இது ஒரு புரட்சியை ஏற்படுத்தப் போகும் தொழில் நுட்பப் வளர்ச்சியாகும். ஆனால் இதற்கான செலவுகளுடன் ஒப்பிடுகையில் மருத்துவத்திற்கு பாவிப்பதற்கான ஆய்வுகள் தான் நடைபெற்றுவருகிறது.
அதற்கு அதிவேக இணையத் தொழில் நுட்பம் தேவை. அதற்காக நம்மூர் தொலைத் தொடர்பாளர் விளம்பரங்களை நம்ப வேண்டாம். 1Mbps வேகம் என்று சொல்வார்கள் ஆனால் 50Kbps வருவதே பெரும் பாடு.
இந்தியாவில் உள்ள ஒருவருக்கு அவசர சத்திர சிகிச்சை ஒன்று தேவைப்படுகிறது. அதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு சத்திரசிகிச்சை நிபுணர்கள் அழைக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் இந்தியா வருவதானால் குறைந்தது ஆறு மணித்தியாலம் தேவைப்படும். மொத்தமாக அவர்களது பிரயாணச் செலவு பதினைந்து மணித்தியாலம் தேவைப்படலாம். ஒரு வைத்தியரைப் பொறுத்த வரை ஒவ்வொரு நிமிடமும் பெறுமதியானது தான். அத்துடன் இவ்வளவு தூரம் பிரயாணம் செய்வதால் பெரும் உடல் உளைச்சலுக்கு உள்ளாவார்கள். இதற்கெல்லாம தீர்வு தரக் கூடியது தன் இந்த முறையாகும்.
இங்கு நோயாளியுடன் ஒரு வைத்தியரும் ஒரு இயங்திர மனிதனும் நிற்பார்கள். அங்கு இரு வைத்தியர்களும் இயங்திர மனிதனுடன் இணைப்புகள் மூலம் அதிவேக இணையத் தொடர்புகளுடன் இருப்பார்கள். அவர்கள் அங்கு இருக்கும் திரையில் நோயாளியைப் பார்த்தபடி சிகிச்சை நடக்கும். உண்மையில் இங்குள்ள வைத்தியர் ஏதாவது தொழில் நுட்பக் கோளாறை எதிர் கொள்வதற்காகத்தான் இருப்பார்.
என்னங்க நான் கதை விடுவது போல இருக்கா இதைத் தான் சங்கர் அப்போதோ (1998) ஜீன்ஸ் திரைப்படத்தில் சொல்லியிருந்தார். இதே தொழில் நுட்பத்தின் மூலம் தான் அந்நிய நாட்டிலிருக்கும் நம்ம மாப்பிளைகள் இங்கு டாவடிக்கும் பொண்ணுக்கு பேன் பார்க்கும் காலம் இன்னும் சில ஆண்டுகளில் வந்தால் ஒருத்தரும் அதிசயிக்கத் தேவையில்லை.
(அடபோங்க ஒரு பொண்ணு கேட்குது இந்தியாவிலிருக்கும் தன் தாயாருக்கு பாரிசவாதமாம் கோலம் போட முடியலியாம் இதைப்பயன் படுத்தமுடியுமா என கேட்கிறது………. இப்ப இல்லிங்க என் மகனை 2100 ல் கேட்கப் போவதை நான் சொல்கிறேன்)
முக்கிய குறிப்பு – இங்கு நான் அமெரிக்க வைத்தியர்கள் பற்றி எடுத்துக் காட்டியது உதாரணத்துக்கு தான் அதைவிட சிறந்தவர்களும் நம்மிடம் இங்கிருக்கிறார்கள். ஆனால் ஒன்று அவர்களும் அங்கு போய் உழைக்க விரும்புவது தான் கொடுமையான விசயம்
இக் கட்டுரை எனத ஆரம்பகாலப் பதிவுகளில் ஒன்று அதை மீள புனரமைத்தத் தந்திருக்கிறேன்.... முக்கியமாக ஒன்று நான் சுப்பர் ஸ்ராருக்கு எதிரானவனில்லை....
இக் கட்டுரை எனத ஆரம்பகாலப் பதிவுகளில் ஒன்று அதை மீள புனரமைத்தத் தந்திருக்கிறேன்.... முக்கியமாக ஒன்று நான் சுப்பர் ஸ்ராருக்கு எதிரானவனில்லை....
9 கருத்துகள்:
ers said...
நன்றி...
அப்படியே புளக் எழுதும் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துவிட்டால் இன்னும் சௌகர்யம்தான். வாழ்த்துக்கள் சுதா.
@ Jana said...
அண்ணா நல்லம் தான் ஆனால் அதையும் நம்ம குரு எழுத்தாளராக அறிமுகப்படுத்தி விட்டாரே...
சுதா, நம்ம ஜனங்களே கூட நிறைய விஷயங்களில் உணர்ச்சியற்று ரோபோ வாழ்க்கை தானே வாழ்ந்து வருகிறார்கள்?
நல்ல இடுகை....
வாழ்த்துக்கள்.
அருமையான தகவல் நண்பரே....
பதிவு அருமை மதி,வருங்காலத்தில் பதிவின் நீட்டத்தை கொஞ்சம் அதிகரித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது தாழ்வான கருத்து..
ரஹீம் கஸாலி said...
நன்றி சகோதரா...?
மைந்தன் சிவா said...
ஃஃஃ...பதிவு அருமை மதி,வருங்காலத்தில் பதிவின் நீட்டத்தை கொஞ்சம் அதிகரித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது தாழ்வான கருத்து...ஃஃஃ ஆம் சகோதரா இந்தக் கறை எப்போதும் எனக்குள் இருப்பதாக பலர் சொல்கிறார்கள் தீர்க்க முயற்சிக்கிறேன்..
கருத்துரையிடுக