வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
இன்றைய பதிவில் தங்களுடன் ஒரு நகைச்சுவை கலந்த ஏமாற்று வேலைகள் சம்பந்தமாக கதைக்கப் போகிறேன்.
கடந்த சில நாட்களாக பதிவுலக அசம்பாவிதங்களால் நானும் எனது வழமையான பதிவுப் பாணியை விட்டு விலக வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. மதுரன் அடிக்கடி இதைக் குத்திக்காட்டுவான்.. “சும்மா சமூகம் சமூகம் என்று நெடுக எழுதாமல் றூட்டை மாத்துங்கப்பா” என்றான். இருந்தாலும் மனம் ஒப்பவில்லை. நாளை நான் ஒரு பதிவு இட இருக்கிறேன் அதில் குறிப்பிடப் போகும் விடயம் என்னவென்றால் ஈழத்தில் குறிப்பாக வன்னிப் பிரதேசத்தில் மிகப் பெரும் ஏமாற்று வேலை ஒன்று இடம்பெறுகிறது. இதில் பாதிக்கப்பட்ட இரு நண்பர்கள் தாம் மிகவும் மனம் உடைந்திருப்பதாக குறைபட்டுக் கொண்டார்கள். சரி அது இருக்கட்டும் அதை நாளை தருகிறேன் இன்றைய பதிவுக்குள் நுழைவோம் வாருங்கள்.
தமிழன் எனப்படுபவன் உலகில் உள்ள அனைத்து இனங்களாலும் வியந்து நோக்கப்படும் ஒரு இனமாகும். அவன் சாதித்தவிடயங்களுக்கு பல பட்டியல் இருந்தாலும் அவன் கூட்டமாக பல இடங்களில் ஏமாற்றப்பட்டிருக்கிறான். இதில் அவன் ஏமாற்றப்பட்ட முதல் இடத்திற்கு போவோம் வாருங்கள்.
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் இலங்கையில் மூட்டைப் பூச்சிகள் தொகை அதிகரித்தது. அதிலிருந்து தப்புவதற்காக பல ரூபாய்களை செலவழிக்க வேண்டியிருந்தது. அந்த நேரத்தில்தான் பத்திரிகையில் இருந்து ஒரு விளம்பரம் வந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த விடயம் என்னவென்றால் ”மூட்டைப் பூச்சிகளை அழிப்பதற்கான இலகு கருவி வெறும் 2 ரூபாய்களில் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு அந்த முகவரிக்கு மணி ஓடர் அனுப்பினார்கள். ஒரு சில நாளில் ஒரு கடிதம் வந்து சேர்ந்தது. அதில் கருவி செய்வதற்கான செய்முறை இடப்பட்டிருந்தது.
கருவிக்கான செய்முறை இது தான்.
1. இரண்டு தடிகளை எடுத்துக் கொள்ளுங்கள்
2. இரண்டினதும் பக்கங்களை மட்டமாக சீவிக் கொள்ளுங்கள்.
3. அதன் பின் மூட்டைப் பூச்சியை பிடித்துக் கொள்ளுங்கள்
4. அதை அந்த சீவிய பகுதியினுள் இட்டு நசுக்கிக் கொல்லுங்கள்.
எப்படி நீங்களும் கருவி செய்யத் தயாரா?
இரண்டவது ஏமாற்றம் எது என பார்க்கப் போகிறீர்களா? அதுவும் கிட்டத்தட்ட இதே போல தான்.
ஒரு பத்திரிகை விளம்பரத்தில் 10 ரூபாய்க்கு வானொலி என இடப்பட்டிருந்தது. இம்முறையும் எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு மணி ஓடர் பண்ணினார்கள்.
ஒரு சில நாளில் ஒரு கடிதம் வந்தது அதில் குறிப்பிடப்பட்டிருந்தது இது தான்.
இம்மடலில் வானொலி ஒன்றுக்கான மாதிரிப்படம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் உங்களுக்குத் தேவையான வானொலியை தயாரித்துக் கொள்ளுங்கள் என்றிருந்தது.
இதன் பின்னர் 1999-2000 ம் ஆண்டுகளில் ஒரு வலையமைப்பு முறையிலான பணக்கட்டணமுறையையும் ஆரம்பித்தார்கள். அதுவும் சில நாளில் கைவிடப்பட பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை எம் தமிழர் இழந்து கொண்டார்கள்.
அதே போல கொக்குவில் பகுதியில் ஒருவர் அட்டை முறை ஒன்றை கொண்டு வந்தார் அதாவது ஒரு அட்டையில் 400 ரூபாய் கொண்ட 10 கட்டங்கள் இருக்கும் நீங்கள் நானூறு ரூபாய் கொடுத்து ஒரு கட்டம் வெட்டினால் உங்களுக்கு ஒரு அட்டை கிடைக்கும். அதே போல அட்டையை நிரப்பிக் கொடுத்தால் அதில் 10 வீதம் கடைக்கும். இதைக் கூடத் தெரியாமல் பலர் ஏமாந்திருக்கிறார்கள். இத்தகவலை பதிவர் ஜனா அண்ணா தான் தந்திருந்தார்.
அதே போல 1983-1988 ம் ஆண்டு காலப்பகுதியில் தற்போது தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் . சரவணபவன் அவர்கள் சப்ரா என்ற கம்பனியை தொடக்கினார் அதிலும் ஏராளமானோர் அதிக வட்டிக்காக பணமுதலீடு இட்டார்கள்.. அதன் மிகுதியை இந்திய சினிமா உங்களுக்கு காட்டியிருக்கும் என்பதால் அதை பற்றி சொல்லாமல் நாளைய பதிவுக்கு அத்திவாரம் இட்டு விடைபெறுகிறேன்
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
update - (15.5.2012)- மன்னிக்கவும் உறவுகளே தவிர்க்க முடியாத காரணத்தால் இன்று பதிவை இட முடியாமல் போய்விட்டது மன்னிக்கவும்.
update - (15.5.2012)- மன்னிக்கவும் உறவுகளே தவிர்க்க முடியாத காரணத்தால் இன்று பதிவை இட முடியாமல் போய்விட்டது மன்னிக்கவும்.
18 கருத்துகள்:
வணக்கம் ம.தி.சுதா!!!!ஆஹா!இப்புடியெல்லாம் கூட வழியிருக்கா?இது தெரியாம எத்தனை பேர் இலட்சம் செலவழிச்சு லட்சியம் தேடி அலையிறாங்க???இன்னும் வருமா?"அவரும்"கூடவா?
நல்ல ஒரு விடயத்தை சொன்னீர்கள் சுதா..... உழைப்பை நம்பாதவர்களும், குறுக்கு வழியில் லாபம் சம்பாதிக்க எண்ணுபவர்களும், நோகமல் இருந்து பணம் பார்க்க நினைப்பவர்களுமே இதுபோன்ற சுற்று மாத்துகளிலும் mகப்பட்டுக்கொள்கின்றார்கள். 2000 ஆண்டுகாலகட்டத்தில் மூலை முடுக்கெல்லாம் ஓடிய கோல்ட் கொயின் விற்றல்முறை, இணத்தில் பணம் கட்டி சொலுட் பற்று ஒன் லைன் வேலை, மந்திரீக, ஜாதக விடயங்கள் என பல வித்தைகள் ஒவ்வொரு கால கட்டத்திலும் இடம்பெறுகின்றன. முறையான பதிவுடைய வங்கி அதிகாரிகள் காப்புறுதி அதிகாரிகளின் பேச்சுக்களையே அசட்டை செயயும் மக்கள் இதுபோன்ற மோசக்காரர்களிடம் மாட்டிக்கொள்வது வேதனைதான்.
சரவணபவன் பற்றியா அந்த கேடியை ம்`ம்ம்ம் நாளை வாரன் பன்னாடை இவனுங்களை நம்பி ஓட்டுப்போட்ட விசில் குஞ்சுகளை!ம்ம்ம்ம்
எமாறுகிறவன் இருக்கும்வரை ஏமாற்றுபவன் இருப்பான். மக்கள் விழிப்படையும்வரை இது தொடரும்.
Nalla pathi ennidamum oru idea irukku
மூட்டைப்பூச்சி மெசின்(?) பற்றி நானும் கேள்விப்பட்டேன். சப்றா சரவணபவனால் தூக்கில் தொங்கியவர்களின் குடும்பங்கள் இன்றும் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். என்னதான் சொன்னாலும் எங்கட சனம் இப்பவும் சீட்டுக்கட்டி ஏமாந்து கொண்டிருக்கிறார்களே.....
ஏமாறுகிறவன் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்களுக்கு பஞ்சமே இல்லை.
ஏமாற்றுபவனை விட ஏமாறுபவன் மேல் தான் பிழை அதிகம் என்று தோன்றுகிறது. சில தடவைகளில் சுதாகரிப்பதற்கும் மாட்டிக்கொள்வதற்கும் மிகச்சிறிய இடைவெளியே காணப்படும். மாட்டுவோரே அதிகம்.
இது யாரு புதுசா உங்க ஊரு மூணு சீட்டு சரவணபவன்?
எதையுமே இது சாத்தியமா என்று சிந்திக்காதவரை ஏமாறுவதும் ஏமாற்றுவதும் தொடர்கதைதான் ..!
எதையுமே இது சாத்தியமா என்று சிந்திக்காதவரை ஏமாறுவதும் ஏமாற்றுவதும் தொடர்கதைதான் ..!
நானும் தான் ஒரு காப்புறுதி வழங பாடாய் பட்டேன்..இதெல்லாம் ஏமாத்து வேலை எண்டு என்ன வேகமா சொன்னாங்க...:(ஆனா எச்சரிக்கையாய் இருக்க வேண்டியதிலெல்லாம் கோட்ட விட்ராங்க...!ஜாக்கிரத.
நானும் தான் ஒரு காப்புறுதி வழங பாடாய் பட்டேன்..இதெல்லாம் ஏமாத்து வேலை எண்டு என்ன வேகமா சொன்னாங்க...:(ஆனா எச்சரிக்கையாய் இருக்க வேண்டியதிலெல்லாம் கோட்ட விட்ராங்க...!ஜாக்கிரத.
"ஏமாற்றுபவனை விட ஏமாறுபவனே குற்றவாளி !"
ராஜ நடராஜன் said...
இது யாரு புதுசா உங்க ஊரு மூணு சீட்டு சரவணபவன்?///அவரு இப்ப எம்.பி வேற,ஹ!ஹ!ஹா!!!தமிழ் நாடு மாதிரியே ஆயிட்டு வருது நம்ம ஊரும்!
update - (15.5.2012)- மன்னிக்கவும் உறவுகளே தவிர்க்க முடியாத காரணத்தால் இன்று பதிவை இட முடியாமல் போய்விட்டது மன்னிக்கவும்.///பரவாயில்லை,நேரம் கிட்டும்போது "மட்டும்" பதிவிடுங்கள்,சுதா!
இது போல் நிறைய ஏமாற்றுக் காரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நாம்தான் ஏமாறுவதை நிறுத்த வேண்டும்.
வணக்கம் மச்சி..
சூப்பராக எம்மை கடந்த காலத்தில் எப்படியெல்லாம் யூஸ் பண்ணி தம் பிழைப்பினைப் பலர் ஓட்டினார்கள் என்பதனை சொல்லியிருக்கே.
முந்தி ஒரு காலத்தில Edna கண்டோஸை விற்பனை செய்யும் நோக்கில் ஸ்ரிக்கட் போட்டி வைச்சாங்க...
இது போல வானொலி கேளுங்கள் பரிசை வெல்லுங்கள் போட்டியினை சில வானொலிகள் நடாத்தின...
இப்படி பல ஏமாற்று வித்தைகளை தமிழன் கடந்து வந்திருக்கிறான்.
நினைவு மீட்டலுக்கு நன்றி நண்பா.
கருத்துரையிடுக