உறவுகளே சேமம் எப்படி?
போர் மேகங்கள் கலைந்த ஒரு பதிவுலகத்திலிருந்து ம.தி.சுதா எழுதும் ஒரு பாராட்டுப் பதிவாகும்.
இப்பிரச்சனைகளை தமிழ்மணம் தலையிட்டு நாம் எதிர்பார்த்த நோக்கத்தை தந்திருந்தாலும். தமிழ்மணத்தின் பெரும்தன்மையை இவ்விடத்தில் பாராட்டியே தீரணும் என்ற காரணத்துக்காகத் தான் இப்பதிவு இடப்படுகிறது.
இந்தப் போர் ஏன் உருவானது என்ற கேள்வி பலரிடம் இருக்கலாம். முதலில் அதற்கான என் சார்ந்த விளக்கத்தை அளித்து விட்டு நகர்கிறேன். கடந்த சில மாதங்களாக தமிழுக்காக சேவை செய்வதற்காக இலாபநோக்கமின்றி உருவாக்கப்பட்டிருந்த தமிழ்மணம் என்ற திரட்டியை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் தமது மதப்பிரச்சாரத்திற்காக முற்று முழுதாகப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அதுமட்டுமல்லாமல் தமது பதிவுகளை முன்னிலைப்படுத்துவதற்காக போலி கணக்குகளை வைத்து மறை வாக்கிட்டு மற்றைய பதிவுகளை பின்னுக்குத் தள்ளுவதுடன். தமது பதிவுகளுக்கு நேர் வாக்கிட்டு முன்னிலைப்படுத்தியதுடன். மற்றைய மதங்களையும் அவர் சடங்குகளையும் மிகவும் தரம் தாழ்த்தி எழுதி வந்தார்கள்.
இவை மற்றப்பதிவர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தாலும் யாரும் பிரச்சனைகள் வேண்டாமென ஒதுங்கியிருந்தார்கள். (ஆதாரம் அவர்கள் இட்ட கருத்துக்களும் எமக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பிய மடல்களும் ஆதாரங்களுமே ஆகும்).
இதை தமிழ்மணம் அனுமதித்தது என நான் கூறமாட்டேன். காரணம் சேவை நோக்காகச் செயற்படும் ஓரிருவரை மட்டுமே வைத்துத் தான் அந்த பெரும் தளம் செயற்பட்டு வருகிறது. இருந்தாலும் இந்தப் பிரச்சனையில் அவர்கள் நடந்து கொண்ட விதம் அவர்களது பெரும்தன்மையைக் காட்டினாலும் இந்த சேவைத் தளத்திற்கு சில மாதங்களுக்கு முன் கிடைத்த அவமானமானது யாராலும் மறக்க முடியாதது.
தமிழுக்காக உழைத்த இத்தளத்தை அதே கும்பலைச் சேர்ந்த அத்தனை பேரும் தமிழ்நாற்றம் என்று அழைத்ததுடன். அந்த நிறுவனத்துக்கு படி பெறாது உழைத்த திரு.ரமணீதரன் என்பவரை மிகவும் தரக் குறைவாக திட்டித் தீர்த்தது.
அதுமட்டுமல்ல மத்தியகிழக்கு நாட்டில் இத்தளம் அக் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக செயற்படுகிறது என பரப்புரை செய்யப்பட்டு தடை செய்யும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன் அவர்கள் அனைவரும் அத்திரட்டியை புறக்கணிப்பதாக பகிரங்க அறிக்கை விட்டதுடன் அதன் வாக்குப்பட்டையையும் நீக்கிக் கொண்டார்கள்.
ஆனால் இன்று????????
நான் சொல்லியா தெரிய வேண்டும்...
ஆனால் கடந்த தினத்தில் தமிழ்மணம் அனைத்து மதவாதப் பதிவுகளையும் இனி தமிழ்மணம் ஏற்காது என்ற உத்தியோகபூர்வ முடிவால் எல்லாம் முடிவுக்கு வந்திருக்கிறது. அதன் மூலம் அவர்களும் தமிழ்மணத்திற்கு நன்றியைச் சொல்லி தாம் தப்பித்துக் கொண்டதை கொண்டாடிக் கொண்டார்கள்.
இனிவரும் காலங்களிலும் தமிழ்மணம் எத்தனை தடைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு தனது சேவையை தற்பொழுது போல நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதோடுமட்டுமல்லாமல். தங்கள் சேவைக்கு தடை ஏற்படுத்துகிறார்கள் என தாங்கள் கருதுபவர்களை நீக்குவதற்கும் தயங்கக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.(இதில் என்னையும் உள்ளடங்கலாகவே கூற விளைகிறேன்)
தங்கள் சேவை என்றென்றும் தொடர வாழ்த்தி விடைபெறும்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
தமிழ்மணத்தின் உத்தியோக பூர்வ அறிவிப்பபைக் காண்பதற்கும், நகைச்சுவைக் கருத்துக்களை கண்டு வாய்விட்டுச் சிரிக்கவும் இந்தத் தொடுப்பில் செல்லவும்..
இங்கே சொடுக்கவும்
பிற்சேர்க்கை (2.24 PM/ 08/05/2012) - இத்தால் அனைவருக்கும் அறியத்தருவது யாதெனில் தமிழ்மணத்தின் தண்டனைவிதிகளின்படி முதல் தண்டனை எனக்கே வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாக்கம் தமிழமணத்திலிருந்து விலக்கப்பட்டடிருக்கிறது. இருந்தாலும் அவர்களது காரணத்தில் தெளிவு பெற்றிருப்பதால் அத்தண்டனையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.
பிற்சேர்க்கை (2.24 PM/ 08/05/2012) - இத்தால் அனைவருக்கும் அறியத்தருவது யாதெனில் தமிழ்மணத்தின் தண்டனைவிதிகளின்படி முதல் தண்டனை எனக்கே வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாக்கம் தமிழமணத்திலிருந்து விலக்கப்பட்டடிருக்கிறது. இருந்தாலும் அவர்களது காரணத்தில் தெளிவு பெற்றிருப்பதால் அத்தண்டனையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.
6 கருத்துகள்:
போற்றப்பட வேண்டிய நடவடிக்கை ..!
நானும் முன்பு இவர்களது பிரசாரத்துக்கு எடுபட்டு தமிழ்மணத்தில் சில காலம் இணையாது இருந்தேன். இப்பொழுதுதான் உண்மை புரிகிறது.
இதுக்குக் கூட மைனஸ் ஓட்டுப் போட்டு சாந்தியும்,சமாதானமும் நிலவ வச்சிரிக்காக!!!!
போற்றப்பட வேண்டிய நடவடிக்கை ..!
நல்ல நடவடிக்கைதான். முதல் பல்பு வாங்கியவர்களுள் நானும் ஒருவன்.
உங்கள் பதிவு நீக்கப்பட்டது நல்லது அப்புறம் தமிழ்மணம் ஒரு சார்பாக செயல்படுகிறது என்கிற எண்ணம் விதைக்கப்படும்!
கருத்துரையிடுக