இந்தப் பதிவு முடிவல்ல ஒரு ஆரம்பமாகும். எனக்குப்பிடித்த கவிஞர்களில் ஒருவரான கண்ணதாசனில் இருந்தே ஆரம்பிக்கிறேன்.
பிரபலங்களிடையே ஒரு இறுமாப்பு, ஆணவம், தலைக்கனம் என்று எந்தச் சொல்லைச் சொல்வதென்று தெரியவில்லை ஆனால் இதில் ஒன்று இருக்கிறது என்பது உண்மை. அத்துடன் பிரபலமானவர்கள் என்று தம்மை எண்ணிக் கொள்பவர்களிடம் இது மிக மிக அதிகமாகவே இருக்கிறது. உதாரணக்துக்கு வதனப் புத்தகம் (facebook) பார்த்தால் தெரியும். வந்து பதிவிட்டுப் போவர்கள் ஆனால் தமக்கு ஏதோ நேரம் என்பதே இல்லையாம். வேலை இல்லாத விசரர்களை பின்னால் வாருங்கள் என்பது போல போவார்கள். ஆனால் யாராவது காரசாரமாகப் பதிலிட்டால் அடுத்த கணம் மறுப்பு அறிக்கை விடுவார்கள். அப்படியானால் என்ன அர்த்தம் அவர்கள் எம்மைப் போல் விசரர்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இப்படியானவர்களை எல்லேரும் புறக்கணித்தால் என்ன..?
36 கருத்துகள்:
கருத்துரையிடுக