செவ்வாய், 4 ஜனவரி, 2011

பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel

            யாருமே எதையும் எதிர் பார்த்து நடப்பதில்லை அதில் ஒன்று தான் மரணமும் அது யார் இவரென்று பாகுபாடு பார்ப்பதில்லை அதன் வலையில் வீழ்ந்தவர் தான் டிஸ்கோ உலகின் மன்னனாக திகழ்ந்த பொபி பெரல் (Bobby Farrell) ஆவார்.

                  அவர் இறக்கும் போதும் ஒரு இளைஞனாகவே இறந்தது தான் அதிசயமாகும் இப்பாடலை பாருங்கள் என்ன ஒரு வேகம் என்ன ஒரு உடல் கட்டு இந்த 61 வயதில் எவ்வளவு நேரம் தலை கீழாக நிற்கிறார் பார்த்தீர்களா ? (இந்த வீடியோ மொஸ்கோவில் இடம் பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 30.10.2010 அன்று பெறப்பட்டதாகும் அதிகமாக இன்னும் பலர் பார்க்காத காணோளியாகும் இன்னும் ஒரு சில நாட்களுக்குள் இந்த கானோளி சொனி மியுசிக்கால் தடுக்கப்படலாம்)

      கடந்த கிறிஸ்மஸ் தினத்திற்காகத் தான் நான் அவர் குழுவைப் பற்றி ஒரு ஆக்கம் வரைந்திருந்தேன் அவரது திறமைகள் வர்ணிக்க முடியாதவை 1949 புரட்டாதி மாதம் 6 ம் நாளில் Aruba தீவில் (Netherlands Antilles) எனும் இடத்தில் பிறந்த இவர் தனது பதினைந்தாம் வயதிலேயெ ஒரு மாலுமியாக மாறி தன் தொழில் துறை முறையை மாற்றிக் கொண்டார் 1975 ல் உருவாக்கப்பட்ட இவரது bony m என்னும் குழுவானது உலகத்தையே ஒரு முறை முணுமுணுக்க வைத்த பாடல் வரிகளுக்குச் சொந்தமாக மாறியது. இவரது mary's boy child கிறிஸ்மஸ் பாடல் தெரியாதவரே இருக்க முடியாது
         இவரது 2 மில்லியன் அல்பங்கள் பிரித்தானியாவில் விற்கப்பட்டது 1986 ஆம் ஆண்டு இவரது குழு கலைக்கப்பட்டாலும் அத் தகவல் சரியாக பலரை சேராததால் இவர் விபத்தில் இறந்ததாகவே பலரால் கருதப்பட்டது. ஒரு மகனையும் மகளையும் பெற்றிருந்த இவர் மீண்டும் தனது குழுவை ஒருங்கிணைக்க முயன்றாலும் தனது பழைய இடத்தை பற்றிப் பிடிக்க முடியாமல் போனது வருத்தத்திற்குரிய விடயமே...அந்த முதிய கலைஞனின் இளமைத் துடிப்பைத் தான் காணோளி காட்டுகிறது.
          கடந்த 29.12.2010 அன்று St. Petersburg என்ற ஹோட்டலில் 61 வயதான நிலையில் மாரடைப்பால் எமை விட்டுப் பிரிந்த அவரை என்றுமே மறக்க முடியாது... இத் தகவலை உடனே எனக்கு அறியத் தந்த லிங்கண்ணா விற்கு நன்றி அனால் என்னால் உடனே பதிவிட முடியல மன்னிக்கவும்.

எமை விட்டுப்இவரது மேலதிக விபரங்கள் எனது முன்னைய பதிவில் உள்ளது.

குறிப்பு - சிறிய பதிவிட்டதற்கு மன்னிக்கவும் அவரைப் பற்றி இன்னும் பல சொல்ல இருந்தாலும் எனது உடல் நிலையும் வேலைப்பழுவும் இடம் தரமறுக்கிறது. என்னைத் தொடர்பு கொண்டு அடிக்கடி நலம் விசாரித்த எனது அன்பு உறவுகளுக்கு மிக்க நன்றி... கடந்த ஒரு சில பதிவுகளில் எனது அறியாத்தனமான குழப்படியால் கூகுல் ரீடரில் எனது பதிவு படிக்க முடியாமல் போயிருக்கலாம் இப்போ எல்லாம் திருத்தி விட்டேன்.... முடியாவிடில் சொல்லுங்கள்...

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

46 கருத்துகள்:

Prem சொன்னது…

இவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்... ஆனால் இவ்வளவு தகவல் அவரைப் பற்றி பகிர்ந்ததற்கு நன்றி அண்ணன்... :)))

sinmajan சொன்னது…

ம. அருமையான பாடகர்

பெயரில்லா சொன்னது…

அர்ஜண்ட் வேலையா...பதிவு இன்னும் அலங்காரம் செய்திருக்கலாம்..அருமையான பகிர்வு

THOPPITHOPPI சொன்னது…

நண்பரே முதல் புகைப்படத்தை பார்த்தவுடன் சிரித்துவிட்டேன் அவரைப்பற்றி படிக்காமல்

உங்களது உடலுக்கு என்ன பிரச்சினை நண்பா?

Unknown சொன்னது…

ஆகா அழகுத்தமிழில் இவரைப்பற்றி சிறப்பாக கூறியுள்ளீர்கள்
மிக்க நன்றி சகோதரம்

Unknown சொன்னது…

எனது உடல் நிலையும்....///


அப்படியா சகோதரம் ?? நான் நினைத்தேன் வன்னிப்பக்கம் சென்றுவிட்டீர்கள் என்று
மழை நேரம் கொஞ்சம் கவனமாக இருக்கப்ப் பாருங்கள் . விரைவில் குணமடைய இறைவனைப் பிராத்திற்கின்றேன்

arasan சொன்னது…

நண்பரே ... நல்லா ஓய்வு எடுங்க ...
விரைவில் குணம் அடைய இறைவனை வேண்டிகொள்கிறேன்

எப்பூடி.. சொன்னது…

உடல் நிலையை கவனியுங்கள், அப்புறம் வேலையையும் கவனியுங்கள், எனக்கு நீங்கள் சொல்லியிருக்கும் நபர் யாரென்றே தெரியாவிட்டாலும் அஞ்சலிகள்.

take care, get well soon.....

Philosophy Prabhakaran சொன்னது…

உண்மைதான்... அவர் இறந்தபிறகு அவரது பாடல்கள் இப்போது மென்மேலும் ஹிட் ஆகியிருக்கிறது...

e\எனக்கு தெரியாத மேட்டர்.. பகிர்வுக்கு நன்றி சுதா

டிலீப் சொன்னது…
டிலீப் சொன்னது…

Get Well Soon My Friend

pichaikaaran சொன்னது…

new information

சசிகுமார் சொன்னது…

விரைவில் குணம் அடைய இறைவனை வேண்டிகொள்கிறேன்

ஆனந்தி.. சொன்னது…

அட ஆமாம் மதி...நானும் படிச்சேன் டெக்கன் குரோனிகல் பேப்பர் இல்..சட்டுன்னு சகோ உங்களை தான் நினைச்சேன்..ஆஹா...இப்ப தானே இது பத்தி போஸ்ட் போட்டாரே சகோ னு...

அப்புறம் முதலில் உங்க உடம்பை கவனிங்க..

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

உங்களின் இலங்கை கதை திருடிய இயக்குனர் தமிழ்மணத்தில் இறுதி சுற்றிற்கு தேர்வாகியுள்ளது நண்பரே....வாழ்த்துக்கள்

Jana சொன்னது…

கலைஞர்கள் இறந்துவிட்டதாக சொல்வது அபத்தம். உன்னத கலைஞன் என்றும் தன் கலைவடிவில் வாழ்ந்துகொண்டே இருக்கின்றான்.

Unknown சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

கலைஞனுக்கு அஞ்சலி

இறப்பு ஒரு தொடக்கமே முடிவல்ல...........

டிலான் சொன்னது…

தவறான தகவல்களால் நானும் இவர்கள் அப்படியே குறுர்ப்பாக பிளைட் கிராஸில மரணம் அடைந்ததாகத்தான் இன்றுவரை நினைத்திருக்கின்றேன். தகவலுக்கு நன்றி மதிசுதாத்தார்.

சகோதரா உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்...
நல்ல பகிர்வு...

மு.லிங்கம் சொன்னது…

உமது நலம் முதல், அப்புறம் யாவும்...

தங்களின் தேடலும் ஆங்கில பாடல்கள் பற்றிய அறிவும் என்னை வியப்படைய வைக்கிறது. இந்த மதிசுதாவை நான் முன்னர் கடமையாற்றிய வானொலியின் வெள்ளிப் பொழுதின் கவிதையூடாகவோ அல்லது வெறொரு நிகழ்ச்சியூடாகவோ கேள்விப்பட்டுள்ளேன். அல்லது தங்களின் ஆக்கங்களை வன்னியில் வாசித்துள்ளேன் என்று நினைக்கிறேன். சுடு சோறு எனும் பதம் இத்தனை துன்ப துயர அவலங்களுக்குப் பின்னாலும் எங்கள் மனதில் இன்றும் நிற்கிறது என்பதை எண்ணி ஆச்சரியபடுகிறேன். அதனை மீண்டும் நினைவுபடுத்திய சகோதரனுக்கு நன்றிகள். தொடர்ந்தும் எழுதுங்கள். நானும் மைக்கல் ஜாக்ஸனின் தற்கொலையின் பின்னுள்ள சதி விடயங்கள் பற்றி நேரம் கிடைக்கும் போது எழுதலாம் என நினைகிறேன். எனக்கு முதல் பின்னூட்டமிட்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

உடல் நிலை, வேலை இவை இரண்டிற்கும் முதலில் முக்கியத்துவம் கொடுங்கள். பின்னர் வலைப்பதிவாக இருக்கட்டும்.

what happened sutha to you?got treatment? anyway take care.be safe.nice post.i have interest to know about hollywood.so write more.

Muruganandan M.K. சொன்னது…

சிறப்பான பாடகர் பற்றி பல தகவல்களைதைத் தந்ததற்கு நன்றி. உடல் நலமில்லை என அறிந்து கவலையடைகிறேன். முதலில் அதைக் கவனியுங்கள். விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன். கடமையுணர்வுள்ள பல மருத்துவர்கள் உள்ள இடம் யாழ் மாவட்டம். நன்கு கவனிப்பார்கள். கவலை வேண்டாம்.

sathishsangkavi.blogspot.com சொன்னது…

பகிர்வுக்கு நன்றி சுதா...

செல்வா சொன்னது…

//இவரது 2 மில்லியன் அல்பங்கள் பிரித்தானியாவில் விற்கப்பட்டது 1986 ஆம் ஆண்டு இவரது குழு கலைக்கப்பட்டாலும் அத் தகவல் சரியாக பலரை சேராததால் இவர் விபத்தில் இறந்ததாகவே பலரால் கருதப்பட்டது//

இரண்டு மில்லியன் ஆல்பங்களா ..? நம்பவே முடியலைங்க ..!

test சொன்னது…

பகிர்வுக்கு நன்றி! என்னாச்சு உடம்புக்கு? உங்கள் updates எனது dashboardஇல் தெரியவில்லை! அதான் லேட்டா வருகிறேன்!

ஹேமா சொன்னது…

நிறைவான தேடல் சுதா.
தெரியாதவர்களுக்கும் அவர் பாடல் தேடிப் போகும் விமர்சனம்.

என்ன சின்னபெடியனுக்கு...உடம்பைப் பாத்துக்கொள்ளுங்கோ !

கவி அழகன் சொன்னது…

என்னடாப்பா உடம்புக்கு கவனமாய் பாத்துக்கொள்
சிவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்
சுகம் இருந்தால் தான் சுதா வாய் இருக்கலாம்
என்ன ஒரு அலசல் பார்த்து வியப்படைகிறேன்

நிலாமதி சொன்னது…

பதிவுக்கு நன்றி மதி.சுதா..........பலர் மறந்து விட்டாலும் மறக்க கூடாத ஒருவரை பற்றி அழகாய் தந்து இருக்கிறீர்கள். அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் மறையாது

நிலாமதி சொன்னது…

பதிவுக்கு நன்றி மதி.சுதா..........பலர் மறந்து விட்டாலும் மறக்க கூடாத ஒருவரை பற்றி அழகாய் தந்து இருக்கிறீர்கள். அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் மறையாது

parattugal

Assouma Belhaj சொன்னது…

good post
http://filmsvijay.blogspot.com

Chitra சொன்னது…

சிறிய பதிவிட்டதற்கு மன்னிக்கவும் அவரைப் பற்றி இன்னும் பல சொல்ல இருந்தாலும் எனது உடல் நிலையும் வேலைப்பழுவும் இடம் தரமறுக்கிறது.


..... எப்படி இருக்கீங்க? லீவு முடிந்து இப்போதான் வருகிறேன். சீக்கிரம், பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன்.

Unknown சொன்னது…

அன்னாருக்கு எம் அஞ்சலிகள்.
பகிர்வுக்கு நன்றி ம.தி.சுதா.

Unknown சொன்னது…

உங்கள் உடல் நலம் பெற இறைவனை வேண்டுகிறோம் ம.தி.சுதா.

ஷஹன்ஷா சொன்னது…

மீண்டும் நல்ல தகவல்...ஆனால் கவலைகளுடன்...

ஆத்மா சாந்தியடைய பிராத்தனை செய்வோம்...

உங்கள் உடல் நலம் தேற இறைவனை வேண்டுகின்றேன்....

Sivatharisan சொன்னது…

உடல் நிலையை கவனியுங்கள், அப்புறம் வேலையையும் கவனியுங்கள்,

உங்கள் உடல் நலம் தேற இறைவனை வேண்டுகின்றேன்...

பதிவுக்கு நன்றி

ஆமினா சொன்னது…

மவரை பற்றி இப்போது தான் கேள்விபடுகிறேன்..


தகவலுக்கு நன்றி!!!

உடல் நிலையை கவனித்துக்கொள்ளூங்கள்

Kandumany Veluppillai Rudra சொன்னது…

தரமான பாடகர்,திறமையான பாடகர்,அவரின் இழப்பு மேற்கத்திய இசையை ரசிபவர்களுக்கு ஒரு கவலைதான்

Prabu M சொன்னது…

வழக்கம்போல அருமையான பதிவு...
உடலுக்கு என்ன நண்பா?
உடல் நிலையைக் கவனித்துக் கொள்ளவும்...

Take care Friend...
Get well sooon...

take care boss...........!

ம.தி.சுதா சொன்னது…

என் அன்பு உறவுகளே எம் மீது உங்களுக்கிருக்கும் அக்கறைக்கு மிக்க நன்றி.... தங்கள் இத்தனை பேரது அன்புக்கும் பாத்திரமானவன் எனும் போது பெருமிதமாக இருக்கிறது.. நன்றி...

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top