திங்கள், 13 செப்டம்பர், 2010

தமிழ் நாடு ஈழத்திற்கு இதையாவது தருமா..?

11:55 PM - By ம.தி.சுதா 16

                       ஈழத்தமிழர் மீண்டும் ஒரு முறை தமிழக அரசிடம் வேண்டி நிற்க வேண்டிய தருணம் வந்திருக்கிறது. இதையாவது முதல்வர் கண்டு கொள்வாரா.. அல்லது பசப்பு வார்த்தை பேசி நழுவிக் கொள்வாரா தெரியவில்லை.
                         சம்பவம் இது தான் 2008 ம் ஆண்டளவில் நாமக்கல் மாவட்டத்தில் பொலிஸாரால் ஒரு சிலை கைப்பற்றப்பட்டது. இது முருகக் கடவுளின் பஞ்சலோகச் சிலையாகும்.
                           அப்போது இது பற்றி பல குழப்பங்கள் இருந்தாலும் பின்னர் ஈழத்தவரால் அதற்கு உரிமை கோரப்பட்டது. இச்சிலை திருகோணமலை மாவட்டம் மூதூர் பகுதியில் இருக்கும் சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்திற்கு சொந்தமானது என கூறப்பட்டது. அது அங்கிருந்து கடத்தப்பட்டே இந்தியாவிற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. 
(யாரோ போக்கத்ததுகள் தமிழ் சினிமா பாத்து செஞ்சு பாத்திருக்குறானுகள்.....இது தானுங்க அந்த இடத்து பேச்சு மொழி..) அதன் பின் அச்சிலை திருச்சியில் இருப்பதாக ஒரு தகவல் இருந்தது. இப்போது சீராக மாறியிருக்கும் அரசியல் சூழலை அடுத்து மீண்டும் அச்சிலை கொண்டு வருவது பற்றிய பேச்சு எழுந்துள்ளது. அனால் ஒரு விடயம் மட்டும் உறுத்தலாகவே உள்ளது. தமிழக அரசு கொடுப்பதற்கு சம்மதித்துள்ளது என்றொரு கதை அடிபட்டாலும் உத்தியோகபூர்வமாக ஆலய நிர்வாகத்திற்க கடிதம் எதுவும் அனுப்பப்படவில்லை. ஆனால் ஆலய நிர்வாகம் தமிழகம் போவதற்க தயாராக இருப்பதாகவே கூறுகிறது.
(அழையாதார் வாசல் மிதிக்க அவர்கள் என்ன தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களா..? இது தமிழக அரசுக்கும் கூட்டமைப்பு பாராளுமன்றத்தாருக்கு மட்டும் எழுதப்பட்ட வாசகம்)

செய்தி பிடித்திருந்தால்... என்னங்க நெடுக சொல்லக் கூடாது வழமை போல் வாக்கு தான்.......

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

16 கருத்துகள்:

சிலை கிடைத்தால் சந்தோஷமே.

கிடைக்க முருகனைப் பிரார்த்திப்போம்.

ம.தி.சுதா சொன்னது…

@ சே.குமார் said...
கட்டாயம் கிடைக்கும் கிடைக்காட்டிலும் பரவாயில்லை... ஏனென்றால் சில அரசியல்வாதிகளுக்கும் தொழில் வேண்டுமல்லவா...
வருகைக்கும் வாக்கிட்டமைக்கும் நன்றி சகோதரா...

Chitra சொன்னது…

ஈழத்தமிழர் மீண்டும் ஒரு முறை தமிழக அரசிடம் வேண்டி நிற்க வேண்டிய தருணம் வந்திருக்கிறது.

.....மீண்டும் தமிழக அரசா?

பெயரில்லா சொன்னது…

ஆறு கோடி தமிழரையும் அநாதைகள் அடிமைகள் ஆக்கிய கருநாய்நிதியிடம் மறுபடியுமா? மூக்குடைபட்டும் பாடம் கற்கவில்லையே நம் தமிழர்கள். அசிங்க மதங்களை கொண்டு வந்து எம்மைப் பிரித்தனர் ஆயுதம் கொடுத்து பொருளாதார உதவி ராணுவ உதவி கொடுத்து தமிழரை அநாதைகளாக்கி கொன்று குவித்த இந்தியனிடம் மறுபடியம மண்டியிடவா? அட இப்போது சிலை தானா முக்கியம் கடலில் தூக்கி கடாசிவிட்டு அநாதைகளாய் நிற்கும் தமிழருக்கு என்ன வழி என யோசியுங்கள். எருமை மாட்டின் மேல் மழை பெய்வது போலத் தான் ஈழத் தமிழனும். இவர்கள் திருந்த மாட்டார்கள். யாழ்

jagadeesh சொன்னது…

என்னவேணும்னாலும் கடத்திட்டு வந்துருங்க. பிடித்து, உடனே கொடுத்துட முடியுமா. கொஞ்சம் காத்திருங்கள். ஒரு நாட்டை விட்டே, ஒரு சிலையை கடத்திக் கொண்டு போயிருக்கிறார்கள், முதலில் அதை கவனியுங்கள். கடத்தியவர் ஒரு இலங்கை குடிமகன். இதெல்லாம் விட்டு விட்டு, தமிழக அரசு வந்து தூக்கிக் கொண்டு போன மாறி சொல்றீங்களே. காத்திருங்கள், உங்கள் உடமை நிச்சயம் வந்து சேரும்.

பெயரில்லா சொன்னது…

வாழ வேண்டிய மக்கள் இன்றில்லையே..முருகன் மட்டும் இப்போ அங்கே போய் யாரை வாழ்விக்கப் போகிறார்?

Jana சொன்னது…

அதுசரி..அமைதிப்படை என்றபெயரில் வந்து அட்டூளியங்கள் செய்து. வடக்கு கிழக்கில் களவுகளும் எடுத்து கப்பலில கொண்டுபோனதுகளையும் இந்திய அரசாங்கம் தருவினமோ?

ம.தி.சுதா சொன்னது…

@ Chitra said...
வருகைக்கு நன்றி அக்கா...
ஆனால் நாங்கள் உடுக்க உடையில்லாமல் இருந்த நேரம் ஒரு பை நிறைய பொருள் தந்த தமிழக மக்களுக்கு நன்றிக்கடன் பட்டவர்கள்...

ம.தி.சுதா சொன்னது…

Anonymous said...
கருத்திட்டமைக்கு நன்றி.. ஆனால் நிங்கள் இதை வடக்கத்தையானுக்கு சொல்கிறேன் என்று சொல்லியிருக்கலாம்.. ஏனெனில் நீங்கள் சொல்வது அவர்களுக்கத் தான் பொருத்தம்...

ம.தி.சுதா சொன்னது…

@ jagadeesh said...
கருத்துக்கு நன்றி சகோதரா... பணக்காரன் தனது தங்கக் கோப்பை காணாவிடில் ஆதங்கப்படுவான்.. பிச்சைக்காரன் தனது உடைந்த கோப்பையை காணாவிடில் அதங்கப்படுவான்.. இதில் ஈழத்தவர் இரண்டாம் ரகம்.. இருந்தாலும் கலைஞர் சரியான முடிவெடுப்பார் என்று தெரிகிறது...

ம.தி.சுதா சொன்னது…

@ padaipali said...
வருகைக்கும் வாக்கிட்டமைக்கும் நன்றி சகோதரா... எரியிற வீட்டில் பிடுங்குவது எல்லாம் லாபம் தானே...

ம.தி.சுதா சொன்னது…

@ Jana said...
சரியாக கேள்வி ஜனாஅண்ணா ஆனால் உடன் ரத்தமான கலைஞரே சிலதை தரமறுக்கையில் மத்திய அரசு என்ன தரப் போகிறது...

anuthinan சொன்னது…

பாருடா எங்க ஊரு முருகன் அங்க எல்லாம் ஊர் சுத்தி பார்க்க போய் இருக்கார் போல!!!

திருப்பி தருவாங்க பயப்படவே தேவை இல்ல !!! இல்லாட்டி முருகன வர சொல்லிருங்க

ம.தி.சுதா சொன்னது…

@ Anuthinan S said...
சகோதரா முருகன் இன்னுமொரு வள்ளி தேடிப் போனாரோ... வரட்டும் கேட்போம்...

பெயரில்லா சொன்னது…

thamil nadu ethu thravillainu salikkirinkal.... neenka enna koduththinkal..

thiyagarajan.s சொன்னது…

ஈழத் தமிழர்களின் வேண்டுகோளை தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஏற்று முருகப் பெருமானின் விக்ரகத்தை தருவார்கள்.முருகப் பெருமான் கருணை மிக்கவர், மேலும் முருகப் பெருமானின் பன்னிருவிழிகளில் ஒரு விழி என்றுமே ஈழ தேசத்தின்மீதும்,அதன் மக்கள்மீதும் உண்டு. கவலைப் படாதீர்கள் சகோதரர்களே..!!!உங்கள் கவலைகள் யாவும் விரைவில் மாறும்...நம்பியவரை முருகன் கைவிட்டதே இல்லை...

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top