புதன், 3 செப்டம்பர், 2014

RJ balaji அப்பாவுக்கு பிறந்தாரா அல்லது குளோனிங்கில் பிறந்தாரா? சந்தேகக் கடிதம்

1:04 PM - By ம.தி.சுதா 1

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?

முற்குறிப்பு - நானும் ஆர்ஜே பாலாஜியின் ரசிகன் தான் அதற்காக அவர்கள் சொல்லும் அனைத்தும் சி(ச)ரி என்று ஒத்திசைய வேண்டிய தேவை எனக்கில்லை.

என் ரசனைக்குரிய ஆர்ஜே பாலாதிக்கு வணக்கம்....

எல்லா உணர்வுகளும் எல்லா மனிதராலும் உணரப்படுவதில்லை உணரவும் முடிவதில்லை. ஆனால் ஒரு மனிதன் என்பவன் உணர்வுகள் வசப்பட்டவன் தனக்கு அந்த உணர்வில்லையானாலும் மற்றவன் உணர்வை மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

அண்மையில் ZEE tamil தொலைக்காட்சியில் ஒரு கலாய்த்தல் விருது விழாவை நடத்தியிருந்தமை பலருக்கு தெரிந்திருக்கும். அந் நிகழ்ச்சி விஜய் ரீவியின் விருது விழாவை கலாய்ப்பதாக அமைந்திருந்தமை வேறு விடயம். ஆனால் அங்கோ மிக முக்கியமாக கலாய்க்கப்பட்டவர் நடிகர் சிவகார்த்திகேயனாவார். (அதற்கு பயன்படுத்திய பாடல் கூட அவருக்கு பயன்படுத்தப்பட்ட அதே பாடல்)

 ZEE tamil தொலைக்காட்சி மற்றவர்களின் அந்தரங்கத்தையும் உணர்வையும் விற்று பிழைப்பு நடத்துவது போல விஜய் ரீவிக்கு ஒரு குணமிருக்கிறது மற்றவர் உணர்வை விற்பது. எப்படித் தான் சுமூகமாக போகும் நிகழ்ச்சி என்றாலும் அடி மனதை வேண்டும் என்று தொட வைத்து அதை வைத்து நல்ல ரெயிலர் ஒன்று தயாரித்து ஓட்டுவார்கள்.

இது பற்றி சிவகார்த்திகேயன் மேடை ஏறியவுடனேயே கூறுவார். ”உன்னை அழ வச்சு ஒரு வாரத்துக்கு ஓட்டுவாங்கடா அழுதிடாதை என்று வீட்டில சொல்லி விட்டாங்க” என்பார். அப்படி இருந்தும் எல்லாம் முடியும் தருவாயில் அந்த கோட்டு போட்ட தம்பி அந்த வில்லண்ட கேள்வியை கேட்பார் ”நீங்கள் இன்னைக்கு யாரை மிஸ் பண்ணுறன் என்று நினைக்கிறிங்க” அப்புறம் சிவகார்த்திகேயனை சொல்ல வேண்டுமா?

சிவகார்த்திகேயனை பார்க்கும் அல்லது விஜய் ரிவியை பார்க்க்கும் எல்லாருக்கும் அவர் இக்கேள்விக்கு என்ன சொல்வார் என்று தெரியும். சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஒவ்வொரு ஆணுக்கும் முதல் நாயகன் அவன் தந்தை தான் அதை ஒற்றியே அவன் பாணிகள் எண்ணங்கள் நகரும். தான் சாதித்த பின்னர் ஏங்கும் ஒவ்வொரு அணுக்கும் சிவகார்த்திகேயன் ஒரு உதாரணம். அதை கொச்சையாக்கும் ஒவ்வொருவரும் உணர்வற்ற ஜடங்களாகவே பார்க்கப்பட வேண்டியவர்கள்.
அந்த உணர்வலைக்கு மிகப் பெரிய உதாரணம் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். மேடையில் சிவகார்த்திகேயன் நிற்கும் போது இவர் கீழே அழுததை எல்லோரும் கவனித்திருப்பீர்கள். ஏனென்றால் அவருக்கும் அந்த ஏக்கம் தெரியும்.
ஆர்ஜே பாலாஜின் தந்தை பற்றி உண்மையில் எனக்கெதுவும் தெரியாது. சிலவேளை அவர் தான் தந்தை இருக்கும் போது சாதித்து விட்டேன் என்ற இறுமாப்பில் நடக்கிறாரா தெரியவில்லை ஆனால் சிவ கார்த்திகேயன் என்பவர் ஒரு கேலிப் பொருளல்ல. போராடிச் சாதித்து அதற்கு காரணமானவரை தெலைத்து விட்டு பகிர முடியாமல் தவிக்கும் பல மனிதர்களின் ஒற்றை பிரதிபலிப்பு வடிவம்.
இனியாவது இப்படியான உணர்வுகளோடு விளையாடமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

என்றும் உங்கள் ரசிகனாக
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

முக்கிய குறிப்பு - இப்பதிவை நானும் உணர்வோடு பகிர காரணம் இதே உணர்வால் நானும் பாதிக்கப்பட்டவன் என்பதாலேயே. கௌரவமான நிரந்தர வேலை பெற்று முதல் மாத சம்பளத்தில் செய்தது அப்பாவின் மரணச் சடங்கு தான். அம்மாவுக்கு ஆசையாக வாங்கிய பட்டு சேலை இப்பவும் அப்படியே இருக்கிறது.
அவருக்காக வாங்கிய சாரங்களும்
அம்மாவுக்காக வாங்கிய சேலையும்
தொடுப்பு -  வலி தந்த அப்பாவுக்காக சில வரிகள்

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

1 கருத்துகள்:

Kiruthigan சொன்னது…

சானலுக்கு தான் நன்றி ெசெொல்லணும்
ஸ்பூஃப் செய்வதில்கூட விஜய் டிவியை வீழ்த்த முடியவில்லை டிஆர்பிகாக உணர்வுபூர்வமாக காட்டிகொள்வது தெரிந்தாலும் அரசியல் சானல்களை விட இரு சானலும் பெட்டரே!

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top