முதலில் இந்த வாரமும் தமிழ் மணத்தில் எனக்கு 11 ம் இடம் பெற்றுத் தந்த என் உறவுகளுக்கு மிக்க நன்றி.
தொலைத் தொடர்பாளர் வலையமைப்பு என்பது இப்போது உலகின் பிரதான சத்தியாக மாறிவருகிறது திட்டமிடல் இல்லாத நிர்வாகம் எப்படித் திண்டாடும் என்பதற்கு HUTCH நிர்வாகமே பெரும் உதாரணம் ஆகும்.
இலங்கையில் வலையமைப்பகளுக்கிடையே உருவாகியுள்ள போட்டியானது இவர்களை பெரிதும் நசுக்கி விட்டது. இதனால் தானோ தெரியவில்லை மறைமுகமாக பணத்தை பறிக்கிறார்கள். இது பற்றி நான் முன்னரே விபரமாகக் குறிப்பிட்டிருக்கிறேன் அதன் தொடுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இவர்களது மொக்கைத் தனமான நிர்வாகத்திற்கு என்னால் கண்டுபிடிக்க முடிந்த சில மொக்கைச் செயற்பாடுகள்.
-சில நாட்களுக்கு முன் 3 வித கட்டண அடிப்படையில் கைப்பேசிகளுக்கான இணைய இணைப்பை வழங்கியது. ஆனால் அவர்கள் வழங்கிய சலுகை தெரியுமா. நீங்கள் எதுவித முன் கட்டணமும் இன்றி செயற்படுத்தலாம் செயற்படுத்துகையில் ஒரு மாதத்திற்கு இலவசமாகத் தருவார்கள் அதுவும் எவ்வித வரையறையும் இல்லாமல். ஆவர்களுக்கு ஒரு விசயம் தெரியாது என நினைக்கிறேன். நாம் எமத கணணியில் அதன் தொடர்வுக்கான APN ஐ கொடுத்தால் கணணியிலும் அதை பயன்படுத்தலாம். ஆனால் அவர்களது 2G என்பதால் வேகம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும்
-இப்போது ABISHAKA என ஒரு பெயருடன் போட்டி வைத்து நாளாந்தப் பரிசு கொடுக்கிறார்கள் அதை பெறுவோரின் விபரம் இலங்கையின் இணைத்துள்ள அனைத்து சிம்களுக்கும் அனுப்பப்டும். முதல் 2 நாட்களும் வென்றவர்களின் முழுமையான தொலைபேசி இலக்கத்தையும் அனுப்பினார்கள். வென்றவரின் நிலமையை யோசித்துப் பாருங்கள் பின்னர் அவருக்கது தொல்லை பேசி தானே.
-இலவசமாய் நஞ்சுகிடைத்தாலே மிடறு விட்டுக் குடிக்கும் நம்மாளுகளுக்கிடையிலே இலவசமாய் சிம் கொடுத்தால் எப்படியிருக்கும். ஆனால் ஒருவர் அதிக பட்சம் 5 சிம் தான் பெறலாம் என்றாலும் எனது நண்பன் ஒருவன் தனது பெயரில் 7 சிம் வைத்தருக்கிறான்
இலங்கையின் முழு வலையமைப்பிற்கான வாடிக்கையாள் செவையுடனும் கதைத்திருக்கிறேன் (ETISALAT உடன் கதைப்பது அரிது காரணம் அதற்கும் அவர்களிடம் காசு) ஆனால் இவர்கள் மட்டும் தான் தொடர்பை துண்டிக்கும் பழக்கம் இருக்கிறது திரும்பத் திரும்ப எடுத்தால் பாவம் ஒரு பெண் பிள்ளையிடம் தான் தொடர்பை மாற்றுவார்கள். அதனிடம் என்னாத்தை அறுத்துறுத்துக் கதைப்பது. கதைத்தால் வரும் கோபத்திற்கு அளவே இருக்காது முதல் ஒன்றை சொல்வார்கள் திரும்பவும் கேட்டால் நான் அப்படிச் சொல்லவில்லையே என்பர். இந்த ஒலிவடிவத்தில் முழுவதையும் கேட்டால் தெரியும். சிலதை தரவேற்ற காலம் பேதாதவில்லை.
அது சரி சுதாவிற்கும் HUTCH ற்கும் என்ன பிரச்சனை என்று கேட்காதிங்க. அதற்கான தொடுப்பைத் தான் கீழே போட்டிருக்கிறேன். அவர்களது மொள்ளைமாரித்தனத்தை எத்தனையோ பத்திரிகைகளுக்கு அனுப்பினேன் ஆதாரம் கேட்கிறார்கள் கீழே உள்ள ஒலிவடிவத்தை விட ஒரு பெரிய ஆதாரம் இருக்கிறதா ? ஒரு பத்திரிகையோடு தொடர்பு கொண்டு அலுத்துவிட்டது என் பணம் தான் போனதே தவிர ஒன்றுமே ஆகவில்லை. ஆவர்களுக்கு வருடாவருடம் சிறந்த ஊடகத்திற்கான விருது மட்டும் வேணும் அனால் சமூகத்தில் அக்கறை எவ்வளவு எனக் கேட்டால் 00000 . அரசியலை மட்டும் ஒரு பத்திரிகைக்கு சூடான செய்தி இல்லை என்பதை விளங்கிக் கொள்வார்களா தெரியவில்லை.
பித்தலாட்ட வாடிக்கையாளர் சேவையுடனான ஒரு ஒலிவடிவம் இங்கே தரப்பட்டள்ளது. பின்னர் தொடர்பு கொண்ட போது தாம் அப்படிக் கூறவில்லை என்கிறார் இந்தப் பெண்மணி.
|
பத்திரிகைகளால் முடியாத ஒருவிடயத்தை ஒரு தனிமனிதனால் செய்ய முடியுமா என்பது சந்தேகமே தான். நாம் வாழும் சமூகம் என்ற ரீதியில் தமிழ்மணம் மற்றும் இன்ட்லி வாக்குகளைத் தந்து அவர்களது கன்னத்தில் அறையுங்கள்.
37 கருத்துகள்:
vadai
நாம் வாழும் சமூகம் என்ற ரீதியில் தமிழ்மணம் மற்றும் இன்ட்லி வாக்குகளைத் தந்து அவர்களது கன்னத்தில் அறையுங்கள்///அறைந்தாச்சு
// நாம் வாழும் சமூகம் என்ற ரீதியில் தமிழ்மணம் மற்றும் இன்ட்லி வாக்குகளைத் தந்து அவர்களது கன்னத்தில் அறையுங்கள//
ஓ, அவங்க ஒரு கன்னம் தமிழ்மண வாக்குப்பட்டையிலும், மறு கன்னம் இட்டலி வாக்குப்பட்டையிலும்தான் இருக்கிறதா? :P
முதலில் இந்த வாரமும் தமிழ் மணத்தில் எனக்கு 11 ம் இடம் பெற்றுத் தந்த என் உறவுகளுக்கு மிக்க நன்றி.
...Super! பாராட்டுக்கள்!
வாழ்த்துக்கள் சகோ!! நானும் என் பங்குக்கு அறைந்சுட்டேன்!!
நீங்களும் நனைய வாருங்கள்!
சமூக அக்கறைக்கு வாழ்துக்கள் சுதா..
எனக்கு மட்டும் நியாயம் செய்தால் சரி என்றுபோகாமல், பொதுநலம் நோக்கும் உங்கள் நேர்மை எனக்கு பிடித்திருக்கு.
இன்னுமா hutch பாவிக்கிறீங்க... அந்த சிம் பாவிக்கரவங்கள கணக்கெடுக்க மாட்டானுன்களே.. கேவலமா look 'க்கு விடுவானுன்களே...
பள்ளிக்கூடக் காலத்தில் அதாவது தரம் 9-10 படிக்கும் போது அனைத்துத் தொலைபேசிச் சேவைகளையும் பயன்படுத்திப் பார்த்திருக்கின்றேன் ஆனால் என்னுடைய நிரந்தரக் கையடக்கத் தொலைபேசிச் சேவை வழங்குனர் 2002லிருந்து டயலொக் தான்! நான் பயன்படுத்தியதிவற்றிலிருந்து எனக்கு மிகப்பிடிக்காமல் போனது மொபிடெல், அவர்களது வாடிக்கையாளர் சேவை, பில் கட்டண முறை, நெகிழ்ச்சித் தன்மை என்பதெல்லாம் சரியில்லை. நான் ஹச் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன், ஆனால் அவர்களது வலையமைப்பு தெளிவு குறைவு. அப்போது எயார்டெல் இருக்கவில்லை ஆனால் செல்டெல் (இப்போது எடிஸலாட்) பயன்படுத்தியிருக்கிறேன் - அவர்களது சேவை பரவாயில்லை.
இன்று நான் நிரந்தரமாக டயலொக் இலக்கமும், ஒரு உதிரி எடிசலாட் இலக்கமும் பயன்படுத்துகிறேன். இந்திய றோமிங்கிற்காக மட்டும் எயார்டெல் பயன்படுத்தினேன். வாடிக்கையாளர் சேவை எனும் போது என்னுடைய வாக்கு டயலொக்கிற்குத் தான், இதுவரை சிறப்பான சேவை அளித்திருக்கிறார்கள் (ஒரு வேளை பில் லைன் என்பதாலோ தெரியவில்லை). எயார்டெல் கூடப் பரவாயில்லை ஆனால் அடிக்கடி காசு வெட்டுவார்கள், அவர்களே கோலர் ட்யுனை அக்டிவேட் செய்துவிட்டு, டி-அக்டிவேட் செய்க இல்லாவிட்டால் மாதா மாதம் 30 ரூபாய் என்பார்கள் - டயலொக்கிடம் இந்த சில்மிஷங்கள் கிடையாது ஆனால் ஹச், எயார்டெல்லை விட டயலொக் கட்டணங்கள் கொஞ்சம் கூட.
நல்ல விழிப்புணர்வுப் பதிவு. பத்திரிகைகள் பிரசுரித்தால் நல்லது ஆனால் அவர்கள் ஹச் விளம்பரங்களை இழக்க விரும்பமாட்டார்கள்!
அடடே... நீங்க விடமாட்டீங்க போல...
உங்களுக்கு வாழ்த்துக்கள்
மற்றும்
விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி
வாழ்த்துக்கள் ! நானும் அறைந்சுட்டேன்!!
//முதலில் இந்த வாரமும் தமிழ் மணத்தில் எனக்கு 11 ம் இடம் பெற்றுத் தந்த என் உறவுகளுக்கு மிக்க நன்றி.//
வாழ்த்துக்கள் நண்பரே...
தொடரட்டும் உங்கள் பணி
hutchகாரர்கள் உண்ட சுடுசோற்றை சமிபாடடையவிடாமல் பண்ணிவிட்டீர்கள்,
உங்கள் சமூக அக்கறை பாரட்டத்தக்கது..:)
விழிப்புணர்வு கட்டுரை சூப்பரா இருக்கு
நல்ல பதிவுங்க..
தமிழ்மணத்தில் இடம்பெற்றமைக்கு வாழ்த்துக்கள்..
துணிவுடன் நேர்மையும் வாழ்க.
இந்த மாதிரியான பதிவுகள் தான் மதிசுதாவின் அடையாளம்.
// ஒரு கன்னம் தமிழ்மண வாக்குப்பட்டையிலும், மறு கன்னம் இட்டலி வாக்குப்பட்டையிலும்தான் இருக்கிறதா? :P//
இப்புடி கஷ்டமான கேள்வியெல்லாம் கேக்ககூடாது..!!!
நல்ல விடயத்தை ஞாபக படுத்துனீங்க சுதா நன்றி,
இதே போலத்தான் நேற்று முன்தினம் எனது நண்பர் ஒருவருக்கும் இதே போல ஒரு சம்பவம் நடந்தது, அதாவது அவரது கணக்கு துண்டிக்கபட்டிருந்தது, அதனால் அவர் எனது தொலைபேசி மூலமாக ( அதே சேவை வழங்குனர் தான் ) வாடிக்கையாளர் சேவைக்கு தொடர்பு கொண்டு பேசிக்கொண்டு இருக்கும் போது , அந்த உத்தியோகத்தர் தனது கருத்துக்களை திணித்தார் , அதாவது தான் சொல்வதை தானாம் நாங்கள் கேட்க வேணும் ...அப்படி சொல்லி உடனே அந்த தொடர்பை துண்டித்து விட்டார், ( அவரின் நாகரிகமும் அவரை வேலைக்கு தேர்ந்தெடுத்தவர்களின் திறைமையும் அப்போது எங்களுக்கு விளங்கியது) , இத்தனைக்கும் 'எந்த நேரமும் உங்களை கவனிப்போம் '( தமிழ் வடிவம் சரியோ தெரியவில்லை) என்ற உறுதி மொழியை வழங்கிக்கொண்டிருக்கும் ஒரு பொறுப்பு வாய்ந்த சேவை வழங்குனர்கள் தான் அவர்கள்.
பின்னர் மீண்டும் அழைத்த போது பதிலளிக்க வில்லை .
இதனை வேறு ஒரு முகவரிடமும் முறைப்பாடு செய்துள்ளோம் . பார்க்கலாம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என்று.
இல்லையென்றால் அந்த தலைமைப்பீடத்துக்கு சென்று பிரச்னையை பார்க்க இருக்கிறேன்.
சில வேலை வேறு யாரவது அவர்களுடன் செட்டை விட்டு பேசி அவர்களை கடுப்பேத்தி இருக்கலாம் அதற்காக வருகின்ற எல்லா வாடிக்கையாளர்களையும் அவர்கள் அவ்வாறு உபசரிப்பது அவ்வளவு நகரிகமானதாக தெரியவில்லை.
நல்ல பதிவு.
ஆனால் hutch இனை ஏன் ஆக்கள் பாவிக்கிறவங்கள்? :D
வாழ்த்துக்கள் முதலில்..
தமிழ் மணத்தில் 11 வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள் சகோ....
பாவம் Hutch .. வாடிக்கையாளர் சேவை முகவர் எல்லோரும் உங்களிட்ட சிக்கி சின்னாபின்னமாகிக் குழறி அழப் போறாங்கள் ;)..ஆனால் உங்க நேர்மை பிடிச்சிருக்கு..
டாப் 20ல் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
இடம்பிடித்தலுக்கு வாழ்த்துக்கள் நண்பரே!
//தமிழ்மணம் மற்றும் இன்ட்லி வாக்குகளைத் தந்து அவர்களது கன்னத்தில் அறையுங்கள//
:))
:-))
விழிப்புணர்வு பகிர்வு :)
துணிவுடன் நேர்மையும் வாழ்க.
இந்த மாதிரியான பதிவுகள் தான் மதிசுதாவின் அடையாளம்.
வாழ்த்துக்கள் தம்பி.... நல்லபதிவு
வாக்குகளை வழங்கியாச்சு!
எங்களைப் போன்றோர்கள் நாட்டுக்கு வந்து தெரியாத்தனமாக மாட்டிக்கொள்ளாமல் காப்பாத்தி விட்டீர்கள் சகோதரா!
உங்களுடைய அதிரடி பதிவுகளை தொடர்ந்து எழுதுங்க
அருமையானப் பதிவு. உங்கள் பதிவுகளை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள் http://tamilblogs.corank.com/
இவனுங்க இப்படிதான் பாஸ்
வாழ்த்துக்கள்...!
பளார் பளார் பளார்
வேற ஒண்ணுமில்லை 3லயும் ஓட்டு போட்டேன்
வாழ்த்துக்கள் நானும் என் பங்குக்கு அறைந்சுட்டேன்.
ஆனால் உங்க நேர்மை பிடிச்சிருக்கு
nanru vaazhga
கருத்துரையிடுக