இந்தப் பதிவானது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்து தற்போது அந்த இயக்கத்தின் போராளிகளின் அர்ப்பணிப்பை பொய்யென உரைக்க முயலும் தளமொன்றிற்காக அதன் உண்மை ஆதாரத்தை வழங்குவதற்காக எழுதப்படுகிறது.
இந்த படங்களை பெறுவதற்காக எனது நண்பர் ஜீவன் அவர்கள் தனது உந்துருளியையே தந்திருந்தார். நேற்று முழுதும் சாவகச்சேரிப் பகுதியில் அலைந்து பெற முடியாமல் போனதை இன்று பருத்தித்துறை பகுதியில் பாடசாலையில் சமையல் வேலை செய்பவர் ஒருவரின் வீட்டில் இருந்து பெறமுடிந்தது.
அவர்கள் வழங்கிய செய்தியென்னவென்றால் அமெரிக்காவினால் வழங்கப்பட்ட செறிவூட்டப்பட்ட விட்டமின்களை புலிகள் பயன்படுத்தினார்கள் என்ற தொனிப்பொருளில் அவர்கள் இணையத்தளத்துக்கு கிடைத்த செய்தியாகப் பகிர்ந்திருந்தார்கள். அப்படியானால் நான் கேட்கிறேன் என்னிடமும் அந்த கலன்கள் இருக்கிறது. அப்படியானால் எனக்கும் அமெரிக்காவிற்கும் தொடர்பிருக்கிறதா?
புலிகள் பயன்படுத்தினார்கள் என்றால் அது பற்றி சிந்திப்பதே இல்லையா? இது பற்றி வைத்தியசாலை ஒன்றினுள் வேலை செய்தவரிடம் கேட்டிருந்தாலே முழுத்தகவலும் கிடைத்திருக்குமே.
5 நாளுக்கு மேல் சாப்பிடாமல் களத்திலிருந்து காயப்பட்டவளும் இருக்கிறார்கள். ஒரு நாள் வயிற்றோட்டத்திற்கே 3 சேலைன் ஏற்றியவர்கள் இருக்கையில் எத்தனையோ நாள் ஒழுங்கான நீர் இன்றி இறந்தவர்கள் இருக்கிறார்கள். காயத்தால் குருதி வெளியேறியிருக்கும் அதை ஈடு செய்வதற்கு முன்னர் அவர்களது உடல் நிலையை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே உயிர் பிரிந்து விடும். இவை ஒரு சிலது மட்டுமே இப்படி பல நூறு கதைகள் இருக்கையில். ஒரு அர்ப்பணிப்பாளர்களைப் பற்றி எதுவும் சிந்திக்காமல் எழுதுவது என்பது மிகவும் அபத்தமானது.
இந்த படங்களை பாருங்கள் புரியும். அப்படத்தில் உள்ளது USA aid என்ற திட்டத்தின் மூலம் ஐநாவானால் பாடசாலை மாணவருக்கான உணவுத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட தேங்காய் எண்ணெய்க் கலன்களாகும். இது வன்னியில் மட்டுமல்ல யாழின் பட்டி தொட்டியெங்கும் இருந்த ஒன்று. ஆனால் இரும்பு வியாபாரிகளின் வருகையால் அருகி விட்ட நிலையில் தான் அதன் படம் எடுப்பதற்காக நேற்றும் இன்றும் நான் அலைய வேண்டிய தேவை வந்து விட்டது.
செய்திக் கணக்குக்காக இணையத் தளங்களால் வெளியிடப்படும் செய்திகளால் காலப் போக்கில் வரலாறுகள் மாற்றப்படலாம். இதே செய்தி இன்னும் சில நாளில் அமெரிக்க வழங்கிய செறிவூட்டிய விட்டமின்களில் நஞ்சு கலந்திருந்தார்கள் எனவும் செய்தி வரலாம்.
இதை அத்தளத்துக்கு எடுத்துரைக்க பல முறை மினு்னஞ்சலில் தொடர்பு கொண்டும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை அதனால் தயவு செய்து இந்தச் செய்தி எத்தனை பேரிடம் போய்ச் சேர்ந்து தவறான எடுகோள் எடுக்கப்பட்டதோ தெரியவில்லை அதனால் இந்தச் செய்தி தவறானது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். யார் வேண்டுமானாலும் இந்தத் பதிவையோ அல்லது இதில் கூறப்பட்டுள்ள செய்தியையோ எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
15 கருத்துகள்:
எனக்கு அதைப் படிச்சு சிரிப்பு ஒரு பக்கம்! எந்தளவுக்கு பொது அறிவோடு இருக்கிறார்கள் என நினைத்தேன்!
ஆதாரத்தோடு இதனை அம்பலப்படுத்த நீ எடுத்த முயற்சிக்கு ஹாட்ஸ் ஆஃப் சுதா! நண்பர் ஜீவனையும் கேட்டதாகச் சொல்லிவிடு!
செய்தியின் தவறை சரியான அணுகுமுறையில் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.
அண்ணா மிக்க நன்றி..வரலாறுகளை வழுவ விடாது காக்கும் உன் பணிக்கு..
பொறுப்பற்ற செயலில் இருக்கும் ஊடகத்திற்கு உண்மையுணர்த்தும் பதிவு சுதா வாழ்த்துக்கள் .
வாழ்த்துக்கள் வெற்றி சுதாவுக்கு
எந்த ஈன பயலாலும் வரலாற்றை மறைக்க முடியாது நண்பா .. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்
தேர்வு முடிவுகளை எதிர் நோக்கி உள்ள மாணவர்களே பெற்றோர்களே உங்களுக்காக
மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு
தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்...
நாம் மிக அவதானமாக இருக்க வேண்டியுள்ளது. ஒரு சில இணையதளங்கள் எம்மை தவறாக வழிநடத்த முயல்கின்றது. தளங்களின் முகவரியையும் வெளியிட்டால் விழித்துக் கொள்வோம்.
உங்கள் பதிவிற்கு நன்றி.
செய்தியின் தவறை சரியான அணுகுமுறையில் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.
வணக்கம் மச்சாங்,
சேமம் எப்படி?
அருமையான,
அன்னை மண்ணுக்காய் வீழ்ந்தோருக்கு பெருமை தரவல்ல
ஆழமான சேதியினை ஆதாரத்தோடு தந்த உன் பணிக்கும்,
தேடலுக்கும் வாழ்த்துக்கள்.
உனக்கு ஞாபகம் இருக்கிறதா?
கடந்த வருடம் "அவர்கள் உன்னை கற்பழித்தார்களா" என்றோர் கதையினை எழுதியிருந்தேன். அந்த கதையில் வரும் ஆசாமி அதிர்வு நிர்வாகி என்பதை ஏலவே சொல்லியிருந்தேன்.
அதன் பிறகு அவர் என்னை தன் பேஸ்புக்கிலிருந்து நீக்கிட்டார்.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்...
அருமை சுதா.
இன்றுதான் இந்தப் பதிவைப் படித்தேன் சுதா.. இதை நான் மிகவும் வரவேற்கிறேன்.
தம்பி.. வரலாற்றிலிருந்து சில விடயங்களை நான் இப்பொழுது பேசாதே என்று மிகவும் வருந்திக் கேட்டேன் ஞாபகம் இருக்கிறதா?.. எனக்கு சில நாட்களாக ஒரு குழப்பம்... ஆனாலும் உன் போன்றவர்கள் இருக்கும் வரை நம் வரலாறு ஒரு போது பொய்த்துப் போகாது என்ற நிம்மதி ஏற்படுகிறது.. வாழ்த்துக்கள்!
கருத்துரையிடுக