செவ்வாய், 27 செப்டம்பர், 2011

பில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்..!


உலகின் முதல் பணக்காரராக இருக்கும் பில்கேட்சை முந்துவது குப்புசாமிக்கு இயலாத காரியமாக இருந்தது. அவருக்கு சாவதற்குள் பில்கேட்சை முந்த வேண்டும் என்ற வெறி இருந்தது. இத்தனைக்கும் பில்கேட்சை விட இவருக்கு பல வயது அதிகம். இதை எண்ணியே வருத்தப்பட்டுக் கொண்டிருந்த குப்புசாமி ஒரு நல்ல விசயம் செய்தார். தன் மகனையும் தன்னைப்போல வியாபாரப் புலியாக மாற்றியிருந்தார். இவர் உலகின் இரண்டாம் தரப்பணக்காரராக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.
சில ஆய்வாளரைக் கூப்பிட்டு ஆலோசனை கேட்டார். அவர்கள் சொன்னார்கள். “உங்கள் வர்த்தகம் இப்படியே இருக்குமானால் இன்னும் 50 வருடத்தில் பில்கேட்சை முந்த முடியும்” என்றார்கள். குப்புசாமிக்கு தூக்கிவாரிப் போட்டது ஏனெனில் அந்த நிலையில் இவர் மகனுக்கே பல வயதாகிவிடும். இதை எண்ணி எண்ணி குப்புசாமி புலுங்கிப்போனார். அப்போது தான் இவருக்கு ரஷ்யாவின் விஞ்ஞானம் உதவ முன்வந்தது.
சில நாட்களாக குப்புசாமியில் பெரிய மாற்றம் தெரிந்தது. அவர் இப்போது முன்னர் போல் இல்லை. அதிகம் இணையத்தில் இருந்து ஏதோ கற்கிறார் அதிகம் உடற்பயிற்சி செய்கிறார். அவரின் செயற்பாடு எல்லாவற்றிலும் மாற்றம் தெரிந்தது.
ஒருநாள் திடிரென மகனை அழைத்த குப்புசாமி “மகனே நான் சில விடயங்களுக்காக விண்வெளி போகிறேன் வர ஒரு சில மாதங்களாகலாம். உன் 24 வயதென்பது குழப்படியானது தான். ஆனால் நீ மற்றவர் போல் இருக்காதே. நான் வரும்வரை நீ இந்த வர்த்தகத்தை கண்ணும் கருத்துமாகக் கவனிக்க வேண்டும்” என்று கூறி விடை பெற்று சென்றார்.
ஒருசில மாதங்கள்களின் பின்னர்
குப்புசாமியின் விண்கலம் ரஷ்யாவின் தளத்தில் தரையிறங்கியது. அவரை வரவேற்க அவரது அகன் வந்திருப்பதாக தெரிவித்தார்கள். கண்களால் துலாவியபடியெ குப்புசாமி நடந்து போனார். அப்போது “அப்பா” என்றொரு குரல் கெட்டது. திரும்பிப் பாரத்து தன் மகனை அடையாளம் காண அவருக்கு ஒரு கணம் எடுத்தது. அவன் தலையில் மொட்டை விழுந்து ஒரு கிழவனாக நின்றான். அவன் கையில் ஒரு சிறு பிள்ளையிருந்தது. அது இவரை “தாத்தா” என்று கூப்பிட்டது. இதெல்லாம் இவர் எதிர்பார்த்தது தான் ஆனால் இந்தளவுக்கு இருக்குமென்று எதிர்பார்க்க வில்லை.
அவருக்கு இன்னும் ஒரு மகிழ்ச்சி காத்திருந்துது. சுவரில் தொங்கிய அந்த சுவரொட்டித் தொலைக்காட்சியில் பில்கேட்சின் இறுதி ஊர்வலத்தை காட்டிக் கொண்டிருந்தார்கள். அருகில் வந்த மகன் சொன்னான் “அப்பா பில்கேட்ஷ் போன வாரம் மாரடைப்பில் இறந்திட்டார். சாகும் போது அவருக்கு 97 வயது தெரியுமா? நீங்க ஐன்ஸ்டினுக்கு தான் முதலில் நன்றி சொல்லணும். இனி நீங்க உலகின் முதல்தர பணக்காரராகலாம். நான் சாகும் முன் என் கண் குளிர அந்தக் காட்சியை காணணும் அப்பா” என்று தன் வயோதிபக் குரல் தளதளக்க கூறினான்.

குறிப்பு – ஐன்ஸ்டினின் TIME RELATED THEORY ப்படி விண் வெளியில் ஒளியின் வேகத்தை விட வேகமாகப் பிரயாணிக்கையில் காலக்கடிகாரத்தை வெல்லலாம்.

சுவரொட்டித் தொலைக்காட்சி – LCD T.V

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

53 கருத்துகள்:

ம.தி.சுதா சொன்னது…

இதை விஞ்ஞான ரீதியாக விளக்கவதைவிட கதை மூலம் சொல்வது இலகுவாக இருக்குமுங்க

http://rkguru.blogspot.com/ சொன்னது…

நல்ல ரசனையான பார்வை திறனுடன் ஐன்ஸ்டினின் TIME RELATED THEORY பற்றி அழகான கதை அம்சத்துடன் விளக்கினீர்கள் மிகவும் அருமை.......வாழ்த்துகள்

Karthick Chidambaram சொன்னது…

ஒரு அறிவியலை அழகாக விளக்கி உள்ளீர்கள்.
அடுத்த சுஜாதா ஆக வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

நல்ல பகிர்வு, ஒளியின் வேகத்தை விட பயணம் செய்தால் பின்னோக்கிய காலத்தில் இருக்கலாம் என்று சொல்லுவார்கள்.

ம.தி.சுதா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

:)

ம.தி.சுதா சொன்னது…

@ karthi என்னால் அவரைப்போல ஆக முடியுமா தெரியல. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

ம.தி.சுதா சொன்னது…

@ guru வருகைக்கு மிக்க நன்றி. உங்கள் பாராட்டுகளுக்குரிய தகுதி எனக்கிருக்கா தெரியல. ஏனெனில் இலங்கையின் பிரபல இடுகையாளர்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை.

ம.தி.சுதா சொன்னது…

@ kovi நம்மாக்கள் இதையாவது உண்மை என்று ஏற்றுக் கொண்டது நல்ல விசயமல்லவா? மிக்க நன்றி

ம.தி.சுதா சொன்னது…

@ ராஜா வருகைக்கு மிக்க நன்றி

டிலான் சொன்னது…

ம்ம்ம்...சரி...இந்த கதை பற்றி ஊரிடம் பறையிறன்

ம.தி.சுதா சொன்னது…

@ டிலான் மிக்க நன்றி

ஒரு அறிவியலை அழகாக விளக்கி உள்ளீர்கள்.

Jana சொன்னது…

TIME RELATED THEORY இன் படி பல கதைகளை படித்திருக்கின்றேன். அவ்வாறான கதைகளில் அந்தக்காலத்திற்கே போய் உலாவருவதுபோன்ற தேர்ந்த நடை தேவைப்படும். பொதுவாக தியறிகள் சம்பந்தப்பட்ட கதைகளை எழுத்தாளர்கள் எடுத்துக்கொள்வதில்லை காரணம் ஒரு இம்மி பிசகினாலும் முழுவதும் பொய்துவிடும். ரைம் மிஸின் தியரியில் "Christ Last Day" என்ற ஒரு கதை மிக அற்புதமானது. தேடிப்படித்துப்பாருங்கள்.
உங்கள் கதை சிறியதென்றாலும் மிக அருமை. பாராட்டுக்கள்.

Paleo God சொன்னது…

அருமையா எழுதி இருக்கீங்க.:) வாழ்த்துகள்!

ஏனெனில் இலங்கையின் பிரபல இடுகையாளர்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. //

இது என்னன்னு புரியலைங்க! இது உங்க பக்கம். உங்கள் எண்ணத்தில் தோன்றுவதை எழுதுங்கள். ஒரு டைரி போல. சிறிது காலம் கழித்துப் பார்க்கும்போது உங்களை நீங்களே அறிந்துகொள்ள உதவலாம் நண்பரே. மற்றபடி இது சுதந்திர வலை வெளி. யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது என்பது என் எண்ணம்.

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.:))

ராவணன் சொன்னது…

அந்தத் தியரியே தவறு.பூமி சுற்றுவதைக் கொண்டுதான் நமது நேரம்.நீங்கள் ஒரு மணிக்கு(பூமியின் நேரப்படி) 50லட்சம் கோடி கி.மீ.வேகத்தில் பயணித்து திரும்பி வந்தாலும் பூமியில் இரண்டு மணிநேரம் மட்டுமே கடந்திருக்கும்.யாருக்கும் வயதாகாது.காலத்தில் முன்னோக்கியோ,இல்லை பின்னோக்கியோ செல்வது என்பது இயலாது.
Time related theory என்பது கற்பனை.

ம.தி.சுதா சொன்னது…

@ குமார் பாராட்டுக்கு மிக்க நன்றி
@ ஜனா "Christ Last Day" இதைத் தானே படமாக எடுத்திருக்கிறார்கள்.

ம.தி.சுதா சொன்னது…

@ சகோதரான் சங்கர் அவர்களே நான் யாரையும் தாக்கி அப்படிக் கூறல. என் மனக்கிடக்கையை தான் கூறினேன். என் சண் ரிவி சம்பந்தமான கட்டுரையை 950 பேருக்கு மேல் பார்த்து விட்டு ஒரு கட்டுக்கதை போல் எண்ணியோ தெரியல 3 பேர் தான் கருத்திட்டார்கள். எனக்கு யாரிலும் கோபமில்லை. எனக்கு ஜீரணிக்காவிடில் வாந்தியெடுத்து விடுவேன். பாராட்டுக்கு நன்றி சகோதரா

சுதர்ஷன் சொன்னது…

மிகவும் நன்றாக இருக்கிறது ... அனைவருக்கும் விளங்கும் படி எழுதி உள்ளீர்கள் . .

ம.தி.சுதா சொன்னது…

நன்றி சுதர்சன்

Kiruthigan சொன்னது…

ஏற்கனவே தெரிந்த எளிமையாகவும் சுவரவியமாகவும் விளக்கிய விதம் அருமை..

ம.தி.சுதா சொன்னது…

@ Cool Boy கிருத்திகன். said...
வருகைக்கு நன்றி கிருத்தி

நிரூஜா சொன்னது…

தலை, நீங்க விஞ்ஞானி ஆகீட்டீங்க

ஷஹன்ஷா சொன்னது…

பின்னீட்டீங்க அண்ணா...நீங்க ஒரு அறிவியல் கதாசிரியர்..!

அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
வாழ்த்துக்கள்....

Unknown சொன்னது…

இது ஒரு வித்தியாசமான பதிவு, இதனை பதிவிட வேண்டும் என்று எண்ணியதற்கே நீங்கள் பாராட்டுக்குரியவர்.

Unknown சொன்னது…

//இலங்கையின் பிரபல இடுகையாளர்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. //

உங்கள் பதிவுகள் சிறப்பானவை. உங்கள் மீது எப்போது தனிபாசத்தை, உங்கள் எழுத்துக்கள் உண்டாக்கியிருக்கிறது என்பது எம் கணக்கு..

, ஒளியின் வேகத்தை விட பயணம் செய்தால் பின்னோக்கிய காலத்தில் இருக்கலாம் // O.K O.K .....

Aba சொன்னது…

விண்வெளியின் ஒளியின் வேகத்தில் போனால் காலம் நின்றுவிடும். அதற்கு மேலே போனால் (போக முடியாதுதான்.. ஆனால்) கடந்த காலத்திற்கு செல்வீர்கள். ஒளியை விடக் குறைந்த ஆனால் மிக அதிகமான வேகத்தில் செல்லும்போதுதான் எதிர்காலத்துக்கான பயணம் சாத்தியம்.

ஜோதிஜி சொன்னது…

இலங்கையின் பிரபல இடுகையாளர்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை

இது போன்ற ஒரு எண்ணம் உங்கள் மனதில் இருந்தால் விட்டொழியுங்க. எழுத்து என்பது படிப்பதற்கு மட்டும். அவர்கள் உங்களை ஏற்றுக் கொண்டால் என்ன லாபம்? இல்லாவிட்டால் என்ன நட்டம்?

பிரபல்யம் என்பதே ஒரு மோசமான வார்த்தை. நன்றாக எழுதியுள்ளீர்கள் என்று படித்தால் இதை படித்தவுடன் சிரித்துவிட்டேன்.

மகேந்திரன் சொன்னது…

அறிவியல் ரீதியா அசத்தி இருக்கீங்க நண்பரே ..
நல்லா இருக்கு...

ம.தி.சுதா சொன்னது…

/////இலங்கையின் பிரபல இடுகையாளர்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை////

அன்பு உறவுகளுக்கு வணக்கம்,

மேற் குறிப்பிட்ட வசனத்தை தற்போது சுட்டிக் காட்ட வேண்டாமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இது நான் பதிவு எழுத வந்து 2 வது மாதத்தில் எழுதிய வரி. அந்தக் காலப்பகுதியில். இலங்கையில் எழுதிக் கொண்டிருந்த அத்தனை பேருக்கும் அத்தனை பதிவுக்கும் கருத்துரை இடுவேன். ஆனால் எனது இடுகைகள் இங்குள்ள யாருமே கருத்திடாமல் நாறிப் போய் கிடக்கும்.

அக்காலப்பகுதியில் ஆரம்பத்தில் என்னை அடையாளம் கண்டு கொண்ட ஜனா அண்ணா, ஜீவதர்சன் போன்ற ஒரு சிலரே எனக்கு ஊக்கம் தந்தார்கள்.

அப்போது எழுதியது தான் அந்த வசனம்..

நன்றிச் செதுக்கலுடன்...
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

பெயரில்லா சொன்னது…

அறிவியலை அழகாக விளக்கி உள்ளீர்கள்...

காட்டான் சொன்னது…

தம்பி காட்டானுக்கும் அறிவியலுக்கும் ரெம்ப தூரமையா.. நான் வந்து குழ போட்ட்ருக்கேன்னு சொல்லுறதுக்கு ரெண்டு ஆதாரம் விட்டுட்டு போறேன்யா..

காட்டான் குழ போட்டான்...

தனிமரம் சொன்னது…

அறிவியல்கதை எல்லாம் சொல்லுகின்றார் நம் சகோ!

kobiraj சொன்னது…

அறிவியல் கதை .அற்புதம் .

நிரூபன் சொன்னது…

வணக்கம் மச்சி,

நலமா...

நிரூபன் சொன்னது…

குப்புசாமியை வைத்து ஒரு குதூகலமான அறிவியற் கதையினைத் தந்திருக்கிறீங்க.


அருமை.

நிரூபன் சொன்னது…

கதையின் நகர்வு, தியறி விளக்கம் இவை இரண்டும் அருமையாக இருக்கிறது.

K.s.s.Rajh சொன்னது…

பாஸ் சுஜாதாவின் அறிவியல் கதைகளை படிப்பது போன்ற உணர்வு
வாழ்த்துக்கள்

சகோ.... அறிவியலை கதை கலந்து விளக்கி உள்ளீர்கள். நல்ல பகிர்வு.

கவி அழகன் சொன்னது…

மண்டை முழுக்க மூளை நல்லா கதை படிச்சன்

அருமை பாஸ், டைமிங்கா போட்டிருக்கீங்க......!

ADMIN சொன்னது…

இந்த பதிவைப்படித்து எனக்கு அதிகம் சளி பிடித்துவிட்டது.

வலு நுட்பமான முறையில் ஓர் அறிவியலை அனைவரும்
புரிந்துகொள்ளுமாறு மிக அழகாக விளக்கி உள்ளீர்கள் .
வாழ்த்துக்கள்... மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ................

சசிகுமார் சொன்னது…

நல்லா இருக்கு நண்பா ஆனால் நம்ப முடியல.....

Unknown சொன்னது…

கதை நல்லாருக்கு....... குப்புசாமி யாரு?

Raveendran சொன்னது…

நன்றாக உள்ளது....
அடுத்த பில்கேட்ஷாக வர வாழ்த்துக்கள்.

shanmugavel சொன்னது…

சொல்ல வந்ததை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.நன்று.

அறிவியல் விளக்கம் அருமை..

vimalanperali சொன்னது…

வணக்கம் ம.தி சுதா சார்.நலம்தானே?இன்னுமாய் நிறைய படங்கள் வைக்க முயற்சி செய்கிறேன்.நன்றி கூட்டு வண்டிக்கான உங்களதுவருகைக்கும்,கருத்துரைக்கும்/

அம்பலத்தார் சொன்னது…

அறிவியல்தகவலை சுவாரசியமாக பதிவிட்டுள்ளீர்கள்

அம்பலத்தார் சொன்னது…

குப்புசாமியின் கதை இனிவரும் ஒருகாலத்தில் நிழலல்ல நிஜமாகலாம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top