திங்கள், 21 பிப்ரவரி, 2011

தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)

அன்புச் சகோதரங்களே சேமம் எப்படி ?
      இன்று தாய்மொழி தினமாக கொண்டாடுகிறார்கள் இந்த இனிய நன்நாளிலே என்னால் முடிந்த ஒரு சிறு முயற்சியை செய்கிறேன் பலர் என்னுடன் அரட்டையில் வரும் போது அடிக்கடி கேட்கும் ஒரு உதவி எப்படி தமிழ் அடிக்கிறீர்கள் என்று நானும் ஆரம்பத்தில் தங்களைப் போல் தான் தமிழுக்காய் அலைந்த்துண்டு அனால் இப்போது என் எச் எம் ரைட்டர் பாவிப்பதால் எந்த வித சிக்கலுமில்லாமல் விரல் நுனியில் தட்டச்சிடுகிறேன்.
     அதை நிறுவுவதெப்படி என பார்ப்பதற்கு முன்னர் அதன் உருவாக்கத்தை அறிய வேண்டுமல்லவா ?

என் எச் எம் ரைட்டர் (NHM writter) 
    சென்னையில் உள்ள நியூ ஹொரைசேன் மீடியா நிறுவனத்தினால் கே.எஸ்.நாகராஜனை பிரதான நிரலாக்கராகக் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் உட்பட அசாமிய_மொழி, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடம்மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய இந்திய மொழிகளை உள்ளீடு செய்ய உருவாக்கப்பட்ட மென்பொருள் ஆகும். இது 2009-2010 ற்கான தமிழ் நாட்டின் கணியன் பூங்குன்றனார்  விருதை பெற்றது இதன் சிறப்பம்சமாகும். இவற்றுக் கெல்லாம் காரணம் இதன் இலகு தன்மை தான் இந்த மென் பொருள் மிக மிகச் சிறியது. அத்துடன் வின்டோஸ் 7 ல் கூட இலகுவாக நிறுவமுடியும். அத்துடன் இது பெரும்பாலான இணைய உலாவிகளுக்கும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது. அதுமட்டுமல்ல கணணியில் கூட எல்லா வடிவக் கோப்புகளிலும் தட்டச்சிடலாம்.
      
       சில வேளைகளில் தங்களுக்கு இதை நிறுவுவதில் ஏதாவது சிக்கல்கள் வந்தால் (மென் பொருளால் அல்ல தங்களின் கணணி பிரச்சனையால்) கவலையை விடுங்க ஒரு வேர்ட் பாட் (word pad) ஐ திறந்து சாதாரண பாமினி எழுத்தில் தட்டச்சிட்டு விட்டு அதை அப்படியே copy பண்ணி விட்டு online conveter என்பதன் மேல் சொடுக்கி போனால் அங்கே என் எச் எம் ரைட்டர் online coveter இருக்கிறது அதில் paste பண்ணிவிட்டு மறுபக்கப் பெட்டியில் இருக்கும் யுனிகோட் என்பதை தெரிந்தெடுத்து விட்டு convert என்பதை சொடுக்கினால் சரி தங்களது யுனிகோட் எழுத்துரு வந்துவிடும். இது யாருக்கு உதவுமென்றால் வழமையாக திரையை பார்க்காமல் என் எச் எம் ரைட்டரில் தட்டச்சிடுவோர் தவறுதலாக ஆங்கிலத்தில் தட்டச்சிட்டு விடுவோம் எவ்வளவு கடுப்பாயிருக்கும் அப்போ இந்த வழி கட்டாயம் உதவும்.
பாமினி தட்டச்சுப் பலகை
alt+2 கொடுத்து பெறும் உச்சரிப்பு தட்டச்சுப் பலகை
தமிழ் 99 தட்டச்சுப் பலகை
     அத்துடன் பலருக்கு பாமினி எழுத்துருவில் தட்டச்சிடுவது பலருக்கு பழக்கமிருக்காது என்பதால் google translater பாவிப்பீர்கள் அதற்கும் இங்கே தீர்வு இருக்கிறது alt+2 க் கொடுத்தால் phoneti code வரும் இதில் வைத்து ammaa என அடித்தால் அம்மா என தோன்றும் இது உச்சரிப்பியல் சார்ந்த்தால் நீங்கள் sms அடிப்பது போல அடித்தாலே தமிழ் கண் முன் தோன்றும் (இது தமிழுக்கு உகந்ததல்ல என யாரும் திட்ட வேண்டாம் எனக்கு ஆங்கிலத்தில் தட்டச்சிடும் ஒருவரை தமிழுக்கு மாற்றுவதே எண்ணமாகும்)

       உறவுகளே வருத்தத்திற்குரிய செய்தி ஒன்று ஒரு இரவு முழுதும் இருந்து இன்றைய நாளுக்காய் ஒரு பதிவை எழுதி விட்டு படங்களுக்காய் மீள என் எச் எம் ரைட்டரை தரவிறக்கி நிறுவி நிறுவலை படமாக்கி விட்டு பார்தால் (2008 ல்) ஏற்கனவே ஒருவர் இதைப்பற்றி எழுதியிருக்கிறார்  (நன்றி FIZAL) என் சொந்த முயற்சியில் எழுதினாலும் நான் திருடனாக பட்டம் பெற விரும்பல அதனால் அந்த தொடுப்பையே அடியில் தருகிறேன். ஆனால் 
மேலே பதியப்பட்டுள்ள தகவலுக்கு நான் தான் உரிமையாளி என்பதை மார் தட்டிச் சொல்லிக் கொள்கிறேன். இதற்கு முன்னர் எழுதிய fizal இப்போ எழுதுவது இல்லை போல தெரிகிறது அதனால் சந்தேகங்கள் இருப்பின் கேளுங்கள் தெரிந்ததை சொல்கிறேன்.

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

என் எச் எம் ரைட்டரை தரவிறக்க இந்தப் பெயரை சொடுக்கங்கள் Click here to download NHM Writer அதன் பின் இறக்கிய கோப்பை திறவுங்கள் படத்தில் உள்ளது போல வரும்.


இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்


next ஐ கொடுத்தால் இது போல படம் வரும்


அடுத்து மொழியை தெரிவு செய்யுங்கள்.


next ஐ கொடுத்தால் இது போல படம் வரும்.


next ஐ கொடுத்தால் மென் பொருள் நிறுவப்படும்


அதன் பின் task bar ல் மணி போன்ற உருவம் வரும் அதைச் சொடுக்கி உங்களுக்குத் தேவையான எழுத்துருவை பெறலாம். இவ்வளவும் தான் விடயம்


பொறுங்க பொறுங்க தொடுப்பை சொடுக்க முதல் வாக்கையும் கருத்தையும் சொல்லிட்டு சொடுக்குங்க..
(இந்த தெளிவான படங்களை தந்ததவிய fizal ற்கு நன்றி)

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

70 கருத்துகள்:

Unknown சொன்னது…

வடை

Unknown சொன்னது…

வாழைப்பழம்

Unknown சொன்னது…

பாயாசம்

Unknown சொன்னது…

பணியாரம்

Unknown சொன்னது…

கொத்து

Unknown சொன்னது…

வெட்டு

Unknown சொன்னது…

நமக்கு எப்பவுமே இண்டிக் தான் பாஸ்

Unknown சொன்னது…

வாருமையா ரொம்ப நாலா லீவு போல ஹி ஹி!

sathishsangkavi.blogspot.com சொன்னது…

அனைவரும் அறிய வேண்டிய விசயம்...

test சொன்னது…

உபயோகமான தகவல்! நன்றி!

உபயோகமான தகவல்.

Jana சொன்னது…

நல்லதகவல்தான். நானும் இதை பாவித்துவருகின்றேன். ஆனால் என்னமோ தெரியலை சிலவேளைகளில் சொதப்பி விடுகின்றது. எழுத்துகளுக்கு பதிலாக வட்டங்கள் டிசைனுகள் வந்து தொலைக்குது.

Jana சொன்னது…

அது சரி..நனைவோமா என்ன வடதுருவத்திற்கு போயிட்டுதா? டாப்பில இருந்து பனி கொட்டுது!! கெட்லைனை பனிக்கரடி சுரண்டிப்பார்த்திருக்குது!!

Chitra சொன்னது…

தகவலுக்கு நன்றிங்க...

அமுதத் தகவல்
இதையும் பாருங்க: இந்திய கிரிக்கெட் வீரர்களின் பலம்!

நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள் ...

ஆர்வா சொன்னது…

மிக விரிவான தகவல்.. நிறைய பேருக்கு பயன்படும்.. நன்றி

ம.தி.சுதா சொன்னது…

Jana said...
நல்லதகவல்தான். நானும் இதை பாவித்துவருகின்றேன். ஆனால் என்னமோ தெரியலை சிலவேளைகளில் சொதப்பி விடுகின்றது. எழுத்துகளுக்கு பதிலாக வட்டங்கள் டிசைனுகள் வந்து தொலைக்குது.

...........

அண்ணா M.S word ல் தட்டச்சிடும் போது இந்தப்“ பிரச்சனை வரலாம் அப்படியான நெரம் short cut ஐ பாவிக்காமல் நேரடியாக மணி மேல் சொடுக்கி எழுத்துருவிற்கு மாறலாம்...

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

நானும் வந்துட்டேன்

ரொம்பவும் அவசியமான பதிவு நண்பா! இருங்க நானும் ட்ரை பண்ணுறேன்!

சுதர்ஷன் சொன்னது…

நலல் தகவல் ..நானும் இதை பாவிச்சன் அப்புறம் குழப்பிவிட்டது ..மறுபடியும் முயற்சி செய்யணும் :)

கவி அழகன் சொன்னது…

நன்றாக உள்ளது கடைசியில் இப்படியா போச்சு
அனாலும் அத சுட்டிகாடியது பெருமைக்கு உரியது

மாணவன் சொன்னது…

பயனுள்ள தகவல்கள் பகிர்வுக்கு நன்றி நண்பரே :)

உபயோகமான தகவல் நன்றி மக்கா....

பெயரில்லா சொன்னது…

நல்ல பகிர்வு

http://sathish777.blogspot.com/2011/02/12-2011.html

Unknown சொன்னது…

தேவையான பதிவு சகோ. நிறைய பேருக்கு பயன் அளிக்கும்.

எஸ்.கே சொன்னது…

பயனுள்ள பதிவு!

S.T.Seelan (S.Thanigaseelan) சொன்னது…

பொருத்தமான முயற்சி... நன்றி நண்பரே..

பயனுள்ள தகவல்கள் பகிர்வுக்கு நன்றி

சசிக்கு போட்டியா. ம்ம் நடத்துங்க

Unknown சொன்னது…

வடை பாயசம் எல்லாம் எனக்கே.

அருமை சகோ
முயற்சிக்கிறேன்
நன்றி

http://rkguru.blogspot.com/ சொன்னது…

உபயோகமான தகவல்!

வைகை சொன்னது…

நன்றி சகோதரா..

ஆதவா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கார்த்தி சொன்னது…

நானும் பதிவெழுதவோ அல்லது முகப்புத்தகத்தில் தமிழில் டைப்பவோ இதைதான் பாவிக்கிறேன். மிகவும் இலகுவானது. எல்லோருக்கும் இதை அறியதந்தமைக்கு நன்றிகள்!

ஆதவா சொன்னது…

NHM ல் தான் நான் டைப் பண்ணுகிறேன். (எனது விண்டோஸ் 7 க்கு இ கலப்பை முரண்டு பிடிக்கும்)

ஷஹன்ஷா சொன்னது…

அண்ணா தங்கள் பணி குறித்து உண்மையில் பெருமையடைகின்றேன்...

எனக்கும் ஆரம்பத்தில் Facebook பாவிக்கும் போது தமிழ் தட்டச்ச இவ் மென்பொருள் உதவியை தந்தீர்கள்..அதை இன்றும் என் பதிவுகளுக்கும் பயன்படுத்துகின்றேன்..
நன்றிகள் பல கோடி.

மிகவும் இலகுவானது..விரைவில் கணனி தட்டச்சும் கற்கலாம்..

ஃஃஃஃஅது சரி..நனைவோமா என்ன வடதுருவத்திற்கு போயிட்டுதா? டாப்பில இருந்து பனி கொட்டுது!! கெட்லைனை பனிக்கரடி சுரண்டிப்பார்த்திருக்குது!!ஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இதை பார்க்கும் போது என்னமோ ஏதோ புரியுதே....!!

ஷஹன்ஷா சொன்னது…

ஃஃஃஃஅது சரி..நனைவோமா என்ன வடதுருவத்திற்கு போயிட்டுதா? டாப்பில இருந்து பனி கொட்டுது!! கெட்லைனை பனிக்கரடி சுரண்டிப்பார்த்திருக்குது!!ஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இதை பார்க்கும் போது என்னமோ ஏதோ புரியுதே....!!

அன்புடன் ஜனகன்.
http://sivagnanam-janakan.blogspot.com/2011/02/blog-post_21.html

இளங்கோ சொன்னது…

தகவலுக்கு நன்றி சகோதரா..

கோலா பூரி. சொன்னது…

மிகவும் பயனளிக்கும் தகவல். நானும் கூட என். எச். எம் தான் யூஸ்பன்ரேன்

நல்ல தகவல் தலைவரே...

jagadeesh சொன்னது…

உபயோகமான தகவல்!

சீலன் சொன்னது…

தகவலுக்கு நன்றி சகோதரன்

ஆகுலன் சொன்னது…

தேவையான ஒன்று....
அது என்ன சேமம்?

Admin சொன்னது…

NHM Writer ல பாமினி எழுத்துரு முறைல சில தமிழ் எழுத்துக்கள் எழுத முடியாது அப்படீன்னு நெனக்கிறன் சரியா?
றூ, தூ,ஹூ,பூ.....

Samy சொன்னது…

Nalla iruku Sutha. samy

பெயரில்லா சொன்னது…

உபயோகமான தகவல். பகிர்வுக்கு நன்றி

மு.லிங்கம் சொன்னது…

நல்ல விடயம், உங்க தகவலுக்கு நன்றி சுதா!

vanathy சொன்னது…

good info.

பயனுள்ள பதிவு

நல்ல தகவல்..
தமிழ் மக்கள் பயன் அடையட்டும்..

Prabu M சொன்னது…

ந‌ல்ல‌ ப‌கிர்வு ந‌ண்பா.. ந‌ன்றி..

நல்ல தகவல்கள்தான்.

பயனுள்ள தகவல் சகோதரா
வாழ்த்துக்கள்

Muruganandan M.K. சொன்னது…

நன்றி ம.தி.சுதா. நான் இதுவரை keyman பாவித்துக்கொண்டிருந்தேன். இது இன்னும் இலகுவாக இருக்கிறது. Install பண்ணி விட்டேன. நன்றி.

நான் NHM ல் தான் தட்டச்சு பண்ணுகிறேன்.

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

மதியை நன்றாகவே பயன்படுத்தி, செல்லும் இடமெல்லாம் முதல் (வரிசையில்) இடத்தைப் பிடிக்க நல்ல யுத்தியைக் கையாண்டிருக்கிறீர்கள்! [& amp ; lt;] பலே! :)))

S Maharajan சொன்னது…

முதன் முதலில் நல்ல தகவல்களோடு தான்
ஓடையில் குளித்து இருக்கின்றேன்

middleclassmadhavi சொன்னது…

உபயோகமான பதிவு. நன்றி சகோதரரே!

r.v.saravanan சொன்னது…

பயனுள்ள தகவல்

அப்பாதுரை சொன்னது…

மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி.

இரண்டு வருடமாக NHM Writter ஐ பயன்படுத்தி தட்டச்சிய நான் தற்போது கூகுல் ட்ரான்ஸ்லேட்டரை வைத்து தட்டச்சுகிறேன், காரணம் லினக்சில் NHM Writter வேலை செய்யாததனாலாகும்.

பெயரில்லா சொன்னது…

பிரமாதம்... தட்டி கொடுத்து தட்டச்சு செய்ய வைத்து விட்டீர்.

Jiyath சொன்னது…

நல்ல மென்பொருள்.
நன்றி அண்ணா

Unknown சொன்னது…

தமிழ் மீதான எனது ஆதங்கத்தை தணித்த வள்ளலே நீர் நலம் பெற்று வாழ்க

பெயரில்லா சொன்னது…

NHM ரைட்டரை நிறுவுதல் சம்பந்தமான படங்களை எப்படி காப்பி செய்து எப்ப்டி உங்கள் பதிவில் வர வழைக்கின்றீர்கள். என் கேள்வி உங்களுக்கு புரியாமல் இருக்கலாம்.

http://4.bp.blogspot.com/-He2UNfH_LBI/TWL4DmN8BMI/AAAAAAAABFI/uLimvHg6_Pg/s1600/image_thumb15.png

In this link an image is present.அதை மட்டும் தனியாக எப்படி பிரித்து எடுத்து முதன் முதலில் காப்பி செய்தீர்கள்? அதை சொல்லவும்

பெயரில்லா சொன்னது…

plz tell me

ம.தி.சுதா சொன்னது…

@ d said...

வணக்கம் சகோதரா நான் அப்படத்தைப் பெற்றது பைசல் என்பவரிடம் இருந்து தான்... (லிங் இதோ)
http://kmdfaizal.blogspot.com/2008/10/nhmwriter.html

தங்கள் கேள்வி எனக்குச் சரியாக விளங்கல சகோதரா படம் பெறுவதானால் நிறுவும் போது தங்கள் தட்டச்சுப் பலகையில் உள்ள print screen என்பதை தட்டி விட்டு அதன் பின் போட்டோ சொப் போன்ற மென் பொருள்களில் பேஸ்ட் பண்ணியும் பெறலாம்...

பெயரில்லா சொன்னது…

k...there is a gal in your header(at letf side top)..she appeared in jaya tv's program 'kaasu maela'....what is her name?

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top