செவ்வாய், 11 ஜனவரி, 2011

ஒழித்தோடும் அசினும் 109 நாள் துரத்தலும்

12:51 AM - By ம.தி.சுதா 37

               ஆரம்பத்திலேயே சொல்லிக் கொள்கிறேன் இது அசினுக்கெதிராகவோ அல்லது காவலனுக்கு எதிராகவோ எழுதப்படும் பதிவல்ல. எம்மை (என்னையல்ல) ஒரு கேணைக்கிறுக்கன் என நினைத்த ஒருவருக்காக எழுதப்படும் பதிவாகும்.
               சமீபத்திய நாட்களில் எல்லோரும் தமிழன் ஏமாற்றப்பட்ட கதையை நடிகர்கள் மூலமாகவும் அரசியல்வாதிகள் மூலமாகவும் கே(கெ)ட்டாகி விட்டது. என்ன பலரால் சிலதை ஏற்கமுடியாதுள்ளது ஒருவன் படம் நடித்தால் படத்தை பார்ப்போம் ரசிப்போம் அது சரி அதற்காக அவன் செய்வதெல்லாம் சரி என வாதிடக் கூடாது. ஏற்கனவே அசினின் சமூகப் பணியால் பார்வை இழந்த யாழ் வறியவர்கள் என்ற தலைப்பிட்டு எழுதிய ஒரு புதிய செய்தியால் பலருக்கு என் மீது கோபமிருக்கிறது நான் மீண்டும் சொல்கிறேன் தலைப்பானது உள்ளே உள்ள கட்டுரையை பரப்புவதற்காகவே இடப்பட்டது அவர் செய்த சேவை பாராட்டத்தக்கது
        ஆனால் இப்படி நோக்குங்கள் நீங்கள் ஒருவருக்கு உதவி செய்கையில் அதனால் அவருக்கு பாதிப்பு வந்தால் யார் மீள உதவணும். அங்கே மருத்துவர்களின் தவறு தான் பிரதானமானது அதை செய்ததும் ஒரு இந்திய மருத்துவர் தான் அனால் இதற்கு பொறுப்பாய் நிற்க வேண்டியவர் யார் ?
      ஒருவருக்கு ஒரு லென்ஸ் மாற்ற 4500 ரூபாய் தேவை அத்துடன் இதர செலவுடன் சேர்த்து கிட்டத்தட்ட 7000 ரூபாய் போடலாம் ஆனால் இது அரச செலவில் செய்யத் தான் அதுமட்டுமல்ல அப்படி செய்வதானால் ஒரு சில மாதங்கள் காத்திருக்கணும் அதே நபர் தனியார் மருத்துவ மனையில் செய்வதானால் 25000 ரூபாய் தேவை.
         இந்த இடத்தில் தலைப்பிற்க வருவோம் எனது உறவுகளான ஒரு சிலரை நான் நன்றி கூறியே ஆகணும். அதிலும் கொஞ்சம் வெட்டிப் பேச்சு சித்திரா அக்கா முக்கியமானவர் அவர் அசினினுடைய தொலைபேசி இலக்கத்திற்கு தானும் நண்பர்களுமாகச் சேர்ந்து எத்தனை தடவை முயற்சித்திருப்பார். அத்துடன் அஃகேனம் மிதுனும், தனிக் காட்டு ராஜாவும் மிகுந்த சிரத்தை எடுத்தார்கள் அது மட்டமல்ல தரங்கம் சுபாங்கன் அவரது ருவிட்டர் முகவரிகளை சேகரித்துக் கொடுத்தார். அவரது 5 ருவீட்டர் முகவரிக்கும் கடந்த 109 நாட்களாக தொடர்ந்த தகவல் அனுப்பகிறேன் (குறிப்பிட்ட ஒரு சில நாள் இடைவெளியில்)
          அது செவிடன் காதில் உதிய சங்கு தான் இருந்தாலும் ஊதுவேன் பொங்கலுடன் அதை நிறுத்திக் கொள்கிறேன்.
         இதில் அசின் ஒழிய வேண்டிய அவசியமில்லை அவருக்கு ஆகப் போகும் செல்வு வெறும் 75 அயிரம் கூட கடக்காது அவர் பணம் பெரிதில்லை பாதிக்கப்பட்டவருக்கான சத்திரசிகிச்சை திகதியை முன்னுக்கே பெற்றுக் கொடுக்க உதவலாமல்லவா அதனால் பாதிக்கப்பட்ட ஒருவரின் கண் வேதனையை நேரே பார்த்தேன் (முன்னைய பதிவில் படமுள்ளது) இப்படி எத்தனை பேரோ
        குறிப்பு - இப்பதிவை நான் இடக் காரணம் வரும் பொங்கலுடன் எனது இம் முயற்சியை கைவிடுகிறேன் அதன் பின் இத்தனை பேருக்கும் நன்றி சொல்ல சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியல அத்துடன் இங்கே பெயர் குறிப்பிடத் தவறிய உறவுகளுக்கும் நன்றி. அதுமட்டுமல்ல இதை பகிரங்கப்படுத்த உதவிய செய்தித் தளங்களுக்க நன்றி கூறுவதுடன் இந்தப் பதிவை சாக்காக வைத்து அசினுக்கெதிரான பிரச்சாரப் போர் நடத்திய எம் தமிழ் சமூகத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். அசின் என் முயற்சிக்கு செவி சாய்த்திருந்தால் இதே பதிவை அவருக்கான நன்றியுரைப் பதிவாக இருந்திருக்கும் காரணம் இந்திய கலைஞரின் இலங்கை வருகையைப் பற்றி நான் கணக்கிலேயே எடுக்காத ஒருவனாகும்.

அசினின் ருவீட்டர் முகவரிக்கான தொடுப்புகள்
http://twitter.com/#!/asin_thottumkal
http://twitter.com/#!/AsinThottumkal_
http://twitter.com/#!/AsinThottumkal
http://twitter.com/#!/asinonline
http://twitter.com/#!/AsinFC

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

37 கருத்துகள்:

aiasuhail.blogspot.com சொன்னது…

முயற்சி திருவினையாக்கட்டும்.

உங்கள் நல்லெண்ணம் பலிக்கட்டும்.


http://aiasuhail.blogspot.com/2011/01/2011.html

Chitra சொன்னது…

விரைவில் நல்ல செய்தியுடன், நல்ல முடிவும் தெரியும் என்று நம்புவோம்.

கவி அழகன் சொன்னது…

போராட்ட குணம் இரத்தத்தோடு கலந்தது தானே
அது பதிவிலும் வரஈகளிலும் தெரிகிறது தம்பியா

Philosophy Prabhakaran சொன்னது…

இரண்டு நாட்களாக புத்தக சந்தைக்கு சென்று வந்த களைப்பில் இருந்ததால் நெட்பக்கம் வர முடியவில்லை...

நூறாவது இடுகை எழுதியிருக்கிறேன்... படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்...
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/100.html

pichaikaaran சொன்னது…

நல்லது நடக்கட்டும்

எப்பூடி.. சொன்னது…

அந்தம்மா சல்மான் கானோட பண்ணிக்கிட்டிருக்கு, அதாங்க படம் பண்ணிகிட்டு இருக்கு, அதுக்கு உங்க டுவிட்சை பார்க்க ஏதுங்க நேரம் ????

ஆமினா சொன்னது…

நல்ல செய்தி கிடைக்கும் என காத்திருப்போம்

THOPPITHOPPI சொன்னது…

அவள் செய்ததே ஒரு விளம்பரத்துக்காகத்தான் அது நிறைவேறி விட்டது, இனி என்ன நடந்தாலும் ஒரு கவலையும் இல்லை. அடுத்தப்படத்துக்கு தயார் செய்யவே நேரம் இருக்காது.

உங்களது முயற்ச்சிக்கு எனது பாராட்டுக்கள்

test சொன்னது…

சிலர் சினிமாவில் நல்லா நடிக்கிறார்களோ(?!) இல்லையோ நிஜத்தில் மிக நன்றாய் நடிக்கிறார்கள்!
அசின் வந்ததும் நடிப்பின் ஒருபகுதி மட்டுமே...அதற்கான கால்ஷீட் முடிந்தது! இனி அவர் எதற்கு கவலைப்பட வேண்டும்?

உங்கள் முயற்சி, பதிவுலக நண்பர்கள் முயற்சி பாராட்டத்தக்கது!

Unknown சொன்னது…

உங்கள் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

arasan சொன்னது…

உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

good post sudha

பெயரில்லா சொன்னது…

உங்களை தொடர் பதிவு எழுத அழைத்திருக்கிறேன்

Unknown சொன்னது…

என்னத்த சொல்ல...

ஆயிஷா சொன்னது…

உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

நம்பிக்கை எப்பொழுதும் தொர்ப்பதில்லை நண்பா சற்று காத்திருப்போம் சரியானப் பதில் கிடைக்கும்

Unknown சொன்னது…

அசின் செய்த இந்த பொறுப்பற்ற சமூகப்பணிக்கு அவர்தான் முழுப்பொறுப்பு என்று மீண்டும் ஆதாரத்துடன் நிருபித்திருக்கின்றீர்கள் இதை நீங்கள் பொங்கலோடு நிறுத்தாமல் தொடரவேண்டும் என்று தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றேன்.

பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் நலம் பெற இறைவனைப் பிராத்திற்ப்போம்.

Unknown சொன்னது…

முடிந்தால் தளபதி விஜய்க்கு இச்செய்தியை தெரியப்படுத்தலாம் அவர் சொன்னால் கேட்க்க வாய்ப்பு உள்ளது சகோதரம்

ஷஹன்ஷா சொன்னது…

பார்ப்போம் என்ன நடக்குது என்று.........


சினிமாவில் நடிப்பது போல் நிஜத்திலும் நடித்தால் நல்லதல்ல நடிகையே...........!

அசினுக்கு ஆப்பு?

பெயரில்லா சொன்னது…

ஒரு முக்கிய அறிவிப்பு சகோதரா. நடிகை அசின் ட்விட்டர், ஃபேஸ்புக், ஆர்க்குட் போன்ற எந்தவித சமூக வலைதளங்களிலும் இல்லை!!! அவை அனைத்தும் அவரின் இரசிகர்கள் விளையாட்டுக்காக உருவாக்கியவை!!! இதனை அசின் அவர்களே பாலிவுட் ஹங்காமா எனும் இணையதளத்திற்கு ஒரு பேட்டி மூலம் கூறியிருக்கிறார்.

அசின் இது பற்றி கூறுவதாவது:
"I nearly fell off my chair. I won't name this actress. But she said we shared our most intimate secrets on Facebook. I nearly fell off my chair and asked her whom did she share her secrets with because it was most certainly not me. Two days ago, a journalist came to interview me and said she got all the information on me from what I had written on Twitter. For the record, I'm not on any of the social-networking websites. Apart from my own website, I am not on the internet for any other purpose. I started blogging even before Aamir did in August 2005."

அவருடைய பொய்யான கணக்குகளுக்கு (fake accounts) ஏமாந்தவர்களுள் நாமும் இருக்கிறோம். ஏன் - புகழ்பெற்ற தமிழ் வார இதழ் ஒன்றும் அவரின் பொய்யான ட்விட்டர் கணக்கினை உண்மையென நம்பி அதனை வெளியிட்டு வருகிறது.

அசினை அணுக தமிழ், மலையாளம், தெலுங்கு அல்லது இந்தி திரையுலகத்தைச் சேர்ந்த எவரையேனும் கேட்டாகவேண்டும்.
அல்லது, அவருடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (Official website) கோரிக்கையை இடவேண்டும்.

அசினின் இணைய முகவரி:
http://asinonline.com

ம.தி.சுதா சொன்னது…

மிக்க நன்றி மிதுன் அசினத அந்த பிரத்தியோகமான தளத்தில் உள்ள கெஸ்ட் புக்கிலும் இத்தகவல் பதியப்பட்டிருக்கிறது...

Philosophy Prabhakaran சொன்னது…

கீழே உள்ள உங்கள் மருமகளை பார்த்தேன்... அவ்வளவு வயதானவரா நீங்கள்...

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஆனாலும் அரிதாரம் பூசியவர்களை அதிகம் நம்பவேண்டாம்.

டிலீப் சொன்னது…

மச்சி நான் அசின் பண்ணி பார்க்கிறேன்

டிலீப் சொன்னது…

//
Philosophy Prabhakaran said...
கீழே உள்ள உங்கள் மருமகளை பார்த்தேன்... அவ்வளவு வயதானவரா நீங்கள்..//

எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சா ?

jagadeesh சொன்னது…

அசின் வாழ்க! அவரது சேவை தொடரட்டும்.

KANA VARO சொன்னது…

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். ம்ம்ம் பார்ப்போம் எதாவது பலன் கிடைக்குதா எண்டு

ஆனந்தி.. சொன்னது…

வருத்தம் விரைவில் மறந்து நல்லதே நடக்கும்...

விரைவில் நல்ல செய்தியும் நல்ல முடிவும் தெரியும் என்று நம்புவோம்.

Unknown சொன்னது…

தேச பக்தி என்பது அந்நியர்கள் கொடுமையிலிருந்து விடுதலை பெறுவதைக் குறிப்பதோடு, நம்மவர்கள் கொடுமைகளில் இருந்து விடுதலை பெறுதலையும் குறிப்பதாகும்.
- விவேகானந்தர்.
இன்று 12-1-11. தேசிய இளைஞர் தினம்.
விவேகானந்தரை நினைவு கூறுதலில் பெருமிதம் கொள்கிறோம்..

அன்புடன் நான் சொன்னது…

விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.....

உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

Harini Resh சொன்னது…

உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
தங்களை என் வலைப்பூ பக்கம் காணமுடிவதில்லையே

விரைவில் நல்லது நடக்கட்டும்!

கார்த்தி சொன்னது…

முயற்சி திருவினையாக்கும்!

ஆ.ஞானசேகரன் சொன்னது…

வாழ்த்துகள் நண்பா... உங்களினின் முயற்சி வெற்றியடைட்டும்

உங்கள் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top