புதன், 5 ஜனவரி, 2011

இலங்கையில் திணறும் காவலன் விநியோகமும் யாழ்ப்பாணத்து எதிர்ப்பும்

PM 10:52 - By ம.தி.சுதா 37

         அனைவரின் எதிர்பார்ப்பிற்கும் உள்ளாகி இருப்பது இளைய தளபதி விஜயின் காவலன் திரைப்படம் தான் ஆனால் அது எதிர் கொள்ளும் சர்ச்சைகளுக்கு அளவே இல்லை ஏற்கனவே அசினுக்கு வந்த பிரச்சனையை சிமானின் கோபத்தால் அவர் வெற்றிகரமாகத் தடுத்தார் ஆனால் அவரை தலையிடி விடுவதாயில்லை.
               இலங்கையில் ரஜனி படங்கள் போல் அவர் படத்தை யாரும் அடிபட்டு வாங்காதது அவர் மீதான நம்பிக்கையை சிதறடித்துள்ளது. யாழில் மனோகரா வாங்குகிறது என முன்னரே உறுதியானாலும் பொதுவாக முதலில் ஆறு திரையரங்குகளே முன்வந்திருந்தது இப்போ அது எட்டு ஆகா அதிகரித்துள்ளது.

வெளியிடப்படும் திரையரங்குகள்
சினிசிட்டி
கொன்கொட்
நெல்சன்(திருகோணமலை)
வசந்தி (வவுனியா)
ஈரோஸ்
மனோகரா (யாழ்ப்பாணம்)
அதே போல் மட்டக்களப்பில் ஒரு திரையரங்குவாங்கியுள்ளது
 மற்றையதன் பெயர் இன்னும் வெளியாகல.
                  இது இப்படியிருக்க இன்று ஒரு இணையம் வெளியிட்ட செய்தி பரபரப்பை எற்படுத்தியுள்ளது. யாழ் இளைஞருக்கு இளைய தளபதியின் அறிவுரை என தலைப்பிட்டு ஒரு பதிவு சில படங்களுடன் வெளியாகியுள்ளது அதில் முதல் படத்தை என்னால் நம்ப மடியவில்லை பத்துத் தலை நாகத்தின் விளையாட்டைத் தான் காட்டியுள்ளார்கள்..
         அப்படி விஜய் கூறியிருக்க சந்தர்ப்பம் இருக்காது எனத் தான் நான் நினைக்கிறேன். ஆனால் கூறியிருந்தால் எனது ஒரு விசேட பதிவிற்கும் ஐந்து கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்க வேண்டியிருக்கும். அதற்காக இங்கு எல்லாம் சீராக நடப்பதாக நான் கூற வரவில்லை ஆனால் எந்தளவிற்கு என்ற அளவுகோல் தெரியும்..
        ஏதோ ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசீல மனுசனைக் கடிச்ச கதையாட்டாம் நடக்காது என நினைக்கிறேன் மக்கள்ஸ் வெளிநாட்டு தமிழரை உறுத்தும் விடயங்களில் ஒன்று தமிழீழம் மற்றையது யாழ்ப்பாணம் ஏதோ வெட்டப் போகிற அட்டில மஞ்சள் தண்ணீர் கரைத்து ஊற்றி பரிவு காட்டி வெளி நாட்டவரை மடக்கும் எண்ணம் இருந்தால் எமக்காக மேடை போட்டு கதைத்து ஒரு கணணி நிலையம் போட்டுத் தாருங்கள்.. தலைவா..

குறிப்பு - விஜய் ரசிகர்களே மன்னியுங்கள் இந்தச் செய்தியை போட்டுள்ள தளமும் விஜயிற்கு பிரத்தியோகமாக உருவாக்கப்பட்ட ஒரு வலைத் தளமாகும்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

37 கருத்துகள்:

நிரூஜா சொன்னது…

ஐ, சுடுசோறு

டிலீப் சொன்னது…

மச்சி கலக்குறிங்க...
இதையும் பாருங்க...
காவலன் படத்துக்கு மீண்டும் ஆப்பு

ஷஹன்ஷா சொன்னது…

நல்ல விடயம்....சொல்லீட்டீங்க....படத்தை வெற்றியாக்குவம்....

விஜய் பெயரை கெடுக்கவே சிலர் அவர் பெயரில் வலைதளம் உருவாக்குகின்றனர்...ஏன் facebook பக்கம் கூட இருக்கே...

Prabu Krishna சொன்னது…

//விஜய் பெயரை கெடுக்கவே சிலர் அவர் பெயரில் வலைதளம் உருவாக்குகின்றனர்...ஏன் facebook பக்கம் கூட இருக்கே... //

நிதர்சனமான உண்மை!!

நிச்சயம் இந்த தடைகளை தளபதி உடைத்து எறிவார். இத்தனை கருத்துகளுக்கும் அவர் காட்டும் அமைதி ஒன்றே இதற்கு சாட்சி!

சகோதரா அப்படியே அந்த விஜய் விடயம் போஸ்டரையும் இணைத்திருக்கலாம். அசினுடன் சேர்ந்ததால் விஜய்க்கு இந்தக் கஸ்டம் தானாக தேடிய கஸ்டம் இது. தவிர்த்திருக்கலாம் ஆனாலும் சிவகாசி போக்கிரி வெற்றி ஜோடி என்ற குருட்டு அதிர்ஷ்டத்தை நம்பி கஸ்டப்படுகின்ரார்.

ஷஹன்ஷா சொன்னது…

தமிழ் மணத்தின் போட்டியில் இறுதி சுற்றில் இருக்கும் தங்களின் http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.html பதிவுக்கு வாழ்த்துகள்

my wishes too sutha.whatever said,vijay is a great commercial actor.it's no point to oppose kavalan

//விஜய் பெயரை கெடுக்கவே சிலர் அவர் பெயரில் வலைதளம் உருவாக்குகின்றனர்...ஏன் facebook பக்கம் கூட இருக்கே... //

நிதர்சனமான உண்மை!

தமிழ்மணத்தில் இறுதிச்சுற்றிலும் வெற்றிபெற வாழ்த்துக்கள் சுதா...

pichaikaaran சொன்னது…

யாழ் செய்திகளை இன்னும் அதிகப்படுத்துங்கள்

Kandumany Veluppillai Rudra சொன்னது…

தகவலுக்கு நன்றிகள்

Jana சொன்னது…

தம்பி..படத்தில் ராச்கிரன் சீரியஸாக நடிப்பதும், தணிக்கை குழுவே கண்கலங்கினர் என்ற தகவலும் கொஞ்சம் யோசிக்க வைக்கின்றது. ராச்கிரன் இந்த படத்தில் விஜய்யின் மீட்பார் என உள்ளே ஒரு பட்சி சொல்லுது.
கவனம்.

Unknown சொன்னது…

அங்குள்ள நிலவரம் புரிகிறது சகோ.. பகிர்வுக்கு நன்றிகள்.

தர்ஷன் சொன்னது…

// தம்பி..படத்தில் ராச்கிரன் சீரியஸாக நடிப்பதும், தணிக்கை குழுவே கண்கலங்கினர் என்ற தகவலும் கொஞ்சம் யோசிக்க வைக்கின்றது. //

அட நீங்கள் வேறு ஜனா அண்ணா? தணிக்கை அதிகாரிகள் கலங்கியது படம் பார்க்கப் போகும் எங்களை நினைத்தாயிருக்கலாம்

மாணவன் சொன்னது…

தெளிவா சொல்லியிருக்கீங்க நண்பா பகிர்வுக்கு நன்றி

thamizmanamதமிழ்மனம் கூட சண்டையா? இணைக்க முடியலையே?

பதிவு நல்லாருக்கு

விஜய்ரசிகர்கள் மைனஸ் ஓட்டு போட வழி இல்லை... ஹா ஹா தமிழ்மணத்துல இணைஞ்சாத்தானே?

வைகை சொன்னது…

இவர்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே போதும் என்று நினைக்கிறேன்!

பெயரில்லா சொன்னது…

சிறுத்தை காவலனை துவம்சம் பண்ணிடும்னு நினைக்கிறேன்..

THOPPITHOPPI சொன்னது…

//மூஞ்சி புத்தகம்.//

இது என்ன புதுசா இருக்கு நீங்க எழுதிய புத்தகமோ என்று நினைத்தேன். facebook தமிழ் பெயர்தான் இப்படியா?

ஹஹாஹா...........

Unknown சொன்னது…

/////தர்ஷன் said...
// தம்பி..படத்தில் ராச்கிரன் சீரியஸாக நடிப்பதும், தணிக்கை குழுவே கண்கலங்கினர் என்ற தகவலும் கொஞ்சம் யோசிக்க வைக்கின்றது. //

அட நீங்கள் வேறு ஜனா அண்ணா? தணிக்கை அதிகாரிகள் கலங்கியது படம் பார்க்கப் போகும் எங்களை நினைத்தாயிருக்கலாம்/////

ஆகா! ஆளாளுக்கு பீதியைக் கிளப்புறாங்களே!

படத்துல பன்ச் டயலாக், ஹீரோவைப் போற்றிப்(?!) பாடும் பாடல் இல்லையாம்! ஒருவேளை நல்ல படமா வருமோ??

என்ன ஆனாலும்(?!) சரி நான் காவலன் படத்தை பார்த்தே தீருவேன்!

பாலா சொன்னது…

//விஜய் பெயரை கெடுக்கவே

அவர் என்ன பெயர் சம்பாதித்தார் கெடுப்பதற்கு. அவரது பெயரை கெடுப்பதற்கு அவர் மற்றும் அவருடைய அப்பாவே போதும்.

டி40 விழாவில் விஜய் உம்மணாம் மூஞ்சியை பார்த்து என் தாயார் திட்டியதை ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். நன்றி

அன்புடன் நான் சொன்னது…

குருவி... சுறா போல இதுவும் நல்லா “ஓடுமாங்க”?

nalla pathivu parattugal

எப்பூடி.. சொன்னது…

பாலா

//அவர் என்ன பெயர் சம்பாதித்தார் கெடுப்பதற்கு. அவரது பெயரை கெடுப்பதற்கு அவர் மற்றும் அவருடைய அப்பாவே போதும்.//

அதுதானே ? :-)

Unknown சொன்னது…

பிரச்சனை பெரிதாகத்தான் போகுதோ தகவலுக்கு நன்றி சகோதரா.

Unknown சொன்னது…

சுட்டச்சுட பதிவிட்டதட்க்கு நன்றி சகோதரா.

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்
http://pirashathas.blogspot.com/2011/01/blog-post_07.html

http://rkguru.blogspot.com/ சொன்னது…

பதிவு நல்லாருக்கு

Muruganandan M.K. சொன்னது…

திரைப்பட விநியோகம் சம்பந்தமான பல விடயங்கள் எனக்குப் புதியவை. ஆர்வமுடன் படித்தேன்.

வினோ சொன்னது…

விஜய் பாவம்....

arasan சொன்னது…

குருவி... சுறா போல இதுவும் நல்லா “ஓடுமாங்க”?//

"வில்லு" மாதிரி சீறி பாயும்

arasan சொன்னது…

பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே .. பொறுத்திருந்து பார்ப்போம்

arasan சொன்னது…

வினோ said...
விஜய் பாவம்..//

நாமும் தாங்க

ஐயோ! ஐயோ! இன்னும்மா நம்பள நம்பிக்கிட்டு இருக்காங்க இந்த பய புள்ளைக - விஜய்

Unknown சொன்னது…

காவலன்....வெற்றி நிச்சயம்...!!!!!அடிங் கொய்யாலே...எவன்டா தோல்வி எண்டுறது??

Prabu M சொன்னது…

தொழிலில் கவனம் வேண்டும் வெற்றியின்மீது மட்டும் கவனம் செலுத்துவது ஆபத்தானது.... விஜய் இன்னும் தன் தொழிலைப் புரிந்துகொள்ளவே இல்லையோ என்றுதான் யோசிக்க வைக்கிறது..

பரமபதபாம்புகளுக்கு நடுவே வளைந்து நெழிந்து பிழைக்கப் பாடுபடும் வேளையில் அவருக்கு அரசியல் ஆசைவேறு!!

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top