வியாழன், 17 மே, 2012

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்திலிருந்து ஒரு ஆதார மடல்

வணக்கம் ஐயா சேமம் எப்படி?
ஈழத்திலிருந்து ஒரு அடிமுட்டாளிடமிருந்து இப்படி ஒரு மடலை நீங்கள் காண வேண்டிய பாக்கியம் பெற்றது தங்களது தூரதிஸ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால் பலருக்கு எமது உணர்வுகள் வியாபாரப் பொருளாகிப் போனதால் புல் பூண்டு கூட அறச்சீற்றத்துடன் தான் இங்கிருக்கிறது.
இந்திய ராணுவத்தின் இலங்கை வருகையின் போது எனக்கு 2 வயது தான் ஆனால் அவர்கள் தந்த தாக்கமோ எத்தனை வருடங்களானாலும் எம் மனதை விட்டு அகலாது.
இந்திய ராணுவ வெளியேற்றத்திற்காக போராடியவர்களில் எனது தந்தையும் ஒருவராவார். தியாகி திலீபன் அண்ணா உண்ணாவிரதம் இருந்த காலப்பகுதியில்வல்வெட்டித்துறை சந்தியில் 5 நாட்கள் இருந்த நால்வரில் அவரும் ஒருவர். இது பற்றி பழநெடுமாறன் ஐயா இங்கு வந்தது பற்றி எழுதிய புத்தகத்தில் பெயருடன் குறிப்பிட்டுள்ளார். அப்போது இந்தியருடே வெளியிட்ட சஞ்சிகையில் அவர் மடியில் இருக்கும் சிறுவன் தான் நான்.
என் தந்தை அடிக்கடி சொல்வார். எம் மீது இந்தளவு கோரம் செய்த சிங்கள ராணுவத்தை விட இந்திய ராணுவத்தின் மேல் தான் எனக்கு கோபம் அதிகம். ஏனென்றால் சிங்கள ராணுவத்திற்கும் எமக்கும் பகைமைக்கான காரணம் இருக்கிறது. ஆனால் இந்திய ராணுவம் அப்படியில்லையே. அதே வல்வெட்டித் துறை சந்தியில் 48 அப்பாவி பொது மக்களை கட்டடம் ஒன்றினுள் வைத்து குண்டு வைத்து கொன்றார்கள். உங்களுக்கு மடல் போட்ட அந்த ராணுவவீரரிடம் இதற்கு காரணம் கேட்டு சொல்ல முடியுமா?

கற்பழிப்பு என்றால் என்னவென்று தெரியாதது போல கேட்கும் அவர்களால் வரலாற்றை ஒரு போதும் மறைக்க முடியாது. ஏனென்றால் மட்டக்களப்பில் நடந்த சம்பவம் ஒன்றை கேளுங்கள். இது ஒரு படத்திலும் காட்டப்பட்டிருந்தது.
“ஒரு ஏழைப் பெண் வீட்டு முற்றத்தில் இருந்து தோசை சுட்டுக் கொண்டிருந்தார். அழும் குழந்தையை ஆற்றுவதற்காக அருகே கிடத்தியிருந்தார். அப்போது இந்திய ராணுவக் காடையர் வந்திருக்கிறார்கள். அவர்களது தப்பான கதையைக் கேட்டு அப் பெண் வீட்டினுள் ஓடிப் போய் கதவை சாத்திவிட்டாள். அப்போது அந்த பிள்ளையை தூக்கி தோசைக்கல்லில் போட்டு விட்டு அந்தப் பெண்ணையும் வன்முறை செய்து விட்டு போய்விட்டார்கள். அப்பெண் அதே வீட்டினுள் தூக்கிட்டு மரணத்தை தேடிக் கொண்டாள். அந்தக் காலத்தில் பல பெண்கள் அகப்பையை எறிந்து விட்டு சுடு குழல் தூக்க காரணமாக அமைந்த சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும்.”

இதை இந்த ராணுவ வீரர்களால் மறைக்க முடியுமா?

இது மட்டுமல்ல அவர்களின் சபலப் புத்திக்கு இன்னும் சொல்கிறேன் கேளுங்கள். திருவெம்பாவை மற்றும் விரத காலங்களில் பெண்கள் அதிகாலையே குளிப்பதற்கு கிணற்றடி போவர்கள். அப்படியான காலத்தில் றோந்து என்னும் சாக்கில் வந்து இரவே இவர்கள் கிடந்து விடுவார்கள். ஆனால் இவர்களிடம் பாதகமான ஒரு விடயம் என்னவென்றால் இவர்களில் ஒருவித நெய் மொச்சை அடிக்குமாம் அதை வைத்து பெண்கள் அறிந்து விடுவார்கள். அதன் பின்னர் என்ன அன்று விரதம் அதோ கதி தான்.

அதே போல இன்னுமொரு கருத்திருக்கிறது. ராணுவத்தில் ஒதுக்குப்புறமான சென்ரிகளில் (அரங்குகளில்) நிற்பவர்கள் உள்ளாடை அணிவதில்லையாம். பெண்களைக் கண்டால் ஜீன்சை கழட்டி விட்டு ஏதோ செய்வார்களாம். இதையெல்லாம் உங்களுக்குக் கடிதம் எழுதிய ராணுவ வீரர்களால் மறுக்க முடியுமா?

இது மட்டுமல்ல இதே காட்டுமிராண்டிகள் தான் யாழ் வைத்தியசாலையில் 50 ற்கு மேற்பட்ட வைத்தியர், தாதியர், ஊழியர் என பலரை சுட்டுக் கொன்று குவித்தார்கள். அதெல்லாம் வரலாறில்லையா? அதை இவர்களால் மறுக்க முடியுமா? இவர்களை வரவேற்க தமிழ் நாட்டுக்காரன் போகவில்லை என்று கேட்கும் போது நான் உச்சி குளிர்ந்து சந்தோசப்பட்டேன்.

உதாரணத்திற்கு இந்திராகாந்தி செத்த போது யாழ்ப்பாணமெங்கும் 3 நாள் கடையடைப்புச் செய்து வாழை மரம் நாட்டி ஒட்டு மொத்த தமிழனும் துக்கதினம் அனுஸ்டித்தான். ஆனால் அதே தாயின் மகன் இறந்த போது கற்கண்டு, ரொபி கொடுத்து கொண்டாடினார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால் இங்கு புலிகளின் பிரச்சாரமோ அல்லது ஊடகங்களின் பிரச்சாரமோ அவர்களை மாற்றவில்லை. ராஜீவின் மேல் இருந்த அந்தளவு வெறுப்பும் தான் காரணம்.
நான் அவசரமாக எழுதுவதால் பல ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாமல் போய்விட்டது. கற்பழிப்பு சம்பந்தமாக வழங்கப்பட்ட பேட்டிகள் அடங்கிய பத்திரிகைக் கோவைகள் சேகரித்துத் தருவதா இருந்தால் சொல்லுங்கள் தேடி எடுத்துத் தருகிறேன். நீங்கள் ஒரு பக்கச்சார்பற்ற நடுநிலையான எழுத்தாளர் என நிருபிக்க நினைத்தால் கடிதம் வரைந்த அதே நபர்களிடம் இதற்கு விளக்கம் பெற முயற்சியுங்கள். ஏனென்றால் இவை வடுக்கள் என்றும் அழியாதவை.

நன்றியுடன்
அன்புச் சகோதரன்

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

You might also like:

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

48 கருத்துகள்:

நிரூபன் சொன்னது…

வணக்கம் மச்சி,.

சுய சொறிதலுக்காக, பொன்னாடைக்காக, புகழ் எடுப்பதற்காக இன மானத்தை அடகு வைக்கும் அற்ப பதர்களுக்கு இப்படி எழுதினாலும் உறைக்குமா என்பது கேள்விக் குறியே..
முடிந்த வரை பலத்து ஊதுவோம்!

சத்தியா சொன்னது…

ஜெயமோகன் போன்ற கேடு கெட்டவர்களுக்கு பதிலளித்து எம் தராதரத்தை ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்? ஒரு முறை இனியாவது ஈழததிற்கு வந்து ஆக்கிரமிப்புப் படைகள் செய்த வதத்தை அடாவடித் தனத்தை கேட்டு அறிந்து கொள்ளட்டும்.

கவி அழகன் சொன்னது…

உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சொல்வது எனது கடமை

தனிமரம் சொன்னது…

வரலாறு தெரியாத வாசகருக்கு கடிதம் எழுத தெரிந்தவர் ஈழம்போய் பார்த்து கேட்டு வரட்டும் ஈனப்பிறவிகள் செய்த செயல்! ஒரு சுயசொறிதல் தேசப்பற்றை நிலைநாட்டுகிறாற போல

பெயரில்லா சொன்னது…

ஆமாம் சகோதரா. அந்த அட்டூழியங்கள் இப்பவும் மனசில் உள்ளது. எனது அனுபவங்களை இங்கே பதிகிறேன்
சம்பவம் 1.எனது தந்தை ஒருநாள் அலுவலகத்திற்காக காலைவேலை யாழ்ப்பாணம் சென்றபோது சுற்றிவளைத்த இந்தியன் ஆமிகள் நிறைய ஆம்பிளையளை கேணி ஒன்றுக்குள் கை கால் கட்டி தூக்கி போட்டுவிட்டு மேலிருந்து பெரிய கற்களை உறுட்டி விட்டாங்களாம். அதிலிருந்து தான் தப்பியதாக அப்பா அடிக்கடி சொல்வார்.

பெயரில்லா சொன்னது…

சம்பவம் 2. எனது உறவினர் ஒருவர் வங்கியில் அந்த காலத்தில் வேலை பார்த்தவர். பஸ்ஸில் வேலைக்கு சென்றவர்களை இறக்கி வரிசையாக விட்டு சுட்டுத்தள்ளியதில் மரணமானவர். இதுவும் யாழ் வைத்தியசாலை படுகொலையும் அண்மித்த நாட்களில் நிகழ்ந்தவை

பெயரில்லா சொன்னது…

சம்பவம் 3.எனக்கு படிப்பித்த ஆசிரியை ஒருவருக்கு நேர்ந்தது மிகக்கொடுமை. அவரை வன்புனர்விற்கு உள்ளாக்க முனைந்த ஆமி அவரது பெண்ணுறுப்பை துப்பாக்கியின் முன்னுள்ள கத்தியால் கிழித்து பெரிதாக்கிவிட்டு தனது அலுவலை முடித்த ஈனச்சம்பவம்.பின் ஆசிரியர் தையல் போட்டுக்கொண்டா. அவ ஒரு தமிழ் ஆசிரியர். இப்போதும் உயிருடன் உள்ளா.

பெயரில்லா சொன்னது…

சம்பவம் 4.சுற்றிவளைப்பு என்ற பெயரில் இரவோடு இரவாக வந்து விட்டைச்சுற்றி படுத்துடுவாங்களாம். ஆரம்பத்தில் அவங்களின் வருகையை உணர்த்தும் பட்டானி கடலை நெய்த்தோசை மணத்தையும் கண்டுபிடிக்காத நம் பெண்கள் சிறுநீர் கழிக்க இரவில் வீட்டின் பின்புறம் ஒதுங்கும்போது படுத்திருந்தவங்கள் காலுக்குள் தடக்கி அலறியடித்து ஓடிய சம்பவங்கள் ஏராளம்.

பெயரில்லா சொன்னது…

சம்பவம் 4.தாம் போராளிகள் என கருதி கொன்றவர்களை தமது வாகணத்தின் பின்னால் கயிற்றில் கட்டி வீதியில் தரதரவென இழுத்துச்சென்ற ஆமியள் தானே இந்த இந்திய சீக்கியன் ஆமி

பெயரில்லா சொன்னது…

இவை அனைத்தும் கொடிகாமத்தை மையப்படுத்தி அந்த நாட்களில் இடம்பெற்ற மிகச்சில சம்பவங்கள்.

அம்பலத்தார் சொன்னது…

இதுமாதிரி ஆளுங்க பெயருக்கும் புகழுக்குமாக பெற்றதாயையே விற்கக்கூடியவங்க. இவங்களிடம் சமுதாய அக்கறையை எதிர்பார்க்கமுடியாது.

பெயரில்லா சொன்னது…

நண்பா இந்த பதிவை கூகிள்சிறியில் இணையுங்களேன்.

பெயரில்லா சொன்னது…

இவர் தேசப்பற்றுக்காக மனசாட்சியை அடமானம் வைத்து விட்டதாகவே தோன்றுகிறது...

இவர் எழுதியதை உணர்ந்து மாற்றிக்கொள்வாரோ என்று பொறுத்திருந்து பார்ப்போம்...

ஏன் நல்ல படைப்பாளிகள் பல நேரம் இப்படி புத்தியின்றி பிதற்றுகிறார்களோ என்பது புதிராகத்தான் உள்ளது...

இது ஒரு படைப்பாளிக்கே உள்ள அகந்தையின் வெளிப்பாடு தான்..வேறெதுவும் இல்லை...

பெயரில்லா சொன்னது…

இது மட்டுமா? இன்னும் எத்தனையோ இங்கு நடந்து இருக்கின்றன.. நகை சூறையாடல் முதல் க........ வரை அனைத்தையும்.......

Unknown சொன்னது…

இதற்க்கு மைனஸ் ஒட்டு போட்டவன் வெளில வாடா பரதேசி...

Unknown சொன்னது…

விபச்சாரிகளை ஆதரிப்போர் இங்கும் இருக்கத்தான் செய்கின்றனர்!

நிரூபன் சொன்னது…

மைனஸ் ஓட்டு போட்ட மறை கழண்டவர்கள் விபரம்...

aahmedibu@gmail.com

tharma@gmx.com

நாலு பேரின் கைதட்டல்களை ரசிக்கும் இவரெல்லாம்.... சரி விடுங்க இவருக்கு வரலாற்றை தெரிவித்து என்னவாகப் போகிறது...

smart சொன்னது…

நண்பரே,
ஜெயமோகன், தனது பக்கத்திலேயே தெளிவாக சொல்லிவிட்டார். இராணுவம் குற்றம் செய்யவில்லை என்றோ செய்தது என்று அவர் வாதிடவில்லை ஆனால் நடந்த நிகழ்வின் ஒரு சாரர் இழப்பை மட்டும் ஊதி இந்திய வெறுப்பை உண்டு செய்வதைத் தான் கேட்டுள்ளார். ஈழத்தமிழர்களைக் காட்டி பிரிவினைவாதம் செய்தவைத்தான் அவர் கண்டிக்கிறார். இராணுவம் வெளியேற தமிழர்கள் போராடினார்கள் என்பவர் ஏன் கடைசி கட்ட போர்காலத்தில் இந்தியாவின் துணையை எதிர்பார்க்கவேண்டும்? எல்லாவற்றும் மேலாக இந்தியாவின் பிரதமரை கொல்லும் அளவிற்கு அதனை கொண்டு சென்றததிலேயே ஒரு பக்க சார்ப்பு நிலைப்பாடு தெரியும்.

இராணுவம் செய்ததும் தவறு அதவிட புலிகள் செய்ததும் பெரிய தவறு

Jeevan சொன்னது…

smart said..க்கு
இங்கு இந்திய அமைதிப்படை செய்த பாதகங்களை தான் நாங்கள் சுட்டி காட்ட விளைந்தோமே தவிர இந்திய இராணுவம் என்றால் கூட சற்று வித்தியாசமாக பார்த்திருக்கலாம்.எங்கள் ஊருக்கு அமைதி காக்க வந்தவா்களுக்கு எங்கள் தமிழ் மக்களை கொல்ல அனுமதி கொடுத்தது யார்... இதற்கு வக்காளத்து வாங்க வந்தவர்களுக்கு உங்கள் வாதத்தின் தன்மையை பாருங்கள் உங்கள் வீட்டு காவலாளி முன் வீட்டுக் காரனுடன் எற்பட்ட சண்டை கோபத்தில் உங்கள் மனைவியை கற்பழிக்கிறான் என்றால் 20 வருடத்தின் பின் இதை ஒரு எழுத்தாளன் என்று சொல்லும் நபர் சரி என்று வாதிட்டு எழுத நீங்களும் ஒம் ஒம் முன்வீட்டக்காரனில் தான் கூட பிழை என்பது போல் உள்ளது. எனக்கும் 10 வயதில் இவர்களிடம் சப்பாத்து கால்களால் உதை வாங்கிய அனுபவம் உண்டு.

Jeevan சொன்னது…

ஜெயமோகனுக்கு மிக்க நன்றிகள்......
இறுதி யுத்தத்தின் 3ம் ஆண்டு நினைவு தினத்தில் இலங்கை இராணுவத்திற்கு எந்த விதத்திலும் எஙகள் இந்திய அமைதிப்படை (கொலை கற்பழிப்புகளில்) சளைத்தவர்கள் இல்லை என்பதை மிக துணிவுடன் சொன்னதிற்காக மீண்டும் நன்றிகள்

ARV Loshan சொன்னது…

இது போன்ற புரிந்தும் புரியாத, விளங்கியும் விளங்காதவர்களுக்கு என்ன சொல்லி என்ன எழுதி என்ன பயன் சகோ...
எங்கள் சோகங்களும் எங்கள் வேதனைகளும் எம்முடனே..

ராம்ஜி_யாஹூ சொன்னது…

முறிந்த பனை சுட்டிக்கு மிகுந்த நன்றிகள் நண்பரே

jagadeesh சொன்னது…

உங்க கோபம் இன்னமும் குறையிலையா. ஏன் இந்த கொலைவெறி? உங்க நாட்டு மக்களுக்கு இதே வேலையா போச்சு.. மனசுல வஞ்சம் வச்சிருக்குற ஆட்கள் நிம்மதியா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல. இப்படி இன வெறி கொண்டு அலையறீங்க. அதுக்கு பலனா தான இலங்கை ராணுவம் தக்க தண்டனை தந்தது. இப்ப என்னாச்சு.. கொஞ்சம் control பண்ணுங்க தலைவா.

ம.தி.சுதா சொன்னது…

நிரூபன் க்கு...

அவர் வரலாற்றை மாற்ற யோசித்திருக்கலாம் மச்சி

ம.தி.சுதா சொன்னது…

சத்தியா க்கு

கட்டாயம் இப்ப முடழு வரலாறும் அறிந்திருப்பார் சகோ

ம.தி.சுதா சொன்னது…

Yathan Raj க்கு

நன்றி யாதவண்ணே

ம.தி.சுதா சொன்னது…

தனிமரத்திற்கு..

இனி எல்லாரும் அறிவார்கள் தானே..

ம.தி.சுதா சொன்னது…

கூகிள்சிறி .கொம் ற்கு..

நன்றி சகோ..

சரியான நேரத்தில் பகிர்ந்திருக்கிறீர்கள்

ம.தி.சுதா சொன்னது…

கூகிள்சிறி .கொம் ற்கு..

நேரம் கிடைக்“கையில் பகிர்கிறேன் சகோ... இப்போது நான் திரட்டிகளில் நேரம் செலவளிப்பதே குறைவு

ம.தி.சுதா சொன்னது…

அம்பலத்தாருக்கு

உண்மை தான் ஐயா

உங்கள் பதிவு துகில் உரித்து விட்டதே..

ம.தி.சுதா சொன்னது…

ரெவெரி க்கு..

சகோ... அது தான் ஒரு பந்தியில் இறங்கி வந்து கதைதுள்ளாரே...

அவர்கள் மாற மாட்டார்கள்..

ம.தி.சுதா சொன்னது…

tamilcomputercollege க்கு...

ஆமாம் சகோ இன்னும் ஏராளம் இருக்கிறது..

ம.தி.சுதா சொன்னது…

மைந்தன் சிவா க்கு..

மச்சி துணிவில்லாததால் தானே ஒழித்து நின்று போடுகிறார்கள்..

ம.தி.சுதா சொன்னது…

நிரூபன் க்கு...

விடு மச்சி மைனஸால் தான் பதிவுக்கே பெருமைடா..

ம.தி.சுதா சொன்னது…

சே. குமார் க்கு...

சகோ சின்னப்புள்ள கூடத் தான் கை தட்டுது அதுக்கும் பதிவு ’போடுவாங்களா?

ம.தி.சுதா சொன்னது…

smart க்கு...

நண்பரே அதே எழுத்தை சொன்னவர் தான்.. பொய்ப்பிரச்சாரமும் எனக் கூறியுள்ளார்... அப்படியானால் எது உண்மை...

ம.தி.சுதா சொன்னது…

Jeevan க்கு...

ஆகா நல்ல கதை 3ம் ஆண்டில் அவ’ரே தம்மை நிருபித்’து விட்டார்..

ம.தி.சுதா சொன்னது…

Loshan ARV க்கு...

உண்மை தான் அண்ணா வரலாறை யாரோ ஒருவராவது உரக்கக் கூறுவார்கள்...

ம.தி.சுதா சொன்னது…

ராம்ஜி_யாஹூ க்’கு...

அது ஒரு வரலாற்று நல் சகோ முடிந்தால் பகிருங்கள்..

ம.தி.சுதா சொன்னது…

jagadeesh க்கு

நீங்கள் ஜெயமோகனின் பதிவு படிக்கல என நினைக்கிறேன் படித்து விட்“டு வரவும்...

ஓமய்யா உங்களில் எங்களுக்கா வெறி அதிகம்... அது தான் கடைசிப் போரில் உங்கள் படை இறங்கி நின்று கொலைக் கூத்தாடியதே... முதல்ல செய்திகளை படியுங்கள் சகோ..

மன்மதகுஞ்சு சொன்னது…

1987.12.12 அன்று எனது பெரியப்பா உட்பட 7 உடலங்கள் எனது பெரியப்பா வீட்டில் கிடத்தப்பட்டிருந்தன,அவர்கள் செய்த குற்றம் என்ன பிரம்படி லேனில் உள்ள அவர்களின் வீட்டில் இருந்ததுதான், 12 ம் திகதி நிகழ இருந்த திருமணத்துக்காக வந்திருந்த வயதான உறவு பெண்களையும் மணமகளையும் இந்திய மாதவின் அமைதிகாப்பு படைகள் தங்கள் நகக்குறீகளையும் ,பற் அடையாளங்களும் எனது அக்கா மீது சித்தி அன்ரி மீது பதித்துவிட்டு போனதை உன்னால் மறைக்கலாம்,என்னால் மறக்க முடியாது,கிரியைகளுக்காக உடலம் கழுவும் போது உடலின் சல்லடையாக்க இருந்த துப்பாக்கி சன்னங்களின் ஓட்டைகளை வந்து அம்மா சொல்லி கதறி அழுத்தது இன்றூம் என் மனசுக்குள் விம்பமாய் ஓடுதே அதை யாரு செய்தார்கள் ஜெயமோகன் அவர்களே, எனது பெரியப்பாவிற்கும் 47 வயது அவரை தொண்டைக்குழியில் சுட்டு விட்டு,அவரது கால்களின் மேல் டாங்கியை ஏற்றி சென்றார்கள உங்கள் நாட்டு சீக்கிய வீரர்களும் கூர்க்கா வீரர்களும்,அவர்களுக்கு நீங்கள் பிடிகயுங்கள் ஆலவட்டம் ,ஆனால் உங்களுக்கு நடக்கும் போதுதான் தெரியும் அந்த வலிகள்..இன்றூம் அந்த பிரம்படி மக்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் நினைவு தூபி இருக்கிறது அது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா சார் ,நான் வேணுமெண்டால் படம் எடுத்து அனுப்பி விடவா, யாழ் ஆஸ்பத்திரியில் உள்ள இறந்து போன12 வைத்தியர்களினது தாதிபெண்களின் படங்களை பார்க்கலையா, அதுவும் படம் எடுத்து அனுப்பி விடுகிறேன் பார்த்து விட்டு உங்கள் ராணுவ வீரர்களின் பாதத்தை கங்கா ந்ஈர் கொண்டு கழுவி விடுங்கள்

koomaganblogspot.fr சொன்னது…

மதி சுதா இந்த விபச்சாரிகளை ஏன் பெரிய மனிதர்கள ஆக்குகின்றீர்கள் ?? அவைகள் குடுக்கின்ற காசுக்கு ஒழுங்காக வேலை செய்கின்றன . நாங்கள் செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளவோ இருக்கு .

பெயரில்லா சொன்னது…

jagadeesh said...

உங்க கோபம் இன்னமும் குறையிலையா. ஏன் இந்த கொலைவெறி? உங்க நாட்டு மக்களுக்கு இதே வேலையா போச்சு.. மனசுல வஞ்சம் வச்சிருக்குற ஆட்கள் நிம்மதியா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல. இப்படி இன வெறி கொண்டு அலையறீங்க. அதுக்கு பலனா தான இலங்கை ராணுவம் தக்க தண்டனை தந்தது. இப்ப என்னாச்சு.. கொஞ்சம் control பண்ணுங்க தலைவா.
////


ஓவராய் ஊதாதையும் அப்புறம் உம்வீட்டில் இவ்வாறனதொரு இழவுகள் நடந்தால் அதையும் நியாயப்படுத்த வேண்டி வரும்!

பெயரில்லா சொன்னது…

smart said...
இராணுவம் வெளியேற தமிழர்கள் போராடினார்கள் என்பவர் ஏன் கடைசி கட்ட போர்காலத்தில் இந்தியாவின் துணையை எதிர்பார்க்கவேண்டும்?//

யுத்தத்தை செய்பவர்களிடம் தானே அதை நிறுத்த சொல்லி கேட்கலாம்! எங்கயாச்சும் பாலர் பாடசாலை இருந்தால் சென்று இணைந்து கொள்ளும்!

-/பெயரிலி. சொன்னது…

ஜெயமோகனின் ஆட்டத்துக்கான திட்டம் இதுதானாக்கும் ;-)
[மேலதிகமாக என் இடுகையிலே எழுதியிருக்கின்றேன்]

From: Gnanam Gnanam
Date: 17 May 2012 09:01
Subject: Jeyamohan attents conference


கொழும்புத் தமிழ்ச்சங்க உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டில் தமிழகப் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன்

கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஜூன் 2,3,4ஆம் திகதிகளில் உலகத்தமிழ் மாநாடு ஒன்றினை சங்கத்தின் தலைவர் மு. கதிர்காமநாதன் தலைமையில் நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் சிறப்பு அதிதியாகக் கலந்து சிறப்பிப்பார் எனத் தமிழ்ச்சங்கத்தின் இலக்கியச் செயலாளர் தி. ஞானசேகரன் தெரிவித்தார். உலகறிந்த எழுத்தாளரான ஜெயமோகன் தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். நாவல், சிறுகதை, அரசியல், வரலாறு போன்ற படைப்பிலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தடம்பதித்து வெற்றிகண்டவர்.

விஷ்ணுபுரம் என்னும் சிறந்த நாவல் மூலம் உலகளவில் புகழ்பெற்ற ஜெயமோகன் அவர்கள் கொற்றவை, அனல்காற்று, இரவு, உலோகம் உட்பட பதினொரு புதினங்களையும், ஜெயமோகன் சிறுகதைகள், ஜெயமோகன் குறுநாவல்கள், போன்ற ஒன்பது தொகுதிகளையும், அரசியல் கட்டுரைத் தொகுப்புகளையும், வரலாற்று நூல்களையும், வடக்குமுகம் என்னும் நாடக நூலையும் கொற்றவை என்னும் காவியத்தையும் படைத்தவர்.


தவிரவும், இலக்கியத் திறனாய்க்வுக் கட்டுரைகளையும் மலையாளக் கவிதைகளின் பல காலகட்ட மொழிபெயர்ப்புகளையும் தமிழில் வெளியிட்டவர். மலையாளத்திலும் பல படைப்புகளைத் தந்தவர். 2010 ஆம் ஆண்டில் விஷ்ணுபுரம் நாவலுக்கான பரிசுடன் அகிலன் நினைவுப் போட்டி கதாவிருது பாவலர் விருது உட்பட பலவிருதுகளையும் ஜெயமோகன் பெற்றுள்ளார். மாநாட்டில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொள்ளச் சம்மதம் தெரிவித்துள்ள ஜெயமோகன் இலக்கிய ஆய்வரங்கில் பங்கு பற்றுவதுடன் மாலை நிகழ்வுகளில் சிறப்புரையாற்றவும் உள்ளார்.

தவிரவும் பேராளர் பதிவுக்கான முடிவுத் திகதி பலரின் வேண்டுகோளுக்கு அமைய இம்மாதம் 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்பதையும் இலக்கியச் செயலாளர் தி.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

Kind Regards
T. Gnanasekaran

சத்ரியன் சொன்னது…

மதிசுதா,

ஜெமோ ஈழத்தின் மொத்த வரலாற்றையும் படிக்க வேண்டியதில்லை.

இந்திய அமைதிப்படையில் பங்குபெற்றிருந்த ஒரு ராணுவ அதிகாரி ஒருவர் அவரது சுயசரிதையில் இந்தியப்படையின் ‘யோக்கிய’த்தைப் பற்றி எழுதியிருக்கிறாரே, அந்த ஒரு நூலைப் படிக்கச்சொன்னால் போதும்.

ஜெமோவும் கூட வயிற்றுக்கு ”சோறு” தான் சாப்பிடுவார் என்பது என் திடமான நம்பிக்கை.

Gobinath சொன்னது…

அண்ணா இந்த லிங்கை ஜெயமோகனுக்கு அனுப்பிவிடுங்கோ

http://www.tamilwin.com/show-RUmpzATdPYmp6.html

இன்றுவரை மொத்தமாக 21 அத்தியாயங்களில் இந்திய இராணுவத்தின் அட்டகாசம்......

மொத்தப் பக்கக்காட்சிகள்

1207898

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்