எம் மண் மாளுகையில்
உம் மண் போல் உயிர் நீத்திரே
உம்மை
கேட்க நாதியற்றவர் போல்
கேவி அழ வைத்து விட்டாரே
கேரளத்து மானுடர்கள்
எம் மாந்தரின் துகில் களைய
துணிவுமக்கு யார் தந்தார்
ஒற்றை அணைக்காக
துணை நின்றவரை துரத்துதல் தகுமோ
ஆட்சிக்கு உரமூட்ட
எரியும் தாச்சியில்
தண்ணீர் ஊற்றுகிறது
ஆளும் அரசு
அடுத்த தேர்தலில்
நீர் ஆவியாகும் என்பதால் தானே
கொட்டும் மழையிலும்
கொடிபிடித்து நின்றவரே
இந்த ஒற்றை வரிதான்
உமக்கான என் குரல்
------------------------
உம் மண் போல் உயிர் நீத்திரே
உம்மை
கேட்க நாதியற்றவர் போல்
கேவி அழ வைத்து விட்டாரே
கேரளத்து மானுடர்கள்
எம் மாந்தரின் துகில் களைய
துணிவுமக்கு யார் தந்தார்
ஒற்றை அணைக்காக
துணை நின்றவரை துரத்துதல் தகுமோ
ஆட்சிக்கு உரமூட்ட
எரியும் தாச்சியில்
தண்ணீர் ஊற்றுகிறது
ஆளும் அரசு
அடுத்த தேர்தலில்
நீர் ஆவியாகும் என்பதால் தானே
கொட்டும் மழையிலும்
கொடிபிடித்து நின்றவரே
இந்த ஒற்றை வரிதான்
உமக்கான என் குரல்
------------------------
ஈழத்து மொழி, கலை, கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்களின் இன்றைய நிலையினைக் கருத்திற் கொண்டு; எம் அடுத்த சந்ததியிடமும், உலகெங்கும் பரந்து வாழும் எம் தமிழ் உறவுகளிடமும் இவ் விடயங்களை அழிவுறாது கொண்டு செல்லும் நோக்கிலும் ஆவணப்படுத்தும் நோக்கிலும் ஈழ வயல் எனும் வலைப் பதிவினைப் பதிவர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள்.ஈழவயலில் வெளியாகும் பதிவுகளை நூலுருப்படுத்தும் முயற்சியிலும் பதிவர்கள் ஈடுபடுகின்றார்கள். இந்த ஈழ வயல் வலைப் பதிவினை நீங்களும் தரிசித்து உங்கள் ஆதரவினையும் இவ் வலைப் பதிவிற்கு வழங்கலாம் அல்லவா?
12 கருத்துகள்:
உச்சத்தின் ஒலிக்கும் குரல்..
ஓங்கி ஒலிக்கும் குரல்..
நன்றிகள் பல நண்பரே.
கொட்டும் மழையிலும்
கொடிபிடித்து நின்றவரே
இந்த ஒற்றை வரிதான்
உமக்கான என் குரல்......
.....உரத்து கேட்கட்டும்
///ஆட்சிக்கு உரமூட்ட
எரியும் தாச்சியில்
தண்ணீர் ஊற்றுகிறது
ஆளும் அரசு
அடுத்த தேர்தலில்
நீர் ஆவியாகும் என்பதால் தானே///இந்த வரிக்குள் உண்மை 'எப்பொழுதுமே உறங்கி தான் கிடக்கிறது'
கண்ணகியின் சீற்றம் போல் உங்கள் சீற்றம் கவிதையாக.... நியாயமான குமுறல் சுதாண்ணா :)
கந்தசாமி. said...
///ஆட்சிக்கு உரமூட்ட
எரியும் தாச்சியில்
தண்ணீர் ஊற்றுகிறது
ஆளும் அரசு
அடுத்த தேர்தலில்
நீர் ஆவியாகும் என்பதால் தானே///இந்த வரிக்குள் உண்மை 'எப்பொழுதுமே உறங்கி தான் கிடக்கிறது'<<<<<<<<<<<<<<<<<<<<<<<
உண்மைதான் கந்து ;(
கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல் எறிகிறது கேரளம். தமிழகத்தை எதிர்த்தால் அதன் நேரடி பாதிப்பு கேரளத்துக்கு என்பதை மலையாளிகள் உணரவில்லை. தமிழனின் எச்சில் பால் குடித்த வளர்ந்த மலையாளிகள் தாங்கள் யார் என்பதையும் தங்களது வரலாறு என்ன என்பதையும் உணரவில்லை. அலை அலையெனத் திறளும் நம் மக்கள் அதை உணரச் செய்வார்கள். கவிதை அருமை தோழா....!
இதை மட்டும் தான் நம்மால் செய்ய முடியும் இப்போ !!
கவிதை மொழியில் உள்ளக் குமுறலை சொல்லிவிட்டீர்கள்..அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும் என்று காத்திருந்தே பழகிவிட்டது நமக்கு..ஒவ்வொரு தமிழனும் விழித்தெழுந்தாலே போதும்..மறுக்கிறான்..
நன்றி நண்பா....
மிக்க நன்றி சகோ
எங்கள் உணர்வுகளைக் கவியாக்கி உரமூட்டியிருக்கிறாய் மச்சி!
பேருக்குத் தான் நாம் ஈழத் தமிழர்கள்!
எம் மண் மாளுகையில்
உம் மண் போல் உயிர் நீத்திரே
உம்மை
கேட்க நாதியற்றவர் போல்
கேவி அழ வைத்து விட்டாரே
கேரளத்து மானுடர்கள்
உண்மைதான் மதிகொட்டும் மழையிலும்
கொடிபிடித்து நின்றவரே
இந்த ஒற்றை வரிதான்
உமக்கான என் குரல்
தங்களின் குரலுடன் எங்களில் குரல்களும் இணையும்எம் உறவுகளுக்காக...
கருத்துரையிடுக