இங்கே முழுப் போட்டியையும் விபரிப்பது சிரமம் என்பதால் அதன் ம(மு)க்கிய தருணங்களை விபரித்துப் போகிறேன். யாரும் சிரியசான பதிவு என நினைத்து வாசிக்க வேண்டாம் பதிவுலகத்தில் எனது முதலாவது நகைச்சுவை பதிவு என நினைக்கிறேன் (ஆனால் வாசிப்பவங்க அழுவீங்கண்ணு தெரியும்.)
இதமான அந்த மாலைப் பொழுதில் மழை வருமா வராதா என்ற ஒரு நிலைப்பாட்டில் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகியது. சாதாரண போட்டி என யாரும் நினைக்கமுடியாத அளவிற்கு மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு போட்டி ஆயத்தம் நடந்தது குறிப்பாக UDRS முறை கூட இருந்தது ஆனால் என்னவென்றால் அனைத்து பதிவரும் தமது கமரா போனை இழக்க வேண்டியிருந்தது. அதற்கான பொறுப்பை ஏற்ற வரோ சிறப்பாக செய்து கொண்டிருந்தார்.
ஆடுகள அறிவிப்பாளர் ரமேஸ் தலைமையில் நாணயச் சுழற்சி ஆரம்பமானது 11 ஆண்டுகளாக துடுப்பை எடுத்து அடாத யாழ் சிங்கம் ஜனாவும் தனது பந்து வீச்சு திறமையை HAT TRICK மூலம் தக்கவைத்திருக்கும் லோசனும் அணித்தலைவர்களா(க).??? இருந்தார்கள. நாணயச் சுழற்சிக்கு அச்சுவின் 5000 ரூபாய் குற்றி கிடைத்தது இருவருக்கும் பெரும் சந்தோசம் ஆனால் அதை காக்கும் பொறுப்பு வரோவுக்கல்லவா பாவம் அந்த 6300 கமரா போன் படாத பாடு பட்டுவிட்டது.
ஆரம்பத் த(து)டுப்பாட்ட வீரராக மது களமிறக்கப்பட்டார். ஒரு கண் சிமிட்டலுடன்
“UMPIRE LEG STUMP PLEASE”
“உன்கிட்ட STUMP தந்திட்டு நாங்க ரெண்டிலயா விளையாடுறது”
சொன்னது சுபாங்கள் ஒரு கடுப்பு பார்வை பார்த்த மது ஆரம்ப பந்து விச்சாளர் பவனை பார்க்கிறார் அவர் தனது ஆரம்பக் கோட்டிலிருந்து ஓட ஆரம்பித்தார் ஓடினார் ஒடினார் தாண்டல் கோட்டின் எல்லைக்கே ஓடினார்.
“NO BALL”
நடுவர் சொன்னதும் திரும்பி ஒரு கடுப்பான பார்வையுடன்
“இந்தப் பெரிய மஞ்சள் பந்து கண்ணுக்குத் தெரியலியா நோ போலாம் நோ போல்”
மீண்டும் நடந்தார் நடந்தார் ஆரம்பக் கோட்டின் எல்லைக்கே நடந்தார். அப்போது பெறப்பட்ட ஒற்றை ஓட்டத்தால் இப்போ எதிர் கொள்பவர் யோ வோய்ஸ்
“UMPIRE FREE HIT (KIT) இருக்குதா ?”
“என்ன அவசரம் வெளியில் வாங்க றீலோட் போட்டு விடுகிறேன் எங்க போனாலும் ஓசி தான் உங்களுக்கு” சொன்னது யாராக இருக்கும் ஸ்லிப் ல் ஸ்லிப்பாக இருந்த நம்ம அனுதினன். இந்த அணி மற்றவரை கடுப்பேத்தியே விக்கேட்டுக்களை பறித்துக் கொண்டிருந்தது.
வெளியே நேர்முக வர்ணனை பொறுப்பை ஏற்றிருந்தவர் நம்ம காந்தக் குரல் சதிஸ்
“MIC testing 1… 2…. 3…”
“பொறப்பா வச்சிருக்கிறது ஒண்ணு அதுக்குள்ள 3 வச்சிருக்கிற மாதிரி பெரிய பில்டப்பு ஹி..ஹி..ஹி) வைத்தியரையா பால வாசகன் சொல்லி விட்ட நல்ல பிள்ளை போல் கம்முண்ணு இருந்தார்.
வருணபகவான் தனது வியர்வைத் துளியை சிந்த ஆரம்பித்தார் இப்போ அதிவேக ஓட்டம் பெறப்பட வேண்டிய நிலை கப்டனுக்கு அதிரடி ஆட்டக்காரரான கான்கோனை விடுவதா கூல் போய் கிருத்திகனை விடுவதா என குழப்பம் இதை மறு அணித் தலைவர் ஜனா கவனித்து விட்டார் ஒரு நமுட்டு சிரிப்போடு பார்க்க.... வீரத் திருமகன் கோபி போவதாக முடிவானது.
முதல் பந்து வேகமான ஒரு தாக்குதல் ஆனால் களத்தடுப்பாளர் ‘லபக்’
“ஏய் கோபி அளில்ல இடமாப் பாத்து அடியப்பா” கப்டனின் கட்டளை பறந்தது. அடுத்த பந்து உக்கிர தாக்குதல் பந்து கிர்…கிர்..... என மேலே உயர்ந்தது எங்கோ நின்ற ஒருவர் ஓடி வந்து பிடித்தார். அங்கே ஒரு சின்ன குழப்பம் வெளியில் நின்ற யாரோ பந்தை பிடிச்சிட்டாங்கப்பா. ஓட்டப் பதிவாளர் அசோக்பரனுக்கே பெரிய குழப்பமாகிவிட்டது. இடையில் புகுந்த ஜனா
“என்ன இந்த கும்மி வீரனை தெரியாமல் இருக்கிங்களே இவர் தான் ஜனகனப்பா” என பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்தார்.
வெளியே
“ஏனப்பா தூக்கினாய் கொஞ்சம் நீட்டி அடித்திருக்கலாமே”
“அண்ணை நீங்க தானே சொன்னிங்க அளில்லாத இடத்தில அடியுங்க என்று மேலே தானே ஆட்களில்லை”
“ஹ..ஹ.. கிருத்திகன் நீ போப்பா..” ஜனா செய்த சதி அறியாத கப்டன் சொல்ல அங்கே தள்ளாடித் தள்ளாடி ஒரு உருவம போய்க் கொண்டிருந்தது.
“பவன் பார்த்தியா நம்ம லேகியச் சோடா எப்படி வேலை செய்கிறது” ரகசியமாய் சொன்னார் ஆனால் ஆடுகளத்தில் நடந்தது வேறு.
அதற்குள் பவனின் அடுத்த பந்தும் நோபோலானது. இதைப் பார்த்த வந்தியத் தேவன் லொசனிடம்
“இதென்னப்பா நோபோலு என்கிறாங்களே அப்படியென்றால் என்ன”
“ஐயோ இது கூடத் தெரியாத புத்து.. புத்து... அது கிறிஸ் ற்கு மேல் கால் வைக்காமல் வெளியே வைப்பது”
“ ஹலோ நானா நீங்களா புத்து யாரும் கிறிசுக்கு மெல் தெரிந்தே காலை வைப்பான வழுக்காதா..??”
பவனின் அடுத்த 4 பந்திற்கும் SIXER ஆனால் போன பந்தை எடுக்க விடாமல் மழை கொட்டியது.
கூல் (பொ)ய் கிருத்திகன் |
சரி நிறைவு விழா ஆரம்பமானது இப்போ ஏற்பாட்டாளர் வதீஸ் கைகளில் ஒலிவாங்கி. அதிரடி ஆட்டம் காட்டிய கிருத்திகனுக்கே சிறப்பு விருது. அவர் கைகளுக்கு ஒலிவாங்கி கொடுக்க முனைந்த போது
“அண்ணா ஒரு MIC தாங்க ஏன் மூன்று தாறிங்கள்”
“அடேய் வெறிகாரப்பயலே உனக்கு எல்லாம் மூன்றாக தெரிந்தால் எப்படியடா 4 SIX அடித்தாய்”
“ஆம் அண்ணா அங்கேயும் 9 STUMP 3 BOWLER இருந்தாங்க ஆனா ஐயா கில்லாடி அந்த மூன்று BOWLERS ல்; நடு ஆள் போட்ட நடுப்பந்துக்கு எனது நடு BAT ஆல் அடித்தேனுங்க”
இனியும் தொடர்ந்தால் சிக்கலென நினைத்த வதிஸ்
“நன்றி மீண்டும் நாங்கள் மண்டபத்தில் சந்திப்போம்” என நிறை செய்தார்…
குறிப்பு – சகோதரர்களே ஒரு சின்ன கலாய்ப்புத் தான் இது இங்கே கலாய்க்கப்பட்டவர்கள் என்னை கலாய்த்த குற்றத்திற்காக பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள் (ஹி….ஹி…ஹி…) அனால் கருத்துப் பெட்டியில் ரத்த ஆறு ஓடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்…..
என் ஓடையில் குனிந்து நிற்கிறேன் கும்முறவங்களெல்லாம் வாங்க பழகலாம்…
தயவு செய்து தனிப்பட்ட ரீதியில் யாரையும் கடுமையாக தாக்க வேண்டாம். இத்தருணத்தில் என்னால் தங்களை நேரில் சந்திக்க முடியவில்லை என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனது சார்பில் இருவர் சுடு சோற்றுடன் வருவார்கள்...
தயவு செய்து தனிப்பட்ட ரீதியில் யாரையும் கடுமையாக தாக்க வேண்டாம். இத்தருணத்தில் என்னால் தங்களை நேரில் சந்திக்க முடியவில்லை என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனது சார்பில் இருவர் சுடு சோற்றுடன் வருவார்கள்...
38 கருத்துகள்:
ம்...பழிவாஙங்கிற சாட்டா கலாக்கிறீங்க...ஓகே...பதிவர் சந்திப்பு சக்சஸ்தான்டியோய்....சுடுசோறோட வரேல்ல அப்புறம்....
:))
கற்பனை துள்ளி விளையாடுது நண்பா
:)
ஹ்ம்ம்ம் சேட்டைதான்!:-)
கலக்குங்க...
சுடு சோறு கிடைக்காம போச்சே :-(
:)
அவ்வ்வ்...
4 சிக்சரா? இப்பவே நடுக்கம் எடுக்குது பாஸ்..:)
:-)
ம்ம்மம்மம்ம்ம்ம்.இருக்கட்டும்...
ம்ம்ம்... மூன்று போல், மூன்று பட்..??? பலத்த சந்தேகத்தை உண்டாக்கவிட்டது. எங்களை டிமிக்கி காட்டிவிட்டு, அன்று நீரூம் கூல்போயும் தனியா போகும்போதே சின்ன டவுட் வந்திச்சு. இப்ப கிளியர் ஆயிட்டுது.
சரி...நாங்க வெளிக்கிடப்போறம்.. மீண்டும் சந்திப்போம்
கிரிக்கட்டில நான் Forward Position இல்தான் விளையாடுவேன் என்று அடம்பிடிக்கும் அறிவு. என்னைப்போய் ஓப்பிணராய்.. ஹீ ஹீ..
/////ம்ம்ம்... மூன்று போல், மூன்று பட்..??? பலத்த சந்தேகத்தை உண்டாக்கவிட்டது. எங்களை டிமிக்கி காட்டிவிட்டு, அன்று நீரூம் கூல்போயும் தனியா போகும்போதே சின்ன டவுட் வந்திச்சு. இப்ப கிளியர் ஆயிட்டுது.
சரி...நாங்க வெளிக்கிடப்போறம்.. மீண்டும் சந்திப்போம்/////
face book படம் பார்க்கும் போதே நினைத்தேன்....
இத்தனை பேரா?:-))))
//அதை காக்கும் பொறுப்பு வரோவுக்கல்லவா பாவம் அந்த 6300 கமரா போன் படாத பாடு பட்டுவிட்டது//
ஹா ஹா தொப்பி தொப்பி..... என்னுடையது 5800 Express music....
நாங்கெல்லாம் வரல்ல என்குறதால எல்லாரும் பயப்படாம விளையாடுங்க.
வாழ்த்துக்கள்..
நாங்க களத்துல இறங்கிட்டா...உங்களுக்கெல்லாம் ரொம்பக் கஸ்ட்டமாகிடும்.
உங்களையெல்லாம் பாத்தா பாவமா இருக்கு.. சரி சரி சண்டை பிடிக்காம விளையாடுங்க.
நம்ம உலக சாதனை தெரியுமில்ல.
இங்க போய் பருங்க.
http://aiasuhail.blogspot.com/2010/05/blog-post_22.html
இப்பவேவா ?
நான் ப்ரீ ஹிட் கேக்கல
:D
ஏதோ என்னால் முடிந்த அளவில் என் பதிவிலும் கலாய்த்துள்ளேன்.. ;)
:-))
கலக்கல் தான் போங்க.
இங்கே பந்தி வைத்து பரிமாரப்பட்டிருக்கும் அத்தனை பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
// வெளியே நேர்முக வர்ணனை பொறுப்பை ஏற்றிருந்தவர் நம்ம காந்தக் குரல் சதிஸ்
“MIC testing 1… 2…. 3…”
“பொறப்பா வச்சிருக்கிறது ஒண்ணு அதுக்குள்ள 3 வச்சிருக்கிற மாதிரி பெரிய பில்டப்பு ஹி..ஹி..//
அண்ணே காந்த குரல் எண்டால என்னென்ன சாமான் குரலோட ஒட்டி வரும்?
நீங்கள் நான் எத்தனை வச்சிருக்கேன் என எப்பிடி இப்படி சொல்லலாம்?
கேள்விகளுக்கு ஒழுங்காக பதில் சொல்லா விட்டால் ஆரிய சோறு அனுப்பப்படும்.
:)
haa...haa...haa....
கலக்கல் பதிவு மதி. அதுவும் கிரிக்கெட்டை ஒரு குடும்பமே கொல பண்ற போட்டோ சூப்பர்
கலக்கல் பதிவு மதி.
:-))
//“UMPIRE LEG STUMP PLEASE”
“உன்கிட்ட STUMP தந்திட்டு நாங்க ரெண்டிலயா விளையாடுறது”//
ஜயோ சாமி சிரிச்சு வயிறு வலிக்குது.....
ரஹீம் கஸாலி said...
/////என் பதிவுகளை படிக்கிறீர்கள் பின்னூட்டமிடுகிறீர்கள். ஆனால், தமிழ்மணத்தில் மட்டும் வாக்களிப்பதில்லை. ஏன்....உங்களின் நண்பன் ஒருவன் பிரபலமாவது உங்களுக்கு பிடிக்கவில்லையா? //////
வடிவாக உறுதிப்படுத்தித் தான் கதைக்கிறீர்களா இப்படி எல்லோரையும் தப்பாகவே பார்க்க வேண்டாம் சகோதரா.... நான் வித்தியாசமானவன்... நீங்கள் தமிழ்10 இலாவது போட்டுள்ளாரா என எனது பெயரை பார்த்திருக்கலாம்... நீங்கள் இன்ட்லில் 494 வாக்குத் தான் இட்டிருக்கிறிர்கள் ஆனால் போட்டுள்ள பதிவு 127 ஆனால் என்னுடையதை பாருங்கள் எழுதியது 73 போட்டுள்ள வாக்கு 5824 இந்த அதாரம் போதாதா எனது பொறுபபுணர்ச்சியை நிருபிக்க....
வணக்கம் பாஸ்....வர ரொம்ப லேட் ஆகிட்டுது...மன்னிக்கவும்....
கடுமையான காய்ச்சலுக்கு மத்தியிலும் வயிறு நோக சிரிச்சேன்....
ஃஃஃUMPIRE LEG STUMP PLEASE”
“உன்கிட்ட STUMP தந்திட்டு நாங்க ரெண்டிலயா விளையாடுறது”ஃஃஃஃஃ
சூப்பர்....(அதான் நாங்க கேக்குறதில்லயே....)
ஃஃஃஃ“என்ன இந்த கும்மி வீரனை தெரியாமல் இருக்கிங்களே இவர் தான் ஜனகனப்பா” என பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்தார்ஃஃஃ
அங்ங்ங்ங....
கலக்கியிருக்கீங்க, வாழ்த்துக்கள்.
alakkal padhivu sudhaaகலக்கல் பதிவு சுதா.அதை விட பின்னூட்டத்தில் நீங்கள் இட்ட வாக்குகள் எண்ணிக்கை அருமை.கேப்டனின் வாரிசோ?
வருங்கால முரளிதரன்களுக்கு எனது வணக்கம்
நல்ல kalakkal தொகுப்புரை ம.தி.சுதா.
வாழ்த்துக்கள்.
நீண்ட நாட்களாக வராதற்கு மன்னிக்கவும்.
உங்கள் மருமகள் மதிவதனிக்கும் வாழ்த்துக்கள்..
நான் கிரிக்கெட் ஆடிய நாட்களை நினைவுக்கு கொண்டு வருகிறது
உங்கள் கமெண்டரி
கருத்துரையிடுக