ஞாயிறு, 17 ஜூலை, 2011

என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி ?
பதிவின் நோக்கம் – இப்பதிவானது யாரையும் தாழ்த்தி உரைப்பதற்காகவோ நோகடிப்பதற்காகவோ எழுதப்படவில்லை. ஒரு பதிவர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்காக எழுதப்படுகிறது. இது என் பதிவுலக ஆரம்பிக்க முன்னரோ விழுந்த பெரிய தடைக்கல்லாகும்.

அந்த நாட்கள் மிகவும் வெறுமையான நாட்களில் ஒன்றாகும். கருவறையில் இருந்து வெளியே வந்த குழந்தை போல் பதிவுலக ஆசையுடன் அலைந்த நாட்களை எண்ணிப் பார்க்கிறேன். என் மனசு கையில் ஒரு கைப்பேசி இல்லா நிலையில் கூட கணணிக்கு ஆசைப்பட்டது.
        ஒருவாறு அது கையில் கிடைத்த போதும் எனது பதிவுலகத்தை ஆரம்பிக்க நினைத்தேன் ஆனால் ஏதோ ஒரு யுனிகோட் எழுத்துருவாமே அது என்ன ? எப்படி ? என யாருக்குமே தெரியவில்லை. தேடல் தொடர்ந்தது. ஒருவாறு வவுனியாவில் இருந்து தொழில்நுட்பப் பதிவு எழுதும் ஒரு ஆசிரியரது தளம் கிடைத்தது. ஓடிப் போய்ப் பார்த்தேன். ”உங்கள் கணணியில் யுனிகோட் எழுத்துருவை செய்ற்பட வைக்க முதல் உமக்கான வின்டோஸ் சீடியை கையில் எடுத்து வைத்திருங்கள்” என்று இருந்தது. அன்று அங்கிருந்து ஓடியவன் தான் அதன் பின் அந்த ஆக்கத்தை பார்க்கவே இல்லை. காரணம் ஒன்றுமே தெரியாதவனுக்கு விமானத்தில் றிவேர்ஸ் (பின்னோக்கி) அடி என்றால் எப்படி இருக்கும் அப்படி இருந்தது.
            அதன் பின் தான் பத்திரிகையில் தொழில்நுட்பம் எழுதும் ஒரு பதிவர் கிடைத்தார். (மூன்று எழுத்துப் பெயர், இதுவரை யாருக்குமே கருத்திடாத ஒரு பதிவர்) அதில் அவரது வலைப்பூ முகவரியும் மின்னஞ்சல் முகவரியும் இருந்தது. அவருக்கு மின்னஞ்சல் அனுப்ப முனைந்தேன். எனது முற்கொடுப்பனவு இணைய இணைப்பில் ஜீமெயிலை திறந்து விட்டு பின்னர் இணைய இணைப்பை துண்டித்து விட்டு அதனுள் தட்டச்சிட்டேன். காரணம் DIALOG முற்கொடுப்பனவு இணைய இணைப்பில் குறிப்பிட்ட நேரம் தான் வழங்கப்படும் உதாரணமாக 26 ரூபாய் கட்டினால் 30 நிமிடம், 62 ரூபாய் கட்டினால் 2 மணித்தியாலமாகும். அந்த மின்னஞ்சலில் ”எனக்கு இணையத்தில் தமிழில் தட்டச்சிட வேண்டிய தேவையிருக்கிறது ஐயா. தயவு செய்து இந்த யுனிகோட் பற்றி ஏதாவது சொல்லித் தாருங்கள் என்றேன்” MS WORD ல் தட்டச்சிட்டு வைத்திருந்த மடலை பிரதி பண்ணி மின்னஞ்சலில் அனுப்பினேன் அப்போது எனக்கு தெரியவில்லை. சாதாரண பமினி பார்வைக்கு தமிழ் போல் தெரிந்தாலும் அனுப்பிய பின் மாறி விடும் என்று.
ஒரு வாரமாக பதிலில்லை. மீண்டும் ஒரு முயற்சி செய்தேன். இந்த முறை பதில் கிடைத்தது. ”தங்கள் மடலுக்கு நன்றி நண்பரே தங்கள் மடலுக்கு பதில் தரப் பிந்தியமைக்குக் காரணம் நீங்கள் யுனிகோட் எழுத்துருவில் தட்டச்சிட வில்லை மறுமுறை தமிழ யுனிகோட் எழுதி ஏதாவது பயன்படுத்தி எழுதி அனுப்புங்கள்” என்றிருந்தது. ஆயிரம் பேர் சேர்ந்து நின்று என் மூஞ்சியில் காறித் துப்பியது போல இருந்தது.
      குரங்கிடம் சிறுநீர் கேட்டால் கொப்புக் கொப்பாக தாவுமாம் என்பார்களே அவர் அந்த ரகமோ தெரியவில்லை அனால் ஒரு சாதாரண பாமினியில் ஒருவன் தட்டச்சிடுகிறான் என்றால் ஒன்றில் அவன் எழுத்துரு பற்றித் தெரியாதவன் அல்லது குருடன் என்று அறியாத படித்தமேதையாக அவர் இருந்ததை நினைத்து புழுங்கினேன். பின்னைய காலத்தில் தான் புரிந்தேன் சாதாரண பாமினியைக் கூட NHM WRITTER ONLINE ல் யுனிகோட்டாக மாற்றலாம் என்று. ஒரு தொழில் நுட்ப பதிவருக்கு இரு கூட தெரியலியா ? அவர் எனக்கு பதில் தர நினைத்திருந்தால் அந்த பாமினி எழுத்தை ஒரு Micro Soft WORD ல் போட்டு அதை தமிழாக மாற்றி வாசித்திருக்கலாம். அந்த அவமானம் என்னை உண்மையில் நோகடித்தது 2 வாரம் அவருக்காக காத்திருந்தும் வீணாகி விட்டது. அதன் பின் நான் முன்னைய பதிவில் சொன்னது போல எனது முதல் பதிவை தேடல் பெட்டியில் உள்ள தமிழ் தட்டச்சுப் பலகையில் தட்டச்சிட்டேன் அதன் பின்னர் தான் NHM WRITTER கிடைத்தது.
        இந்த பதிவைப் பார்த்தாவதுதிருந்திக் கொள்ளுங்கள் நீங்கள் பிடுங்கி எறிந்த முள் தான் என்றோ உங்கள் காலைக் குத்தும் என்பதற்கு நான் சாதிச்சுக் காட்டி விட்டேன் ஆனால் ஒரு வருடத்தின் பின்னர் தான் நான் இதை வாய் திறக்கிறேன். இப்போ கூட தேவையில்லைத் தான் ஆனால் இனி ஒருவன் உங்களைப் போல் இருக்கக் கூடாது எனவே இதைப் பதிவிடுகிறேன்.
"விழுவது ஒன்றாக இருந்தாலும் எழுவது ஒன்பதாக இருக்கட்டும்”
-காசி ஆனந்தன்
எனது கோட்பாடு
“உதவி பெறுவதை விட உதவி செய்து பார் உவகையாய் மனமினிக்கும்”

தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)


UPDATE 18/7/2011

உறவுகளே சிலருக்கு இது புரியவில்லை என நினைக்கிறேன். அவரது பதிவுக்கான தொடுப்பை தந்திருந்தால் இந்தச் சந்தேகம் வந்திருக்காது. அத்துடன் அவர் தலைக்கனமும் புரிந்திருக்கும்.
ஒருவன் உங்களுக்கு மெயில் போடுகிறான் என்றால் ஏதோ ஒரு முக்கிய விடயமாகத் தானே இருக்கும். சாதரண பாமினியில் வருவதை வாசிக்கத் தெரியாதளவுக்கு அவர் மொக்கு பதிவரல்ல தாராளமாக கணணி அறிவுள்ள பதிவராகும்.
அவரது பதிவை படிக்க விரும்புபவர்கள் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள் தருகிறேன் (தொலைபேசித் தொடர்பு வேண்டாம் எழுத்து ரிதியாக மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்)

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

56 கருத்துகள்:

நிரூபன் சொன்னது…

வணக்கம் மச்சி, விவகாரமான விடயத்தினைப் பதிவேற்றியிருக்கிறாய். தலைப்பைப் படிக்கையிலே மனசு கனக்கிறது. மேலும் படித்து விட்டு வாரேன்.

Unknown சொன்னது…

ஆரம்பத்தில் உங்களுக்கு இந்த மாதிரி அவமானங்கள் நடந்திருக்கிறது என்று முன்னரும் ஒரு பதிவில் கூறி இருந்தீர்கள் சகோ!

Unknown சொன்னது…

//இந்த பதிவைப் பார்த்தாவதுதிருந்திக் கொள்ளுங்கள் நீங்கள் பிடுங்கி எறிந்த முள் தான் என்றோ உங்கள் காலைக் குத்தும் என்பதற்கு நான் சாதிச்சுக் காட்டி விட்டேன்//
அது தான் உண்மை பாஸ்!!!

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

அந்த மூன்றேழுத்து பதிவரை தேடிப்பார்க்கிறேன்...

sinmajan சொன்னது…

வேதனையான விடயம் தான்..அவரிற்கே எழுத்துரு பற்றிய போதிய தெளிவில்லையோ தெரியாது. தொழினுட்ப பதிவெழுதும் எல்லோருமே தொழினுட்ப வல்லுனர்களில்லை சுதா.

நிரூபன் சொன்னது…

பதிவின் நோக்கம் – இப்பதிவானது யாரையும் தாழ்த்தி உரைப்பதற்காகவோ நோகடிப்பதற்காகவோ எழுதப்படவில்லை//

வாசலிலையே, நாய் கட்டி வைச்சிருக்கிறேன், கடிக்கும், பார்த்து வாங்கோ என்று சொல்லுற மாதிரி இருக்கு.

Mathuran சொன்னது…

என்ன செய்வது சுதா அண்ணா..
சமூகத்தில் ஒரு சிலர் இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள். அடுத்தவனுக்கு உதவுவதில் இருக்கும் சந்தோசத்தை அறியாதவர்கள்

கவி அழகன் சொன்னது…

கைப்புள்ள கராத்தே கற்று வந்து நிக்கிறமாதிரி எண்டு சொல்லுங்கோவன்

Unknown சொன்னது…

கடைசி வரை அந்த அறிவாளியின்(!) பேரை சொல்லாமலே விட்ட உம்ம பெருந்தன்மைக்கு ஒரு சல்யூட் மாப்ள!

நிரூபன் சொன்னது…

”உங்கள் கணணியில் யுனிகோட் எழுத்துருவை செய்ற்பட வைக்க முதல் உமக்கான வின்டோஸ் சீடியை கையில் எடுத்து வைத்திருங்கள்”//

ஏன் மச்சான், கணினியில் யுனிக்கோட் இன்ஸ்டோல் பண்ண விண்டோஸ் சீடி தேவை..

ஒரே குழப்பமாக இருக்கே.

ஹி....ஹி...ஆள் ஏன் இப்படிக் குழப்புறார் மச்சான். ஒரு வேளை தான் அதிகம் படிச்சவர் என்று காண்பிக்க முயற்சி செய்கிறாரோ.

சில மேதாவிகள் விஷயங்கள் தெரிந்தாலும் தெரியாதது போல காட்டிக் கொள்வார்கள் சகோ.

நிரூபன் சொன்னது…

இந்த பதிவைப் பார்த்தாவதுதிருந்திக் கொள்ளுங்கள் நீங்கள் பிடுங்கி எறிந்த முள் தான் என்றோ உங்கள் காலைக் குத்தும் என்பதற்கு நான் சாதிச்சுக் காட்டி விட்டேன் ஆனால் ஒரு வருடத்தின் பின்னர் தான் நான் இதை வாய் திறக்கிறேன்//

ம்...என்ன சொல்ல மச்சான், இப்படியும் நிறைய மனிதர்கள் இருப்பார்கள். எம் வாழ்வில் கிடைக்கும் ஒவ்வோர் அனுபவங்களும் தானே எம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது. ஆகவே சந்தோசப்படு. அவரால், நீ இன்று நிமிர்ந்துள்ளாய் எனப் பெருமை கொள் மச்சான்.

vanathy சொன்னது…

சிலர் மற்றவர்களுக்கு ஏதாவது சொல்லிக் கொடுத்தால் ஏதோ அவர்களின் முழு அறிவும் வீணா போய் விடும் போல சீன் காட்டுவார்களே அது மாதிரி போல இருக்கே.

test சொன்னது…

விடுங்க சுதா!
எனக்கு அந்தப் பதிவர் யாரென்று தெரியவில்லை. சிலவேளை அவர் ரொம்ப பிசியா இருந்திருக்கலாம்! உங்கள் கனவுகள், ஏக்கங்கள் எல்லாம் உங்களது அந்த ஒரு கேள்வியில் அவருக்கு புரிந்திருக்க சாத்தியம் குறைவுதானே!
அதனாலென்ன நீங்கதான் சாதித்து விட்டீர்களே! :-)

test சொன்னது…

ஆனா ஒண்ணு! எனக்கு இன்னும் யூனிகோட், எழுத்துரு ....எதுவுமே புரியல!
நான் பிலாக்கர்ல அப்பிடியே தமிழில் (phonetic) டைப் பண்ணி பதிவு போட்டேன். இப்போ அந்த வசதியை சிலநாட்களாக காணோம்! பெரிய கஷ்டமா இருக்கு! :-(

K. Sethu | கா. சேது சொன்னது…

//பின்னைய காலத்தில் தான் புரிந்தேன் சாதாரண பாமினியைக் கூட NHM WRITTER ONLINE ல் யுனிகோட்டாக மாற்றலாம் என்று. ஒரு தொழில் நுட்ப பதிவருக்கு இரு கூட தெரியலியா ?//

தாங்கள் சுட்டிக் காட்ட நினைத்துள்ளது: NHM CONVERTER ONLINE. [http://software.nhm.in/services/converter] - (NHM writer Online அல்ல.)

NHM Converter Online வெளிவந்தது சென்ற வருடம் ஓகஸ்ட் 8 எனத் தெரிகிறது. ஆனால் அச்சேவை தொடங்கும் முன்னரே, பதிவிறக்கி கணிமேசையில் நிறுவி இயக்கக்கூடிய NHM Converter மென்பொருளின் முதல் வெளியீடு ஒரு 3 வருடங்களுக்கு முன்னர் வந்துவிட்டது என நினைவு.

மேலும் பலவருடங்களாக சுராதா அவர்களின் புதுவை / பொங்கு தமிழ் மாற்றிகளிலும் பாமினி-->ஒருங்குறி மாற்றி இருந்து வருகிறது [http://www.suratha.com/reader.htm ]

வேதனையான விடயம் தான்...

anupavangalaey pala neram ethirkalaththin adiththalamakirathu...

Mohamed Faaique சொன்னது…

இதில் அந்தப் பதிவருடைய தவறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அவரும் இது பற்றி அவ்வளவு அறிவு இல்லாமல் இருக்கலாம். இதையெல்லாம் பெருசு படுத்துவது அழகல்ல..

(தமிழ்’ல என் பெயர் எழுதினால் மூன்று எழுத்துதான் வரும். அதுக்காக என்ன கும்மிராதீங்கப்பா....)

எனது கோட்பாடு
“உதவி பெறுவதை விட உதவி செய்து பார் உவகையாய் மனமினிக்கும்”//

சரியா சொன்னீர் மக்கா சூப்பர்...!!

ஆமினா சொன்னது…

இந்த வம்புக்கு தான் முட்டாளாவே இருந்துட்டேன் ;) உங்க ஆதங்கம் புரிகிறது. என்ன செய்ய? உங்களுக்கு தெரிஞ்சது அவருக்கு தெரியல. சோ நீங்க தான் பெரிய தல ந்னு நெனச்சு போங்க தல.

அன்பு சகோதரி
ஆமினா

KANA VARO சொன்னது…

உங்களுக்கும் அடிச்சிட்டாங்களா? பட்டறிவுக்கு என்டுமே மதிப்பு அதிகம்.

பெயரில்லா சொன்னது…

///”உங்கள் கணணியில் யுனிகோட் எழுத்துருவை செய்ற்பட வைக்க முதல் உமக்கான வின்டோஸ் சீடியை கையில் எடுத்து வைத்திருங்கள்”// எனக்கும் இது புரியல்ல ..!!

பெயரில்லா சொன்னது…

தான் வசிக்கும் மாவட்டத்தின் பெயர் போட்டு, பின்னுக்கு தன் பேரை போட்ட பதிவர் என்று நினைக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

///”தங்கள் மடலுக்கு நன்றி நண்பரே தங்கள் மடலுக்கு பதில் தரப் பிந்தியமைக்குக் காரணம் நீங்கள் யுனிகோட் எழுத்துருவில் தட்டச்சிட வில்லை மறுமுறை தமிழ யுனிகோட் எழுதி ஏதாவது பயன்படுத்தி எழுதி அனுப்புங்கள்” என்றிருந்தது.//ரொம்ப புத்திசாலியாய் இருப்பாரோ ))

காட்டான் சொன்னது…

வணகம்.. இதில காட்டான மறந்து விடுங்கோ..  மதி அவர்கள் புதிய பதிவர்களை எப்படி ஆதரிக்கிரார் என்பதற்கு நானே சாட்சி..இதில் நிரூபனையும் சேர்த்தே சொல்கிறேன்.. 

எனது பதிவுகளை இதுவரை நான் எனது தொலை பேசியிலேயே எழுதுகிறேன்.. நம்புவீர்களோ தெரியாது.. 

என்னிடம் இருக்கும் ஐ போனில் முத்து நெடுமாறனின் செல்லினம் பதிவட்டையை வைத்துத்தான்  எழுதுகிறேன் இங்கு இப்படியான தொழில் நுட்பம் என்னிடம் இருப்பதால் நான் தப்பித்தேன்..

இனி நான் ஒரு பதிவை கணனியிலேயே முழுவதும் எழுத முயற்சிக்கிறேன் நிரூபனின் உதவியால்.. இப்போது தெரிகிறதா எனது பதிவில் எழுத்து பிழை ஏன் வருகிறது என்று..

(மன்னித்துக்கொள்ளுங்கள் காட்டான் ஏதோ சொல்லபோறாராம்)
மாப்பிள அப்புச்சி சொல்லுவார் இவங்கள்ளாம் தானும் படுக்கமாட்டாங்கள் தள்ளியும் படுக்க மாட்டாங்கள்..! இஞ்ச குழ போட்டுட்டான் காட்டான்  இனி காட்டான் பிள்ள பிடிக்க போகப்போறான் மாப்பு...!

காட்டான் சொன்னது…

மாப்பிள செருப்பு நல்லா இருக்கு உனக்கு அடிச்சவனிடம் சொல்லு  காட்டானும் காத்திருக்கிறான் போய் அடின்னு செம்போட வடலிக்க ஒதுங்கேக்க எனக்கு உதவும்..!

கார்த்தி சொன்னது…

/* ஜீ... said...
விடுங்க சுதா!
எனக்கு அந்தப் பதிவர் யாரென்று தெரியவில்லை. சிலவேளை அவர் ரொம்ப பிசியா இருந்திருக்கலாம்! உங்கள் கனவுகள், ஏக்கங்கள் எல்லாம் உங்களது அந்த ஒரு கேள்வியில் அவருக்கு புரிந்திருக்க சாத்தியம் குறைவுதானே! */
இவரின்கருத்துதான் எனதும். அவருக்கு என்ன அவசரமோ தெரியாது. அத்துடன் இப்பிடி தெரியாத மின்னஞ்சல் வரும்போது சில வேளைகளில் வேலைக்களைப்புகளில் கோபமும் வந்திருக்கலாம்!
இப்ப நீங்கள் எல்லாம் அறிந்து விட்டீர்கள்தானே Be happy!

தனிமரம் சொன்னது…

ஒவ்வொரு அவமானமும் அவமதிப்பும் தான் நாம் முன்னேர தூண்டுகின்றது சிலர் தொழில்நுட்பமேதைகள் என நாம் என்னுவது சில நேரம் மடமையாகும் இந்தச் செருப்புக்கு கம்பன் கொடுத்த பெருமை அதிகம்( பாதுகை). நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனிமரத்தையும் ஒரு எட்டு எட்டுங்கள்!

ஆகுலன் சொன்னது…

அண்ணா உங்கள் விடா முயற்சிக்கு கிடைத்ததே இந்த வெற்றி.......

K. Sethu | கா. சேது சொன்னது…

நிரூபன் >>
//”உங்கள் கணணியில் யுனிகோட் எழுத்துருவை செய்ற்பட வைக்க முதல் உமக்கான வின்டோஸ் சீடியை கையில் எடுத்து வைத்திருங்கள்”//
ஏன் மச்சான், கணினியில் யுனிக்கோட் இன்ஸ்டோல் பண்ண விண்டோஸ் சீடி தேவை..
ஒரே குழப்பமாக இருக்கே.
ஹி....ஹி...ஆள் ஏன் இப்படிக் குழப்புறார் மச்சான். ஒரு வேளை தான் அதிகம் படிச்சவர் என்று காண்பிக்க முயற்சி செய்கிறாரோ. //

நிரூபன், மதியின் பதிவில் வவுனியாவிலிருந்து தொழில்நுட்பப் பதிவு எழுதும் ஆசிரியரும், பின்னர் மதி உதவி கோரி தொடர்பு கொண்ட 3 எழுத்து பெயருடைய பதிவரும் வெவ்வேறானோர் எனத் தெளிவாகத் தெரிகிறது. அப்படியானால் தாங்கள் "குழப்புகிறார்" எனச் சாடுவது அந்த வவுனியா ஆசிரியரைத் தானோ?

Unknown சொன்னது…

என்ன சொல்வது தெரியவில்லை..


வாழ்க வளமுடன்

ARV Loshan சொன்னது…

வேதனைகளைத் தாண்டித் தான் சாதனை மதி..
உதவாதவர்கள், புறக்கனைத்தவர்கள் இப்போதும் எரியக் கூடும்.. விட்டுத் தள்ளுங்கள்..
தொடர்ந்தும் முன்னேறுங்கள்.. வாழ்த்துக்கள்

மூன்றெழுத்து என்று பொதுவாக சொல்லாமல்
பத்திரிகையில் தொழில்நுட்பம் எழுதும் ஒரு பதிவர் கிடைத்தார். (மூன்று எழுத்துப் பெயர், இதுவரை யாருக்குமே கருத்திடாத ஒரு பதிவர்)"
என்று சொல்லியதால் தலை தப்பியது..

நிறையப் பேருக்கு அவல் கிடைத்த மாதிரி ஆயிருக்கும் :)

ARV Loshan சொன்னது…

வேதனைகளைத் தாண்டித் தான் சாதனை மதி..
உதவாதவர்கள், புறக்கனைத்தவர்கள் இப்போதும் எரியக் கூடும்.. விட்டுத் தள்ளுங்கள்..
தொடர்ந்தும் முன்னேறுங்கள்.. வாழ்த்துக்கள்

மூன்றெழுத்து என்று பொதுவாக சொல்லாமல்
பத்திரிகையில் தொழில்நுட்பம் எழுதும் ஒரு பதிவர் கிடைத்தார். (மூன்று எழுத்துப் பெயர், இதுவரை யாருக்குமே கருத்திடாத ஒரு பதிவர்)"
என்று சொல்லியதால் தலை தப்பியது..

நிறையப் பேருக்கு அவல் கிடைத்த மாதிரி ஆயிருக்கும் :)

சசிகுமார் சொன்னது…

நண்பரே இது சிறிய விஷயம் யூனிகோடில் அனுப்ப வில்லை என்று கேட்டவுடன் தெரிகிறது அவருக்கு அதை பற்றி தெரியவில்லை என்று உங்களுக்கு உதவி செய்ய கூடாது என நினைத்திருந்தால் நீங்கள் அனுப்பிய மெயிலுக்கு அவர் ஏன் பதில் அனுப்பவேண்டும்.

புரிந்து கொள்ளுங்கள் நண்பரே நான் கேட்ட கேள்விக்கு ஒருவர் சரியாக பதில் சொல்ல வில்லை என்றவுடன் அவர் தவறானவர் என கூறுவது ஏற்க முடியாது நண்பரே.

தொழில் நுட்பம் என்பது கடல் அதில் அனைத்தையும் அறிந்தவர் என்பது யாவரும் இல்லை. உங்களுக்கு தெரிந்த சிறிய விஷயம் மற்றவருக்கு தெரியாமல் இருக்கும் ஆகவே நிலைமையை புரிந்து கொள்ளுங்கள் நண்பா.

எனக்கு தெரிந்து அவர் செய்த ஒரே தவறு நீங்கள் மெயில் அனுப்பியவுடன் எனக்கு தெரியாது என வெளிப்படையாக சொல்லாமல் உங்களை இரண்டு வாரங்கள் காக்க விட்டதே என நினைக்கிறேன்.

TJ சொன்னது…

முதலில் உதயன் பத்திரிகையில் தொழில்நுட்ப செய்திகள் ஒவ்வொரு வியாழகிழமையும் வெளிவரும் நானும் தொழில்நுட்பத்தில் கொண்ட பற்றால் தேடிபிடித்து படிப்பேன். பின்னர் இணைய இணைப்பு பெற்று இன்ட்லி தளத்தை கண்டபின்தான் தெரிந்தது அவையாவும் இங்கிருந்து எடுக்கப்பட்டதேன்பது.

RK நண்பன்.. சொன்னது…

@ SASIKUMAR

இதே போல நான் கேட்ட ஒரு தொழில்நுட்ப உதவிக்கும் நீங்கள் தெரியாது அல்லது நேரம் இல்லை அப்டின்னு சொல்லி இருக்கலாமே?? ஏன் ஒரு ரிப்ளை கூட இல்ல??

கேள்வி கேட்க்க சொல்லி ஃபோரம் ஓபன் பன்றிங்க ஆனால் கேட்டால் ஒரு பதிலும் இல்ல... பல முறை இப்படி ஆனா கஷ்டமா இருக்கும் தானே..!?

உங்கள் ஆதங்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது மதி...

ungkaL உங்கள் ஆதங்கத்தை பகிர்ந்து கொள்கிறேன்

“உதவி பெறுவதை விட உதவி செய்து பார் உவகையாய் மனமினிக்கும்”//

அனுபவ மொழிகளுக்குப் பாராட்டுக்கள்.

M.R சொன்னது…

வேதனையான விஷயம் தான் சகோ....

jagadeesh சொன்னது…

அவசரப்ட்டுடீங்கள்.

Ashwin-WIN சொன்னது…

உதவி புரியனும்னு மனசிருந்தா எப்டியாவது உதவி புரிந்திருப்பார்.. வேதனைதான் சகோ... இதற்கு பதிலடியா சகோ நீங்கள் ஒரு காரியம் பண்ணலாம் அந்த பதிவரை அழைத்து அவருக்கு தொழில்நுட்பம் கொஞ்சம் சொல்லிக்கொடுங்கள்..

இப்படியும் சில சுயநலக்காரர்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள்..

இதற்கு நேர் மாறான அனுபவங்களும்
என்னிடத்தில் உண்டு.

நன்றி..

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

Muruganandan M.K. சொன்னது…

கணனி, பதிவுலகம்,யுனிகோட் பற்றிய உங்களது அனுபவங்களைப் படித்தேன். மிகக் கவலையாக இருந்தது. ஒவ்வொன்றாக நானே படிப்படியாக கற்றுப் பயன்படுத்திய எனக்கு உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது.

நிற்க நீங்கள் குற்றம் சாட்டிய பெயர் அறியாத பதிவரையும் குறை சொல்ல முடியாது. இன்றைய அவசர உலகில் ஒவ்வொருவனும் தனது தேவைகளுக்காக மட்டுமே வாழ்கிறார்கள். சமூக நோக்கக் குறைந்து வருகிறது. யதார்த்தம் இதுதான்.

K. Sethu | கா. சேது சொன்னது…

//....உமக்கான வின்டோஸ் சீடியை கையில் எடுத்து வைத்திருங்கள்"../ ஏன் சிடீ தேவை என குழப்பமடைந்தோருக்கு:

ஒருங்குறி கட்டகத்தில் தமிழ் வரியுருக்களும் சிக்கல் வரியுருக்கள் (Complex Scripts) வகையிலானவை. இந்த சிக்கல் வரியுருக்கள் மற்றும் வலமிருந்து இடமாக எழுதப்படும் வரியுருக்கள் ஆகியனவற்றை வரைகலை தோற்றமாக்குதலுக்கு ( to graphically render) அவசியத் துணைகள் கடந்த இரு வெளியீடுகளான விசிட்டா மற்றும் 7 இயங்குதளங்களை நிறுவுகையிலேயே தானியக்கமாக சேர்கப்பட்டு விடுகின்றன. ஆனால் முன்னைய விண்டோஸ் 2000 தொடக்கம் XP உள்ளடக்கிய வெளியீடுகளை நிறுவுகையில் அவ்வாறல்ல. மாறாக இயங்குத் தளத்தை நிறுவுகையில் நிறுபவர் மேலதிக விருப்புத் தேர்வொன்றாகத் தெரிவு செய்யின் மட்டுமே சேர்கப்பட்டன.

முதலில் சேர்த்திருக்காவிடின் பின்னர் ஒரு பயனருக்கு முதன் முறையாகத் தேவை ஏற்படுகையில் அத் துணைகளைச் சேர்கத் தேவையானவற்றை கணினிக்குள் பதிவிறக்க நிறுவல் குறுவட்டை பயனர் செருக வேண்டும். அல்லது முன்னர் இயங்குத்தளம் நிறுவுகையில் எல்லா பொதிகளையும் கணினியின் வன்றட்டிலே காப்பகப்படுத்தி இருந்திருந்தால் குறுவட்டுக்குப் பதில் அவை உள்ள அடைவைச் சுட்டிக்காட்டலாம். ஆனால் எல்லாரும் அவ்வாறு காப்பக்கப் படுத்துவதில்லை. எனவேதான் முன்னைய விண்டோசுக்களுக்காக (முக்கியமாக XP க்காக) எழுதப்பட்ட கையேடுகளில் அவ்வாறு நிறுவலுக்கான குறுவட்டு தேவைப்படும், எடுத்து வைத்திருங்கள் என எழுதி வந்தனர். காட்டாக : http://www.daicing.com/manchu/index.php?page=complex-script-support . எனவே குறிப்பிட்ட வவுனியா பதிவர் முன்னைய வெளியீட்டிற்கேற்ப சரியாகவே எழுதியுள்ளார் எனலாம்.

sarujan சொன்னது…

வருந்த தக்கவிடயம் பகிர்வுக்கு நன்றி

சுதா SJ சொன்னது…

ஆஹா.. இப்படியும் சிலர் இருக்கிறார்களா ??
மதுரன் சொன்னதுபோல் உதவி செய்வதால் கிடைக்கும் சந்தோசத்தை அனுபவிக்க தெரியாத மடையர்கள் இவர்கள் .
வேறண்ண சொல்ல பாஸ்

ராஜி சொன்னது…

இதெல்லாம் தன்னைவிட மற்றவர்களெல்லாம் அறிவிளிகள் என்ற நினைப்பும்,தலைக்கணம்தான் வேறென்ன சொல்ல?

ராஜி சொன்னது…

சிரமம் பார்க்காமல் என் தளத்திற்கு வந்து என் மகளுக்கு வாழ்த்தியதற்கு நன்றிகள் சகோ.

பெயரில்லா சொன்னது…

#ஒரு சாதாரண பாமினியில் ஒருவன் தட்டச்சிடுகிறான் என்றால் ஒன்றில் அவன் எழுத்துரு பற்றித் தெரியாதவன் அல்லது குருடன் என்று அறியாத படித்தமேதையாக அவர் இருந்ததை நினைத்து புழுங்கினேன்.#
இப்படி பலபேர் இருக்காங்கள் அண்ணா!

சரியில்ல....... சொன்னது…

ரொம்ப பீல் பண்ணாதிங்க ... நானும் உங்க கேஸ் தான்... நான் ஆப்பிள் ஐ.பாட் வாங்கி ஒரு மாசம் சும்மா வச்சிருந்தேன் எப்பிடி பாட்டு எத்துறதுன்னு தெரியாம.... ஹிஹிஹி...

சிவகுமாரன் சொன்னது…

நானும் இப்படி அவதிப் பட்டிருக்கிறேன். இன்னும் பட்டுக் கொண்டிருக்கிறேன்.என்ன செய்வது முத்தெடுக்க மூழ்கும் போது கிளிஞ்சல்கள் கிழிக்கத்தான் செய்யும் கையை.

மாய உலகம் சொன்னது…

பதிவுலகில் எவ்வளவோ உதவி செய்த பதிவர்கள் இருக்கிறார்கள்... நல்ல முறையில் பகிரும் நண்பர்களும் இருக்கிறார்கள்...நாம் அவர்களைப்பற்றி பேசி நேரத்தை உபயொகமாக்கிக்கொள்வோமே...

Unknown சொன்னது…

கற்றது கையளவு இனி
கற்க வேண்டியது கடலளவு
உற்ற பதிவருக்கு ஓதுங்கள்

புலவர் சா இராமாநுசம்

K.s.s.Rajh சொன்னது…

அவமானங்களும் தோல்விகளும்தானே வாழ்க்கையை வலிமையாக்குகின்றன.

மா.குருபரன் சொன்னது…

நண்பா... நான் கம்பஸ்க்கு போகேக்க எனக்கு பவர்பொயின்ட்ல சிலைட்ஸ் மாத்த தெரியாது... கம்பஸ்க்கு போய் 3ம் நாள்... பிறசன்ரேஷன் செய்யிறம்.. எப்பிடி மாத்திறதெண்டு தெரியாம மற்றாக்கள் என்ன செய்யினம் எண்டத பாத்து தான் அண்டைக்கு பிறசன்டேசன் செய்தன்... வன்னிஎண்டபடியா ஒரு மாதிரி பாத்தாங்கள்... அண்டைக்கு முடிவெடுத்தது தான்... கம்பஸ் முடியேக்க முதல் நாள் சிலைட்ஸ் மாத்த தெரிஞ்ச பலருக்கு நான் கம்பியூட்டர்ல நிறைய சொல்லி குடுத்தன்... சில பேரிட்ட கேட்டா குரங்கிட்ட மூத்திரம் கேட்டகணக்கிலதான் பாய்வினம். இன்றுவரைக்கும் எனக்கு வந்த நிறைய இணையம் சம்மந்தப்பட்ட சந்தேகங்களுக்கு விடை கூகிள் தேடுபொறி தான் தந்திருக்கு. இந்த இடத்தில கூகிள் இற்கு எனது நன்றிகளை சொல்லிக் கொள்றன். 2006ம் ஆண்டு முதன் முதலா நான் இணையத்தில எழுதினான்... அப்ப எனக்கு புளொக் பற்றி தெரியாது... அந்த நேரம் இலவசமா வலைத்தளம் செய்வதற்கான எல்லா வழிமுறைகள் ஆலோசனைகளையும் கூகிள் தான் தந்தது... இப்பொழுதும் கூட. நல்ல பதிவு நண்பா.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top