும் ஆக்கங்களை அனுப்பிக் கொண்டிருந்தேன்.. ஆனால் அப்போது எழுதிவைத்த அக்கங்கள் பலது தான் இன்று எனக்கு அந்தஸ்தை பெற்றுத்தந்திருக்கிறது.
மீண்டும் நான் அங்கே போகமுடிந்தால் இன்னும் பல ஆக்கத்துடன் தான் திரும்பி வருவேன்.. ஆனால் ஒன்று முதல் கிடைத்த கிறிஸ்தவ பாதிரியார் போல ஒருவர் கிடைப்பாரா என்பது சந்தேகமே. அவர் தான் எனக்காக பல கடைகள் தேடி பகவத்கீதை வாங்கித் தந்தார். எங்கிருந்தாலும் அவர் நல்லாயிருக்கணும். நான் மதம் என்ற ஒரு வட்டத்திற்குள் சிக்காமல்இருப்பதற்க அவரும் ஒரு காரணம்.
சரி வாருங்கள் என் சமூகக் கட்டுரைக்கு (இது ஒரு பத்திரிகையால் நிராகரிக்கப்பட்ட ஆக்கம்) யாழ் மாணவரை மையப்படுத்தி எழுதப்பட்டது. ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் இதைத் தான் செய்கிறார்கள்.
நாட்டில் மாறி வரும் அரசியல், போர் மாற்றங்களானது தமிழர் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது அதிலும் யாழ் குடாநாட்டில் புகுந்திருக்கும் பல தனியார் கல்வி நிலையங்களால் யாழின் கல்வி நிலை மேலும் வளம் பெறப் போகிறது. இது பெரிதும் வரவேற்பிற்குரிய விடயமாகும்.
ஆனால் ராமர் வில்லில் நசிபட்ட தவளை போல் சில விசயங்கள் நசிபட்டுப் போவதை யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. மாணவரின் மேலதீக நேரங்களை தனிப்பட்ட வகுப்புக்கள் கவர்ந்திழுத்துக் கொள்கின்றன. இது அவர்களின் கற்றல் தவிர்ந்த செயற்பாட்டை பெரிதும் பாதிப்புறச் செய்கிறது.
சதாரணமாக அவர்களின் ஒரு நாள் நேர அட்டவணையைப் பார்ப்போமா?
காலை 5.00 மணிக்கு எழும்பிக் கற்றல்
காலை 6.30 மணிக்கு பாடசாலை தயாராகுதல்
காலை 7.30 மணிக்கு பாடசாலைக்கு செல்லுதல்
பிற்பகல் 2.45 மணிக்கு வீடு வருதல்/ தனியார் கல்வி நிலையத்தக்கு தயாராகுதல்
பிற்பகல் 3.15 மணிக்கு வகுப்பிற்கு செல்லதல்
பிற்பகல் 6.00 மணிக்கு வீடு வருதல்
பிற்பகல் 6.30 மணிக்கு கற்க இருத்தல்
அண்ணளவாக 10.00 ற்கு படுக்கைக்க செல்லதல்
இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அவர்களுக்கு சுய கற்றலுக்கான நேரம் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு பாடசாலை. தனியார் வகுப்புக்களின் வீட்டு வேலை செய்யவே நேரம் போய்விடும். அப்படியானால் சிலர் நினைக்கலாம் அதிலேயே கற்றல் தானே நடக்கிறது என்று ஆனால் பிரச்சனை அதுவல்ல வீட்டுப் பாடம் கொடுத்து விடாத ஆசிரியர் ஒருவரின் பாடம் என்றால் அப்படத்தில் மாணவரின் நிலையை ஒருமுநற சிந்தித்துப் பாருங்கள்.
இனி இதனால் வரும் பாதிப்புக்களைப் பார்ப்போமானால்
1. சுயகற்றலின்மையால் அம் மாணவர்களின் உயர் கல்வி பாதிக்கப்படும்.
காரணம் – அங்கு சுய கற்றல் முக்கியம். நாமாகத் தான் தேடிப் படிக்க வேண்டும். சிறு சந்தேகத்தைக் கூட அசிரியரிடம் கேட்கப் பழகுவதால் உயர் கல்வி பாதிக்கப்படும்.
2. விளையாட்டுத் துறை என்பதே மறந்தவிடும்
காரணம் – விளையாட்டுத் தான் ஒரு மனிதனை எதையும் எதிர்கொள்ளக் கூடியவனாக மாற்றுகிறது. தன்னம்பிக்கையை வளர்க்கிறது. புத்தகங்கள் அனுபவத்தை அனுபவமாகச் சொல்லாது.
3. கலைசெயற்பாடுகள் அழிவடைந்து போகலாம்
காரணம் – உலகிலேயே எம் இனத்துக்கென்று தனிப்பட்ட பல கலைகள் இருக்கிறது. குறிப்பாக சங்கீதம், பரதம் போன்ற கலைகளை யாருமே நாடுவதில்லை என்ற நிலை வந்துவிட்டது.
சரி மாணவர் பக்கம் பார்த்தால். இத்தனை சுமைகளை மாணவர் மீது சுமத்தும் பெற்றோர் எவ்வளவு நேரம் அவர்களுடன் செலவிடுகிறார்கள் என்று பார்த்தால் தொடர் நாடக விளம்பர இடைவேளைகள் தான் அதை தீர்மானிக்கிறது.
முடிவாகப் பார்த்தால் இச் செயற்பாடுகளால் எதிர் காலத்தில் உடல் உள நலம் குறைந்த சமுதாயமே உருவாகப் போகிறது என்பதை பலர் அறியாமல் இருப்பது தான் கவலைக்கிடமான விடயமாகும். எனக்கு செவிடன் காதல் சங்கு ஊதியது போல் தான் இருந்தாலும் இதையாவது கவனத்திலெடுக்கவும். ஒரு மாணவன் குறைந்தது 7-8 மணித்தியாலம் உறங்கினால் தான் நீண்ட கால ஞாபக சக்திக்கு தகவல்கள் மாற்றப்படும். இதையாவது சகலரும் கவனத்திலெடுக்கமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த ஆக்கம் பலரை சேர வேண்டும் என்றெண்ணினால் ஒரு வாக்கு இட்டுச் செல்லுங்கள்.
26 கருத்துகள்:
யாழ்தேவி இலங்கையில் வலைப்பதிவுகள், பற்றியும் வலைப்பதிவர்கள் பற்றியும் மக்கள் மத்தியில் பல ஊடகங்களுடன் இணைந்து அறிமுகத்தையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்துகின்றமை பாராட்டுக்கும் நன்றிக்கும் உரிய விடயமே.
மற்றது தாங்கள் சொன்னதுபோல "இணையத்தில் நம்மவர்" பகுதியை பார்த்தபோது நீங்களும் இப்படி வருவீர்கள் என நினைக்கவில்லை என்று சொன்னீர்கள் அல்லவா? அதுதான் நாளை நமக்கு போடும் புதிர்கள். நாளை யார் எப்படி, எங்கே இருப்போம் என்று எவருக்குமே தெரியாது.
வாழ்த்துக்கள்
@ Jana said...
//..."இணையத்தில் நம்மவர்" பகுதியை பார்த்தபோது நீங்களும் இப்படி வருவீர்கள் என நினைக்கவில்லை என்று சொன்னீர்கள் அல்லவா? அதுதான் நாளை நமக்கு போடும் புதிர்கள். நாளை யார் எப்படி, எங்கே இருப்போம் என்று எவருக்குமே தெரியாது...// உண்மை தான் அண்ணா அங்கு செத்திருந்தால் சுதா என்றொரு வீணாய்ப் போனவன் இருக்கிறான் என்பது தெரிந்திருக்குமா..? ஆனால் இப்ப..
@ SShathiesh-சதீஷ். said...
என் தளத்திற்கான தங்களின் முதல் வருகையை மகிழ்வுடன் கொண்டாடுகிறேன் நன்றி...
நட்சத்திர வார வாழ்த்துக்கள்...
// ஆனால் ராமர் வில்லில் நசிபட்ட தவளை போல் சில விசயங்கள் நசிபட்டுப் போவதை யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. //
உண்மை...
வெறுமனே புத்தகங்களைப் படித்து ஒப்புவிக்கும் மாணவர் சமுதாயம் உருவாகிவருகிறது, உருவாகிவிட்டது... :(
நண்பா நான் தலைப்பை பார்த்ததும் சற்று பதட்டப்பட்டு விட்டேன், வாழ்த்துக்கள்...... ஒரே கல்லில் இரண்டு மாங்காய்...
அன்புள்ள சுதா அவர்கட்க்கு
முயச்சி திருவினையாக்கும் என்பதட்க்கு நீங்கள் ஒரு உதாரணம்
இன்று நீங்கள் ஒரு நாணல் மரம் உங்கள் எண்ணம் போல் எல்லாம் வெற்றி பெற எல்லாருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்திக்கின்றேன் தொடருங்கள்..
நன்றி
வாழ்த்துக்கள் ...........
@ கன்கொன் || Kangon said...
//..உண்மை...
வெறுமனே புத்தகங்களைப் படித்து ஒப்புவிக்கும் மாணவர் சமுதாயம் உருவாகிவருகிறது, உருவாகிவிட்டது... :(..//
வாழ்த்துக்கு நன்றி சகோதரா.. ஆனால் இதை யாரும் ஏற்றுக் கொள்கிறார்கள் இல்லையே..
@ உங்கள் அன்பு நண்பன் RA.Dinushan said...
ஃஃஃ...நண்பா நான் தலைப்பை பார்த்ததும் சற்று பதட்டப்பட்டு விட்டேன், வாழ்த்துக்கள்...... ஒரே கல்லில் இரண்டு மாங்காய்...ஃஃஃ
இப்படித்தான் விளங்க முடியாக் கவிதை நான் சகோதரா..
@ மகாதேவன்-V.K said...
ஃஃஃ...முயச்சி திருவினையாக்கும் என்பதட்க்கு நீங்கள் ஒரு உதாரணம்...ஃஃஃ ஓடி வந்து உடனே வாழ்த்தி வாக்கிட்டுப் பொகும் சகோதரனுக்கு நன்றிகள்..
@ உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...
மிக்க நன்றி...
நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பா
வாழ்த்துக்கள் நண்பா...!இப்படியெல்லாம் அதிர்ச்சியான தலைப்பு வைத்தால்தான் சமூக கருத்து சொல்ல முடியும் என்பது கசப்பான உண்மை
நட்சத்திர வார வாழ்த்துக்கள்.
நல்லக் கட்டுரை..
எல்லா இடத்திலும் இப்பிரச்சினை இருக்கிறது நண்பரே..இன்றைய கல்விநிலையங்கள் மாணவனுக்கு தனித்தன்மையை,திறமையை வளர்த்தெடுப்பதில்லை..மாறாக மனப்பாடம் செய்ய வைத்து அவன் திறமைகள் மழுங்கடிக்கப்படுகின்றன..
@ த.ஜீவராஜ் said...
///..நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பா..//
நன்றி சகோதரம்...
@ ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஃஃஃ...வாழ்த்துக்கள் நண்பா...!இப்படியெல்லாம் அதிர்ச்சியான தலைப்பு வைத்தால்தான் சமூக கருத்து சொல்ல முடியும் என்பது கசப்பான உண்மை...ஃஃஃ
நன்றி சகோதரா... எனக்கம் இப்பத்தான் உண்மை விளங்குகின்றது...
@ sivatharisan said...
ஃஃஃ...நட்சத்திர வார வாழ்த்துக்கள்....ஃஃஃ
நன்றி சகோதரம்...
@ padaipali said...
ஃஃஃ...நல்லக் கட்டுரை..
எல்லா இடத்திலும் இப்பிரச்சினை இருக்கிறது நண்பரே..இன்றைய கல்விநிலையங்கள் மாணவனுக்கு தனித்தன்மையை,திறமையை வளர்த்தெடுப்பதில்லை..மாறாக மனப்பாடம் செய்ய வைத்து அவன் திறமைகள் மழுங்கடிக்கப்படுகின்றன...ஃஃஃ
எல்லொரும் பிரச்சனையை விளங்கிக் கொண்டால் தமிழ் அமாழி, கலாச்சாரம் நிச்சயம் காப்பாற்றப்படும்..
வாழ்த்துக்கள் சுதா..
சாதனைகள் தொடரட்டும்..
தலைப்பை பார்த்து நானும் தான் குழம்பிவிட்டேன். வாழ்த்துக்கள் சுதா தொடர்ந்து கலக்குங்கள். பத்திரிகையில் இடம் எடுப்பது என்பது குதிரைக்கொம்புதான்
KANA VARO said...
///...தலைப்பை பார்த்து நானும் தான் குழம்பிவிட்டேன். வாழ்த்துக்கள் சுதா தொடர்ந்து கலக்குங்கள். பத்திரிகையில் இடம் எடுப்பது என்பது குதிரைக்கொம்புதான் ...///
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரா... பத்திரிகை தரும் திருப்தியை விட பதிவுலகில் எனக்கு அதிகமாகவே கிடைக்கிறது...
தம்பி சுதா! உங்க வளர்ச்சியையும், முயற்சியையும் கண்டும், அறிந்தும் மகிழ்ச்சியடைபவர்களில் முக்கியமானவர்களின் பட்டியலில் நானும் ஒருவனாகத்தான் இருக்க முடியும்.
உங்களைப்பற்றியும் உங்க எழுத்தாற்றல் பற்றியும் பலபேருடன் விவாதித்திருக்கின்றேன். ஒவ்வொரு பதிவிலும் உங்களது திறமையை காண்பித்த வண்ணமே உள்ளீர்கள்.
பலர் ஏதாவது ஒரு விடயத்தைப் பற்றித்தான் திரும்பத் திரும்ப எழுதிய வண்ணமிருப்பார்கள் ஆனால் நீங்க அடுத்த தடவை எதைப்பற்றி எழுதுவீர்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பை கொடுத்து உங்க பக்கம் ஒரு வாசகர் படையையே வைத்துள்ளீர்கள்.
வாழ்க, வளர்க உங்க கலைத்தொண்டு...
நன்றி.
உண்மை தான்! நன்று! வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் பணி!
டியூசன் சென்டர் போகாமல் இருந்தாலே, பிள்ளைகள் நல்லாப் படிப்பாங்க...
கருத்துரையிடுக