வியாழன், 23 டிசம்பர், 2010

மறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)

                   உலகில் வாழும் எந்த ஒரு கிறிஸ்தவனும் இவர்கள் பாடலை அறியாமல் இருக்கவேமாட்டான் அந்தளவுக்கு அருமையாகவும் ஈர்க்கும்
விதத்திலும் படிப்பதில் வல்லவர்கள் யாரா அவர்கள் தான் ஒரு குழுவாக ஐரோப்பியாவையே கலக்கிய Boney M. 1975 ஆண்டில் தான் இவர்கள் முதல் முதல் தொலைக்காட்சி முன்னால் தோன்றினார்கள்.
              மேற்கு ஜெர்மனில் தோற்றம் பெற்ற இந்தக் குழுவானது அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, பெல்ஜியம் என ஒரு சுற்றச் சுற்றி கலக்கி வந்தது. இக்குழுவின் ஸ்தாபகராக இருந்தவர்Frank Farian ஆவார் அத்துடன் அக்குழுவில்Bobby Farrell, Liz Mitchell, Marcia Barrett, Maizie Williams  ஆகியோர் பங்கு கொண்டிருந்தார்கள்.
            இவர்களை முதல் முதல் பிரபலப்படுத்திய பாடல் இது தான் "Baby Do You Wanna Bump". அவர்கள் பாடலைப்பார்த்தாலே தெரியும் அதன் வருகையாளர் தொகையே அதன் பிரசித்தியை பறை சாற்றும். முக்கியமாக எல்ல கிறிஸ்தவர் மத்தியிலும் அவர்களின் ஒரு பாடல்மிகவும் பிரபலமானது MARY’S BOY என்ற பாடலாகும். எனக்கு அப்பாட்டை கேட்டதில் இருந்து வாயில் நார்த்தனமாடிக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல் ஒலிக்காத கிறிஸ்தவ விழாக்கள் இல்லையென்றே சொல்லாம்
              
                இதைவிட இன்னுமொரு சுவாரசிய விடயம் இருக்கிறது. இந்த பிரபலமான குழு எங்கே போய்விட்டது என நீங்கள் கேட்கலாம் 1986 காலப்பகுதிக்குப் பின் இந்தக் குழு விமான விபத்தில் பலியாகிவிட்டது என ஒரு வதந்தி உருவாகியது அதே போல் கார் விபத்தில் பலியாகிவிட்டது எனவும் கதையிருந்தது. அனால் உண்மையில் ஓரிருவருள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஒரு சாம்ராச்சியத்தையே இழக்குமளவிற்கு மாற்றிவிட்டது பின்னர் 2006 காலப்பகுதியில் மீண்டும் ஒன்று கூடி செயற்பட அரம்பித்தாலும் அவர்களால் பழைய இடத்தை பெற முடியாது போய் விட்டது.

 Boney M இப்போது
அவர்களின் பிரசித்தி பெற்ற பாடல் தொகுப்பு விபரங்கள் சில

1976 Take the Heat Off Me

1977 Love for Sale
1978 Nightflight to Venus
1979 Oceans of Fantasy
1981 Boonoonoonoos
1981 Christmas Album
1984 Ten Thousand Lightyears
1985 Eye Dance (Boney M. featuring Bobby Farrell)


            எனது உறவுகள் அனைவருக்கும் இதன் மூலம் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன் முக்கியமாக எனக்கு அடிக்கடி புதுப் புது விசயங்களை சொல்லித் தந்து என் எழுத்துலகை ஊக்குவிக்கும் சகோதரர் ஜீவனுக்கும் நான் கஸ்டங்களில் இருந்த தருணத்தில் அடிக்கடி தொடர்பு கொண்டு எனக்கும் என் தந்தைக்கும் ஆறுதல் சொல்லும் கொஞ்சமாய் வெட்டிப் பேச்சுப் பேசும் சித்திராக்காவிற்கும் மற்றும் தகவல் உலகம் டிலீப்பிற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.


முக்கிய குறிப்பு
             இந்த மாதம் சுதா தனது வழமையான பதிவுபாணியில் இருந்து விலக வேண்டியேற்பட்டுவிட்டது. சில உறவுகளின் தொடர்பதிவுகள் மற்றும் உலகை நாறடிக்கும் அரசியல் போன்ற காரணங்களால் எனது சொந்த பாணியிலமைந்த பதிவுகளை இட முடியல அதற்காகவே அடுத்த வருட ஆரம்பப் பதிவாக ஒரு அதிரடிப் பதிவு காத்திருக்கிறது வெடி குண்டு ஒன்றை செய்வது எப்படி செய்முறை விளக்கத்துடன். (யாரும் பயப்பட வேண்டாம் உயிருக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் யாருடைய உயிருக்கென்று கேட்கக் கூடாது)
                   அது வரை என் பதிவுகள் உயிருடன் இருக்க ஒரு வாக்குப் போட்டுப் போக முடியுமா (என்ன இப்படி நான் கேட்பது தரக் குறைவாயிருக்கா வாக்குப் போட்டுப் பழக்கமில்லாதவனே கேட்கும் போது நான் கேட்டால் என்னவாம் ஆதாரம் இன்லியில் போனால் தெரியும்)

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

35 கருத்துகள்:

நிலாமதி சொன்னது…

மீண்டும் பிரபல் பாடலைக் கேட்ட தந்தமைக்கு நன்றி கள்.

KANA VARO சொன்னது…

தெரியாத தகவல்கள் நன்றி! உங்களுக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்தக்கள்.

மாணவன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி நண்பரே,

உங்களுக்கு கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

pichaikaaran சொன்னது…

christmas new year wishes

நல்ல ரசனை உங்களுக்கு

எப்பூடி.. சொன்னது…

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் நண்பரே, நீங்கள் குறிப்பிட்ட இசைக்குழுவை பற்றி இதுவரை எதுமே தெரியாது, அறிய தந்தமைக்கு நன்றிகள்.

அருமையான கலைஞர்கள் .
மறக்கமுடியாத இசை .
நல்ல பகிர்வு .
பகிர்வுக்கு நன்றி .

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் சுதா..

தெரியாத தகவல்கள்..

பகிர்வுக்கு நன்றி நண்பரே,

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் நண்பரே..

ஆனந்தி.. சொன்னது…

அட நமக்கு புடிச்ச டாபிக்:)) ...boney M இன் rivers of babylon கேட்டு இருக்கிங்களா மதி?? என்னோட one of the favourite song...:)
http://www.metacafe.com/watch/3095340/boney_m_songs_rivers_of_babylon/

BONEY M பற்றி ஷாஜி முன்னர் உயிமையில் எழுதிய கட்டுரை ஒன்று வாசித்தீர்களா, அதில் இந்தக் குழுவினர் பற்றி - பெரும்பாலானவர்களுக்குத் - தெரியாத விடயங்களைத் தந்திருந்தார் ஷாஜி. இது பற்றி நான் மேலதிகமாக வாசிக்கவும் இல்லை,

கட்டுரையின் தமிழாக்கம் கிடைக்கவில்லை, ஆங்கில மூலம்
http://shajiwriter.blogspot.com/2009/12/boney-m-songs-of-ghost-singers_31.html

க்

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் நண்பரே, நீங்கள் குறிப்பிட்ட இசைக்குழுவை பற்றி இதுவரை எதுமே தெரியாது, அறிய தந்தமைக்கு நன்றிகள்.

தினேஷ்குமார் சொன்னது…

உங்களுக்கும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் சகோ

Fresh news.thanks sutha. happy cristmas to you

வைகை சொன்னது…

அரிய தெரியாத தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!

Amudhavan சொன்னது…

புத்தாண்டு முதல் புதிய பாணியில் எழுதப்போகும் உங்களுக்கு வாழ்த்துக்கள். கிறிஸ்துமஸ் பாடல்களுக்கு போனி- எம்மை நினைவுபடுத்தியிருக்கிறீர்கள். கிறிஸ்துவப்பாடல்களுக்கு ஜிம் ரீவ்ஸூக்கடுத்து அதிகமானவர்களுக்குப் பிடித்த பாடல்கள் போனி-எம் குழுவினருடையதாகத்தான் இருந்தது.நல்ல பதிவு.

ஷஹன்ஷா சொன்னது…

ஒரு பிரபலமான இசை அணி பற்றிய பதிவை தந்தீர்கள்....அருமை...

ஃஃஃவெடி குண்டு ஒன்றை செய்வது எப்படி செய்முறை விளக்கத்துடன்.ஃஃஃஃ
வெடிகுண்டா......????
அபப் சரவெடிதான்.....!


புத்தாண்டு வாழ்த்துகள்........உங்களுக்கும் குடும்பத்திற்கும்.....பதிவுலக நண்பர்களுக்கும்....

ஷஹன்ஷா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Bruno சொன்னது…

சரியான நேரம்
சரியான அறிமுகம்

நன்றிகள் பல

எங்க இந்த பாட்டு எல்லாம் நான் கேட்டதே இல்லைங்கோ ............. நல்ல இருந்தது .... அப்புறம் உங்களுக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

நல்லா இருக்குங்கோ!? பல தெரியாத விசயங்க தெரியுது!

இதெல்லாம் அப்பிடியே வளரும் போதே வரணும். நான் எங்கே.............

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

டிலீப் சொன்னது…

புதிய தகவல் மதி....
தகவலுக்கு நன்றி...
வெடி குண்டுக்காக காத்துள்ளேன்.

//தகவல் உலகம் டிலீப்பிற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்//

உங்களுக்கு எனது நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் ம.தி.சுதா வாயிலாக

Unknown சொன்னது…

அருமையான பாடல்கள்..வாழ்த்துக்கள் நண்பா

arasan சொன்னது…

பகிர்வுக்கு நன்றி ... உங்களுக்கும் , உங்கள் உறவுகளுக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல வாழ்த்துக்கள்

Denzil சொன்னது…

BONEYM இன்னும் மறக்கப்படலை சுதா. இதைப்படிச்சிட்டுருக்கும் போது கூட அவங்களோட கிறிஸ்மஸ் ஆல்பம்தான் கேட்டிட்டிருக்கேன். எங்க பக்கங்கள்ல கிறிஸ்மஸ் ஆல்பம்னா அது இன்னும் BONEYMதான்.

உங்க பாணியில சொல்லணும்னா, சில சமயம் பழைய சோறுக்கு சுடு சோறைவிட ருசி அதிகம்! Thanks for sharing!

Jana சொன்னது…

முந்திக்கொண்டுவிட்டீர்கள் மதி.சுதா.
இப்போதும் என் கிறிஸ்மஸ் கீதம் "லோங் டைம் எ கோ..இன் பெத்லகேம்" தான்.

ஆமினா சொன்னது…

நல்ல தகவல்கள் அடங்கிய பகிர்வுக்கு மிக்க நன்றி

Mathuvathanan Mounasamy / cowboymathu சொன்னது…

BonnyM இன் பாடல்கள் நான் பல்கலைக்கழகம் வந்த பின்னர்தான் எனக்கு அறிமுகமானது. மிகவும் இரசனையான பாடல்கள். உங்கள் பதிவை வாசித்த பின் மீண்டும் கேட்கப்போகிறேன்.

ம் ........ பொருத்தமான நினைவூட்டல்... நன்றி நண்பா

Unknown சொன்னது…

நல்ல தகவல்கள்

உங்களுக்கு விருது கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

roshaniee சொன்னது…

நல்ல தகவல்

மிக நல்லதகவல்கள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top