முற்குறிப்பு - இப்பதிவானது சகோதரன் சந்துரு அவர்களின் வலைத் தளத்தில் பகிரப்பட்டிருந்தது. ஒரு பொது நோக்கிற்காக அவரின் அனுமதியுடனும். அந்தப் பாதிக்கப்பட்டவரின் ஒலிப்பதிவையும் பெற்று தங்களுடன் பகிர்கின்றேன். கல்வியில் சிறந்து விளங்கும் அந்தப் பையனை வாழ வைப்பதில் ஆர்வம் உள்ளவர்கள். எனது முகவரிக்கோ (mathisutha56@gmail.com) அல்லது கீழே உள்ள சந்துருவின் முகவரிக்கோ தொடர்பு கொண்டால் அந்தப் பையனின் தொலைபேசி இலக்கத்தை தருகின்றோம்.
இத்திட்டத்திற்கு அரவணைப்போம் திட்டத்தில் பங்கெடுத்திருப்போரும் சிரத்தை எடுத்து ஏதாவது நடவடிக்கை எடுக்குமாறு கேட்கப்படுவதுடன். தங்களால் உதவ வசதியில்லாவிடினும் இதை முடிந்தவரை பகிர்ந்து உதவவும். இப்பதிவில் சந்துரு அவர்கள் கேட்டிருக்கும் தொகையானது தற்போதைய நிலவரத்திற்கமைவானது. ஒலிப்பதிவில் அப்பையன் குறிப்பிடுவது முன்னர் வைத்தியர் கூறிய தொகையாகும்.
வலைப்பதிவு எழுதும் நாம் எழுத்துக்களுடன் நின்று விடாது சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும். சில பதிவர்கள் இதனைச் செய்து வருகின்றனர். நானும் சமூக சேவை செய்து வருபவன் எனும் வகையில் உங்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன்.
தற்போது உயர்தரம் படித்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவனுக்கு இருதய நோய் இருக்கின்றது. உடனடியாக இருதய சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றார். உடனடியாக சத்திரசிகிச்சை செய்யாவிட்டால் உயிராபத்து ஏற்படும் நிலையில் இருக்கின்றார். இருதய சத்திர சிகிச்சைக்காக இலங்கை ரூபா ஐந்து இலடசத்திற்குமேல் செலவாகும்.
ஆனாலும் அம்மாணவனின் குடும்பம் மிகவும் வறிய நிலையில் இருக்கின்றது. நல்ல எண்ணம் கொண்டவர்கள் இவரின் உயிரைக் காக்க உதவி செய்யுங்கள். இவர் மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்தவர் பெயர் இராஜேந்திரம் நிமல்ராஜ் மட்களுதாவளை மகா வித்தியாலயத்தில் உயர்தரம் படிக்கின்றார். மாணவனின் உயிரைக்காக்க உதவ நினைப்பவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் நேரடியாக குறித்த மாணவனுடன் தொடர்புபடுத்தி விடப்படும்.
மின்னஞ்சல் :-shanthruslbc@gmail.com
மின்னஞ்சல் :-shanthruslbc@gmail.com
மூலப்பதிவின் தொடுப்பு - தொடுப்பு
12 கருத்துகள்:
அனைவருக்கும் கூகிள்சிறியின் இனிய புத்தாண்டு நாள் நல்வாழ்த்துக்கள்!
என் வலையிலும் இக்கட்டுரையை பிரசுரிக்கமுடியும்.அதற்கு நீங்கள் அனுமதி தந்து கட்டுரையை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்களேன்.என் மின்னஞ்சல் rss4sk@gmail.com
வணக்கம் நண்பா,
இந்தப் பதிவினையும் அனைத்து நண்பர்களிடமும் கொண்டு செல்ல உதவி செய்வோம்.
வணக்கம் தோழர்..இந்த வருடத்தின் முதல் பதிவே சமூக நோக்குடன் தந்திருக்கிறீர்கள்..என்னால் முடிந்த உதவியை தர முயற்சிக்கிறேன்..பதிவுலகம் ஒன்று சேர்ந்தாலே அம்மாணவனை எளிதாக மீட்டெடுக்க முடியும்..கட்டாயம் பதிவர்கள் உதவுவார்கள் என்று நம்புகிறேன்..
அந்தமாணவருக்கு நம்மால் முடிந்த உதவி செய்வோம். இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
இப்பதிவைப்பற்றி நானும் குறிப்பிடுகிறேன்.
பகிர்வுக்கு நன்றிகள் நண்பா
பகிர்வுக்கு தேங்க்ஸ் பாஸ்...... உங்கள் நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்.
இம்மாணவன் உயர்தரப்பரீட்சை எழுதி இருந்தார். வெளிவந்த பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் இவருக்கு பல்கலைக்கழகம் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது.
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
http://earnfinanceonline.50webs.com
பகிர்விற்கு நன்றி பாஸ்.. எனது நண்பர் வட்டத்திடமும் இதை கொண்டுபோய் சேர்க்கிறேன்.
வெகுவாக தாமதித்து பார்ப்பது பற்றி முதலில் என் வருத்தங்கள் சுதா, இதை இப்போதே என் முகப்புத்தாக சுவரில் பகிர்கிறேன். அவரது வங்கி கணக்கிலக்கத்தை அறியத் தரலாமே.
இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்..............
கருத்துரையிடுக