வியாழன், 13 ஜனவரி, 2011

நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)

                நான் அடிக்கடி சொல்லும் வசனம் இது தான் முந்த நாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான் நான் பதிவுலகில் இது வரை எதையுமே நான் சாதிக்கவில்லை ஆனால் இத்தனை உறவுகள் எப்படிக் கிடைத்தன என்பது எனக்கே அதிசயமான விடயமாகும். என்னை இத் தொடர் பதிவுக்கு நல்ல நேரம் சதீஸ் அண்ணா அழைத்திருக்கிறார் அவரது வேண்டுகோளை ஏற்றுத் தொடர்கிறேன்.
            நான் பதிவுலகிற்கு வந்து இன்றுடன் 212 நாள் ஆகிறது நான் இங்கு எப்படி வந்தன் என்று சொல்வதே நல்லது என நினைக்கிறேன் தடுப்பு முகாமில் இருந்த காலத்தில் குறிப்பிட்ட ஒரு பத்திரிகைக்கே அனுமதி இருந்த நேரம் நல்ல மனம் கொண்ட எமது ராணுவ அதிகாரியால் (கருணாநாயக்க) தினக்குரல் பத்திரிகை கிடைக்கும் அதில் உள்ள யாழ்தேவி இணையத்தால் இணைய அறிமுகப்பகுதிதான் அப்பப்போ பத்திரிகைக்கு கிறுக்கிக் கொண்டிருந்த என்னை இப்படியான ஒரு ஆர்வத்தை இட்டுத் தந்தது.
             வெளியே வந்த போது தட்டச்சே எனக்கு தெரியாது (இப்போதும் சரியாகத் தெரியாது தான்) ஒரு வலைப்பூவை எப்படித் திறப்பது என திண்டாடிக் கொண்டிருந்தேன் சரி என்ன வந்தது ஒன்றை திறந்து பார்ப்போம் எனத் திறந்து விட்டு சாதாரண பாமினி எழுத்துருவில் அடித்து போட்டேன் எல்லாம் ஆங்கில எழுத்தாகவே இருந்தது இது என்ன புது குழப்பமடா என நினைத்து விட்டு குருஜீ பற்றி என் நண்பன் சொன்னான் அங்கே கூகுல் தேடல் பொறியில் உள்ளது போல் தமிழ் தட்டச்சு இருக்கிறது அதைக் கொண்டு ஒரு கவியை சொடுக்கிப் பெற்று அதை கட் பண்ணிக் கொண்டு வந்து இட்டது தான் எனது முதல் பதிவாகும் என் முதல் பதிவு - அம்மா மகேஸ் தில்லையம்பலத்திற்கு...
அதற்கு எனது நெருங்கிய உறவுக்காரரான லிங்கம் அவர்கள் எனக்கு முதலாவது பாராட்டை தந்திருந்தார். இப்போது NHM WRITTER பெரிதம் உதவியாக இருக்கிறது.
        முற் கொடுப்பனவு இணைய இணைப்பால் சோறு வித்த எனது பதிவுகளை யாரும் வாங்க வராததால் நாறிப் புளித்தது அத்தனையையும் துலாவி எடுத்தேன் மீண்டும் சூடாக்கிக் கொடுக்கிறேன்.. அதன் பின் முதல் முதல் என்னை எப்படியோ அடையாளம் கண்டது பதிவர் ஜனாவாகும் அடுத்ததாக எப்பூடி ஜீவதர்சன் வந்து பல சந்தேகங்களைத் தீர்த்தார்.
            அதன் பின்னர் தான் எனது நெருங்கிய சகோதரனாக மாறிவிட்ட அட்ராசக்க சீபி செந்தில்குமார் எனைக் கண்டு கொண்டார் இன்று இந்தளவு உறவுகள் எனை அடையாளம் கண்டு கொண்டதற்கு பிரதான காரணம் அவரது பதிவுகளில் எனக்கு வழங்கும் பாராட்டுகள் தான் எனக்கே தெரியாத ஒன்றான சமூகப் பதிவாளர் என்ற முத்திரையை குற்றினார். (எனது பேய்பால் கணக்கிலக்கம் அவரிடம் தான் இருக்கிறது என்றால் பாருங்களேன்.. மாப்பு இரவைக்கு ஆட்டோ வரப் போகுது தயாராயிரு)

       அதன் பின் ஒரு நாள் எனது மூஞ்சிப்புத்தக சகோதரி ஒருவரான ரோஜாக்கள் பிரசாந்தி அருள்தாசனிடம் இருந்து இப்படி ஒரு மடல் வந்தது 

“தம்பி உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது நல்லதொரு எதிர்காலம் உங்களுக்கு இருக்கிறது அத்துடன் உங்கள் டெம்பிளெட்டை வடிவாக மாற்றலாமே உதவி செய்யவா”
இப்போதுள்ள தள டெம்பிளெட்டை அவர் தான் இட்டுத் தந்தார் இப்போ அவர் எனது உடன் பிறந்த அக்காவாகவே மாறிவிட்டார். அதே போல் இந்த பதிவுலகமானது ஒரு ரசிகையை பெற்றுத் தந்து இன்னுமொரு சகோதரியாக்கியுமுள்ளது அவரை பலருக்கு தெரிந்திருக்காது அவர் பெயர் சுஜா என்பதாகும்.

         என் எழுத்துக்கள் எப்போதும் போருக்கெதிரானவையாகவே இருக்கும் அதைத் தூண்டும் வகையில் யார் கதைத்தாலும் (என் தந்தையார் உட்பட) என் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும் அது சிவாஜிலிங்கத்திலிருந்து சீமான் வரை தொடரும். இந்த இடத்தில் எனக்கு கருத்திட்டும் வாக்கிட்டும் உற்சாகப்படுத்தும் அத்தனை சொந்தங்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள் உரித்தாகட்டும் முக்கியமாக எனது எழுத்துக்களை ஊக்குவித்தும் பல ஆலோசனைகளையும் தந்து கொண்டிருக்கும் திரு ஜீவன் அவர்களுக்கு எனது பெரும் நன்றிகள்...

            பல சொல்ல ஆசையாக இருந்தாலும் என் விரல்களின் வலியால் (தொழில் ரீதியான) முடியவில்லை மன்னியுங்கள்..

இதில் யாரையாவது கோர்த்து விட்டால் நல்லாயிருக்குமே
1. ஜீவதர்சன் - ஆளிடம் பல விசயமிருக்கிறது அனால் அதை விட புத்தி சாதுரியமும் தன்னடக்கமும் அதிகமாய் இருக்கிறது
2. டிலீப் - இலங்கைப் பதிவுலகில் ஒரு உச்சத்தை நோக்கி நகரும் பதிவர் 500 பதிவை கடந்து விட்டார்.
3. யாதவன் - கவிக் கிழவனென்று சொல்லிக் கொண்டு குமர்ப் பொடியளுக்கான கவி வடிக்கும் ஒருவர் என்னில் மிகுந்த உரிமை எடுத்துக்கொள்ளும் ஒருவர்.
4. மகாதேவன் VK - ஆளு நம்மில பயங்கர பாசம் எழுத நேரமின்மை இருந்தாலும் எனக்கு வாக்குப் போடுவதே அவருக்கு முக்கிய வேலை. தொழில் நுட்பம் அறிவியல் என பிச்சு உதறுவாரு..

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

58 கருத்துகள்:

ஷஹன்ஷா சொன்னது…

won the toss...me

பதிவுலகில் உங்களின் ஆரம்ப வாழ்க்கை பற்றிய அரிய பதிவு இது....

நல்வாழ்த்துகள் அண்ணா...இன்று நான் இங்கிருக்க(பதிவுலகில்) தங்களின் உற்சாகப்படுத்தலே காரணம்...

ஷஹன்ஷா சொன்னது…

அப்பாடா...சுடு சோற்றுக்கே சுடுசோறா...

நீங்கள் வடிவாய் உங்கள் பதிவை முடித்துவிட்டீர்கள்.
அப்படியே அவங்களையும் மாட்டிவிட்டுட்டீங்கள்.
நடத்துங்கள்.

Harini Resh சொன்னது…

அருமையான பதிவு மதி சுதா
மேலும் நீங்கள் பதிவுலகில் சிறக்க வாழ்த்துக்கள்

என்னையும் பதிவில்குறிப்பிட்டுள்ளீர்கள் நன்றி சுதா...மென்மேலும் பிரபல்யமாக எனது வாழ்த்துக்கள்..

தர்ஷன் சொன்னது…

ம்ம் ஆரம்பத்துல பதிவுகளைக் கொண்டு சேர்க்க கொஞ்சம் கஷ்டப்படிருக்கீங்க போல வாழ்த்துக்கள் சுதா நிச்சயம் நீங்கள் இன்னமும் நன்றாக வருவீர்கள்

Unknown சொன்னது…

முயற்ச்சி திருவினையாக்கும். என் பார்வைக்கும் நீங்கள் ஒரு துணிச்சலான சமுக விழிப்புணர்வு எழுத்தாளன்/பதிவர்.

வாழ்த்துக்கள் சகோதரம் தொடர்க உங்கள் பணி உங்கள் பாதையில்.

Lingeswaran சொன்னது…

Intense writing with social awareness and consciousness is always essential to the society. You are such a young energetic writer. Wishes Sutha.

மு.லிங்கம் சொன்னது…

நன்றி சுதா! இது உங்களது வெற்றியின் ஆரம்பம், உங்களது ஆரம்பகாலம் பற்றி சுருக்கமாக இருந்தாலும் உணர்வுபூர்வமான கருத்துக்களை உள்ளடக்கியுள்ளீங்க.
பாராட்டுக்கள்!

Chitra சொன்னது…

அருமையாக பகிர்ந்து இருக்கீங்க....

Philosophy Prabhakaran சொன்னது…

அது என்ன மாளிகை என்று நீண்ட நாட்களாகவே கேட்க நினைத்திருக்கிறேன்... என்னவென்று சொல்லுங்களேன்...

Philosophy Prabhakaran சொன்னது…

// என்ன கேட்டிங்கண்ணு விளங்கவே இல்ல சொல்ல முடியுமா..?? //

இதோ இது என்ன மாளிகைன்னு கேட்டேன்...

http://2.bp.blogspot.com/_ILAwGTLUPnM/TF7hPSjLGII/AAAAAAAAAG0/kc--XmUjkKw/s1600/my%252B%252Bprofile.jpg

கவி அழகன் சொன்னது…

அடே தம்பி சுதா மட்டிவிட்டிடியே நான் ஏற்கனவே எழுதிட்டன் எப்படி எழுத வந்தான் என்று .

அதை மீண்டும் பிரசுரிக்கிறேன் புதிய விடயங்களை சேர்த்து

ம.தி.சுதா சொன்னது…

பிபி தனி மடலை பாருங்க...

எல் கே சொன்னது…

சுடு சோறு அருமை நண்பா

pichaikaaran சொன்னது…

மென்மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்

ஆமினா சொன்னது…

உங்க நன்றியை இதன் மூலம் சொல்லிட்டீங்கன்னு நெனைக்கிறேன்...

பகிர்வு அருமை

Unknown சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

Unknown சொன்னது…

பகிர்விற்கு நன்றி நண்பா..

THOPPITHOPPI சொன்னது…

பெரிய விபத்துதான் நீங்கள் பதிவுலகம் வந்தது

வாழ்த்துக்கள் நண்பா..

டிலீப் சொன்னது…

கடந்து வந்த நாட்களை அழகாய் சொல்லியிருக்கிறாய் நண்பா. வாழ்த்துக்கள்.
மச்சி நல்லாதான் கோர்த்து விட்ட....
கோர்த்து என்ற ? (தொடர் பதிவு இல்லையே...அவ்வ்வ்............)
நான் தமிழ்ல ரொம்ப வீக்..
நன்றி நண்பா என்னை பற்றி நிறைய சொன்னதுக்கு.

test சொன்னது…

தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

பெயரில்லா சொன்னது…

இத்தொடர் உங்களை பண்டிதராக்கும்.

karthikkumar சொன்னது…

நல்ல பகிர்வு :)

பெயரில்லா சொன்னது…

thaks super post

பெயரில்லா சொன்னது…

மென்மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்

ARV Loshan சொன்னது…

நெஞ்சைத் தொட்டன பல இடங்கள்..
வாழ்த்துக்கள் சுதா

Kandumany Veluppillai Rudra சொன்னது…

பதிவுலகம் எல்லோருக்கும் புதுப் புது அனுபவங்களை அள்ளித்தந்துள்ளது,அள்ளிக் கொட்டத்தான் சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை,தட்டித் தடுமாறி,எட்டிப் பிடித்து ஏறிவந்துவிட்டீர்கள்,வாழ்த்துக்கள்.

ஹேமா சொன்னது…

இணையத்தில் இன்னும் புகழோடு வலம் வரவும் சுடு சோத்தை ஓடி வந்து எடுத்துக்கொள்ளவும் அன்பான வாழ்த்துகள் சுதா.

Jana சொன்னது…

தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

Muruganandan M.K. சொன்னது…

212 நாட்களில் நம்ப முடியாத பாய்ச்சல். வாழ்த்துக்கள்.
தொடரட்டும் உங்கள் பயணம். நனைந்து மகிழ்வோம்.
குளிரில் அல்ல....!

FARHAN சொன்னது…

சுருக்கமாக இருந்தாலும் சிறப்பாக தனது பதிவுலக நுழைவை அழகு பட சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் தொடர்ந்து செல்ல

Unknown சொன்னது…

நல்ல பதிவுங்க.. பதிவுலகில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..

அருமை நண்பா, உங்களைப் பற்றி இன்றுதான் தெரிந்து கொண்டேன்..... வாழ்த்துக்கள்!

Srini சொன்னது…

" ஒரு எழுத்தாளனுக்கே உரிய பணிவோட உங்கள வெளிப்படுத்தியிருக்கீங்க மதி... இதுவெல்லாம்தான் வருங்காலத்துல உங்கள ஒரு சிகரத்தோட உச்சியில கொண்டு வெக்கும்... உச்சியில் இருக்க வாழ்த்தும்.....உங்கள் அன்பன் “

எப்பூடி.. சொன்னது…

நல்லாத்தான் திரும்பி பாத்திருக்கிறீங்க;

பதிவுலகில என்ன நடக்குதேன்னு தெரியாம நானே குழம்பி போயிருக்கிறான், இதில உங்க சந்தேகத்தை நான் எங்கங்க தீர்த்தன் :-))

என்னை எழுத அழைத்ததற்கு நன்றி, அதுக்காக இல்லாத எல்லாம் சொல்லி எதுக்கிந்த ஓவரு பில்டப்பு !!!!!!!!!!!!!!!!!!!!!!!


ஒரு வாரம் டைம் குடுங்க 250 பதிவாக நிச்சயம் எழுதுகிறேன்.

vanathy சொன்னது…

சுதா, நல்ல சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறீங்க.

Prabu Krishna சொன்னது…

நல்ல பதிவு

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.♥♥♥

மாணவன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி நண்பா

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனதினிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

/polurdhayanithi.blogspot.comஉலகினுக்கே நாகரீகத்தையும் மொழியையும் , வானவியளையும் , மற்றும் உள்ள கலைகளையும் கொடையாக வழங்கியாவன் தமிழன் .
ஆனால் இன்று தய்தமிழகத்தில் மொழி , இன உணர்வு இல்லாமல் திரைப்பட மாயையில் மூடிக்டக்கிறனர் . திரைப்படமே எல்லாம் என முடங்கி கிடக்கின்றனர் . இவற்றிற்கு இடையில்தான் தமிழ இளைஞ்சர்கள் வெளிவர வேண்டி இருக்கிறது . உயர்ந்த மொழிக்கு உரியவர்கள் என்றோ, உலகின் நாகரீகங்களுக்கு எல்லாம் உரியவன் தமிழன்தான் என்றோ தொரியமலே கிடக்கின்றனர் .அவற்றிக்கு வேண்டியதை செய்வார்கள் என நன்புவோம் . தமிழ கலைகளை உலகெலாம் பரப்புவோம் .

Unknown சொன்னது…

எம் சகோ-விற்கு இனிய இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Jaleela Kamal சொன்னது…

உங்கள் அனுபவம் பெரிய வரலாறு போல இருக்கே. வாழ்த்துக்கள்,.

ஆயிஷா சொன்னது…

நல்ல பகிர்வு.பதிவுலகில் மென்மேலும்

சிறக்க வாழ்த்துக்கள்..

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

கலையன்பன் சொன்னது…

உங்களைப் பற்றிய விவரங்கள் அளித்தீர்கள்,
சுவைபட.
உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!

அடடா ரொம்ப லேட்டா வந்துட்டனோ சாரி

2 நாளா சினிமா தியேட்டர்லயே குடி இருந்தேனா பிளாக் பக்கம் வர முடியல சாரி

திறம இருக்கறவன் எங்கே இருந்தாலும் ஜெயிப்பான், அவனை அடையாளம் கண்டுக்க வேண்டியது வாசகனின் கடமை அதைத்தான் நான் செஞ்சேன். நீங்க மேன் மேலும் வளர்வீங்க

நல்ல ஃபிளாஷ்பேக் பதிவு

50

Ram சொன்னது…

நல்ல பதிவு..

" என் எழுத்துக்கள் எப்போதும் போருக்கெதிரானவையாகவே இருக்கும் அதைத் தூண்டும் வகையில் யார் கதைத்தாலும் (என் தந்தையார் உட்பட) என் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும் அது சிவாஜிலிங்கத்திலிருந்து சீமான் வரை தொடரும்."

எனக்கு இந்த தில் பிடிச்சிருக்கு! ஒரு ஊடகத்துறை சார்ந்தவனுக்கு துணிவு முக்கியம்! அது உங்களிடம் இருக்கிறது! வாழ்த்துக்கள்!!

yeskha சொன்னது…

ம்... நல்லதொரு தொடர்பதிவு...

வணக்கம் நண்பரே!
புதிய தமிழ் திரட்டியான http://www.tamilookmark.co.cc தமிழ்புக்மார்க்கில் உங்கள் வலைப்பதிவுகளையும் தொடர்ச்சியாக‌ இனைத்து உங்களது பங்களிப்பையும் ஆதரவையும் எமக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.
- தமிழ்புக்மார்க் குழு
http://www.tamilookmark.co.cc

(தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் tamilbookmark@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்)

ஆகுலன் சொன்னது…

புதிய பதிவர்களுக்கு ஒரு உகுவிப்பு.........
A+

padhivu pudhusu poodalaiyaa>சுதா பதிவு போடலையா?

Sivatharisan சொன்னது…

அருமையான பதிவு

Learn சொன்னது…

உங்கள் பதிவு மூலம் என்னையும் அலசி ஆராய்ந்துவிட்டேன்.. நானும் எப்படி பதிவுலகத்துக்கு வந்தேன் என்று

தமிழ்த்தோட்டம்
www.tamilthottamin

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top