குறிப்பு - தயவு செய்து பதிவுக்கு மட்டும் கருத்திடுங்கள்.. கருத்துகளைப் பார்த்துக் கருத்திடுவதால் மீண்டும் பிரச்சனை திசை திரும்புகிறது...
சத்தியமாய் இது நான் தான் நம்பாவிடில் பதிவை படித்து முடியுங்கள் |
ஓயாது சுற்றும் இப்புவியில் மானுடனாய் அவதரித்த ஒவ்வொருத்தரும் ஏதோ ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற துடிப்பில் துடித்துக் கொண்டிருக்கிறோம்.
கடந்த சில நாட்களாக ஆரம்பித்த கருத்துப் போரானது எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ வந்து நிற்கிறது. இது யாரால் திசை திருப்பப்பட்டது ஏன் திசை திரும்பியது என்பதை மறப்போம்.
ஆனால் அதன் உச்சக்கட்டம் பல நல்ல தமிழின உணர்வாளர்களைப் பாதித்து விட்டது. அதற்கு நான் எழுதிய வரிகளும் காரணமாக அமைந்திருக்கலாம். எமக்குள் இருந்த சிறு சிறு கருத்து வேற்றுமைகள் வெறும் வாயை மென்றுகொண்டிருந்தவனுக்கு அவலைக் கொடுத்தது போலாகி விட்டது.
இது ஒரு திடீர்ப் பதிவு தான் காரணம் இன்று இணைய உலகில் சஞ்சரிப்போம் என்று நுழைந்து பார்த்ததும் தான் இவற்றைக் கண்ணுற்றேன்.
சென்ற பதிவில் நான் சில கேள்விகளை கேட்டிருந்தது உண்மை தான் ஆனால் அக்கேள்வியே அவர்கள் மீதான தப்பான பார்வையாக மாற்றப்பட்டிருக்கிறது எனும் போது அக் களங்கத்தையும் கட்டாயம நான் தானே களைந்தாக வேண்டும். துசியந்தன், கந்தசாமி, ஐடியாமணி (A) ரஜீவன், நிருபன், நேசன் இத்தனை பேருக்குமிடையில் தான் இந்த உச்சக்கட்ட கருத்து மோதல் இடம்பெற்றது.
ஆனால் கருத்தால் மோதிக்கொண்ட நானே ஏற்றுக் கொள்கிறேன் இவர்கள் அனைவரும் ஈழ உணர்வாளர்களே.. ஈழமக்களின் முன்னேற்றத்திற்காக ஏதோ ஒரு வகையில் உழைத்து வருகிறார்கள்.
இவர்கள் மட்டுமல்ல இன்னும் சில பதிவர்களும் மும்முரமாக ஈடுபடுகிறார்கள். அதில் ஒருவர் என் ஊடாகத் தான் இங்குள்ள ஒருவருக்கு பண உதவி செய்தார். அவர் தன் பெயர் வெளிவரக் கூடாது எனக் கண்டிப்பாகச் சொன்னதால் தான் நான் வாய் திறக்கவில்லை. அதே போல் இன்னொரு பதிவர் (அச்சுவேலியை சேர்ந்தவர்) உதவ முன்வந்திருந்தார்.
இதை புதிதாய் பார்ப்பவர்கள் கேட்கலாம் அப்புறம் ஏன்ரா அடிபட்டுக் குத்துப்படுகிறீர்கள் என்று?
யோவ் இது எங்கள் வீட்டில் புதிதாய் நடக்கும் ஒன்றல்ல இன்றைக்கு அடிபடுவோம் நாளைக்கு கட்டிப்பிடித்துக் கொண்டு படுப்போம்.
இன்னும் இந்தப் போர் தொடர்ந்திருக்கும் ஆனால் அது எங்கேயோ போய் அவர்களை தேசத் துரோகி ரேஞ்சுக்கு கொண்டு வந்து அவர்களும் ஏதோ போர் ஆதரவாக குரல் கொடுப்பவர் என்ற கணக்கிற்குக் கொண்டு வந்து விட்டது.
இதன் பிறகும் விட்டால் எனக்கு ஒரு சிலரால் கொடுக்கப்பட்டுள்ள பட்டம் தான் அவர்களுக்கும் கிடைத்து விடும்.
என்னடா இவங்களுக்குள் நடந்தது என்று விழித்து விழித்துப் பார்ப்போருக்காக
முன்கதைச் சுருக்கம் (மன்னிக்கணும் பிரச்சனைச் சுருக்கம்) -
reel - 1 நான் இந்திய சினிமாக்காரர் ஈழம் என்ற பெயரை வியாபார பொருளாகப் பாவிப்பதாகவும் அதை யாரும் சமூகத் தளங்களில் பிரபலப்படுத்த வேண்டாம் என்றும் சில கவிஞர்கள் போர் உணர்வைத் தூண்டுவதாகவும் பதிவிட்டேன். அதில் பலருக்கு உடன்பாடிருக்கவில்லை.
reel - 2 ரஜீவன் அவர்கள் ஒரு பதிவிட்டார் அதில் அவர் ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தார். இலங்கையில் நல்ல படைப்புகள் வந்தால் நாங்கள் ஏன் இந்தியப்படைப்பை நாடுகிறோம் என்றார். நான் பதிலிட்டேன் தங்களுக்கு விரைவில் செயலில் காட்டுகின்றேன் என்றேன். உண்மையில் நான் குறிப்பிட்டது நான் எடுக்கப் போகும் குறும்படம் பற்றித் தான் அதன் பிறகு என் கீழே கருத்திட்டவர் அனைவரும் அதையே கருப்பொருளாக எடுத்து விட்டார்கள்.
reel - 3 மேலும் தேவைப்பட்டால் கருத்துப் பெட்டியில் பகிரப்படும்.
சரி தலைப்பிற்கு வருவோம்
மேலேயே சில விடயங்கள் சொல்லப்பட்டாலும். இதே போலத் தான் சில காலத்திற்கு முன்னர் வெளிநாட்டில் உள்ள ஊடகவியலாளர் ஒருவர் தேவையற்ற புரிந்தணர்வு ஒன்றால் பிரிந்து போனார்.
ஆனால் அவர் தனது பிள்ளையின் பிறந்த நாள் பணத்தைக் கூட நான் இருந்த அகதி முகாமிற்கு அனுப்பியவர் அதுமட்டுமல்ல சிறிய தூரம் பிரயாணம் செய்வதென்றால் நடந்து சென்று விட்டு அப்பணத்தை இங்கே அனுப்பும் ஒருவர்.
அப்படியானால் ஏன் மோதிக் கொண்டீர்கள்?
ஒரு இணையத்தளம் ஒன்று ஒரு பொது விடயத்திற்காகப் பணம் சேர்த்தது. ஆனால் அப்பணம் சுருட்டப்படப் போகிறது என்பதால் நான் எதிர்த்துப் பதிவிட்டேன் அதை அவர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அதற்கு நான் என்ன செய்வது.
அத்துடன் எனது உறவினர் ஒருவர் கனடாவில் இருக்கிறார். இளைஞரான அவர் தனது இளைஞர் குழுவுடன் இணைந்து நட்டாங்கண்டல் கிராமத்திலுள்ள பலருக்கு வாழ்வாதாரம் அளித்துள்ளார். அவர் மீண்டு செய்வதற்காக நான் ஆரம்பித்திருந்த அரவணைப்போம் திட்டத்தைக் கேட்டுள்ளார்.
இப்படிப் பலர் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரையும் தொகுத்து தனிப்பதிவில் இடுகிறேன்.
இவன் ஏன் இதைப் புலம்புகிறான் என கேட்கிறீர்களா?
நானும் புலம்பெயர் தேசத்தில் நடக்கும் ஊழல்களை மட்டுமே அதிகமாகக் கதைப்பதால் ஈ-ழ-ம் ச-ம்-ப-ந்-த-ப்-ப-டா-த-வ-ர்-க-ள் புலம்பெயர்ந்தவர் அனைவரும் அப்படித் தானாக்கும் என நினைத்து விட்டார்கள். அதற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன் என்று சொல்லும் போது வெட்கமடைகிறேன்.
இந்தப் பதிவை திடீரென நான் எழுதக் காரணமானவர்களில் இன்னும் ஒருவர் இருக்கிறார்.
ஒருத்தி என்னைக் கேட்டிருக்கும் கேள்வியின் தாக்கம் தான். இவ்வளவும் என் தங்கையாக பழகிய உரிமையில் தான் கேட்கிறாள் என்றாலும் அது என்னை உறுத்தியது. சுலக்சி என்ற அந்த ராட்சசியின் மடல் இது தான்.. தனிமடலை பகிரக் கூடாது என்ற விதிகளால் அழித்து விட்டே இட்டிருக்கிறேன்.
20 கருத்துகள்:
வேண்டாம் சுதா! தொடர்ந்து பொதுத்தளத்தில் வார்த்தைகளால் சுட்டுக் கொள்ளாமல் .பிடித்தால் படிக்கின்றார்கள் இல்லையேல் மெளனம் காப்போம்! இதுவும் கடந்து போகும் அலைதான்!
மதி...அமைதியாகுங்கள்.
எங்களவர்களிடம் ஒற்றுமைக் குறைவே இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம்.விடுங்கள்.
எங்களால் முடிந்தவைகளைச் செய்வோம் !
மதி....நேரக்குறைவால் உங்கள் தமிழ்மண நட்சத்திர நேரம் அடிக்கடி வரமுடியவில்லை.என் அன்பு எப்போதும் உண்டு !
போதும் மதி.சுதா!கிளறிக்,கிளறி .........................
தனிமரம் said...
அண்ணா மீண்டும் ஒரு முறை படியுங்கள் இது சுட்டுக் கொள்ளும் பதிவல்ல ஒற்றுமைப் பதிவு
ஹேமா said...
நன்றி அக்கா அன்பொன்று மட்டுமே போதும்..
பொது இடமென்றாலும் என்னில் தவறிருக்கும் இடங்களை ஒத்துக் கொள்கிறேன் அவ்வளவுமே
Yoga.S.FR said...
மாஸ்டர் எனக்காக பதிவை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள்...
யார் யாருக்காகவோ எல்லாம் நான் அவர்களை விட்டுக் கொடுக்கமாட்டேன் ஏனென்றால் அவர்களின் உணர்வும் எனக்கு முற்று முழுதாகத் தெரியும்..
மிக்க நன்றி தம்பி.. நான் கூட உங்கள் இரண்டு பதிவை வாசித்தேன் கருத்திடவில்லை..
பிரச்சனையை பெரிசாக்க விரும்பல துஷியோ கந்தோ சொல்ல வந்த விடயம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்னமோ உண்மை முன்னர் ஒரு பதிவிலும் நானும் துஷியுடனும் கந்தசாமியுடனும் கருத்து மோதல் செய்துள்ளேன். கருத்து மோதல்களை விரோதமாய் பார்க்கும் பழக்கம் அவர்களிடம் இல்லை மணியை பற்றி நான் உனக்கு சொல்லி விளங்கப்படுத்த தேவை இல்லை..!!!!
என்னை பொறுத்தவரை வெளிநாடுகளில் இருக்கும் எங்களை போன்றோர் தங்களால் ஆன உதவிகளை உண்மையாய் தேவைப்படுவோருக்கு வழங்க முயற்சி செய்ய வேண்டும்...
@ காட்டான்..
நன்றி அண்ணா...
ஃஃஃபிரச்சனையை பெரிசாக்க விரும்பல துஷியோ கந்தோ சொல்ல வந்த விடயம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்னமோ உண்மைஃஃஃஃ
அதை நான் ஏற்றுக் கொண்டதால் தான் இப்பதிவே...
சுதா, உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிவு....... மகிழ்ச்சி! மகிழ்ச்சி!
நாங்கள் ஒரு விஷயத்தில தெளிவா இருக்கோணும் சுதா! அதாவது எவ்வளவுதான் சண்டை பிடிச்சாலும், பிறகு ஒற்றுமையாகிறதில குறியா இருக்கோணும்!
இதென்ன எங்கட தனிப்பட்ட பிரச்சனையே இல்லைத்தானே! எல்லாம் கருத்து மோதல் தானே! அப்புறம் கருத்து மோதலால, ஒருத்தரோட ஒருத்தர் கதைக்காமல் இருக்கிறது 21 ம் நூற்றாண்டுக்கு ஒத்துவராது!
நீங்கள் சொன்ன மாதிரி, நாங்கள் இண்டைக்கு கடிபடுவம்! நாளைக்கு கட்டிப்புடிச்சுக்கொண்டு கிடப்பம்! இதுதான் நட்பு!
மற்றது சுதா, உங்களிட்ட ஒரு விஷயம் கேக்கோணும்! நீங்கள் என்னில கோவிச்சுக்கொண்டுதானே, ஈழவயலை விட்டுப் போறதெண்டு முடிவெடுத்தனிங்கள்!
நான் மட்டுமா ஈழவயலில இருக்கிறன்? ஏனைய நண்பர்களின் மனசு புண்படும் இல்லையா?
ஒருக்கா மீள் பரிசீலனை செய்து பாருங்கோ! இப்ப இல்லாட்டியு்ம், பிறகு எண்டாலும்!
எதோ சிறு சிறு கருத்து வேறுபாடுகள் கொஞ்சம் பெருசா போச்சு, ஆனா அது கருத்துக்களில் மட்டும் தான் .. அதை தாண்டி வேறு ஒன்றும் இல்லை.இது சாதாரணமானது. உங்கள் புரிதலுக்கு நன்றி சுதா பாஸ்)
அப்புறம் மணி சொன்னது போல ஈழ வயலில் உங்கள் வரவை எதிர்பார்க்கிறேன்.
அண்ணா நான் உங்களை மதிக்கிறேன்...நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தொடர வேண்டும் எம்மால் முடிகின்ற காலத்தில் நானும் உங்களுடன் கை கோர்பேன்...
கருத்து மோதல்களால் பிரிவுகள் வேண்டம்...
புரிந்துணர்வுக்கு நன்றி சுதாண்ணா.. அப்புறம் ஈழவயலில் உங்களை எதிர் பார்த்து காத்திருக்கின்றோம் ^_^
எல்லாம் கடந்து போகும்
பிரச்சனை முடிவுக்கு வந்தது மகிழ்ச்சி சுதா அண்ண.
உங்கள் சண்டைக்குள் தலையிட எனக்கு உரிமையில்லை என நீங்கள் நினைக்கலாம் ஆனால் மனம் விட்டு பழகியவர்கள் கஷ்டப்படும் பொழுது பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியவில்லை நண்பா சுதா...
நண்பா கருத்து மோதல்கள் எல்லோருக்கும் உருவானது தான். கருத்து மோதல்கள் இருந்தால் தான் அவர் தவறுகளை திருத்தி கொண்டு நல்ல பதிவுகளை வெளியிட உதவும். ஆனால் அதே சமயம் கருத்து மோதலால் பேசாமல் இருப்பதோ அல்லது ஈழவயலை விட்டு போவதோ வேண்டாம் நண்பா.
மன்னிப்பு என்ற ஒரு வார்த்தையில் தான் இருக்கிறது இந்த மனக்கசப்புகள். ஆகவே மனம் விட்டு பேசுவோம். நட்பினை வளர்ப்போம்..
நாம் இப்படி பிரிந்து கிடப்பதால் தான் கால்ல போட்டு நசுக்க வேண்டியவன் கூட தலைமேல ஏறி உட்கார்ந்து கொள்கிறான்.
மனதில் பட்டதை கூறிவிட்டேன் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்..
ம.தி.சுதா♔ said...
Yoga.S.FR said...
மாஸ்டர் எனக்காக பதிவை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள்...
யார் யாருக்காகவோ எல்லாம் நான் அவர்களை விட்டுக் கொடுக்கமாட்டேன் ஏனென்றால் அவர்களின் உணர்வும் எனக்கு முற்று முழுதாகத் தெரியும்..////மன்னிக்கவும்!
// புலம்பெயர் மக்கள் ஈழத்திற்குச் செய்தது என்ன?
தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு விளங்கல
மச்சி! நடந்தவை யாவும் நன்மைக்கே! மறப்போம்! மன்னிப்போம்!
கருத்துரையிடுக