நாளைய தினம் மார்ச் 8ம் திகதியாகும். உலகப் படைப்பின் முக்கிய ஜீவன்களான பெண் குலத்தை போற்றும் ஒரு சர்வதேச தினமாகும். இத்தினத்தில் ஈழத்துக் கவிஞரான நெடுந்தீவு முகிலனின் “வெள்ளைப் பூக்கள்” படைப்பு அரங்கேறுகின்றது.
ஈழக் குறும்படங்கள் பல ஆரம்பிக்கப்பட்டாலும் அதில் பங்கேற்கும் கலைஞர்களின் ஆணவம், அகங்காரம் என பற்பல தனிப்பட்ட திமிர்களால் பல படங்கள் முடங்கிப் போன நிலமையில் நெடுந்தீவு முகிலனின் முயற்சியும் அவரது குழுவின் ஒற்றுமையும் ஒரு சிறந்த படைப்பொன்றை வெளிக் கொணர இருக்கிறது.
விதவைப் பெண்களின் வாழ்வைச் சித்தரிக்கப் போகும் இப்படத்தில் பதிவரான கிருத்திகன் கதாநாயகனாகவும், இந்து கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். இக் குறும்படானது மகளிர் தினமான நாளை 8 ம் திகதி காலை 10.35 மணிக்கு யாழ் மணிக்கூட்டு வீதியில் அமைந்துள்ள ஞானம்ஸ் ஹோட்டலில் வெளியிடப்படவுள்ளது.
அழைப்பிதழ் |
இதில் பல பிரபலங்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.
இத்திரைப்படத்தில் இன்னுமொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் என் மிகப் பெரும் அபிமானத்திற்குரிய இசையமைப்பாளர் இசைப்பிரியன் அவர்கள் மீண்டும் தன் இசையாலும் குரலாலும் என்னைக் கட்டிப் போட்டு விட்டார். அத்துடன் படத்தை இயக்கும் முகிலனும் தனது வழமையான பாணியில் சில சில்லறை வரிகளாலேயே சேவிகளுக்கு தேனூற்றிச் சிதைத்து விட்டிருக்கிறார்.
பலத்த எதிர்பார்ப்புடனும் பலரது ஏகோபித்த ஆதரவுடனும் வர இருக்கும் வெள்ளைப்பூக்களை ஸ்பரிசிக்க நானும் செல்கிறேன்..
12 கருத்துகள்:
Supper paddu mulusa kedan
நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
நானும் கேட்டேன் இந்தப் பாடலை.. மிகவும் நன்றாக இருக்கிறது.. இவர்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற எனது வாழ்த்துக்களும். வெள்ளைப்பூக்களை ஆவலுடன் எதிர்பார்கின்றேன்.
மாப்ள "வெள்ளைப்பூக்கள்" திரும்ப சூடக்காத்து கிடக்கும் வாடாத பூக்கள்..பகிர்வுக்கு நன்றி!
குறும்படத்திற்கு வாழ்த்துக்கள் சகோ ...பாடல் இசை ராஜாவை நினைவு படுத்துகிறது!
வணக்கம் ம.தி.சுதா!நீ...........ண்ட இடைவேளைக்குப்பின் வந்திருக்கிறீங்க,ஈழத்துப் படைப்புடன்!எங்கள் ஊருக்கு எப்போ"வெள்ளைப்பூக்கள்" வரும்????
தெரிந்த கூட்டணிகள் இணைந்திருக்கின்றது. அசத்தட்டும்.
அப்படியே ‘யாழ்ப்பாணம்’ குறும்படத்தையும் விரைவில் எங்கள் பார்வைக்காக வையுங்கள்.
வாழ்த்துக்கள் வரவேற்கிறோம்.
ஆமா ம.தி.சுதாவும் கலந்து கொண்டார் என கேள்விப்பட்டேன்.பாடல் அருமையாக உல்லது.இறுவட்டு எப்போது வெளிவரும் அண்ணா?
அன்பு அண்ணனுக்கு பாசமாய் இனிய வாழ்த்து.
அருமையான பாடல்.
பாடல் சூப்பர் அதைவிட எங்கட ஊர்ப்பக்கத்தை அப்படியே படம் பிடித்திருக்கிறார்கள்...நெஞ்சில் இனிக்கிறது.
அருமையான பாடல்...இவர்கள் முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்...
கருத்துரையிடுக