புதன், 14 டிசம்பர், 2011

ஊரைப் பிரிந்த புலம்பெயர் தமிழனின் ஏக்கம் என்ன?

10:57 AM - By ம.தி.சுதா 25

புலம்பெயர் தேசத்தில் வாழும் என் உறவினர் ஒருவரின் மேடை நிகழ்ச்சி ஒன்றுக்காக என்னால் புனையப்பட்ட வரிகளுக்கு அவரே குரல் வடிவம் கொடுத்துள்ளார். அதன் வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அக்காணொளியில் அவர் பிறந்த மண்ணே பின்னணியாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் காட்டப்பட்டுள்ள அரசமரம் இன்று எம்மோடு இல்லை.


ஒரு முறை
என் மண் போக வேண்டும்
விடுமுறை
தான் ஒன்று தாறீரோ


நான் தின்று வழ்ந்த மண்ணது
எனைத் தின்னும்
பாக்கியம் இழந்திடுமோ
எட்ட நின்று ஊர் பார்த்தால்
பச்சை கொடியசைக்கும் ஆலமரம்
காலாற ஒரு கல்
கவ்வுகின்ற தென்றல்
முப்பொழுது போனாலும்
முகம் சுழிக்கா திண்ணை அது


ஒரு முறை
என் மண் போக வேண்டும்
விடுமுறை
தான் ஒன்று தாறீரோ
திட்டம் போட்டு அறுந்த விழுதால்
பிட்டம் தெறித்து விட
சொட்ட சொட்ட அழுதது
மறக்கவில்லை


அங்கே
அற்ப காலம் தங்கினாலும்
என்னை
சிற்பம் போல் செதுக்கிய
கற்பகத் தான் காலடி தான் என் சொர்க்கம்
ஒரு முறை
என் மண் போக வேண்டும்
விடுமுறை
தான் ஒன்று தாறீரோ


நடு வளையில் ஏணை கட்டி
என்னை
சீரங்கம் சீராட்டிய மாளிகை
ஊரில் ஓரம் போய் இருப்பதாய் அறிந்தேன்
நெஞ்சு பதறுதம்மா
பிஞ்சுத் தோடம்பழத்தை
அஞ்சாமல் பிடுங்கியதும்
புழு தின்ற இலந்தையை கூட
புழுகி புழுகி சுவைத்ததும்
இதே கைகள் தானே


அந்த மண்ணில்
ஒரு பிடி அள்ளத் தவறின்
அறுத்தெறிவேன் என் கரங்களை
ஆண்டவனே
ஒற்றை வரம் தாரும்
ஒரு முறை என் மண் அள்ள
மறுப்பின்றி அனுமதி தாரும்
உன் கால் தொழுது
காலனிடம் கொடுத்திடுவேன்
என்னுயிரை


ஒரு முறை
என் மண் போக வேண்டும்
விடுமுறை
தான் ஒன்று தாறீரோ

குறிப்பு - நண்பர்கள் யாராவது இப்பதிவை திரட்டியில் இணைத்து விடுங்கள்.



ஈழத்து மொழி, கலை, கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்களின் இன்றைய நிலையினைக் கருத்திற் கொண்டு; எம் அடுத்த சந்ததியிடமும், உலகெங்கும் பரந்து வாழும் எம் தமிழ் உறவுகளிடமும் இவ் விடயங்களை அழிவுறாது கொண்டு செல்லும் நோக்கிலும் ஆவணப்படுத்தும் நோக்கிலும் ஈழ வயல் எனும் வலைப் பதிவினைப் பதிவர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள்.ஈழவயலில் வெளியாகும் பதிவுகளை நூலுருப்படுத்தும் முயற்சியிலும் பதிவர்கள் ஈடுபடுகின்றார்கள். இந்த ஈழ வயல் வலைப் பதிவினை நீங்களும் தரிசித்து உங்கள் ஆதரவினையும் இவ் வலைப் பதிவிற்கு வழங்கலாம் அல்லவா?

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

25 கருத்துகள்:

Yoga.S. சொன்னது…

வணக்கம்,மதிசுதா!அருமை.என் ஆதங்கம் கூட இதுதான்!

தனிமரம் சொன்னது…

நாடுகடந்தவன் ஒவ்வொருத்தனுக்கும் இருக்கும் வேதனையைச் சொல்லும் கவிதை அருமை !

தனிமரம் சொன்னது…

இந்தக் காட்சியில் வரும் ஊரைப் பார்த்த ஞாபகம் பெயர் உடன் ஞாபகம் வரமட்டும் அடம்பிடிக்குது !

கவி அழகன் சொன்னது…

கண்ணீர் வரும் கவிதை , கற்பக வினாயகன் வரம் தருவான்

மீண்டும் ஒருமுறை என்
மண்ணை மிதித்திட
வேண்டும் விடுதலை

நான் ஆண்ட பூமியை
தோண்டி பார்த்திட
வேண்டும் பலமுறை

நான் விட்டு வந்த
சொந்த பந்தங்கள்
செத்தது எதுவரை

அவர் வீர எலும்பினை
தேடி எடுத்து
தேடவேண்டும் உறவினை

அன்னை மடியினில்
தலை சாய்ந்த வயதினில்
மறந்தேன் உலகினை

என்
அன்னை மண்ணிலே
தலை சாய்த்தபோது
இழந்தேன் உலகினை

உண்மை மகனாய்
ஒற்றை மகவாய் - என்ன
செய்தேன் இதுவரை

பெற்ற தாயையும்
சொந்த மண்ணையும்
விட்டேன் அது குறை

கூடி குழாவி
கும்மி அடித்த
உறவுகள் உள்ளீரோ

ஒருவர் இருந்தாலும்
தந்தி அனுப்புங்கள்
நான் வருவேன் மறுமுறை

வாழ்த்துக்கள்....!!!

Admin சொன்னது…

அழகான கவிதையில் ஆதங்கத்தை தெரிவித்தது அருமை..

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

மனது சோகமாகிப்போனது.

Gobinath சொன்னது…

நெஞ்சில் நிலைக்கும் அருமையான கவிதை.

சுதா SJ சொன்னது…

கவிதையும் குரலும் ஏதோ செய்கிறது......

KANA VARO சொன்னது…

சுதா நட்சத்திர வார வாழ்த்துக்கள். நானும் நீரும் அடுத்தடுத்த ஆட்கள். நினைக்க சந்தோசம் தான்.

சரியில்ல....... சொன்னது…

சொந்தமண் வாசனையை நுகர்ந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அருமையான கவி.

tharshi சொன்னது…

ஆயிரம் ஊரில் இருந்தாலும் சொந்த ஊர்போல் வருமா...என்ன? அழகான கவிதை மதி

ம.தி.சுதா சொன்னது…

Yoga.S.FR said...

நன்றி மாஸ்டர் பலர் ஆதங்கமும் இது தானே..

ம.தி.சுதா சொன்னது…

தனிமரம் said...

நன்றி நேசண்ணா... இது தான் உடுப்பிட்டி...

ம.தி.சுதா சொன்னது…

கவி அழகன் said...

நன்றி அண்ணே..

நம்ம யாதணண்ணைக்குள் இத்தனை ஏக்கமா?

ம.தி.சுதா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

நன்றி சகோதரம்..

மதுமதி said...

உண்மையில் இவை அவர் உணர்வு தான் சகோ..

ம.தி.சுதா சொன்னது…

thirumathi bs sridhar said...

ரொம்ப நன்றீங்க... தங்களிலும் அந்தப் பிரிவு தெரிகிறது..

Loganathan Gobinath said...

நன்றி சகோ..

ம.தி.சுதா சொன்னது…

துஷ்யந்தன் said...

இவை தங்களக்கும் பொருந்தும் தானே சகோ...

KANA VARO said...

நன்றி வரோ நன்றி

ம.தி.சுதா சொன்னது…

சரியில்ல....... said...

உண்மையில் இவை எல்லாம் மீளக் கிடைக்குமா என்ற ஏக்கமல்லவா...

ம.தி.சுதா சொன்னது…

tharshi said...

ஆமாம் தர்சி

நன்றி...

ஆகுலன் சொன்னது…

அண்ணே உள்ளூரில் இருக்கும் போது ஒன்றுமே புரியவில்லை என் ஊரை பற்றி....பிரிந்து வந்தபோது புரிந்து கொண்டேன்....

ஆகுலன் சொன்னது…

குரல் வடிவம் நல்லா இருக்குது....
அந்த பின்னணி இசை அருமை..

நிலாமதி சொன்னது…

ஈழ மண்ணை தரிசிக்கும் தாகம் ஒவ்வொரு ஈழத்த வனுக்கும் உண்டு........

....அன்னை தமிழ் ஈழ மண்ணே உன்னை முத்தமிட ஓடி வருவேன்.....
என்ற பாடல் நினைவு வருகிறது .

கோலா பூரி. சொன்னது…

சொந்த ஊர் ஏக்கம் உங்க கவிதையில் அழகாக வெளிப்படுத்தி இருக்கீங்க

காட்டான் சொன்னது…

வணக்கம் சுதா..!
கவிதை என் மன உணர்வுகளை சொல்லி செல்கிறது.. நன்றி

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top