இன்றைய செய்திகள் அனைத்தும் அவர் விடுதலை பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றன. நானும் அரசியல் பத்தி எழுதி நீண்ட நாள் ஆகிவிட்டது. உண்மையில் அரசியலிலோ அது சார்ந்த கட்டுரையளிலோ எனக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை. சிலவேளை அவற்றை நுனிப் புல் மேய்ந்து வருவதும் உண்டு சிலவேளை என் தந்தையார் பெற்றுக் கொண்ட பாடங்கள் எனக்கு அதை வேப்பம் கொட்டை போல் மாற்றியிருக்கலாம்.
சரி விசயத்திற்கு செல்வோம். கடந்த 10-2-2010 அன்று தமிழக மீனவருக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் சில வீர வாசனங்கள் பேசிய குற்றத்தால் சீமான் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார். அவரை நேற்று நீதிமன்று திடீரென விடுதலை செய்தது.
(அடியேனின் இந்தச் சிறு மூளைக்குள் தட்டிய பொறி இது தான்) சில நட்களிற்கு முன் இலங்கை சென்ற விவேக் ஓபராய், அசின் போன்றோருக் கெதிராகா சீமான் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ரத்த சரித்திரம் திரைப்படத்தை சூர்யா வாங்குவாதாக இருந்தது இறுதியில் சூர்யா புத்தி சாதுரியமாக தான் ஒரு முருக்கம் கொப்பு எனத் தெரிந்து ஒரு புளியம் கொப்பில் அந்த மாட்டை கட்டினார். கலைஞரின் குடும்பத்துக்குள் கைமாறிய படம் வெளிவந்து எந்த வித சிக்கலும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.
படத்திற்கு நாம் தமிழர் இயக்கத்தால் எந்த சிக்கலும் வராத காரணத்தால் ஏதோ ஒரு சட்டத்தை காட்டி வெளிவிட்டிருக்கிறார்கள். சிலவேளை இவ்வளவு நாளும் வெளிவிடாததற்கு இன்னுமொரு காரணம் இருக்கலாம் இந்த சட்டம் இருந்த புத்தகத்தை படித்து முடிக்க இவ்வளவு காலம் எடுத்திருக்குமோ தெரியல.....
அட ஆரடாப்பா இது குறுக்கால சொல்லிக் கொண்டு ஓடுவது. ஆனால் எனக்கு கேட்டது. அது வந்து நம்ம எதிர்கால முதல்வர் டாக்குத்தர் ஐயா தமிழக அரசு பல்லைப் பிடுங்கிய பாம்புக்கு நான் ஒரு படம் பண்ணித் தருகிறேன் என்று குரல் வளையையே பிடங்கி விட்டாரே..
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.. அவசரப்பட்டு யாரும் யாருக்கும் கொடியை தூக்கிடாதிங்கப்பா அப்புறம் வருத்தப்படப் போவதும் நாம தானே..
குறிப்பு - இந்த உலகத்தில் உண்மையான ஒரு அரசியல்வாதியை காணதா ஆதங்கம் தான் இது...
குறிப்பு - இந்த உலகத்தில் உண்மையான ஒரு அரசியல்வாதியை காணதா ஆதங்கம் தான் இது...
43 கருத்துகள்:
vadai
எப்படி....
அருமை
இவ்வளவு நடந்திருக்கா
நல்லதொரு பார்வைதான். ப.சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிடலாம் அதில் வெல்லலாம். ஆனால் பின்பக்கத்தால் வரும் பெட்டிகளையும், இதர வசதிகளையும் எதிர்த்து, அதற்குமேலாக பெட்டிகளை அடுக்க முடியுமோ?
மதிசுதா,
இந்த வழக்கு அரசியல் நிர்பந்தத்தினால் போடப்பட்டது.
மேலும் "மொக்கையான" அரசு வாதத்தினால்,அவர்களே
ஆப்பு அடித்துக்கொண்டுவிட்டார்கள்(இதில் கலைஞரும் அடுங்குவர்)
சீமான் உணர்ச்சிவசப்படாமல் அரசியல் காய் நகர்த்தினால்
எதிர்காலம் பிரகாசிக்கலாம் அவருக்கு மட்டுமல்ல, தமிழினத்துக்கும்.
ஆஹா.... இப்படி ஒண்ணு இருக்கோ?
அண்ணன் விடிவெள்ளி மதி வாழ்க! :-))
நல்லாருக்கு!
வித்தியாசமான பார்வை தோழரே
நமக்கு இந்த மாட்டர் எல்லாம் தெரியாதப்பா...!
ஏதோ நல்லது நடந்தா சரி.
பதிவு சில உண்மைகளைச் சொல்கின்றது எனவே தோன்றுகிறது. வாழ்த்துக்கள்
உங்க பார்வை வித்தியாசப்படுகிறது.
முடிந்தால் என் சீரியஸ் பதிவு - நாங்க என்ன அடியாளுங்களா வந்து பார்த்து தங்கள் கருத்தை சொல்லவும்.
நன்றி
http://vikkiulagam.blogspot.com
2தமிழ்க அரசு போட்டது பொய் கேஸ் என்பதால் இத்தனை நாளாக கோர்ட்ட்டில் கேஸ் வர விடாமல் சதி செய்தார்கள்.சீமான் ஏற்கனவே கோர்ட்டுக்கு கேஸ் வந்தால் என் கேஸ் தள்ளுபடி ஆகி விடும்..கேஸ் கோர்ட்டுக்கு வர விடாமல் காலம் தாழ்த்துகிறார்கள் என்றார் அவர் சொன்னபடியே கேச் கோர்ட்டுக்கு வந்தவௌடன் தள்ளுபடி ஆகி விட்டது..சூர்யா மேட்டர் ஏற்கனவே பிசுபிசுத்து போய் விட்டது...சீமான் சினிமா காரர்களுக்கு எதிரி அல்ல..தமிழனை காட்டி கொடுத்தவர்களுக்குத்தான் எதிரி
தேர்தல் முடியும் வரை சீமான் சிறைக்குள்ளியே இருக்க வேண்டும் என கலைஞரும்,சில காங்கிரஸ் காரர்களும் ஆசைப்பட்டார்கள் அது நடக்க வில்லை..நீதி வென்றது...
புதுமையாகவும் வித்தியாசமாகவும் பதிவு செய்துள்ளீர்கள் அருமை
தொடரட்டும் உங்கள் பணி...
ரத்த சரித்திரம்,சூர்யா விவகாரம் சப்ப மேட்டர்.காங்கிரஸ்,தி.மு.க ,தமிழர்களுக்கு செய்த துரோகங்களை சீமான் தெள்ள தெளிவாக மக்களுக்கு எடுத்துரைக்கிறார் என்பதால்தான் அவரை சிறையில் முடக்கினார்கள்
வித்தியாசமான கோணம் .வித்தியாசமான பார்வை
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
தேர்தல் முடியும் வரை சீமான் சிறைக்குள்ளியே இருக்க வேண்டும் என கலைஞரும்,சில காங்கிரஸ் காரர்களும் ஆசைப்பட்டார்கள் அது நடக்க வில்லை..நீதி வென்றது...//
“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
இறுதியில் தர்மமே வெல்லும்”
http://seeprabagaran.blogspot.com/2010/12/blog-post_09.html தமிழக அரசின் முகத்திரையை கிழித்த சீமான்
இதை படித்து பாருங்கள் நண்பரே
அருமை வாழ்த்துக்கள்.
ஏதோ ஒரு புள்ளியில் எல்லாவற்றையும் தொடப்பார்க்கிறீர்கள். உங்கள் வித்தியாசமான சிந்தனை தொடரட்டும். வாழ்த்துக்கள்.
இவ்வளவு இருக்கா?
அப்படியா?
இது தெரியாம போச்சே!!!
வித்தியாசமான கோணத்தில் இருந்து பாத்துருக்கீங்க!!
சூப்பர்
வித்தியாசமான பார்வை வாழ்த்துக்கள்.
அன்பு நண்பன்
மதன்
http://mathandream.blogspot.com/
Welcome to MATHANDREAM BLOG where you can see all the latest Technology,Watch Latest Movies and Also You Dowload Software Etc..
எங்கோ படிக்க மறந்த கதையை இங்கே படித்துள்ளேன் போலும்.நன்றி.
இப்படியும் பார்க்கலாம் மதி!! இப்போது காங்கிரஸ் திமுகவை விட்டு விலகும் நிலையில் உள்ளது! அப்படி ஒன்று நடந்தால் காங்கிரசை எதிர்க்க சீமானுக்கு கொம்பு சீவப்படும்!!
சீமானை விட்டாச்சா? இப்ப தான் அறியிறன்...
அரசியல் தெரியாவிட்டால் எதற்கு இந்த அரைகுறைப் பதிவு.
சினிமாவும் இல்லை...சீம எண்ணையும் இல்லை.
இது,மு.க. காங்கிரசுக்குக் காட்டும் சிறிய படம். ராசாத்தீ வீட்டில் ரெய்டு நடக்கட்டும்..அதன் பின் மு.க. பெரிய படம் காட்டுவார்.
ஆனா ஊனா எண்டா விஜய் மடியில கையை வைக்கிறதே உங்க பிழைப்பா போச்சு எல்லே!
அட நாம வர late ஆயிடுச்சே
சீமானை உள்ளுக்கு தள்ளும் போது ரத்த சரித்திரத்தை கலைஞரின் வாரிசுகள் வாங்கவில்லை நண்பா, இது வேறு மேட்டர்.
நல்ல கட்டுரை
யாரோ 2 பேர் மைனஸ் ஓட்டு போட்டிருக்காங்க
நீங்க பிரபல பதிவர் ஆகிட்டீங்க
இவ்வளவு இருக்கா?
வாழ்த்துக்கள்.
என்ன நண்பரே அரசியலில் விருப்பம் இல்லையென்று சொல்லிக்கொண்டு ஒரு பெரிய அரசியலே பதிவில் செய்திருக்கிறீர்களே !? பகிர்வுக்கு நன்றி
நல்லதொரு அரசியல் அலசல் சுதா !
நல்ல அலசல்.........
நல்ல அலசல் அருமை நண்பா
நீங்க ரஜினி ரசிகரா அப்படின்னா நம்ம கடைப்பக்கம் கொஞ்சம் எட்டிப்பாருங்க.....http://ragariz.blogspot.com/2010/12/riddle-to-rajini-fans.html
இந்த வாரம் தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் 11-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.
தம்பிக்கு அரசியல் தெரியாதா?
நான் சொன்னது சரி தானே தம்பி?
அருமை தொடருங்கள்...
இவ்வளவு நடந்திருக்கா?
//படத்திற்கு நாம் தமிழர் இயக்கத்தால் எந்த சிக்கலும் வராத காரணத்தால் ஏதோ ஒரு சட்டத்தை காட்டி வெளிவிட்டிருக்கிறார்கள். //
இருக்கலாம், பல அரசியல் அந்தரங்கமாகவே முடிந்து விடுகிறது, சபைக்கு வராமலே..
//ரத்த சரித்திரம்,சூர்யா விவகாரம் சப்ப மேட்டர்.காங்கிரஸ்//
கவனம் தமிழ் உணர்வாளர்கள்(????!!!!!) உங்களையும் விமர்சனம் பண்ணி கிழிக்க போறாங்க
Your post says, seeman was arrested on 10.02.2010 for fishermen issue. Its absolutely wrong. He was arrested in June 2010. This shows your lack of knowledge in Politics. Also "Ratha Charithram" issue was closed before his arrest. That film was utter flob in Tamil Nadu and not running more than two days. So dont confuse yourself as well others.
கருத்துரையிடுக