இரண்டாது தடவையாக எமது பித்தலாட்ட தமிழ் சினிமாவிலிருந்து கொஞ்சம் எட்டப் போய் வரப் போகிறேன். தவறுகள் விடுவது மனிதனின் சாதாரண வழக்கம் என்பது யாவரும் அறிந்ததே அதற்காக எம்மவர் போல் கொப்பியடிக்கக் கூடாது தான் (எம்மவரின் கொப்பியை இங்கே பாருங்கள்) பல நுணுக்கமாக எடுக்கப்படும் ஹெலிவுட் உலகத்திலும் பல தவறுகள் வந்தே தீருகிறது அதில் பல விருதுகளைப் பெற்ற படங்களும் உள்ளடங்கியே இருக்கிறது.
இந்த முயற்சியை தமிழ் சினிமாவில் யாரும் மேற் கொண்டால் நல்லதொரு சினிமா உலகத்தை மாற்றியமைக்கலாம் ஆனால் பேரரசு நிச்சயம் வருத்தப்பட்டு பாதிக்கப்படுவார் என்பது தவிர்க்க முடியாமல் போய்விடலாம். ஏன் என்றால் அவர் கதையே யதார்த்த மீறல் தானே.. (என்னைப் பொறுத்த வரை விஜயை பாழக்கிய இயக்குனர் வரிசையில் அவருக்குத் தான் முதல் இடம்)
சரி வாங்க நம் பதிவுக்குள்ள போவம்.
முதலில் நாங்கள் போகப் போவது மிகவும் பிரபலமான கப்பல் ஒன்றிற்குள். அதாவது ஒரு சிறந்த காதல் காவியத்தை எமக்குத் தந்த டைட்டானிக் (TITANIC) படம் பற்றித் தான் எனது முதலாவது படமாகும். வடிவாகப் பாருங்கள் புகைப் போக்கிக்கு முன் உள்ள காட்சி அடுத்து விபத்து நடைபெறும் படத்தில் புகைப் போக்கிக்கு பிற்புறமாகத் தெரிகிறதல்லவா..??
அடுத்து வாருங்கள் ரேர்மினேற்றர்-2 ஜர்ஜ்மென் டேய் (TERMINATER 2 : JUDMENT DAY)
அதிலே பாருங்கள் அந்த போலிஸ்காரில் உள்ள இலக்கத் தகடுகளை முதல் தடவை பார்க்கும் போது 273 ல் முடிகிறது காரை நிறுத்தும் போது 232 ஆக மாறிவிட்டது. பின்னர் பாய்கையில் ஒரு இலக்கம். நேராகப் போகையில் 013 ஆக மாறிவிட்டது கடைசியாகப் பாருங்கள் 018 என்ற எண்ணாக இருக்கிறது.
அடுத்த ஸ்வோர்ட் பிஸ் (SWORDFISH) என்ற படத்தில் பாருங்கள் நடிகருக்கு அருகிலுள்ள கார் இருக்கையை அதன் தலை சாய்க்கும் பகுதி முதல் காட்சியில் ஓய்ந்த நிலையிலும் இரண்டாம் காட்சியில் உயர்ந்தும் இருக்கிறது.
அடுத்ததும் மாட்டுப்பட்டது அதே படம் தான். குண்டு (EXPLOSION) வெடிப்பிற்கு முன்னர் அந்த காரில் அமர்த்தி வைக்கப்பட்டிருக்கும் செயற்கை உருவத்தை (DUMMY) பாருங்கள்.
“என்ன ரசித்திர்களா இது சும்மா ரெயிலர் தான் கண்ணா இன்னும் மெயின் பிக்சரை நீ பார்க்கல பார்க்கணுமா ஒரு வாரம் காத்திரு..”
முதலில் இந்த படங்களை பெற உழைத்த அந்த வெள்ளைக்கார மனிதருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். அவர் பாடுபட்டு பெற்றதை நான் நோகாமல் களவெடுத்து ஹிட் வாங்குகிறேன். இருந்தாலும் எனக்கு ஒரு வாக்கிட உங்களுக்கு சம்மதம் தானே..
37 கருத்துகள்:
nice!! :))
யப்பா... இதுக்குப் பேர்தான் கண்ணுல விளக்கெண்ண விட்டுக்கிட்டு பாக்கிறதோ... என்னமா பாத்திருக்கீங்க... தொடருங்க... நாங்களும் படிக்கிறோம்.
எங்கயோ பிறக்க வேண்டியவன் இலங்கையில வந்து பிறந்திட்டான்
அருமையான ஆப்பு.....
இதுக்கு மேல உங்க திறமையை பற்றி என்ன சொல்வேன்....எப்படி சொல்வேன்..மேலும் எதிர்பார்க்கிறோம்....
waaaw..அபாரமான ஒரு தேடல்தான் சுதா.
அருமை
லோக்கலோ, இல்ல பாரினோ, சுட்ட பதிவுனா லிங்கைக் கொடுக்கணும் கண்ணா
http://do-while.com/coolest-movie-mistakes/
//“என்ன ரசித்திர்களா இது சும்மா ரெயிலர் தான் கண்ணா இன்னும் மெயின் பிக்சரை நீ பார்க்கல பார்க்கணுமா ஒரு வாரம் காத்திரு..”
//
அதுக்குள்ள பில்டப்பு, Watermark... ஸ்ஸபா
:))
தொடருங்கள் நண்பரே!
தேடுங்க... தேடுங்க.... நல்லத்தேடுங்க....
இதைத்தான் சொல்வது எறியிரவண்ட கையில் பொல் இல்லை என்று.
பேசாம இலங்கையில் இருந்து ஒரு திரைப்படத்தை நீங்கள் டைரக்ட் பண்ணினால் என்ன சகோதரா ?
விடாமல் பாகம் 100 வரை தொடருங்க இன்னும் உங்கள் திறமையை வெளிப்படுத்துங்க ....
வாழ்த்துக்கள் சகோதரா!
ஆகா, ஓகோ, அருமை. இப்படி ஏதாவது பின்னூட்டினால்தான் அனுமதிப்பீரோ? பிழையைச் சுட்டினால் பின்னூட்டம் வெளிவிடப்பட மாட்டாதா? இப்படி உங்களுக்கு சொந்தமில்லாத பாராட்டுகளைக் கேட்க உங்களுக்கு வெட்கமாக இருப்பதில்லையா?
ஜீ... said...
வருகைக்க மிக்க நன்றி சகோதரா...
சே.குமார் said...
ஃஃஃஃஃஃயப்பா... இதுக்குப் பேர்தான் கண்ணுல விளக்கெண்ண விட்டுக்கிட்டு பாக்கிறதோ... என்னமா பாத்திருக்கீங்க... தொடருங்க... நாங்களும் படிக்கிறோம்.ஃஃஃஃஃ
வருகைக்க மிக்க நன்றி சகோதரா...
சகோதரா இதில் என் பங்கு தேடல் மட்டும் தான்....
யாதவன் said...
ஃஃஃஃஃஎங்கயோ பிறக்க வேண்டியவன் இலங்கையில வந்து பிறந்திட்டான்ஃஃஃஃ
நன்றி அண்ணா... நக்கலா...
ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...
ஃஃஃஃஃஃஃஅருமையான ஆப்பு.....
இதுக்கு மேல உங்க திறமையை பற்றி என்ன சொல்வேன்....எப்படி சொல்வேன்..மேலும் எதிர்பார்க்கிறோம்..ஃஃஃஃஃஃ
நன்றி தம்பி ... இதுக்கெல்லாம் நேரம் மட்டும் இருந்தால் போதும் எவ்வளவும் தேடி எடுக்கலாம்...
Jana said...
ஃஃஃஃஃஃஃwaaaw..அபாரமான ஒரு தேடல்தான் சுதாஃஃஃஃஃ
மிக்க நன்றி அண்ணா...
சசிகுமார் said...
வருகைக்க மிக்க நன்றி சகோதரா...
நாகராஜசோழன் MA said...
ஃஃஃஃதொடருங்கள் நண்பரேஃஃஃஃ
நிச்சயமாக சகோதரா.... வருகைக்க மிக்க நன்றி சகோதரா...
KANA VARO said...
ஃஃஃஃஃஃதேடுங்க... தேடுங்க.... நல்லத்தேடுங்க...ஃஃஃஃஃ
ஆமாம் வரோ மிக்க நன்றி....
மகாதேவன்-V.K said...
ஃஃஃஃஃஃஃஃஃஃஇதைத்தான் சொல்வது எறியிரவண்ட கையில் பொல் இல்லை என்று.
பேசாம இலங்கையில் இருந்து ஒரு திரைப்படத்தை நீங்கள் டைரக்ட் பண்ணினால் என்ன சகோதரா ?
விடாமல் பாகம் 100 வரை தொடருங்க இன்னும் உங்கள் திறமையை வெளிப்படுத்துங்க ....ஃஃஃஃஃஃஃ
வருகைக்க மிக்க நன்றி சகோதரா... ஏன் சகோதரா சம்பந்தமில்லாமல்....
இறுதியாக அனானிச் சகோதரனுக்கு நீங்கள் சொல்வது விளங்கல கொஞ்சம் நாகரிகமாக சொன்னால் பிரசுரிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையுமில்லை...
அது சரி உங்களுக்கு எக்கவுண்ட் இல்லையா அல்லது துணிச்சல் இல்லையா.. எனக்கு சந்தேகமாயிருக்கிறது....
பிழைகளை செய்ததை நன்றாக கண்டுபிடித்து வெளியிட்டுள்ளீர்கள். வாக்களிக்க சம்மதம்.
நீங்க கலக்குங்க பங்கு
nadaKKATTUM..
மம்ஸ் சூப்பரா தான் ரிசேஜ் பண்ற..
பேசமா ஸ்கோட்லண்ட் யாட்ல சேரலாமே !
ஹாலிவுட் ரேஞ்சுல கலக்குறியேப்பா
டைட்டானிக் சூப்பர்
See Here...
http://do-while.com/coolest-movie-mistakes/
தொடருங்கள் நண்பரே!
அபாரமான ஒருதேடல்தான்.
தொடரவும்.
Super..
இதுக்கு முன்னாடி ஒரு பின்னூட்டம் போட்டேன். ஆனா, அது வரல..
இதாவது வருமான்னு பாப்போம்..
இந்த சுட்டிய பாருங்கப்பு....
http://do-while.com/coolest-movie-mistakes/
மிகவும் கூர்மையாகப் பார்க்கிறீர்கள். நல்ல முயற்சி.
களவாடினேன் என்று ஒப்புக்கொண்ட உங்கள் நேர்மைக்கு பாராட்டுக்கள்... ஆனால் நீங்கள் தமிழ் படுத்திய விதம் உங்களுக்கே சொந்தம்...
சூப்பர் பதிவு தல
அட சாமி.. நான் இங்கிலீசு ப்ளாக் பக்கம் எல்லாம் போகரதில்லப்பா... அவர் எடுத்து வந்து நமக்காக தொகுத்து வழங்கறார்.. இதுல என்ன தப்பு..
நீங்க எழுதுங்க தல..
//ரேர்மினேற்றர்-2 ஜர்ஜ்மென் டேய் (TERMINATER 2 : JUDMENT DAY)//
ஆனா டெர்மினேட்டர் டூ.. ஜட்ஜ்மென்ட் டே அப்படிங்கறதையே இவ்வளவு டெரரா எழுதி இருக்கீங்க.. படிக்கவே பயமா இருந்துச்சு..(சும்மா)
தொடருங்கள்.. நன்றி..
கருத்துரையிடுக