திங்கள், 6 ஆகஸ்ட், 2012

விட்ட குறையும் தொட்ட குறையும் (சிறுகதை)


முற்குறிப்பு - இச்சிறுகதையானது (அளவு குறுங்கதை தான்) நேற்றைய தினம் வெளியான தினக்குரல் பத்திரிகையில் வெளியாளது. எனக்கு ஊக்கமளிக்கும் அனைத்து உறவுகளுக்கும் நன்றி)

நேரமோ 4.30 ஐ கடந்து கொண்டிருந்தது. தொடர் நாடக கடமைக்காக காலையே கடமைக்கு திரும்பிய தொலைக்காட்சி திரைப்பட நேரத்தையும் பூர்த்தி செய்து கொண்டு இரவுக்கடமைக்கு ஆயத்தமாவதற்காக ஓய்வெடுத்தக் கொண்டிருந்தது.

ஆறுமணிக்கு முதல் போசனக் கடமையை முடிக்க வேண்டுமென்ற அவசரம் சமையலறையில் நடந்து கொண்டிருந்த வாத்தியக் கச்சேரியில் தெளிவாகத் தெரிந்தாது. இருந்தாலும் நான் கொடுத்த தேநீருக்கான ஓடர் ஏற்கப்பட்டிருந்தாலும் அது வந்து சேர்வதாய் இல்லை. மீள வலியுறுத்துமளவுக்கு என்னிடம் திரணியில்லை.

பத்திரிகையின் செய்திகள் கடந்து சிறு விளம்பரங்களையும் விழுங்கி எஞ்சியிருக்கும் மரண அறிவித்தல்களையும் என் விழி தின்று கொண்டிருந்தது எப்போது பணத்துக்காக இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொண்டேனோ அந்த அன்றே என் மானம், சூடு, சுறணை எல்லாம் காவு கொடுக்கப்பட்டு விட்டது. அந்தளவு லட்சங்களுக்கு அம்மாவால் விற்கப்பட்டதற்காக என் ஆண்மையை நிருபிக்க 4 பிள்ளைகளை மட்டுமே என்னால் பெற முடிந்தது.

காலாற ஒரு எட்டு வெளியே போய் வருவோமென்றால் நிச்சயம் அவள் இந்நேரம் வாசல்படியில் இருந்து தன் மகளுக்கு பேன் பார்த்துக் கொண்டிருப்பாள். என் வீட்டில் எதுவுமே என் மூப்பில் நடப்பதில்லை என்பதற்கு முன் வீட்டில் குடியமர்த்தப்பட்டிருக்கும் அந்த வாடகை வாசிகளின் பிரவேசமும் நல்ல உதாரணமே. இவளும் என்ன நினைத்தாளோ தெரியவில்லை அவளையே தேடிப்பிடித்து முன் வீட்டில் அமர்த்தியிருக்கிறாள்.

என் இளமை நாட்கள் எவ்வளவு இனிமையானவை. நான் காதல் சிறகுவிரித்த நாட்களை என்றுமே மறக்க முடியாது. அவள் வறிய குடும்ப பெண்ணாக இருந்தாலும் என் வீட்டில் எதிர்ப்பில்லாது போனது எல்லைகளையே கடந்த காதலாக மாற வைத்தது. கால ஓட்டம் செய்த சதியால் எல்லாம் மாற்றப்பட்டு விட்டது. சிலவேளை பிள்ளையின் எதிர்காலத்துக்காக அம்மா அப்படி செய்திருக்கலாம். பணமிருக்குமிடத்தில் குணமிருக்குமா என்பதை சிந்திக்காமல் விட்டதை எண்ணி அவர் இறுதி நேரத்திலும் வருத்தப்பட்டுக் கொண்டார்.
'டங்' என்ற ஒலியைக் கேட்டு திரும்பிப் பார்த்தேன் காலடியில் முக்கால் குவளை அளவுடன் பால் தேநீர் இருந்தது.
'ஏன் தேத்தணியை தந்திருக்கலாமே, அதுவும் முட்ட தந்திருந்திருக்கலாமே' இறுதிச் சொற்களை சற்று விழுங்கியபடியே கூறி முடித்தேன்.
'பரதேசிக் குடும்பம்.... சின்னனிலேயே இதுகளை குடிச்சிருந்தால் தானே நல்லதுகளைத் தெரியும். நாளையில இருந்து கோடிக்கை இருக்கிற வாளியை கழுவி வையுங்கோ உண்டண ஆத்தித் தாறன்' படார் என கன்னத்தில் அடித்தது போல பதில் வந்தது. மறுபேச்சின்றி மௌனமாகிக் கொண்டேன்.

இன்றாவது அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மனது சொல்லிக் கொண்டே இருந்தது. இந்நேரம் அவள் தலைவாரி முடித்திருப்பாள் மகளும் கிளம்பியிருப்பாள். மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற உந்துதலில் பாதி தேநீருடனேயே குவளையை பகிஸ்கரிப்பு செய்து கொண்டு கிளம்பினேன். அந்த உந்துதலில் எறும்பால் வரப் போகும் சிக்கலை நான் உணர மறந்தது என் தப்புத் தான்.

18 வருடமாக மனதில் புழுங்கிய விடயத்தை இன்று கொட்டி விட வேண்டும் என்ற முனைப்பு மட்டுமே மனதில் இருந்தது. அவளை காத்திருக்கச் சொல்லி விட்டு அரபு தேசம் போனதன் பிற்பாடு அம்மாவின் கடிதத்தில் அவள் யாரோடையோ போயிட்டாள் என்ற தகவல் மட்டுமே கிடைத்தது. நானும் திரும்பி வந்து தேடாத இடமே இல்லை ஆனால் அவள் பற்றி எதுவுமே அறிய முடியவில்லை.
படலையை திறந்து கொண்டு உள்ளே நுழைகிறேன். அவள் மகள் என்னை விலத்திக் கொண்டு போகிறாள். அவளது அதே முகவெட்டு ஆனால் அவள் நடை மட்டுமே என்னை மிகவும் உறுத்தியது காரணம் என் நடை போலவே இருந்தது.
அவள் வாசல் படியில் அமர்ந்து நகம் வெட்டிக் கொண்டிருந்தாள்.
'வந்து இவ்வளவு நாளாகியும் வரவில்லையே என குறை நினைக்க வேண்டாம்'
'இல்லை பரவாயில்லை' அவள் எழுந்தவாறே கூறினாள். சற்று உடம்பு பருத்து தலையில் அங்காங்கே நரையோடியிருந்தது.
'உன்னட்டை ஒன்று சொல்லவேணும்'
'இல்லை எனக்கு வேலை இருக்கிறது' அவளை வாய்திறக்க விடாமல் சொல்லி முடிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் கூற ஆரம்பித்தேன்.

'ஒன்றும் சொல்ல வேண்டாம் நடந்த தப்புக்கெல்லாம் நான் தான் காரணம். நான் செய்த பிழைக்கு மனதார மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுறன். அம்மா தான் நீ யாரோடையோ... என தப்பா சொன்னதால நானும் மாற வேண்டியதப் போச்சு'

'அடடா அந்தப் புண்ணியவான் நீங்கள் தானா?' எனக்கு நெஞ்சு ஒரு முறை பக்கென்றது. இவளுக்கு என்ன நடந்திருக்கும்.

'மன்னிக்க வேணும் அது வேற யாருமில்லை என்ர அக்கா தான். நீங்கள் வெளிநாட்டில வேற கலியாணம் செய்திட்டதாக உங்கட அம்மா ஒரு படம் காட்டினவா. அக்கா அப்ப 8 மாசமாயிருந்தவா. ஊரில உங்களுக்கும் அவளுக்கும் எழுத்து முடிஞ்சிட்டுது என்று தான் சொல்லியிருந்தனாங்கள். ஆனால் உங்கட அம்மாவோ ஊர் ஊராக படத்தைக் காட்டி அது பொய்யென நம்ப வச்சிட்டா. அக்காவும் குழந்தை பிறந்து இரண்டாவது மாசமே என்ர கையில கொடுத்திட்டு ஊர் பேச்சு தாங்கேலாமால் தூக்கில தொங்கீட்டா. அன்றில இருந்து தனிமரமாக நின்று நான் தான் பிள்ளையை வளர்த்து வாறன்'

இரண்டு பெண்களின் வாழ்வை சிரழித்த பழி தான் என்னை வதைக்கிறது என எண்ணிக்கொண்டேன். என் கால்களுக்கு கீழே ஏதோ நழுவுவது போல இருந்தது.

உடுப்பிட்டியூர்
ம.தி.சுதா
click on the image


About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

22 கருத்துகள்:

JR Benedict II சொன்னது…

கதை உண்மையில் நல்லா இருந்தது..

//அந்தளவு லட்சங்களுக்கு அம்மாவால் விற்கப்பட்டதற்காக என் ஆண்மையை நிருபிக்க 4 பிள்ளைகளை மட்டுமே என்னால் பெற முடிந்தது.//

செம வரி..

பல ஆண்கள் இவ்வாறு தான் இன்னும் சில சந்தைகளில் விற்கப்படுகிறார்கள்... முடிவிலாவது உணர்ந்தாரே...

நன்றி…(T.M. 1)

என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

tech news in tamil சொன்னது…

நல்லா இருக்கு...

கதை போலவே இல்லே. நிஜத்திலும் நடந்தபோல இருந்துச்சு.

சனாதனன் சொன்னது…

கதை அருமையா இருக்கு...
வாழ்த்துக்கள்

காட்டான் சொன்னது…

உண்மை கதையா தம்பி? அருமையான ஆக்கம்.

சிறப்பான கதை! வாழ்த்துக்கள்!
இன்று என் தளத்தில் மழை!ஹைக்கூக்கள்!http://thalirssb.blogspot.com/2012/08/blog-post_6.html

ஆத்மா சொன்னது…

அழகான கதை ஆனால் இந்த தலைப்பை எங்க்யோ இதற்கு முன்னர் கேட்ட பார்த்த ஞாபகம்........நினைவில் இல்லை

vanathy சொன்னது…

Well written sutha. Keep writing.

இது கதையா நிஜமா...? அருமையான சிறுகதை...வாழ்த்துகள் தம்பி...!

MARI The Great சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
MARI The Great சொன்னது…

அருமையான கதை நண்பரே! (TM 7)

கவி அழகன் சொன்னது…

Kathai sonna vitham pidichirukku

Seeni சொன்னது…

rasanai!

Yaathoramani.blogspot.com சொன்னது…

மனம் தொட்ட பதிவு
படித்து முடிக்கையில்
மனம் கனத்துப்போனது நிஜம்
வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 9

சிகரம் பாரதி சொன்னது…

Superb story. Plz visit to mys site.
http://newsigaram.blogspot.com

சிகரம் பாரதி சொன்னது…

அருமையான கதை. உள்ளத்தைத் தொட்ட கதை. இன்று பலரின் வாழ்க்கை இப்படித்தான் போகிறது. என் தளத்தில்: "2012 இல் உலகம் அழியும் என்கிற கூற்றை நீங்கள் நம்புகிறீர்களா?"
http://newsigaram.blogspot.com/2012/08/ulagaalivu-02.html#.UCEwevYgeKK

Unknown சொன்னது…

வணக்கம் ,
உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி.
www.thiraddu.com

அவள் நடை மட்டுமே என்னை மிகவும் உறுத்தியது காரணம் என் நடை போலவே இருந்தது.
இதுமட்டுமா உறுத்தியது ஒவ்வொன்றுமே உறுத்தியதே.............
வாழ்த்துக்கள் சுதா.இணையபிந்தியமைக்கு மன்னிப்பு கேட்கிறேன்

// என் கால்களுக்கு கீழே எதோ நழுவுவது போல இருந்தது //
இன்னும் எத்தனை சிறுகதைகள் இதே வரியுடன் முடியபோகின்றன என்று தெரியவில்லை?!

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_6632.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top