வியாழன், 25 நவம்பர், 2010

இந்தியாவிலும் தமிழர் சிறுபான்மையினரா..??

11:37 PM - By ம.தி.சுதா 66

                என்ன கேள்வியைப் பார்க்க குழப்பமாயிருக்கிறதா..?? என்ன செய்வது கேட்க வைத்துவிட்டார்களே காரணம் இன்று இடம் பெற்ற மீனவர்களின் பேச்சு வார்த்தையாகும்.
              இன்று இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களிடையே மீன்பிடி சம்பந்தமான பேச்சு வார்த்தை ஒன்று இடம் பெற்றது இதில் இந்திய மீனவர் சார்பாக தேவதாசும் இலங்கை மீனவர் சார்பாக தவரட்ணமும் கலந்து கொண்டார்கள். இதில் தேவதாசால் வாரத்தில் 2 நாட்களாவது சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதி கேட்கப்பட்டது அனால் தவரட்ணம் இதற்கு சம்மதிக்கவில்லை. அவர் சொன்ன காரணம் இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளால் மீன் பிடித்து கடல் வளத்தை சீர் குலைக்கின்றனர் என்பதாகும். அனால் 1974 ல் ஏற்படத்தப்பட்ட ஒரு ஒப்பந்தத்தில் இரு சாராரும் சேர்ந்து மீன் பிடிக்கலாம் என்ற ஒரு பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
         எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் இது ஒரு பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது இதுவரை எத்தனை இந்திய மீனவர்கள் சூட்டுக்கிலக்காகியிருப்பார்கள். மத்திய அரசாங்கம் ஏன் கண் மூடியிருக்கிறது. இலங்கைத் தலைவர்கள் வந்தால் கொண்டாட்டமாக விழா எடுக்கும் அவர்களுக்கு இது தெரியாதா. சரி அவர்களிருக்கட்டும் தமிழ் நாட்டிற்கு ஒரு அரசு இருக்கிறதா என எனக்கு சிறு சந்தேகம் இருக்கிறது கலைஞர் ஐயா கலையையும் அரசியலையும் ஒன்றாக்கி தன் கவிதையை தானே கொன்று கொண்டிரப்பவருக்கு மற்றவர் சாவது எங்கே தெரியப் போகிறது (எதை இவன் சொல்கிறான் என நினைக்கிறிர்களா..?? அருமையான கவி வரிகளை கலைஞர் தொலை காட்சியில் செய்தியில் வாசிக்க கொ(கெ)டுப்பார். வலைத் தளத்தில் ஒருவன் ஒரு பதிவு பலரை சேர்வதற்காய் தலைப்பைக் கொஞ்சம் வித்தியாசமாக இட்டால் கொதிக்கும் சக பதிவர்களுக்கு கலைஞர் ஹிட் வாங்குவதற்காக செய்யும் இந்த கூத்தை தட்டிக் கேட்க திரணியிருக்காது)
         சரி விசயத்திற்க வருவோம் இதற்கு கலைஞரால் ஏன் தகுந்த நடவடிக்கை எடுக்க முடியாது. அடுத்த தேர்தலுக்க பிரச்சாரக் கருவியாக இதைப் பயன்படுத்த போகிறாரா..??
           எனது ஒரு சிறு கருத்து கலைஞரும் அவர் வாரிசுக்களும் எந்த மாட்டைப் பிடித்தால் முட்டாமல் பால் கறக்கலாம் என நன்கறிந்தவர்கள்.. கறக்கட்டும் அதன் கன்று வளர்ந்த முட்ட வரும் போது தான் அனுபவிப்பார்கள்.
       ஈழத்தில் பிறந்த குற்றத்திற்காக நாம் அவர்கள் கைகளால் இறந்தோம் அதற்கு காரணமிருக்கிறது. இந்தியாவில் பிறந்த ஒரு மீன்பிடிக்காரன் ஏன் அநியாயமாய் இறக்கணும். (இதே இடத்தில் ஒரு கேரளக்காரனோ, ஆந்திரக்காரனோ இறந்தால் எப்படியிருக்கும்)
       மொத்தத்தில் எனக்கு தெரிந்த ஒரு பழமொழியுடன் விடைபெறுகிறேன்.. எள்ளுக் காய்வது எண்ணெய்க்காய் எலிப் பிழுக்கை காய்வதேன் அது தாங்க கூட இருந்த குற்றத்திற்கு

குறிப்பு – கருத்துக்கள் தணிக்கைக்குட்பட்டவையே பிரசுரிக்கப்படும். அத்துடன் இந்த ஆக்கத்தை அனுமதியின்றி பாவிப்பவர்கள் திருடர்களாகவே கருதப்படுவர். அப்புறம் எனது நண்பன் தந்தான் அல்லது எனது செய்தியாளர் தந்தான் பிரசுரித்தேன் என்றெல்லாம் கதைவிடக் கூடாது இன்று முதலாவது தங்களுக்கு வரும் தகவலை ஒரு முறை கூகுல் செர்ஜ்ஜில் போட்டுப் பார்த்துவிட்டுப் போடவும்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

66 கருத்துகள்:

KANA VARO சொன்னது…

இன்றைய பி.பி.சி தமிழோசையிலும் பெரியதொரு செய்தி பெட்டகம் போனது கேட்டேன்.

டிலீப் சொன்னது…

//இந்த ஆக்கத்தை அனுமதியின்றி பாவிப்பவர்கள் திருடர்களாகவே கருதப்படுவர். அப்புறம் எனது நண்பன் தந்தான் அல்லது எனது செய்தியாளர் தந்தான் பிரசுரித்தேன் என்றெல்லாம் கதைவிடக் கூடாது//

சூப்பர் மம்ஸ்////////////

Unknown சொன்னது…

//(இதே இடத்தில் ஒரு கேரளக்காரனோ, ஆந்திரக்காரனோ இறந்தால் எப்படியிருக்கும்)//

நிறைப்பேர் மனதில் எழும் கேள்வி இது !

ராஜகோபால் சொன்னது…

//கலைஞரும் அவர் வாரிசுக்களும் எந்த மாட்டைப் பிடித்தால் முட்டாமல் பால் கறக்கலாம் என நன்கறிந்தவர்கள்.. கறக்கட்டும் அதன் கன்று வளர்ந்த முட்ட வரும் போது தான் அனுபவிப்பார்கள்.
//

நியாயமான ஆதங்கம்.

ஷஹன்ஷா சொன்னது…

தமிழர்கள் எங்கும் தலை நிமிர்ந்து நடக்கலாம்...அரசியல் தலையீடுகள் இல்லாவிட்டால்.....

இந்த சந்திப்பு மறைமுகமாக ஒன்றை தெரியபடுத்துகின்றது...தமிழர்களின் ஒற்றுமையின்மையை.......!

தினேஷ்குமார் சொன்னது…

தமிழகத்தில் மக்கள் ஒற்றுமை இல்லை இன்றும் அதுவே அரசியல் சாக்கடைகாரார்களுக்கு ஓர் வழியாக அமைந்து விட்டது கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் தமிழக மக்களுக்கு இன்றும் பொருந்தும் மக்கள் நினைத்தால் எதுவும் முடியும் அதுவே மக்களாட்சி ஆனால் இங்கு நடப்பதோ விவரிக்க முடியவில்லை கரம் கோர்க்கிறேன் விடியுமா என்று பார்ப்போம்

நான் திரு.தினேஷ்குமார் அவர்களின் கருத்தையே வழி மொழிகிறேன்.
கடைசியில் போட்டிருக்கும் பத்தி உண்மையில் சூப்பர்.

Chitra சொன்னது…

சரி விசயத்திற்க வருவோம் இதற்கு கலைஞரால் ஏன் தகுந்த நடவடிக்கை எடுக்க முடியாது. அடுத்த தேர்தலுக்க பிரச்சாரக் கருவியாக இதைப் பயன்படுத்த போகிறாரா..??

..... வேதனையான நிலமை. யோசிக்க வேண்டிய விஷயம்.

வைகை சொன்னது…

ஐயோ மதி!! அவசரப்பட்டு ஏங்க தமிழினத்தலைவர குறைசொல்லாதீங்க, மீனவர்களின் துயர் தீர்க்க, தமிழர்களின் உரிமை காக்க இன்று மாலையே, அன்பின் உருவம், அகில உலக அன்னை சோனியாவுக்கு கடிதம் எழுதுவாரு பாருங்க!!!!!!!!!!

ஜெகதீசன் சொன்னது…

//இந்தியாவிலும் தமிழர் சிறுபான்மையினரா..??
//
ஆம்.. தற்போதைக்குத் தமிழகத்தில் மட்டும் பெரும்பாண்மையினர்... அங்கும் சிறுபாண்மையினராக ஆகாதவரை சரி

பெயரில்லா சொன்னது…

do you know that all these are for fishing in Srilankan water?
not in indian side.

nis சொன்னது…

ம்ம், சர்ச்சைக்குரிய சிந்திக்கப் பட வேண்டிய விடயம் தான். சுதா

test சொன்னது…

//அத்துடன் இந்த ஆக்கத்தை அனுமதியின்றி பாவிப்பவர்கள் திருடர்களாகவே கருதப்படுவர்//

இது வேற நடக்குதா நாட்டில? என்ன கொடும சுதா! :)

சசிகுமார் சொன்னது…

//ஈழத்தில் பிறந்த குற்றத்திற்காக நாம் அவர்கள் கைகளால் இறந்தோம் அதற்கு காரணமிருக்கிறது. இந்தியாவில் பிறந்த ஒரு மீன்பிடிக்காரன் ஏன் அநியாயமாய் இறக்கணும்//

கன்னத்தில் அறைந்தது போன்ற ஒரு கேள்வி வெட்கி தலை குனிகிறேன்.

சசிகுமார் சொன்னது…

//தமிழ் நாட்டிற்கு ஒரு அரசு இருக்கிறதா//

இருப்பதால் தானே இந்த பிரச்சினையே

சசிகுமார் சொன்னது…

//சரி விசயத்திற்க வருவோம் இதற்கு கலைஞரால் ஏன் தகுந்த நடவடிக்கை எடுக்க முடியாது. அடுத்த தேர்தலுக்க பிரச்சாரக் கருவியாக இதைப் பயன்படுத்த போகிறாரா//

அதற்குள் ராமேஸ்வர மீனவர்களில் பாதிபேர் இருக்க மாட்டார்கள். தமிழனின் உயிர் இவர்களுக்கு இவ்வளவு கேவலமாக போய் விட்டதா.

கவி அழகன் சொன்னது…

வழமைபோல் சுப்பர் நல்லா தகவல்

sathishsangkavi.blogspot.com சொன்னது…

யோசிக்க வேண்டிய விசயம்... நாம யோசிச்சு என்ன பிரயோசனம்... யோசிக்க வேண்டியவங்க யோசிக்கனும்...

கவி அழகன் சொன்னது…

உணர்வு பூர்வமான படைப்பு எள் எண்ணைக்கு காயுது எலிப்புழுக்கை என்னத்துக்கு காயுது

Ashok சொன்னது…

அருமையா எழுதிருக்கீங்க. இலங்கைல தமிழன் வாயில வெளிப்படையா விஷம் ஊத்துவாங்க. இந்தியாவுல வாழைப்பழத்துல தடவி, தெரியாம விஷம் கொடுப்பாங்க.

Jana சொன்னது…

நான் சொல்லவேண்டியதை சங்கவி அவர்கள் சொல்லிவிட்டார்.

Unknown சொன்னது…

என்ன நீங்க எந்த காலத்துல இருக்கீங்க நண்பரே.

இங்க இருக்குற அரசியல் கபோதிங்க எல்லாமே தன்னுடைய பதவிக்காக எந்த மூ..... குடிப்பானுங்க.

எப்பூடி.. சொன்னது…

//வலைத் தளத்தில் ஒருவன் ஒரு பதிவு பலரை சேர்வதற்காய் தலைப்பைக் கொஞ்சம் வித்தியாசமாக இட்டால் கொதிக்கும் சக பதிவர்களுக்கு கலைஞர் ஹிட் வாங்குவதற்காக செய்யும் இந்த கூத்தை தட்டிக் கேட்க திரணியிருக்காது)//

:-)))

எப்பூடி.. சொன்னது…

உங்க ஆதங்கம் புரியுது, அதுக்காக கலைஞரை திட்டாதீங்க, அவரு பாவம் ;அவரு நாட்டை பாக்கிறதா? வீட்டை பாக்கிறதா? நாட்டை பாக்கிறதெண்டா மத்தியை பாக்கிறதா? இல்லை மாநிலத்தை பாக்கிறதா? வீட்டை பாக்கிறதெண்டா சென்னையை பாக்கிறதா மதுரையை பாக்கிறதா? கன்பியூசிங் ......

கொலைஞர்.....!

ஹேமா சொன்னது…

ஆதங்க சரி சுதா.கண்மூடி நித்திரையாய் நடிப்பவரிடம் கேட்டுப் பிரயோசனமில்லையே !

maruthamooran சொன்னது…

சுதா…!

இலங்கை- இந்திய மீனவர்களுக்குள் இருக்கின்ற பிரச்சினையை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். இலங்கை மீனவர்கள் இந்திய மீனவர்கள் மீது முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்களில் பிரதானமானது பாரிய இழுவைப்படகுகளை பயன்படுத்துவது தொடர்பிலாகும்.

பாரிய இழுவைப்படகுகள் என்பது வாரங்கள், மாதங்கள் கணக்கில் கடலில் தொழிலில் ஈடுபடுபவை. இந்த இழுவைப்படகுகளினால் கடல் வளங்கள் அதாவது பாக்குநீரினைப்பகுதியிலுள்ள பிளாந்தன் உள்ளிட்ட கடல் வளங்கள் வாரி எடுக்கப்படுகின்றன. ஏன் எனில், பாக்கு நீரினைப் பகுதி ஆழம் குறைந்த கடல்பகுதியாகும். இதனால், அந்தப்பகுதிகளில் கடல் வளம் குறைவடைகின்றது. இதனால், குறித்த கடல் பகுதிகளில் மீன்வளம் குறைவடையும். இதுவே பிரதான காரணம்.

அடுத்து, வடக்கு மாகாண கடற்பகுதிகளில் பாரிய இழுவைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு வடக்கு மாகாண மீனவர்கள் இணைந்தே தடை விதித்தனர். ஆயினும், வல்வெட்டித்துறையில் சுமார் 15 பாரிய இழுவைப் படகுகள் கடந்த ஜீன் மாதம் வரை தொழில் ஈடுபட்டன. எனினும், அதற்கும் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசம் மற்றும் யாழ்ப்பாணம் மீனவர்களின் வேண்டுகோளை அடுத்து, மீன்பித்துறை அமைச்சு தடை விதித்தது.

இந்திய பாரிய இழுவைப்படகுகள் வடக்கு மாகாண கடற்பகுதிகளில் பாரிய இழுவைப் படகுகளில் தொழிலில் ஈடுபடும் போது, இலங்கை மீனவர்களின் வலைகள் அறுக்கப்படுகின்றன. இதுவும் உள்ளிட்ட முக்கிய பிரச்சினையாகும்.

மற்றப்படி கலைஞர், இந்திய- இலங்கை அரசுகள் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவித்தும் ஏதும் ஆகப்போவதில்லை. அதனால், அது தொடர் கருத்துக்கள் என்னிடம் இல்லை.

பெயரில்லா சொன்னது…

கலைஞரும் அவர் வாரிசுக்களும் எந்த மாட்டைப் பிடித்தால் முட்டாமல் பால் கறக்கலாம் என நன்கறிந்தவர்கள்//
சூப்பரான வரிகள்

பெயரில்லா சொன்னது…

மீனவனுக்கு மீன் கூட கிடைப்பதில்லை

ம.தி.சுதா சொன்னது…

KANA VARO said...
//////இன்றைய பி.பி.சி தமிழோசையிலும் பெரியதொரு செய்தி பெட்டகம் போனது கேட்டேன்////

ஆமாம் மீன்பிடிப் பிரச்சனை பற்றித் தானே...
வருகைக்கு நன்றி சகோதரா..

ம.தி.சுதா சொன்னது…

டிலீப் said...
ஃஃஃஃசூப்பர் மம்ஸ்///////////ஃஃஃஃ

வருகைக்கு நன்றி சகோதரா..

ம.தி.சுதா சொன்னது…

மகாதேவன்-V.K said...
ஃஃஃஃஃஃ//(இதே இடத்தில் ஒரு கேரளக்காரனோ, ஆந்திரக்காரனோ இறந்தால் எப்படியிருக்கும்)//

நிறைப்பேர் மனதில் எழும் கேள்வி இது ஃஃஃஃ

ஆமாம் சகோதரா ஆனால் பதில் இரந்தும் சொல்ல முடியலியே...

ம.தி.சுதா சொன்னது…

ராஜகோபால் said...

ஃஃஃஃஃஃ//கலைஞரும் அவர் வாரிசுக்களும் எந்த மாட்டைப் பிடித்தால் முட்டாமல் பால் கறக்கலாம் என நன்கறிந்தவர்கள்.. கறக்கட்டும் அதன் கன்று வளர்ந்த முட்ட வரும் போது தான் அனுபவிப்பார்கள்.
//

நியாயமான ஆதங்கம்ஃஃஃஃஃஃ

நன்றி சகோதரா..

ம.தி.சுதா சொன்னது…

ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...
ஃஃஃஃஃஃதமிழர்கள் எங்கும் தலை நிமிர்ந்து நடக்கலாம்...அரசியல் தலையீடுகள் இல்லாவிட்டால்.....

இந்த சந்திப்பு மறைமுகமாக ஒன்றை தெரியபடுத்துகின்றது...தமிழர்களின் ஒற்றுமையின்மையை.......ஃஃஃஃஃ

சரியாகச் சொன்னிங்கள் தம்பி...

ம.தி.சுதா சொன்னது…

dineshkumar said...
ஃஃஃஃஃஃதமிழகத்தில் மக்கள் ஒற்றுமை இல்லை இன்றும் அதுவே அரசியல் சாக்கடைகாரார்களுக்கு ஓர் வழியாக அமைந்து விட்டது கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் தமிழக மக்களுக்கு இன்றும் பொருந்தும் மக்கள் நினைத்தால் எதுவும் முடியும் அதுவே மக்களாட்சி ஆனால் இங்கு நடப்பதோ விவரிக்க முடியவில்லை கரம் கோர்க்கிறேன் விடியுமா என்று பார்ப்போம்ஃஃஃஃஃஃ

காத்திருப்போம் சகோதரா....

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..

ம.தி.சுதா சொன்னது…

சே.குமார் said...

ஃஃஃஃஃஃநான் திரு.தினேஷ்குமார் அவர்களின் கருத்தையே வழி மொழிகிறேன்.
கடைசியில் போட்டிருக்கும் பத்தி உண்மையில் சூப்பர்ஃஃஃஃ

சரீங்க கடைசி பத்தி ஏன் என்று தெரியும் தானே...

ம.தி.சுதா சொன்னது…

Chitra said...

ஃஃஃஃஃஃசரி விசயத்திற்க வருவோம் இதற்கு கலைஞரால் ஏன் தகுந்த நடவடிக்கை எடுக்க முடியாது. அடுத்த தேர்தலுக்க பிரச்சாரக் கருவியாக இதைப் பயன்படுத்த போகிறாரா..??

..... வேதனையான நிலமை. யோசிக்க வேண்டிய விஷயம்.ஃஃஃஃஃஃ

யோசிப்போம் அக்கா...
மிக்க நன்றி..

ம.தி.சுதா சொன்னது…

வைகை said...

ஃஃஃஃஃஃஐயோ மதி!! அவசரப்பட்டு ஏங்க தமிழினத்தலைவர குறைசொல்லாதீங்க, மீனவர்களின் துயர் தீர்க்க, தமிழர்களின் உரிமை காக்க இன்று மாலையே, அன்பின் உருவம், அகில உலக அன்னை சோனியாவுக்கு கடிதம் எழுதுவாரு பாருங்க!!!!!!!!!ஃஃஃஃஃஃ

நான் எங்கையப்ப குறை சொன்னேன்.. அவரை பற்றி குறைய அல்லவா சொல்லியுள்ளேன்..
மிக்க நன்றி...

ம.தி.சுதா சொன்னது…

ஜெகதீசன் said...

ஃஃஃஃஃஃ//இந்தியாவிலும் தமிழர் சிறுபான்மையினரா..??
//
ஆம்.. தற்போதைக்குத் தமிழகத்தில் மட்டும் பெரும்பாண்மையினர்... அங்கும் சிறுபாண்மையினராக ஆகாதவரை சரிஃஃஃஃஃ

சகோதரா எண்ணிக்கையில் மட்டும் தான் அப்படி என நினைக்கிறேன்..

ம.தி.சுதா சொன்னது…

Anonymous said...

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..

ம.தி.சுதா சொன்னது…

nis said...
ஃஃஃஃஃஃம்ம், சர்ச்சைக்குரிய சிந்திக்கப் பட வேண்டிய விடயம் தான். சுதாஃஃஃஃ

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.. சகோதரம்..

ம.தி.சுதா சொன்னது…

ஜீ... said...

ஃஃஃஃஃஃ//அத்துடன் இந்த ஆக்கத்தை அனுமதியின்றி பாவிப்பவர்கள் திருடர்களாகவே கருதப்படுவர்//

இது வேற நடக்குதா நாட்டில? என்ன கொடும சுதா! ஃஃஃஃ

தாங்கள் அறியாததா..???
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.. சகோதரம்..

ம.தி.சுதா சொன்னது…

சசிகுமார் said...

ஃஃஃஃஃ//ஈழத்தில் பிறந்த குற்றத்திற்காக நாம் அவர்கள் கைகளால் இறந்தோம் அதற்கு காரணமிருக்கிறது. இந்தியாவில் பிறந்த ஒரு மீன்பிடிக்காரன் ஏன் அநியாயமாய் இறக்கணும்//

கன்னத்தில் அறைந்தது போன்ற ஒரு கேள்வி வெட்கி தலை குனிகிறேன்ஃஃஃஃ

சுறணையற்றவருக்கு உறைக்காது சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

சசிகுமார் said...

ஃஃஃஃஃ//தமிழ் நாட்டிற்கு ஒரு அரசு இருக்கிறதா//

இருப்பதால் தானே இந்த பிரச்சினையேஃஃஃஃஃ

அப்படியா... நாசமாய் போகட்டும்..

ம.தி.சுதா சொன்னது…

சசிகுமார் said...

ஃஃஃஃஃ//சரி விசயத்திற்க வருவோம் இதற்கு கலைஞரால் ஏன் தகுந்த நடவடிக்கை எடுக்க முடியாது. அடுத்த தேர்தலுக்க பிரச்சாரக் கருவியாக இதைப் பயன்படுத்த போகிறாரா//

அதற்குள் ராமேஸ்வர மீனவர்களில் பாதிபேர் இருக்க மாட்டார்கள். தமிழனின் உயிர் இவர்களுக்கு இவ்வளவு கேவலமாக போய் விட்டதாஃஃஃஃஃ

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.. சகோதரம்..

ம.தி.சுதா சொன்னது…

யாதவன் said...

ஃஃஃஃஃஃவழமைபோல் சுப்பர் நல்லா தகவல்ஃஃஃஃ

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.. சகோதரம்..

ம.தி.சுதா சொன்னது…

சங்கவி said...

ஃஃஃஃஃயோசிக்க வேண்டிய விசயம்... நாம யோசிச்சு என்ன பிரயோசனம்... யோசிக்க வேண்டியவங்க யோசிக்கனும்..ஃஃஃஃ

ஆமாம்...
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.. சகோதரம்..

ம.தி.சுதா சொன்னது…

யாதவன் said...

ஃஃஃஉணர்வு பூர்வமான படைப்பு எள் எண்ணைக்கு காயுது எலிப்புழுக்கை என்னத்துக்கு காயுதுஃஃஃ

தங்களுக்க தெரியாததா அண்ணா...

ம.தி.சுதா சொன்னது…

இரா.இளவரசன் said...

ஃஃஃஅருமையா எழுதிருக்கீங்க. இலங்கைல தமிழன் வாயில வெளிப்படையா விஷம் ஊத்துவாங்க. இந்தியாவுல வாழைப்பழத்துல தடவி, தெரியாம விஷம் கொடுப்பாங்கஃஃஃஃஃ

நல்லாப் புரிந்து வச்சிருக்கிறீங்கள்...

ம.தி.சுதா சொன்னது…

Jana said...

ஃஃஃஃஃஃஃநான் சொல்லவேண்டியதை சங்கவி அவர்கள் சொல்லிவிட்டார்.ஃஃஃஃஃ

நன்றி அண்ணா...

விக்கி உலகம் said...

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஃஃஃஎன்ன நீங்க எந்த காலத்துல இருக்கீங்க நண்பரே.

இங்க இருக்குற அரசியல் கபோதிங்க எல்லாமே தன்னுடைய பதவிக்காக எந்த மூ..... குடிப்பானுங்க.....ஃஃஃஃஃஃ

அப்படியா... அதைத் தான் சத்தியராசு படத்தில் காட்டினாரோ..

ம.தி.சுதா சொன்னது…

எப்பூடி.. said...

ஃஃஃஃஃஃ//வலைத் தளத்தில் ஒருவன் ஒரு பதிவு பலரை சேர்வதற்காய் தலைப்பைக் கொஞ்சம் வித்தியாசமாக இட்டால் கொதிக்கும் சக பதிவர்களுக்கு கலைஞர் ஹிட் வாங்குவதற்காக செய்யும் இந்த கூத்தை தட்டிக் கேட்க திரணியிருக்காது)//

:-)))ஃஃஃஃஃஃஃ

உண்மை தானே ஜீவ்...

ம.தி.சுதா சொன்னது…

எப்பூடி.. said...
ஃஃஃஃஃஃஃஉங்க ஆதங்கம் புரியுது, அதுக்காக கலைஞரை திட்டாதீங்க, அவரு பாவம் ;அவரு நாட்டை பாக்கிறதா? வீட்டை பாக்கிறதா? நாட்டை பாக்கிறதெண்டா மத்தியை பாக்கிறதா? இல்லை மாநிலத்தை பாக்கிறதா? வீட்டை பாக்கிறதெண்டா சென்னையை பாக்கிறதா மதுரையை பாக்கிறதா? கன்பியூசிங் .....ஃஃஃஃஃஃ

ஆமாங்கோ பார்க்கிறது தெரியக் கூடாது என்று தான் கண்ணாடி போட்டிருக்காரோ..

ம.தி.சுதா சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஃஃஃஃஃஃகொலைஞர்.....ஃஃஃஃஃ

ஏங்க... இப்பிடி ஓரே போடாய் போடுறிங்கள்...

ம.தி.சுதா சொன்னது…

ஹேமா said...

ஃஃஃஃஃஆதங்க சரி சுதா.கண்மூடி நித்திரையாய் நடிப்பவரிடம் கேட்டுப் பிரயோசனமில்லையே ஃஃஃஃ

சரியாகச் சொன்னிங்கள் அக்கா...

ம.தி.சுதா சொன்னது…

மருதமூரான். said...

ஃஃஃஃஃஃஃமற்றப்படி கலைஞர், இந்திய- இலங்கை அரசுகள் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவித்தும் ஏதும் ஆகப்போவதில்லை. அதனால், அது தொடர் கருத்துக்கள் என்னிடம் இல்லைஃஃஃஃஃ

மீன்பிடி சம்பந்தமாக நீங்கள் சொல்வது ஏற்கக் கூடியதாகத் தான் இருக்கிறது....

ஆனால் மற்றையது... எல்லோர்க்கும் நெருடல் தான் என்ன செய்வது...

ம.தி.சுதா சொன்னது…

முக்கியமாக எனக்கு மறை வாக்கிட்டுச் சென்ற தமிழுணர்வு மேலோங்கிய தமிழ் பாற்றாளனுக்கு என் நன்றிகள்...

Unknown சொன்னது…

கண்டிப்பாக சிறுபான்மை அடிமைகள்தான்...

Ilakkuvanar Thiruvalluvan சொன்னது…

நல்ல தலைப்பைக் கொடுத்து விட்டு ஏதோதானோ என்று எழுதப்பட்டு்ள்ளது.செம்மையாக எழுதவும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

ஆமினா சொன்னது…

யோசிக்க வேண்டிய விஷயம் தான். இவ்வளவுநடந்த பிறகும் நல்லவன்க மாதிரியும், ஒன்னுமே தெரியாத மாதிரியும் இருக்குர ஜடங்களை இனியேனும் மக்கள் நினைத்து திருந்தட்டும்.

karthikkumar சொன்னது…

வலைத் தளத்தில் ஒருவன் ஒரு பதிவு பலரை சேர்வதற்காய் தலைப்பைக் கொஞ்சம் வித்தியாசமாக இட்டால் கொதிக்கும் சக பதிவர்களுக்கு கலைஞர் ஹிட் வாங்குவதற்காக செய்யும் இந்த கூத்தை தட்டிக் கேட்க திரணியிருக்காது///
நெத்தியடி நண்பா

karthikkumar சொன்னது…

தாமதத்திற்கு மன்னிக்க

ஜிஎஸ்ஆர் சொன்னது…

\\இந்தியாவில் பிறந்த ஒரு மீன்பிடிக்காரன் ஏன் அநியாயமாய் இறக்கணும்.\\

இறந்தால் என்ன? நாங்கள் தான் இரங்கல் கவிதை வாசிப்போமே! இதற்கு மேல் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்

எங்களை பற்றி உங்களுக்கு சரியான புரிதல் இல்லை நாங்கள் வாய்ச்சொல் வீரர்கள் மட்டுமே. சில நேரங்களில் நாங்கள் உண்ணாவிரதமும் இருப்போம் நான்கைந்து மணி மட்டும்

பொது நலம் பேசுவோம் ஆனால் எங்கள் நடவடிக்கையில் எங்கள் சுய நலமும் குடும்ப நலம் பற்றிய அக்கரையே மேலோங்கி இருக்கும்

எஸ்.கே சொன்னது…

நியாயமான கேள்விதான்!
இந்நிலை மாற வேண்டும்!

சாமக்கோடங்கி சொன்னது…

//கலைஞரும் அவர் வாரிசுக்களும் எந்த மாட்டைப் பிடித்தால் முட்டாமல் பால் கறக்கலாம் என நன்கறிந்தவர்கள்.//

அவர்கள் காளை மாட்டிலும் கூட பால் கரப்பவர்கள்.. ஏன் மாடே வாங்காமல் , பால் மட்டும் கரந்ததாய் மக்களுக்கு கணக்கு காட்டுவார்கள்.. நாங்களும் எழுந்து நின்று கை தட்டுவோம்..

பெயரில்லா சொன்னது…

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல், உங்க நாட்டில் இப்படி இருந்தால், இங்கயும் இருக்குமா?. தமிழன் இங்கு தலை நிமிர்ந்து இருக்கிறான். இந்தியர்கள் அன்புள்ளம் கொண்டவர்கள், சிங்களர்களைப் போல் அரக்க குணம் கொண்டவர்களல்ல.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top