சனி, 24 ஜூலை, 2010

ஹெலிவூட்டில் களவாடிய நம்மவர்கள்.

                                                 (இங்கு யாரையும் மட்டம் தட்ட வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. நான் அறிந்த சிலதை அறியத்தருகிறேன்)


                                                      முதலில் தமிழ் சினிமாவின் ஒட்டு மொத்த மானத்தையும் குழி தோண்டிப் புதைத்த சம்பவங்களில் ஒன்று. நமது அக்ஷன் கிங் நடித்த “துரை“ திரைப்படத்தின் ஆரம்பக்காட்சியாகும். அதாவது மர உச்சியில் இருக்கும் கொடியை எடுத்துக் கொண்டு கீழே வரவேண்டும். மிகவும் தத்ரூபமாக எடுக்கப்பட்ட காட்சி. பல காட்சிகளை அர்ஜீன் தானே நேரடியாக நடித்திருந்தார்.
ஆனால் ஒரு விடயம் என்ன வென்றால் அர்ஜீனோ, இயக்குனரோ, சண்டைப்பயிற்சியாளரோ யாரென்று தெரியல பார்வையளரை பேய்ப்பட்டம் கட்டிவிட்டார்கள். ஏனெனில் இது ombak என்ற ஆங்கிலப்படத்தின் பிரதிக்காட்சியாகும். இது தமிழில் “மிரட்டல்“ என்ற பெயரில் வந்தது.
ஒரு உண்மையை யாரும் மறைக்க முடியாது. என்னவென்றால் இரு படத்தான் காட்சியை ஒப்பிடும் போதும் சண்டைக்காட்சி சம்பந்தப்பட்ட முழுப் பெயரும் onbak படத்தை பார்த்திருக்கவேண்டும். இரு படத்தின் காட்சிக்கும் வேறுபாடில்லை.
                                                       இந்தப்படத்தை இன்னொரு இடத்திலும் களவாடியிருக்கிறார்கள். “சச்சின்“ படத்தில் விஜய்க்கான காட்சி ஒன்று. ஒரு சண்டையில் மோட்டார் சைக்கிளில் (fild bike) வரும் ஒருவர் மீது எழும்பி முழங்காலால் இடிப்பார். தலைக்கவசம் இரண்டு துண்டாகி விழும். இக்காட்சியும் “ombak“ ல் இடம்பெற்றதாகும். சிலவேளை விஜய்க்கு இது பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால் இப்படி நாம் சாக்கு போக்கு சொன்னால் விஜய் ஹெலிவூட் படம் பார்ப்பதில்லை என்றாகி விடும் “ombak“ அந்தளவுக்கு பிரபல்யமான படமாகும்.
                                                    அடுத்தது நம்ம ஜனநாதன் இயக்கிய படமான “பேராண்மை“. நான் 2002 ம் ஆண்டு காலப்பகுதியில் இதே கதையுள்ள படத்தை “star movies“ ல் பார்த்தேன். ஆனால் அதில் ஒரு வயோதிபரே சில பெண்களை வைத்து நாட்டை காப்பாற்றுவார். (இது ரஷ்யா கதையாக இருக்குமென்று நினைக்கிறேன்)
                                                       அதேபோல் அந்தக்காலப்பகுதில் நான் பார்த்த ஒரு படம் பின்னர் சரணின் ஜெஜெ பார்த்த போது அதே போல் இருந்தது. சரணின் ஜெஜெ யில் நடிகரின் பெயரில் ஒரு புத்தகம் இருக்கும் அதேபோலத்தான் அந்த ஆங்கிலப்படத்திலும் வருகிறது. (இரு படத்தினதும் பெயர் மறந்து போய் விட்டது தெரிந்வர் பின்னூட்டத்தில் இடுங்க)

இப்படி பல இருக்குதுங்க தெரிந்தால் எல்லோருடனும் பகிருங்க.

(தமிழ்பயன்படுத்த முடியாத இடத்தில் ஆங்கிலம் பிரயோகித்துள்ளேன் மன்னிக்கவும்)

குறிப்பு – சின்ன சின்ன பாரட்டுக்களும் விமர்சனங்களும் தான் புதிய முயற்சிகளைத் தோற்றுவிக்கும்.
என் அடுத்த பதிவு தோசை என்ற பெயர் எப்படி வந்தது.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

29 கருத்துகள்:

Madhav சொன்னது…

Ennathu Gandhiya suttutangala ??????

http://urupudaathathu.blogspot.com/ சொன்னது…

Serendipity

எல் கே சொன்னது…

தமிழ் படங்கள் பல ஆங்கில படங்களின் காப்பிதான். தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் பிழைகள் குறையும்

ஐயா ,

அது onbak அல்ல OMBAK(பேரலை அல்லது துறவி ) .அது ஹாலிவூட் படமல்ல .தாய்லாந்து மொழி படம்.நாயகனின் திறமையை கண்டு ஹாலிவூடிற்கு கொண்டு சென்றனர். அந்த படத்தின் சண்டை காட்சிகள் கிட்டத்தட்ட இன்றளவும் எல்லா மொழி படங்களிலும் பயன்படுத்துகின்றனர் .

ம.தி.சுதா சொன்னது…

@ அழகிரி, சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. புது தகவல்களை தந்திருக்கிறீர்கள். படத்தின் பெயரை நான் தான் தவறாக அடித்துவிட்டேன். தவறிற்கு மன்னிக்கவும்

ம.தி.சுதா சொன்னது…

@ LK மிக்க நன்றி. மற்றும் அணிமா, madav உங்களுக்கும் என் நன்றிகள்.

புகைப் போக்கி சொன்னது…

கலக்கிட்டிங்க சுதா. இதைவிட மற்றைய கிஞ்சு முஞ்சா காட்சிகள் பலதும் கொப்பியடிச்சிருக்கிறாங்க. தெரிஞ்சே எழுதலியா? இந்த வம்பன் சொல்லட்டுமா?

Unknown சொன்னது…

சுதா முடிந்தால் அந்த ஆங்கிலப்படத்தையும் கண்டுபிடிச்சு தாங்க.

வாய்யா வாஸ்கோடகாமா,வாழ்த்துக்கள்

Karthick Chidambaram சொன்னது…

ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு எல்லாவற்றிலும் இருந்து தமிழுக்கு தழுவல் (காபி) உண்டு.
என்ன மத்ததில் உரிமை வாங்க காசு தரனும். ஆங்கிலம் விதிவிலக்கு.

ம.தி.சுதா சொன்னது…

@ சி.பி.எஸ், சஞ்ஜெய், வம்பன் தங்களின் கருத்துக்கு நன்றிகள்

ம.தி.சுதா சொன்னது…

கார்த்திக் இத்தனையும் இருக்க ஜனநாதன் பேராண்மையை அங்கு கொண்டு போகப் போகிறாரே.

Unknown சொன்னது…

சுதா ஜமாய்ச்சிட்டிங்களே

Katz சொன்னது…

100 days with Mr Arrogant இந்த கொரியன் படத்துல இருந்து தான் நம்ம சரண் மோதி விளையாடு படத்துக்கு சில ரொமாண்டிக் சீன் உருவி இருக்கார்.

ம.தி.சுதா சொன்னது…

@ நன்றி கரன்
@ வழிப்போக்கா தகவலுக் நன்றி. சரன் ரொம்ப மோசமா போறாரு

அருண் சொன்னது…

ஆதவன் படத்தில் அப்பாவை கொள்ள முயற்சிக்கும் முதல் சந்தர்ப்பத்தில் வேண்டுமேன்ன்றே அதை தவற விடுவார் சூர்யா,அதை தொடர்ந்து விறுவிறுப்பான ஒரு Chasing சீன்,இது B13 எனும் {ஜேர்மனிய திரைப்படம்னு நினைக்கிறேன்} படத்திலிருந்து சுட்டது. அந்த சீன் முடிவில் ஒரு பாலத்திலிருந்து கீழே குதிப்பார் நம்ம ஹீரோ சூர்யா,இது Vin Diesel நடித்த XXX -1 எனும் படத்தில் உள்ளது.

ம.தி.சுதா சொன்னது…

@ ச.அருண்பிரசாத். said...
தகவலுக்கும், வருகைக்கும் நன்றி.

Unknown சொன்னது…

Action king நடித்த சூரியப்பார்வை Leon the Professional படத்தின் அப்பட்டமான copy

Jerry Eshananda சொன்னது…

மதியோடையில்...நனைவதென்ன ...."தொபுக்கடீர்னு குதிச்சாச்சு" நல்லாயிருக்குங்க..கலக்குங்க.

ம.தி.சுதா சொன்னது…

@ Ramachandran said...
வருகைக்கு நன்றி சகோதரா..

ம.தி.சுதா சொன்னது…

@ ஜெரி ஈசானந்தன். said...
நன்றி சகோதரா பார்த்து குதியுங்க ரோம்ப மோசமான இடம் சுழி இழுத்திடும்.

Unknown சொன்னது…

அக்சன் கிங் நடித்த துரை படத்தில் முதல் சண்டை காட்சி மட்டுமல்ல படமே சுட்டது தான்.Gladiator என்ற உலக புகழ் பெற்ற படத்தை அப்படியே சுட்டு தான் இந்த மொக்கைபடத்தை எடுத்தார்கள்.அது அரச காலத்து படம் இது இன்றைய அரசியல் கதை இது தான் வித்தியாசம்.அந்த படத்தில் குதிரையில் வரும் பொது தடக்கி விழுவார் hero அதே போல் துரை படத்தில் TVS இல் வரும் பொது விழுவார் அர்ஜுன்

ம.தி.சுதா சொன்னது…

one said...
நன்றி சகோதரம்... நல்ல செய்தி சொல்லியுள்ளீர்கள்..

Sathish சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Sathish சொன்னது…

its not onbak or ombak..
ONGBAK...

Peranmai is copied from russian movie.it is released on 1930's.


B13 is french movie(i know well becoz im fan to that both actors david belle and cyril raffaelli)
actually alex martin(dupe hero for rajini in enthiran) is the student of cyril.

velayutham pictures are copy of assasins creed game. its world famous game. after publish this pictures he will be the world famous comedian :-)

not only that upcoming and lots of hit movies in tamil cinema is mostly copied from english,french,russian and african movies. gautham menon is gentle guy he only copy film from canada and england movies only :-)

even i guess enthiran is also mixed copy of terminator,i-robot movies

To see amazing pictures in world
http://eyesnotlies.blogspot.com

ம.தி.சுதா சொன்னது…

Sathishkumar said...
நன்றி சகோதரம்... நல்ல தகவல்கள் சொல்லியுள்ளீர்கள்..

பெயரில்லா சொன்னது…

My best friends wedding - Paarthean rasithean

Unknown சொன்னது…

சூப்பரு

நம்மாளுங்க கிட்ட இருக்க பெரிய விசயமே செண்டிமெண்டு தான் அத எந்த நாட்டுகாரனாளையும் சுட முடியாது.

Unknown சொன்னது…

பார்த்துக் கதைங்க. Case போட்டுடப் போறாங்க

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top