வணக்கம் உறவுகளே
இப்பதிவானது எனது சொந்த அனுபவம் சார்ந்த கருத்துக்களை உள்ளடக்கியது. இதில் பலருக்கு கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். அதற்கு நான் பொறுப்பு நிற்க முடியாது. எந்தக் கருத்திடுவதானாலும் முழுமையாக வாசித்து விட்டு இடவும்.
தொலைக்காட்சிகளின் வருகையானது வானொலித்துறையில் தாக்கம் ஏற்படுத்துகிறது எனக் கூறப்பட்டாலும் வானொலிகளானது என்றுமே தமக்கான தனித்துவமான இடத்தைப் பிடித்தே வைத்திருக்கிறது.
இப்போதும் ஒரு வானொலியைக் கேட்படி படிக்க முடிகிறது அல்லது கிரிக்கேட் வர்ணனையை போட்டு விட்டுப் படிக்க முடிகிறது ஆனால் தொலைக்காட்சியை போட்டு விட்டு இதைச் செய்யமுடியுமா?
இப்படி முக்கியமான இடத்தைப் பிடித்துள்ள வானொலிகளின் நிகழ்ச்சித் தரத்தை விமர்சிப்பதற்கப்பால் இன்னுமொரு முக்கிய விடயத்தை கலந்து ஆலோசிக்க வேண்டியிருக்கிறது. நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்துகையில் சில நிகழ்ச்சி சிலருக்குப் பிடிக்கும் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம்.
முதலில் எனக்கு ஏற்பட்டுள்ள அனுபத்தை பகிர்ந்து விட்டுப் பிரச்சனையைச் சொல்கிறேன். வன்னியிலும் சரி முகாமிலும் சரி எமது ஒரே ஒரு உடனடி உலக இணைப்பு ஊடகம் வானொலி தான். ஆனால் அங்கிருக்கும் போதெல்லாம் வானொலிக்கு குறுந்தகவல் அனுப்ப முடிவதில்லை. அதனால் கடிதத் தொடர்பு மட்டுமே இருந்தது.
இதே நிலை முகாமிலிருந்து வெளியே வந்ததும் தொடர்ந்தது காரணம் அப்போது (2009 ன் கடைசி மாதம்) வல்வெட்டியில் உள்ள டயலொக் (dialog) தொலைத் தொடர்புக் கோபுரம் இயங்க ஆரம்பிக்கவில்லை. அதனால் எமக்குக் கிடைக்கும் சமிஞ்ஜையானது பருத்தித்துறை, காங்கேசன்துறை மற்றும் பலாலி போன்ற இடங்களில் இருந்தே கிடைக்கும். அதே போல் மொபிரல் (mobitel) சமிஞ்ஜை நெல்லியடியிலிருந்து கிடைக்கும்.
அதில் கூட தொலைபேசியின் சமிங்ஜையில் ஒற்றைப் புள்ளியப் பெறுவதே பெரிய காரியமாகும். அப்படியானால் எப்படி நீ குறுந்தகவல் அனுப்புவாய் என நீங்கள் கேட்கலாம் அதை படமே சொல்லும் பாருங்கள். (இந்தப் படம் பதிவிற்காக பெறப்பட்ட படமாகும். காரணம் இப்போ மிகவும் சிறந்த வலைமைப்பு உள்ள இடமாக எமது ஊர் இருக்கிறது)
ஒரு தடியில் baby cheramy அல்லது handsome பெட்டியைக் கட்டி விட்டு வானொலிக்கான கேள்வி கேட்கப்பட்டவுடன் தட்டச்சு செய்துவிட்டு send பொத்தானைத் தட்டி பெட்டியினுள் கைப்பேசியைப் போட்டு விட்டு தூக்கிப் பிடிக்க வேண்டும்.
சில தடவைகளில் முயற்சி வெற்றியளிக்கும் பல தடவைகளில் sending fail என்ற கட்டளையே கிடைக்கும்.
இப்படியொரு முயற்சியில் தகுந்த இடம் கிடைத்த தனியார் வானொலி என்று நான் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் வெற்றி வானொலியைத் தான் குறிப்பிடுவேன். காரணம் அங்கு ரசனைகளுக்கப்பால் ரசிகர்களுக்கு தகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அது எப்படி உனக்கு மட்டும் நிறை குடம் வைத்தார்களா என நீங்கள் சொல்வது கேட்கிறது.
ஒரு வானொலிக்கு வருமானமென்பது பல வகையில் கிடைக்கிறது. சாதாரண ஒரு விளம்பரத்துக்கே விளம்பரக்கட்டணங்களானது மிகவும் பிரமிக்க வைக்கும் பெறுமானங்களாக இருக்கும். அப்படியிருக்கையில் தமது ரசிகர்களிடம் வருவாய் தேட முனைவது எனக்குப் பிடிக்காமல் போய்விட்டது. இலங்கையில் சூரியன், சக்தி போன்ற வானொலிகளில் 4 இலக்க எண்கள் குறுந்தகவலுக்ககக் கொடுத்திருப்பார்கள். இதற்கு அனுப்புவதற்கு 5 ரூபாய்க்கு மேல் பிடிக்கும்.
அது மட்டுமல்லாமல் அனுப்பும் அத்தனையும் வாசிக்கப்படுமா என்றால் அதுவும் இல்லை. இப்படியான ஒரு வானொலிக்கு எனது முறையில் தகவல் அனுப்பி அது நிராகரிக்கப்பட்டால் எவ்வளவு கடுப்பேறும நீங்களே சொல்லுங்கள்.
ஆனால் வெற்றிக்கு அனுப்பும் போது எனக்கு அப்படி ஒரு கடுப்பு ஏற்பட்டதில்லை. அவர்கள் வாசிக்க மறுத்தால் அடுத்த குறுந்தகவல் அவர்களுக்கு நெருடும் தகவலாகத் தான் இருக்கும்.
வெற்றியில் சாதாரண மொபிடல் (mobitel) இலக்கமே ஆரம்பம் முதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அதே வலையமைப்பில் இருந்து அனுப்புவதானால் வெறும் 13 சதம் தான் பிடிக்கும்.
இந்த முறையை மாற்றாத வரை வெற்றிக்கு வெற்றி என்றே நினைக்கிறேன்.
தலைப்பில் அவர்கள் பணம் பறிப்பதாகக் குறிப்பிட்டாலும் அது அவர்களது தொழில் சார் செயற்பாடு நான் விருப்பமென்றால் அனுப்பலாம் விரும்பாவிடில் விடலாம் என சொல்லத் தோன்றுகிறதா மீண்டும் முகவுரையைப் பாருங்கள்.
--------------------------------------
ஈழத்து மொழி, கலை, கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்களின் இன்றைய நிலையினைக் கருத்திற் கொண்டு; எம் அடுத்த சந்ததியிடமும், உலகெங்கும் பரந்து வாழும் எம் தமிழ் உறவுகளிடமும் இவ் விடயங்களை அழிவுறாது கொண்டு செல்லும் நோக்கிலும் ஆவணப்படுத்தும் நோக்கிலும் ஈழ வயல் எனும் வலைப் பதிவினைப் பதிவர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள்.ஈழவயலில் வெளியாகும் பதிவுகளை நூலுருப்படுத்தும் முயற்சியிலும் பதிவர்கள் ஈடுபடுகின்றார்கள். இந்த ஈழ வயல் வலைப் பதிவினை நீங்களும் தரிசித்து உங்கள் ஆதரவினையும் இவ் வலைப் பதிவிற்கு வழங்கலாம் அல்லவா?
40 கருத்துகள்:
ம்ம்ம்ம்.. முன்பொரு தடவையும் இது பற்றி நீங்கள் சொன்னதாக ஞாபகம்..
பிசினசில் இதெல்லாம் சகஜம் சகோதரா
வணக்கம்,மதிசுதா!வானொலி/தொ(ல்)லைக்காட்சி என்பன வருமானம் பெற(இப்போது)ஒரு தொழிலே!புலம்பெயர் தேசத்தில்,வியர்வை சிந்தி உழைக்க விரும்பாதோர் கோவில் அமைப்பது போல்!(அமைப்பது என்று தான் சொல்ல வேண்டும்.அதாவது,ஒரு பாரிய மண்டபத்தை வாடகைக்கு எடுத்து......................!)
எல்லா இடத்திலும் இதே பிரச்சினை தானா....
வானொலியில் வாசிக்கப்படாத குறுந்தகவல் ஒன்றுக்கு 5 ரூபா செலவிடுவதென்பது உண்மையிலேயே வருந்தத்தக்கது தான்! உங்கள் அறச்சீற்றம் நியாயமே :-)
ஆனால் சுதா, வானொலிகள் இலாப நோக்கோடு இயங்குவதை நான் என்றைக்குமே விரும்புகிறேன்! அப்படி அவர்களுக்குப் பணத்தின் தேவை இருப்பதால் தான், நல்ல நல்ல நிகழ்ச்சிகளையும், நேயர்களோடு நல்லுறவையும் பேணுகிறார்கள்! மேலும் ஒன்றுக்கொன்று போட்டியிடுவதால், கலகலப்பாகவும் இருக்கிறது கேட்கும் போது!
மற்றும்படி, எமக்கு பிசினெஸ் முக்கியமில்லை! கொள்கை , கோட்பாடுதான் முக்கியம் என்று எவராச்சும் கிளம்பினால் அவ்வளவுதான்! பக்கத்தில் ஒரு ட்ரான்ஸ்லேட்டரை வைத்துக்கொண்டுதான் ரேடியோ கேட்கணும்! :-)
இலங்கைத் தனியார் வானொலிகளின் பணம் பறிப்பில்; ஒரு .............. பரிதவிப்பு நியாயமானதாகத்தான் படுகின்றது
புறக்கணியுங்கள் என்று மட்டும் தான் சொல்ல முடியும்...
தனியார் வானொலி என்றாலே வியாபாரத்தை மூலாதாரமாகக் கொண்டதாகும், இவர்களிடம் சேவையை எதிர்பார்க்க முடியாது, அங்கே வியாபார உத்திகள் மலிந்து கிடக்கும், அதில் ஒன்று தான் குறுந்தகவல் மூலம் பணம் பிடுங்கும் வேலையும்!
என்ன செய்வது சுதா!
என்றாலும் தனியார் வானொலிக்குள் இருக்கும் வேறுபாடுகளை உரத்துச் சொல்லியுள்ளீர்கள் பாராட்டுக்கள்.
வியாபார உலகில் தனியாரின் ஆதிக்கம் ஒரு புறம் பண்பலைகளின் போட்டி ஒரு புறம் என்று நேயர்கள் பிரிந்து நிற்பதால் பல வானொலிகள் தரமான நிகழ்ச்சியை விட்டு வெறும் விசில் பாட்டுக்களுடன் அன்னிய வக்காலத்து வாங்கும் அன்னக்காவடிகள் பற்றி சொன்னீர்கள் இவர்கள் தயாகபாடல்களுக்கும் கொஞ்சம் ரசிகர்களுக்கு தினிக்கலாமே வேற விடயம் எல்லாம் செய்யும் இவர்கள் இந்தத்தினிப்பையும் செய்தால் கொஞ்சம் இலங்கைக் கலைஞர்கள் இசை வெளியில் வரும் அல்லவா குறுந்தகவல் போட்டு பாடல் கேட்டால்(தாயகத்தில் இருந்தபோது) முன்னர் வேற பாடல் போட்டு கடுப்பேத்தியவர்கள் பலர் சுதா! பின்னூட்டம் தொப்பி பொறுந்தியவர்களுக்கு!
மதி,
எல்லா ஊர்லயும் இப்படித்தான் கொள்ளையடிக்கிறாங்க. மேற்கொண்டு ரிங் டோன் தொல்லை வேற.
நீங்கள் கூறும் வானொலி நான் கேட்டதில்லை இப்போது வந்தது மேலும் இணையத்தில் ஒலிக்குமா தெரியாது முயன்று பார்த்ததும் இல்லை சுதா !என்றாலும் அந்த கேமாஸ் மார்க் பெட்டியின் பின் சில ஞாபகங்கள் இன்னும் இருக்கு நீங்கா நினைவுகளாக!
மதி!
பணம் பறிக்காதவர்கள் இருந்தால் சொல்லுங்கள். தொழில் தொடங்குவதே பறிக்கத்தான்.
ஆனாலும் நீங்கள் தொடர்பை ஏற்படுத்த எடுத்த முயற்சியைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.
படத்துடன் விளக்கம் அருமை.
சும்மாவா சொன்னான் " தேவையே கண்டுபிடிப்பின் தாய்".
பாராட்டுக்கள் தம்பி!
பகிர்வுக்கு நன்றி சகோ .
வெற்றி எப் எம் பல வழிகளில் வித்தியாசமான வானொலியாகத்தான் இருக்கிறது.
உங்கள் ஆதங்கம் புரிகின்றது பாஸ்
நல்லது நடக்கும் காத்திருப்போம்
Romba Kastap pattu irukkinga Sago.
Ealavayal thalam kandippaga paarkkiren.
சுதாண்ணா இது அங்கு மட்டும் அல்ல எல்லா இடங்களிலும் இப்படித்தான்... என்னால் இதை தப்பு சொல்ல முடியவில்லை.... அவர்களுக்கும் வருமானம் வேணும்தானே........ :)
அருமை சகோ.
தமிழ்மணம் வாக்கு 8.
நான் வானொலி கேட்டது குறைவு...
இவளவு கஷ்டபட்டு எல்லாம் செயிறீங்க எனும்போது வானொலியின் மதிப்பு தெரிகிறது..
நானும் வானொலி கேட்கிறவன்தான். ஆனால் இதைப்பற்றி யோசிக்கவேயில்லை.
LOSHAN said...
ஆம் அண்ணா ஒரு யாழ் சந்திப்பில் பேசிக் கொண்டோம்...
உண்மை தான் அண்ணா..
Yoga.S.FR said...
நன்றி மாஸ்டர்...
ஆனால் ரசிகர்கள் மூலம் அந்தளவு பெரிய லாபம் வருமா?
சசிகுமார் said...
சும்மாவா வீட்டுக்கு வீடு வாசற்படியல்லவா...
நன்றி சகோ..
Powder Star - Dr. ஐடியாமணி said...
நன்றி மணியெண்ணை...
உங்க ஊரில் இப்படி எதுவும் இல்லையா?
tharshi said...
இப்போ அந்தளவுக்கு பரிதவிப்பு இல்லை சகோதரி....
suryajeeva said...
நன்றி... சகோ..
எந்தப் பதம் பொருந்தும் என்று தெரியவில்லை ஆனால் மற்ற வானொலிகளுக்கு இப்போது நான் அனுப்புவதில்லை தெரியுமா?
Eelavan Eelavan said...
நான் முன்பொருதடவை இது சம்பந்தமாக அவர்களிடம் கேட்டுப் பார்த்தேன்.. சகோதரம்...
தனிமரம் said...
நன்றி அண்ணா...
நானும் ஒரு மறை சாம நிகழ்ச்சியில் ஒரு அறிவிப்பாளரை ஒருவர் திணற வைத்ததைக் கேட்டிருக்கிறேன்...
சத்ரியன் said...
ஆமாம் சகோ...
ஆனால் என்றைக்கும் வானொலிகளுக்குத் தனி இடமல்லவா..
தனிமரம் said...
நேசண்ணா இதிலும் கேட்கலாம்..
www.vettrifm.com
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
தேவையே கண்டுபிடிப்பின் தாய்".
------------
நன்றிங்க உண்மை அது தானே..
அம்பாளடியாள் said...
நன்றி சகோதரம்...
K.s.s.Rajh said...
சில தடவை கடுப்புக் கூட வந்திருக்கு சகோ...
Muruganandan M.K. said...
ஆம் ஐயா என் அனுபவ உண்மை...
"என் ராஜபாட்டை"- ராஜா said...
இனி எது நடந்து என்னாவது சகோ...
துரைடேனியல் said...
நன்றி சகோ...
துஷ்யந்தன் said...
அது ஓகே துசி ஆனால் ஆனுப்பறதை வாசிக்க என்ன தயக்கம்..
ஆகுலன் said...
தம்பி இது வானொலிக்கு எங்கே தெரியப் போகிறது...
Loganathan Gobinath said...
நன்றி தம்பி...
ஆரம்பத்தில் எனக்கும் இதற்குச் சந்தர்ப்பம் இருக்கவில்லைத் தானே..
மீள்பதிவு என்றாலும்.. உண்மைப் பதிவு
கருத்துரையிடுக