வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
தொழில்நுட்பத்தில் உயரிய வளர்ச்சி பெற்றிருக்கும் இக்காலத்தில் அதிகளவான ஆதிக்கத்தை செலுத்தி நிற்பது தொலைத்தொடர்பு தான். அந்தவகையில் தொலைபேசி வலையமைப்பு என்பது ஒரு மனிதனின் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது.
இந்திய வலையமைப்புகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் வலையமைப்புகளின் கட்டணங்கள் சற்றே அதிகம் தான். இதை அங்கே சென்ற போது தான் என்னால் உணர முடிந்தது ஏனென்றால் நண்பர் ஒருவரின் றீசார்ஜ் கடையின் புத்தகத்தை எடுத்துப்பார்த்ததால் 20 ரூபாயிற்கு மேல் றீசார்ஜ் போட்டதாகவே தெரியவில்லை.
ஆனால் இலங்கையை பொறுத்தவரை அப்படியில்லை வரி உள்ளடங்கலாக நிமிடத்திற்கான மிகக் குறைந்த கட்டணமே ரூபாய் 1.33 ஆகும். பெருமளவு இலாபத்தை பெற்றுக் கொள்ளும் வலையமைப்புகளும் தமக்குள்ளே மறைமுகமான பணப்பறிப்பை மேற்கொள்கின்றன.
முதலாவதாக டயலொக் வலையமைப்பின் மறைமுக பணப்பறிப்பை பற்றிப் பார்ப்போம். இங்கே அவர்களது நிபந்தனைகள் பற்றி கூறப்பட்டாலும் பல படித்தவர்களே இந்த விடயத்தில் ஏமாந்திருப்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதுபற்றி முன்னரும் ஒரு தடவை நான் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் இப்போதும் பலர் ஏமாந்திருக்கிறார்கள். டயலொக்கில் அழைப்பை மேற்கொள்பவர் தனது காத்திருப்பு நேரத்தில் கேட்பதற்காக ring tone என்ற பாடல் ஒலிபரப்பு சேவை இருக்கிறது. இதன் மாதாந்தக்கட்டடணம் 30 ரூபாவாகும் (வரி நீங்கலாக). அதே இடத்தில் பிற்கொடுப்பனவு சேவை என்றால் பாடலுக்கான சேவைக்கட்டணமாக மாதம் 50 ரூபா அறவிடப்படும். அதே இடத்தில் நீங்கள் ஒரு பாடலுக்கு மாறினால் பழைய பாடலுக்கான கட்டணமும் அறவிடப்படும். இது பலருக்கு தெரியாது. இருந்தாலும் மாதம் மாதம் ஒரு குறுந்தகவல் அனுப்பப்படுகிறது எனக் கூறப்பட்டாலும் இப்போதும் குறுந்தகவல் பார்க்காத பலர் இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல ஆங்கில அறிவு உள்ள எத்தனை பேர் இருக்கிறார்கள்.
சரி இச்சேவையின் பாடல் ஒன்றை நிறுத்துவதற்காக ஒரு குறிப்பிட்ட இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்ள வேண்டும் அதற்கான நிமிடக் கட்டணம் ரூபாய் 2.66 சதமாகும் ஆனால் அதை நிறுத்துவதற்கு அழைப்பெடுத்தால் 2 நிமிடங்கள் வரை அறிவுறுத்தலுக்காக காத்திருந்தாலும் இதைச் செய்வதற்கு 3, 4 தடவை முயற்சிக்க வேண்டும். அண்மையிலும் எனது உறவினர் ஒருவரது தொலைபேசியை வாங்கிப் பார்த்த போது 3 பாடல்கள் செயற்படுத்தப்பட்டபடி இருந்தது.
அவர்களது வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டு கேட்ட போது இவை நிறுவன விதி. நீங்கள் தான் அவதானமாயிருக்க வேண்டும் என்கிறார்கள்.
அடுத்து எயாரெல் வலையமைப்பில் நேற்று நண்பர் ஒருவருக்கு நடந்த அசம்பாவிதம் பற்றி ஒரு குறிப்பு.
எயரெல் பிற்கொடுப்பனவு சேவை இணைய இணைப்பு வைத்திருப்பவருக்கு ஒவ்வொரு மாதமும் 10 ம் திகதி கட்டண பட்டியல் அனுப்பப்படும். ஆனால் அவர்கள் 27 ம் திகதிக்கு முன்னர் கட்டணம் செலுத்தினால் போதுமாகும். ஆனால் நண்பர் தனது 4 ம் மாதத்திற்கான கட்டணத்தை கடந்த 8.5.2012 அன்று தான் பணம் செலுத்தியிருக்கிறார். ஆனால் இப்போது அவரது இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள எயாரெல் அலுவலகத்திற்கு சென்ற போது இம்மாத தொகையை செலுத்தினாலே இணைப்புத் தரப்படும் என்கிறார்கள். ஆனால் அவருக்கு இம்மாத பணம் செலுத்த 27ம் திகதிவரை அவகாசம் உள்ளது. அத்துடன் இன்னும் அவருக்கு கட்டண பட்டியல் வந்து சேரவில்லை. அனால் அவர்களால் இணைப்புத் தர முடியாதாம்.
எப்படி இருக்கிறது.
இவை நான் அறிந்ததே இன்னும் இருக்கலாம். தெரிந்ததை பகிருங்கள். இது பலருக்கு உகந்த ஆக்கம் என்றால் கீழே உள்ள முகநூல் தொடுப்பை சொடுக்கி பகிர்ந்து கொள்ளுங்கள்
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
10 கருத்துகள்:
subscriber காசுகளை களவாடி தின்பதில் Airtel-இந்தியாவில் முதலிடத்தில் இருக்கும் என்று நினைக்கிறேன்.
தெரிந்து புரிந்து கொள்ள வேண்டிய பதிவு.
வணக்கம் ம.தி.சுதா!முன்னேறிய நாடுகளில் சட்ட திட்டங்கள் ஒழுங்காக இருக்கும்!ஊழல் புரியும் அரசுகள் இருக்கும் வரை இந்தப் பகல் கொள்ளைகள் தொடரும்.2-G அது தானே???இலங்கையில் அந்த இரண்டு நிறுவனங்களும் செமையாக அரசைக் கவனிப்பதால்,அவர்கள் வைத்ததே சட்டம் ஆகி விட்டது!
Pakal kollai
ஒவ்வொரு நிறுவனமும் தினுசு தினுசா ரேட் வச்சிருக்காங்க.....
எல்லா இடத்திலயும் கொள்ளை இருக்கு சகோ///
வலையை வைத்தே மீன் பிடிக்கும் கொள்ளைக்கூட்டம் ஆகிவிடுகின்றது எர்ட்டெல்லும் டயலக்கும்.ஏமாற்ற அவர்களுக்கு அயிரம் காரணம் சொல்ல காத்திருக்கும் நேரம் .ம்ம்ம்ம்
es, you can. I have an LG E2360 HD monitor that I have connected to the Airtel HD STB, using HDMI cable. I just have one problem; for some ...
எயார்டேல்,ஆரம்பத்தில் ஒத்த வலையமைப்புக்கிடையில்(a-a) நிமிடத்திற்கு 60 சதம் மாத்திரமே பின்னர் நிமிடத்திற்கு 78 சதம் என்றும் தற்போது நிமிடத்திற்கு 98 சதம் ,மேலும் இணைய பக்கேஸ் ரூ45 ,1.5GB என்று காணப்பட்டது ,தற்போது ரூ45, 150MB மட்டுமே இதைத்தான் சொல்லுவாங்க நம்பவைத்து கலுத்தருக்கிறது என்று ,மேலும் இவர்களது பணி தொடரும் என எதிர்ப்பாக்கின்றேன் ,எவ்வாறு என்றால் தற்போது ரூ25,100MB ரூ99,400MB என இலவசமாக வழங்கப்பட்ட சலுகையை நிப்பாட்டுவதுதான் இவர்களது அடுத்த செயல் என நான் நினைக்கின்றேன்
.. ஏனென்றால் பலருக்கு இந்தியாவை விட இலங்கையில் கூட என்ற வசனம் விளங்கவில்“லை...
Don't talk about dialog without any knowledge,
Bcz I am working there I know everything about them. everything has been calculated by dialog according to the taxes which TRC has given to us.
And for Ringintones we are charging Rs.50+taxes as service fees and Rs.30+taxes we are charging for song fee. That fee we are paying for the people who is giving the song to dialog.
IF u don't know anything pls contact 777678678 and just talk with us.
Thank you.
கருத்துரையிடுக