வியாழன், 24 மே, 2012

படித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?

சில நாட்களுக்கு முன்னர் ஈழத்தமிழனை பணத்தால் ஏமாற்றிய புத்திசாலிகளின் பட்டியல் என்ற பதிவை இட்டிருந்தேன். அப்பதிவானது இன்று இடப்படும் மிக முக்கியமான இப்பதிவுக்கு முன்னோடியாகும். அதே போல தடுப்பிலிருந்து வந்த 2 வன்னி குடியவர்களும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பற்றி விளக்கத்தின் பின்னர் குறிப்பிடுகிறேன்.
வாருங்கள் உறவகளே...

போட்டித் தன்மை மிகுந்த இந்த உலகில் பணத்தேவையானது ஒவ்வொரு மனிதனுக்கும் அளவு கணகக்கற்று எல்லையின்றி நீண்டு செல்கிறது. அந்த நிலையில் தான் இன்று நான் குறிப்பிடும் இந்த ஏமாற்றுப் பேர்வழிகள் பணக்கார சமூகத்தை பெரிய தூண்டில் ஒன்று இட்டு வளைத்துப் போடுகிறார்கள்.

பிரமிட் சிஸ்டம் என்ற ஒரு முதலீட்டு முறையை அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இம்முறையானது ஒரு சட்ட விரோதமான செயற்பாடாகும். இதை நான் சொல்லவில்லை மத்திய வங்கியானது மாதத்திற்கு 2 தடவை இதை தெரிவித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இதன் மூலம் சில வாய்ப் பேச்சு விற்பனர்கள் தமது சாமர்த்தியத்தால் பலரை வளைத்துப் போட்டிருக்கிறார்கள்.
இலங்கையில் global life style என்ற நிறுவனம் தான் பலரை ஏமாற்றி தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஆனால் இதன் தலைவர் இருப்பது இலங்கையிலல்ல. மலேசியாவில் இருந்து கொண்டு பலரை தனது வலைக்குள் விழ வைத்திருக்கிறார். ஆனால் அந்தத் திட்டத்தில் இணைந்து தொழிற்படும் பலருக்கு அவர் யாரென்றோ இருக்கும் இடம் எதுவென்றோ தெரியாது.
சரி அவர்கள் திட்டம் என்ன என பார்ப்போம் வாருங்கள்.
நீங்கள் அறுபதாயிரம் ரூபாய் செலுத்தி ஒருவருடன் இணைய வேண்டும் (நீங்கள் இணையத் தேவையில்லை உங்களை அவர்களே வலை போட்டுப்பிடித்து அடிக்குடலில் கைவைத்து இழுத்துப் போய் புடுங்கி விடுவார்கள்.) அதற்கு அவர்கள் solar ஒன்று தருவார்கள் அதன் அதிக பட்ச சந்தைப் பெறுமதி 40 ஆயிரம் ரூபாயாக இருக்கும். (ஆனால் உண்மைப் பெறுமதி 30 ஆயிரம் தான்) இது கூட அவர்கள் செய்யும் சட்ட விரோத நடவடிக்கைக்கு ஏதுவாக தாம் வியாபாரம் செய்வதாகக் காட்டவே தருகிறார்கள்.
அதன் பின்னர் நீங்கள் இருவரை இணைத்தல் வேண்டும். அவர்களில் ஒருவர் கட்டும் 60 ஆயிரம் ரூபாயில் இவர்களுக்கு கிடைக்கும்இலாபத்தில் (30 ஆயிரத்தில்) ஒரு பகுதி உங்கள் கணக்கிற்கு வரும். அதன் பின் நீங்கள் இணைத்த இருவரும் இணைந்து 4 பேரை இணைக்க வேண்டும். இப்படியே சங்கிலியாக நீண்டு செல்கையில் உச்சத்தில் இருக்கும் முதலாளி பெரும் பண முதளையாகி விடுவார்.
நீங்களும் ஏமாந்த 30 அயிரத்தைப் பெறுவதற்காக மாடாய் உழைத்து ஆட்களை சேர்க்க வேண்டியிருக்கும்.
யாழில் இதில் ஏமாந்திருப்பவர்களின் பட்டியலில் பல வைத்தியர்கள், எஞ்சினியர்கள், ஆசிரியர்களும் இருக்கிறார்கள். (அவர்களது மரியாதை கருதி அவர்கள் வெயரை நான் குறிப்பிடவில்லை) அதிலும் யாழ் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் 12 ஆசிரியர்கள் இதில் ஏமாந்திருக்கிறார்கள். அப்பாடசாலையில் இந் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 2 ஆசிரியர்கள் வலயப்பணிப்பாளரால் அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் அவர்களோ சமூகத்தினுள் இந் நடவடிக்கையை ஈடுபடுத்தி வருகிறார்கள். இவர்களிடம் ஏமாந்த ஆசிரியர் ஒருவர் என்னிடம் நேரடியாகவே இதுபற்றி கவலைப்பட்டுக் கொண்டார்.
இவர்கள் தமது ஏமாற்று நடவடிக்கைக்கு பாவிக்கும் பசப்பு வார்த்தைகள் பல இருக்கிறது.
இவர்களுக்கான பணத்தை நீங்கள் commercial bank வங்கியில் தான் இட வேண்டும். அவர்கள் தான் உங்களுக்கான காசோலையை அனுப்புவார்கள். உங்களுக்கு இந்த ஏமாற்றாளர்கள் கூறுவது என்னவென்றால் “எங்களை இன்னும் நம்பவில்லையா? பாருங்கள் நம்பிக்கையான வங்கி தானே உங்கள் கணக்கை கையாள்கிறது“ என்பார்கள்.
அந்த வங்கியும் தமது சில லாபங்களுக்காக இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு உடன் போகிறது.
அதே போல வைத்தியர்கள் போன்ற பெரியவர்களிடம் அவர்களது வாகனத்திற்கான மாதக் கட்டணம் போன்றன வங்கி மூலம் நீங்களே செலுத்தலாம் என கூறிக் கொள்வார்கள். இப்படி பல பசப்பு வார்த்தைகளைக் கூறி பெரிய பண வருவாய்க்காரர்களை வீழ்த்தி விடுவார்கள்.
இதில் நகைப்புக்குரிய விடயம் என்னவென்றால் ஒப்பட்டுரீதியில் கூலித் தொழில் செய்யும் எவருமே இவர்கள் வலையில் விழுவது குறைவு. காரணம் என்ன என சிந்திக்கிறீர்களா? ஒரு உண்மையான கூலித் தொழிலாளி பணத்துக்காக தன் வியர்வையை மட்டுமே நம்பியிருப்பான். மற்றவரின் பணத்திற்கு ஆசைப்படமாட்டான். இது ஒருவகை சோம்பேறிகளாலும் ஏமாற்றுக்காரர்களாலும் நடாத்தப்படும் ஒரு வியர்வை சிந்தாத பண உழைப்பாகும்.
இந்த ஏமாற்று நடவடிக்கையானது தற்போது வன்னிக்குள்ளும் சிலரால் திணிக்கப்பட்டதன் விளைவாக பலர் விபரம் தெரியாமல் ஏமார ஆரம்பித்துள்ளார்கள். ஏமாந்தவர்களில் இரு நண்பர்கள் மிகவும் இதனால் அமனம் உடைந்து விட்டதாகக் கூறினார்கள். அவர்களின் இந்த மன உளைச்சலே எனது இந்தளவு தேடலுக்குக் காரணமாக அமைந்து விட்டது.
மத்திய வங்கி அறிக்கையின் படி பாதிக்கப்பட்ட ஒருவர் வழக்குத் தொடுத்தால் இவர்களை கைது செய்ய முடியும் ஆனால் அதற்கான வக்கிலுக்கு எங்கே போவது. யாராவது இதன் மேல் நட்டம் கொண்டிருந்தால் கை கோருங்கள். சட்ட ரீதியாக ஒன்று சேர்ந்து எதிர்ப்போம்.
அதே போல ஆசிரியர்களும் இது பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும். ஒவ்வொரு வலயப் பணிப்பாளர்களும் இது பற்றி சுற்று நிருபம் ஒன்றை அதிபர்களுக்கு வழங்க வேண்டும்.
“விழிப்போடிருந்து ஒரு வளமான எதிர்காலத்தை பிரகாசமாக்குவோம்”

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா

இந்த ஆக்கதை பகிர்வதன் மூலம் தங்களுக்குத் தெரிந்த பெரியவர்களிடம் சேர்ப்பிக்க உதவுங்கள்.


குறிப்பு - இந்த மாதத்துடன் நான் இணைய உலகுக்கு வேளியெ செல்ல இருக்கிறேன். மீண்டும் ஒரு சில மாதத்தில் இணைந்து கொள்கிறேன். காரணம் இறுதிப் பதிவில்.
மேலே சொன்ன எதுவும் விளங்காதவர்கள் இந்தக் குறும்படம் பார்த்தால் அதன் அவஸ்தை புரியும்

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

13 கருத்துகள்:

Yoga.S. சொன்னது…

வணக்கம் சுதா!விழிப்பூட்டும் பகிர்வு.எத்தனை பேர் விழிக்கப் போகிறார்கள்?படித்தவர்களே...........................!

கலைவிழி சொன்னது…

கடந்த வார இறுதி நாட்களில் கொழும்பிலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒரு இலக்கிய பிரபலத்தின் மகள் 50 கோடி ரூபா மோசடி செய்தமை. வட்டிக்கு அதிக பணம் தருவதாக கூறி இவர் பணம் பெற்றுள்ளார். பணம் கொடுத்த எல்லோரும் பிரபலங்கள். அதுவும் கறுப்புப் பணமாம். அதனால் வழக்கு தொடர முடியாமல் திண்டாடுகின்றனர்.

Athisaya சொன்னது…

நிச்சயமாய் விழிப்பு தேவை.வாழ்த்துகள்..

Athisaya சொன்னது…

கலை விழி அக்கா!இவ்விடயம் அப் பெரியவருக்கு தெரிந்திருந்தும் அதை தடுக்க எவ்வளவோ முயற்சி செய்தும் அலரால் முடியவில்லை.தற்போது இந்தியாவில் விரிந்திருக்கும் இவரது இச்சட்ட விரோத பணக்கறத்தலுக்கு பிரபல நடிகர் ஒருவரும் துணை....

விழிப்புணர்வுப் பதிவு...
எத்தனை பதிவு போட்டாலும் நாம திருந்தப் போவதில்லை சகோதரரே...

ராஜ நடராஜன் சொன்னது…

பிரமிட் சிஸ்டம் முறையில் கோல்ட் கொஸ்ட் இன்னும் பல நிறுவனங்கள் உலகளாவிய அளவில் செய்ல்படுகின்றன.பதிவு போடுமளவுக்கு செய்திகள் இருக்கின்றன.கால அவகாசம் கருதி இத்துடன் முடிக்கிறேன்.

Gobinath சொன்னது…

facebook twitter இல் பகிர்ந்தாச்சு. சீக்கிரம் திரும்பி வாருங்கள்.

கிருபா சொன்னது…

ஊருக்கு நாலு பேரு குறும்படம் மூலம் இதைத்தான் சொல்ல வராங்க லிங்க் http://www.youtube.com/watch?feature=player_embedded&v=leQ0eLJpsnk

மகேந்திரன் சொன்னது…

அருமையான விளக்கங்களுடன்
விழிப்புணர்வு ஊட்டும் பதிவு நண்பரே..

veeman சொன்னது…

என்ன சுதா தாங்களும் இதில் மாட்டுப்பட்ட அனுபவம் தெரிகிற மாதிரி உள்ளது. அப்பப்பா இவா்களிடம் மாட்டுபட்டால் இவர்கள் விடும் டுப்புக்களுக்கு எல்லையே இல்லை.நீங்கள் சும்மா சேந்தால் மட்டும் போதும் காசு பிறகு உங்கள் தலையில் தான் கொட்டும் என்பார்கள்.இவர்களிடம் இருந்து தப்புவது மிக மிக கஸ்ரம்.

Iynka சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Iynka சொன்னது…

இந்த மாதிரியான பிரமிட் மார்க்கெட்டிங் கம்பனிகளை நம்பாதீர்கள். துணை போகாதீர்கள். நீங்கள் உங்களுக்கு தெரிந்தவர்களை, உங்கள் உறவினர்களை, உங்கள் ஊரார்களை ஒரு கம்பனி சார்பாக எமாற்றப்போகிறீர்கள்.



யோசியுங்கள், உங்கள் கிராமத்தின் பணம் கம்பனிக்கும் (60 % இற்கு மேல்), மீதி கிராமத்தில் உள்ள சிலருக்கும் (பிரமிட்டில் மேல் தட்டுகளில் இருப்பவர்கள்) போகப்போகிறது. பலர் நஷ்டப்படப்போகின்றார்கள்.தடை செய்யப்பட்ட பிரமிட் ரக வியாபாரத்தில் ஈடுபட்டு ஏமாறாதீர்கள்...

Iynka சொன்னது…

http://www.cbsl.gov.lk/pics_n_docs/10_pub/_docs/pa/pamphlet/pl_4.pdf

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top