தனிமை
இரவு
நிலவு
நிலவு
முதிரைமரம்
ஒரு ராணுவ வீரன்
நான்
அந்த இடம் மறக்க வில்லை
நினைவிலேயே நிரம்பியிருக்கிறது
அவளை கடைசியாக சந்தித்த இடமல்லவா
அந்த முதிரை மரம் முதுமையாக்கப்பட்டு நிற்கிறது
எம்முள்ளான உறவை போல
அன்றொருநாள்
ஏன்டி என் பெயரை சேர்த்து எழுதினாய் என்றேன்
இருக்கட்டுமென்றால்
“மறைக்க முடியாததை மறுத்தென்ன வரப்போகிறது
போயிட்டு வாறன்”
அடிக்கடி அங்கே போவேன்
அவள் வரவே இல்லை
இன்றும் வருவாளா ?
தெரியும் அவள் இனி வரமாட்டாள்
கண்களை மூடி அந்த மர அடியில் சாய்ந்து கொள்கிறேன்
அவளுக்கு என்னில் பிடித்த கரி என் முதுகில் பிடிக்கிறது
எங்கும் நிசப்தம்
என் இதயத் துடிப்பு ஒவ்வொன்றும்
அவள் என்னை “அண்ணா டேய்” என அழைப்பது போலவே இருக்கிறது
(வரிகளின் ஒலி வடிவம் கீழே உள்ளது கைப்பேசி ஒலிப்பதிவாகையால் தெளிவில்லாமல் உள்ளது பொறுத்தருள்க)
(வரிகளின் ஒலி வடிவம் கீழே உள்ளது கைப்பேசி ஒலிப்பதிவாகையால் தெளிவில்லாமல் உள்ளது பொறுத்தருள்க)
குறிப்பு - உறவுகளே என் நேரத்தை யாரோ களவாடி விட்டார்கள் அதனால் வாரம் ஒரு பதிவும் வாரம் ஒரு தளமும் தான் வர முடிகிறது புரிந்துணர்வு கொண்ட அனைவருக்கும் நன்றி.
முக்கியகுறிப்பு - சகோதரங்களே உங்களில் பலர் “ஜெயம் கொண்டான்” படம் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஒருவன் ஒரு பிரச்சனையில் இருந்த விலத்துகிறான் என்றால் அதற்கு பல காரணமிருக்கும்
என் பதிவுலக பயணம் சுதந்திரமாகவே நகருகிறது பல மூத்தவர்களின் சொல் கேட்டுத் தான் பல இடங்களில் பல பிரச்சனைக்கு முகம் கொடுக்காமல் விலத்திப் போகிறேன்.
ஏன் தேடி தேடி வம்புக்கிழுக்கிறீர்கள் “தங்கள் லிங்கை எனது கருத்துப் பெட்டியில் பிரசுரிக்க முடியவில்லையாம்” நான் அழிக்கிறேனாம் அப்படியானால் மற்றவர்கள் எல்லாம் என்ன தாயத்து மந்திரித்து விட்டா லிங்கை போடுகிறார்கள்
உங்கள் நவீன ஆங்கிலத்துக்கு பழக்கப்பட வேண்டிய அவசியம் எனக்கில்லை இந்த உலகத்தில் அம்மா என்றால் எந்த உயிருக்கும் உயிர் தந்த தெய்வம் அதை மதிக்கத் தெரியாதவரை எந்த உயிரிகள் பட்டியலிலும் சேர்க்க முடியாது எனது கருத்துப் பெட்டி என் மனம் போல திறந்தே கிடக்கிறது அப்படி நீங்கள் கருத்திட்டு நான் அழித்திருந்தால் உங்களுக்கு முதல் கருத்திட்டவர்கள் மெயிலுக்கு அது போயிருக்கும் என்பதும் தெரியாத தொழில்நுட்ப அறிவாளரா நீங்கள்...
நான் பல விடயங்களை மறப்பதற்காக தொழிலை கூட மறந்து ஒதுங்கியே வாழ்கிறேன் மீண்டும் மீண்டும் சீண்டாதீர்கள் தங்கள் மொழியில் நான் கோழை தான் காரணம் நானும் இந்த உலக நாடக மேடையில் ஒரு நடிகன். நான் என் வலியையும் உணர்வையும் தான் எழுத்தில் பகிர்கிறேன் பேரெடுப்பதற்காக எழுதுவதென்றால் நான் செய்த தொழிலுக்கு எத்தனையோ எழுதி விட்டு போகலாம் தயவு செய்து என்பாதையில் குறுக்கிடாதீர்கள் நான் பழைய சம்பவங்கள் பலதை(ரை) மறக்க விரும்புகிறேன். அதனால் தான் இந்த கொடிய போரை எதிர்க்கிறேன். முடிந்தால் என்னொடு கை கோருங்கள் தங்களை என் இருகரம் கூப்பி வரவேற்கத் தயாராக இருக்கிறேன் போர் தான் வேணும் எம் இனம் இன்னும் அழியணும் உங்கள் உறவுகள் நிற்கதியாக நிற்கணும் என்றால் தங்கள் பணியை தொடருங்கள் நானும் என் பணியை தொடர்கிறேன் பொதுநலம் கூடிய தர்மமே எப்போதும் வெல்லும்.
45 கருத்துகள்:
கவிதை அருமை அண்ணா “நிச்சயம் தங்கள் மலர்விழி தங்களது உண்மையான அன்புக்காக தங்களை தேடி வருவாள் அண்ணா”
ஒருவன் சாதிக்க ஆரம்பித்து விட்டால் போட்டி பொறாமைகளுக்கு முகம் கொடுக்கத் தானே வேணும் அண்ணா...
தடைக் கற்களை தகர்த்தெறிவொம் எதிலும் வெற்றி காண்போம்.
அசத்துறிங்க நண்பா வாழ்த்துகள்
அசத்துறிங்க நண்பா வாழ்த்துகள்
"நினைவிலே நிரம்பிக் கிடக்கிறது.." கவிதை.
டோன்ட் வொரி மதி..
யு கோ அஹெட்..
இவங்க இருப்பாங்க எப்போதுமே...நீங்கள் உங்கள் பயணத்தை தொடருங்கள் ஒதுங்கிப் போகாமல்!!
கவிதை எடுத்தேன்.. அந்தகண்களை காணுகிறேன்..
மலர்விழி நீ வாழீ..
முதல் பந்தி எங்கோ அடிமனதின் உள்ளக்கிடக்கை.
ரசனை.
மதி...உங்கள் குரல் வடிவத்தில் கவிதை இன்னும் உயிர் கூட்டுகிறது !
கவிதைக்கு உங்கள் குரல் உயிர் கொடுக்கிறது..
////பொதுநலம் கூடிய தர்மமே எப்போதும் வெல்லும்./// உண்மை.
தங்கை மலர்விழி விழி கலங்க வைத்துவிட்டார்...
அருமையான கவிதைங்க.
கவிதை அருமையா இருக்கு, சுதா. உங்கள் குரலும், இசையும் பொருத்தமா இருக்கு.
கவிதையும்
கோவமும்
நியாயமாய்
இருக்கிறது
நல்ல இருக்கு அண்ணா
வாழ்த்துகள்!
கவிதை நன்று..
பிரச்னைகளை அதிகம் உள்வாங்கிக்கொள்ளாதீர்கள்.. நல்ல பதிவுகளை வாசிப்பதி கவனம் செலுத்துங்கள்.. நன்று படையுங்கள்..
சீண்டுபவர் சீண்டிக்கொண்டே இருக்கட்டும். பதில் சொல்ல ஆரம்பித்தால் நேரம் போதாது..
கவிதை அருமை! இப்படி எத்தனை பேர்?
//நான் என் வலியையும் உணர்வையும் தான் எழுத்தில் பகிர்கிறேன் பேரெடுப்பதற்காக எழுதுவதென்றால் நான் செய்த தொழிலுக்கு எத்தனையோ எழுதி விட்டு போகலாம்//
புரிகிறது சுதா!
நீங்க கலக்குங்க உங்கள் இஷ்டப்படி! :-)
சோகமான கவிதை
வலிக்கிறது
வேதனை
குரல் வடிவம் உணர்வுடனே உள்ளது
வாழ்த்துக்கள்
பல இழப்புகளை யாபகபடுதுகிறது
சகோ உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் சோகம் தெரிக்கிறது. எதுவும் நிரந்தரமல்ல.
http://thagavalmalar. blogspot.com/2011/05/blog-post.html உங்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.
நண்பரே இது ஒன்றும் புதிய விடயமல்ல ..
காலம் காலமாய் நடந்து கொண்டு இருப்பது தான் ..
இதில் எல்லாம் கவனம் செலுதாதிர்...
உங்களின் கவி வரிகள் அப்படியே மனதில் பதிந்து போகிறது ,..
வீடியோ கிளிப்பிங் மனதை கணக்க வைக்கிறது,யாழ்ப்பாண தமிழை ரசிக்க முடியாமல் சோகம் முன் வந்து நிற்கிறது.
காலம் மாற்றும்
கலக்கம் மறையும்
சகோ
கவிதையும், கவிதையோடு சேர்ந்த குரல் அமைப்பும், அதற்க்கான படங்களும் மனதை வலி கொண்டு நிரப்புகிறது சகோ...கவிதை அருமை...உங்கள் குரல் கவிதைக்கு அழகாய் உயிர் சேர்த்திருக்கிறது...நான் என் வலியையும் உணர்வையும் தான் எழுத்தில் பகிர்கிறேன் பேரெடுப்பதற்காக எழுதுவதென்றால் நான் செய்த தொழிலுக்கு எத்தனையோ எழுதி விட்டு போகலாம்..புரிகிறது சகோ....கவலையை விடுங்கள்...இதுவும் கடந்து போகும்...
அழமான உணர்வை உங்கள் கவிதை சொல்கிறது மலர் விழியில் நானும் இழந்தவர்களை உணர்கிறேன்!
நல்ல நண்பர்கள் வலையில் உண்டு தம்பி தூற்றுபவர்களுக்கு செவிசாய்த்தால் கருத்துக்கூற நேரம் போதாது ஒதுங்கிப்போகாமல் நல்ல பதிவை தொடருங்கள்.
கவிதை கவிதை...
விரைவில் நல்லதே நடக்கும்
SORRY SUTHA. ....I AM LATE.
I UNDERSTAND YOUR FEELINGS/
DONT WORRY....WE ARE WITH YOU
நல்ல கவிதை........
“மறைக்க முடியாததை மறுத்தென்ன வரப்போகிறது//
கவிதை அருமை!
ஹாய் mathisutha,
என்னோட மெயில் இக்கு பதில் போடுவதை நிறுத்தி விட்டீர்கள்!!!!!
நண்பா கவிதை அருமை.........
கவிதையின் ஆழம் அதிகம் நண்பனே !
சோக பள்ளத்தில் வீழாதே !
வீழ்த்தி விடும் உன்னை ,
விடை தெரிய உலகில் ,
விழித்தல் தான் புலரும் ,
அனைத்தும்,
வழியின் சொட்டு வீரத்தை மறைக்கும்
எல்லாம் மாறி போகும் ,
உன் சோகம் குறைத்திருக்கும் இப்பொழுது
எல்லாம் உன் கவிதை சுமக்கின்றது நண்பனே !
என் தாய் த்தமிழ் உறவே...அன்பின் சுதா....உன் குரலில் கரைந்து போனேன்.
சிறந்த கவிதைப்பதிவு இது ; தங்கள் குரலோடு கலந்த பிண்ணி இசையும் அருமை.
வாழ்த்துக்கள் தம்பி.
கவிதையும், கவிதையோடு சேர்ந்த குரல் அமைப்பும் அருமை சுதா..
"மீண்டும் மீண்டும் சீண்டாதீர்கள் தங்கள் மொழியில் நான் கோழை தான் காரணம் நானும் இந்த உலக நாடக மேடையில் ஒரு நடிகன்..." sakothara unkalin manam purikerathu....
>> என் பதிவுலக பயணம் சுதந்திரமாகவே நகருகிறது பல மூத்தவர்களின் சொல் கேட்டுத் தான் பல இடங்களில் பல பிரச்சனைக்கு முகம் கொடுக்காமல் விலத்திப் போகிறேன்.
hi hi விடக்கூடாதே.. வாங்கப்பா மைன்ஸ் ஓட்டை போட்டு சுதாவை சூடேத்தலாம். ஹா ஹா
கவிதை தெளிவு.. தங்களின் மனநிலை மட்டும் ஏனோ சற்று...!?
எது வந்தாலும் பொறுத்துப்போவதுதான் தங்க தமிழ்மகனின் அடையாளம்..
பொறுத்தார் பூமி ஆள்வார்.. வார்த்தைகளுக்கு வலிமை அதிகம்.. உங்களுக்கு தெரியாததா? நண்பரே..!
வழக்கம் போலவே தங்களின் கவிதை அருமை.. வாழ்த்துக்கள்..!
பகிர்வுக்கு மிக்க நன்றி..!
கவிதை வரிகளின் குறியீட்டு மொழிக் கையாடல்....உணர்வுகளுக்கு வலுச் சேர்க்கிறது,
உங்கள் மெல்லிய குரல் கவியினைக் கேட்கையில், கவிதையின் காட்சியமைப்பினை எங்கள் கண் முன்னே கொண்டு வந்து விடுகிறது.
சபாரட்ணம் சுடரவனின் குரலினை ஒத்ததாய் உங்களின் குரலும் இருக்கிறது..
அவ்வளவு மென்மையான குரல்.
வாழ்த்துக்கள் சகோ, தொடர்ந்தும் ஒலி வடிவம் கலந்த வரி வடிவக் கவிதைகளை எதிர்பார்க்கிறேன்,
கவிதையில் முதல் பகுதியில் வந்த காதலி, இறுதி வரிகளில் அண்ணன் எனும் உணர்வின் மறு பிறப்ப்பாக உருமாறியுள்ளார்.
பூடகமான மொழிக் கையாள்கை அருமை,
தடைக்கற்களை படிக்கட்டுக்களாக
மாற்றி முன்னேறுங்கள் நண்பா.
நண்பா.... தாமத வருகைக்கு மன்னிக்கவும்... கவிதை அருமை....
கவிதை அருமை!அருமை!
ஏனிந்த கோபம்..
அருமை.....
கருத்துரையிடுக