செவ்வாய், 6 டிசம்பர், 2011

இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011)

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?

இந்த வார தொகுப்பு வரவுக்கு பிந்தியமைக்கு மன்னிக்கவும் .
1. ‘3’ படத்தில் ரஜினியை கவுரவ வேடத்தில் நடிக்க வைப்பது குறித்து யோசித்து வருவதாக அவரது மகள் ஐஸ்வர்யா கூறினார்.

 2.ஆதிபகவன்பட ஹீரோயின் நீது சந்திரா, போஜ்புரி மொழியில் தயாரித்துள்ளதேஸ்வாஎன்ற படத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு பாட்னாவில் திரையிட்டு காண்பித்துள்ளார்.

3.அரவான்படத்தில் நடிக்கும் அர்ச்சனா கவி, ‘நீலதாமராஎன்ற மலையாள படத்தில் ஏற்கனவே நடித்திருக்கிறார்.

4. காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வால், ‘சோலோஎன்ற தெலுங்கு படத்தில் பிரகாஷ்ராஜ் தங்கையாக நடிக்கிறார்.

5. ‘காஞ்சனாஇந்தி ரீமேக்கில் லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய் குமார், சரத்குமார் வேடத்தில் சஞ்சய்தத் நடிக்கின்றனர்.

6. பின்னணி பாடகி சுனிதா சாரதிக்கு, நடிக்க பல்வேறு வாய்ப்புகள் வந்தபோதும் ஏற்க மறுத்துவிட்டாராம்.
தமிழில் 1988ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான, சூப்பர் ஹிட் படமானஅக்னி நட்சத்திரம்பாலிவுட்டுக்கு செல்கிறது.

7. எடிட்டர் மோகனின் 70வது பிறந்த நாளான நவம்பர் 27 அன்று எதிர்பாராத விதமாக எடிட்டர் மோகனின் வீட்டுக்கே சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார் ரஜினி.

8. கன்னட ஹீரோயின் கோமல் ஜா, தனக்கு பழைய காஸ்டியூம்களை வழங்கியதால் அதை வீசி எறிந்தார். இதனால் இயக்குனர்-கோமல் ஜா இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

9. இயக்குனர் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருந்த தாண்டவம் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.

11. தனுசின் கொலை வெறிப்பாடலானது ஆங்கிலத்தை விரட்டியடிக்க உதவும் என யுகபாரதி பாராட்டியுள்ளார்.

13. இயக்குனர் வெற்றிமாறன்ஆடுகளம்ஹிட்டுக்குப் பிறகு சிம்பு வைத்துவடசென்னைஎன்ற படத்தை இயக்குகிறார். அவருக்கு ஜோடியாக அண்ட்ரியா நடிப்பார் எனக் கூறப்படுகிறது.

14. மயக்கம் என்ன, ஒஸ்தி என தமிழில் தன் கேரியரை ஓப்பனிங் செய்திருக்கும் ரிச்சாவிற்கு அதற்குள் பாலிவுட் வாய்ப்புகள் வந்துள்ளன.

15. ‘மிரட்டல்  படத்தில் நடிக்கும் வினய், தமிழ் படங்களில் கவனம் செலுத்துவதற்காக பெங்களூரிலிருந்து சென்னைக்கு குடியேறிவிட்டார்.

 16. குள்ளநரிக் கூட்டம்  படத்தில் நடித்த ரம்யா நம்பீசன் மலையாளத்தில் 3 படம், கன்னடம், தெலுங்கில் தலா ஒரு படம் நடிக்கிறார்.

17. நடிகையாக வேண்டும் என ஜெனிலியா ஆசைப்பட்டதே கிடையாதாம். அதனால் திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டாராம்.

18. புனேயில் லண்டன் பாடகர் இமோஜன் ஹீப் நடத்திய இசை நிகழ்ச்சியில் நண்பர்களுடன் கலந்துகொண்டார் லேகா வாஷிங்டன்.

19. ஸ்ருதி ஹாசனை பிடிக்காத யாரோ, அவரை பவன் கல்யாண் நடிக்கும்கப்பர் சிங் தெலுங்கு படத்திலிருந்து நீக்கியதாக புரளி கிளப்பிவிட்டார்களாம்.

20. ‘அவன் இவன் படத்தில் போலீசாக ஹோம்லி வேடத்தில் நடித்த ஜனனி ஐயர், ‘பாகன் படத்தில் மாடர்ன் பெண்ணாக நடிக்கிறார்.

21. ராம் சரண் தேஜாவுடன் தெலுங்கு படத்தில் நடிக்க சமீபத்தில் சீனா சென்று வந்தார் தமன்னா.

22. வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து வந்த கணேஷ் வெங்கட்ராமன், பனித்துளி படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

23. வெற்றிமாறன் உதவியாளர் ரவிஅரசு இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கும் அருள்நிதி உடற்பயிற்சி செய்து 6 பேக் உடல்கட்டுக்கு மாறுகிறார்.

24. சந்தமாமா உள்பட 3 படங்களில் ஹீரோவாக நடிக்கிறார் கருணாஸ்.

25. திவ்யா  காதலருடன் தனது 29 வது பிறந்த நாளை கேரளாவில் நேற்று கொண்டாடினார்.

26. இயக்குனர் .ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படம்துப்பாக்கி” . விஜய்க்கு ஜோடியாக காஜல்அகர்வால் நடிக்கிறார்.

27. தமிழ், இந்தி, கன்னடம், மலையாள நடிகர்களின் நட்சத்திர 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு ஸ்ரேயா, பாவனா, த்ரிஷா, லட்சுமிராய் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

28. சிவாஜி, எந்திரனைத் தொடர்ந்து ரஜினியின் அடுத்த படமான கோச்சடையானுக்கும் ஸ்டன்ட் இயக்குநராக ஒப்பந்தமாகியுள்ளார் பீட்டர் ஹெயின்.

29. தனது இரண்டாவது மனைவி சம்மதத்துடன் சென்னைக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்த பிரகாஷ்ராஜ், மீண்டும் லலிதகுமாரியுடன் இணைந்து வாழ ஆரம்பித்திருக்கிறாராம்.

30. 2-வது திருமணத்துக்கு வற்புறுத்தி நடிகை வைஷ்ணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் நடிகர் தேவ் ஆனந்துக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு கடுங்காவல் தண்டனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

31. ரசிகர்களுக்காக முன்பு கமல்ஹாஸன் மய்யம் என்ற பத்திரிகையை தொடங்கி சில காலம் நடத்தினார். இப்போது மய்யம் பத்திரிகை முழுமையான இணைய இதழாகிறது.

32. இந்தி படம் இயக்குவதற்காக மும்பையில் வீடு வாங்க திட்டமிட்டுள்ளார் நடிகர் தனுஷ்.

33. பிரசாந்த் மறுமணம் விரைவில் நடக்கும் என்று அவரது அப்பா தியாகராஜன் கூறினார்.

34. கோச்சடையான் படத்தில் ரஜினியின் தங்கை வேடத்தில் சினேகா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

35. ஹிந்தி சினிமாவில் காதல் மன்னன் என பெயர் பெற்ற நடிகர் தேவ் ஆனந்த் அதிகாலை மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88.

36. வருடந்தோறும் தனது பிறந்த நாளான டிசம்பர் 1ம் தேதி முழுஉடல் பரிசோதனை செய்துகொள்ள தவறுவதில்லை சமீரா ரெட்டி.

‘37. ரா ஒன்படத்தை தொடர்ந்து ஷாருக்கான் நடித்துள்ளடான் 2’ படமும் தமிழில் ரிலீஸ் ஆகிறது.

38. மறைந்த நாகி ரெட்டியின் விஜயா புரொடக்ஷன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் அஜீத். சிவா இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை.

39. சூர்யாவை வைத்து அடுத்த படம் இயக்குகிறார் வெங்கட் பிரபு.

40. மகேஷ்பாபு நடித்ததி பிஸ்னஸ்மேன்தெலுங்கு படம் தமிழில் மொழிமாற்றம் ஆகி உள்ளது. இதில் தமிழ் வசனங்களை மகேஷ் பாபுவேமாட்லாடிஇருக்கிறார்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

22 கருத்துகள்:

iii.hot rice to me...

நல்ல தொகுப்பு.

Yoga.S. சொன்னது…

வணக்கம்!அருமையான தொகுப்பு.முன்னேற்றம் தெரிகிறது,ஹி!ஹி!ஹி!!!!!!

காட்டான் சொன்னது…

வணக்கம் தம்பி 
நல்ல தொகுப்பு.
நாலு சினிமா புத்தகத்தை ஒரே இடத்தில் படித்த திருப்தி. நன்றி.

நிரூபன் சொன்னது…

மச்சி, சுடச் சுடச் செய்திகளைத் தொகுத்து தந்திருக்கிறீங்க.
ரொம்ப நன்றி!

Unknown சொன்னது…

பேசாமல் வாரா வாரம் காத்திருந்து உன் பதிவை படித்தால் போதும் சினிமாவில் தேறிவிடலம் போலிருக்கே
கலக்கல் மச்சி

Philosophy Prabhakaran சொன்னது…

நிறைய பழைய செய்திகளுடன் சில புதிய செய்திகளும் கிடைத்தன...

சுதா SJ சொன்னது…

சூப்பர் பாஸ்... ஜெனிலியா செய்திதான் வருத்தம் தருது.... அவ்வவ்

K.s.s.Rajh சொன்னது…

////. ‘3’ படத்தில் ரஜினியை கவுரவ வேடத்தில் நடிக்க வைப்பது குறித்து யோசித்து வருவதாக அவரது மகள் ஐஸ்வர்யா கூறினார்.////

அட சந்தோசமான செய்தி

K.s.s.Rajh சொன்னது…

////தமிழ், இந்தி, கன்னடம், மலையாள நடிகர்களின் நட்சத்திர 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு ஸ்ரேயா, பாவனா, த்ரிஷா, லட்சுமிராய் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
////

ஆமா நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்லியுள்ளீர்கள் என்னவாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் விளம்பர தூதர்களாகவா?

K.s.s.Rajh சொன்னது…

அனைத்து தொகுப்பு அருமை

கவி அழகன் சொன்னது…

தொகுப்பு அரு மை

KANA VARO சொன்னது…

சினிமா பதிவர் சுதா வாழ்க.. இதெல்லாம் கால மாற்றமோ?

ஹேமா சொன்னது…

சினிமா பிடிக்காவிட்டாலும் தொகுத்துத் தரும் அழகு வாசிக்க வைக்கிறது சுதா !

bandhu சொன்னது…

//தனுசின் கொலை வெறிப்பாடலானது ஆங்கிலத்தை விரட்டியடிக்க உதவும் என யுகபாரதி பாராட்டியுள்ளார்.//
உண்மை. இந்த பாட்டில் உள்ள கேவலமான, தப்பும் தவறுமான, ஆங்கிலத்தை கேட்டால், அது தானாகவே வெளியேறிவிடும்!

Yaathoramani.blogspot.com சொன்னது…

அறியாத சினிமா சம்பத்தப்பட்ட தகவலக்ளை சுருக்கமாகவும்
அருமையாகவும் பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 6

மகேந்திரன் சொன்னது…

நிறைய சினிமா செய்திகளை தெரிந்துகொள்ள முடிகிறது நண்பரே..
நன்றிகள் பல...

அழகு தொகுப்பு.

தனிமரம் சொன்னது…

வணக்கம் சகோதரம்!
சில தவிர்க்கமுடியாத தேடல் அதுதான் வலைப்பக்கம் வாராது குறைவு.
சினிமா செய்தியை தாங்கி வந்த பதிவு அசத்தல். ஆயினும் இப்போதெல்லாம்  சினிமா மோகம் தீர்ந்து விட்டது போலும் அதுதான் காத்திரமான ஈழம் பற்றிய பதிவுகளை நாடி ஓடுகின்றது மனது.உங்களிடம் பழையபடி அதிகமான ஈழம் பற்றிய பதிவு வரும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.சில வாரங்களின் பின் பதிவுலகில் மீளவும் கைகோர்ப்பேன் சகோ.

ஜனா சொன்னது…

very nice..

PUTHIYATHENRAL சொன்னது…
M.R சொன்னது…

அருமையாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள் நண்பரே

த.ம 9

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top