ஆண்டுகளும் விழாக்களும்....
கவிதை பாகம் ஒன்றுக்கு இங்கே சொடுக்கவும்
ஒரு ஆண்டாய் கடிதம் தந்தே
என் காதல் உன்னிடம்
காகித விழாக் கொண்டாடியது.
இரண்டு ஆண்டாகியும் – நீ
பஞ்சு விழா எடுக்கிறாய்
உன்னைப் போல் நான் நிறமில்லைத் தான்
மூன்றாண்டாய் உனாக்காய்
காத்திருந்தே கறுத்தவன் நான்
நீயோ எனக்கு தோல் விழா எடுக்கிறாய்
ஐந்து ஆண்டாகியும் உன் மனம்
இரும்பு விழா தானே கொண்டாடுகிறது.
மூவிரண்டு ஆண்டில் என் காதல்
ஊர் வாயில் அகப்பட்டு கிளையாய் பரவி
மர விழா எடுக்குதடி.
ஈர் ஐந்தாண்டாய்
நான் அலைந்து தகர விழா எடுக்கையில்
உன் கொப்பன் கேட்கிறான்
தகர மோதிரம் போடவாவது
உனக்கு வக்கிருக்கிறதா என்கிறான்.
ஈராறு ஆண்டாய்
நான் உனக்காய் வாங்கிய பட்டு
பட்டு விழா எடுக்குதடி.
ஈரேழு ஆண்டாய்
நான் போட்ட SMS சேர்த்திருந்தால்
உனக்கு தந்த மோதிரம் தந்து
தந்த விழா எடுத்திருப்பேன்
மூவைந்து ஆண்டாய்
உன் நினைவு என் மனதில்
படிக விழா எடுக்குதடி.
ஈர் பத்து ஆண்டிலும் இறுகியபடி
உன் மனம்
சினத்துக் களிமண் விழாக் கொண்டாடுதடி
இருபத்தைந்து ஆண்டாய்
இளமை தொலைத்தவன்
வெள்ளிக்கிழமையன்று
வெள்ளி விழாக் கொண்டாட அறிவித்தேன்
அன்று தான் உனக்கு திருமணமாமே.
மூ பத்து ஆண்டாகியும்
ஆலய வாசல் தனில் உனைப் பார்க்க
நானிருக்கிறேன்
உன் பிள்ளை
முத்துப்பல்லால் சிரிக்குதடி
என் முத்து விழா பார்த்து.
ஏழ் ஐந்தாண்டாய் – நான்
பவள விழாவுக்காய் காத்திருக்கையில்
பவளமக்கா வந்து மகளுக்காய்
எனைக் கேட்கிறாள்
பொன்விழா (50)க் கொண்டாடும்
எனக்கொரு கலியாணமா.???
இன்னும் ஐந்தாண்டில்
நான் மரகத விழா எடுத்த பின் பார்ப்போம்
என்ற சலாப்பி அனுப்புகிறேன்.
வைரமுத்தரோ என் வைர விழா (60) அறியாமல்
தன் விதவைப் பெண்ணுக்கு
விவாகம் கேட்கிறார்.
உன் பேரனுக்கு
பிளாட்டின அரைஞான் காட்டியவளே
நீ அறிவாயா
நான் பிளாட்டின விழா (75)க் கொண்டாடுவது
நீயோ உன் 80 ம் வயதில்
பூட்டப் பிள்ளைக்கு அமுதூட்டியபடி
அமுத விழா எடுக்கிறாய்
நானோ என் தேய்ந்து ஓய்ந்த
பொல்லுடன் தசர விழா (100) எடுக்கிறேன்
என்னங்க ஆக்கம் பிடிச்சிருக்கா பிடிச்சிருந்தா அப்புறம் என்ன வழமையானது தான்..... போட்டிடுங்க....
என் ஐம்பதாம் ஆக்கத்திற்கு (இலங்கை கதை திருடிய பிரபல இயக்குனர்..) வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.... அங்கு கருத்திட எனக்கு இப்போது விருப்பமில்லை...
14 கருத்துகள்:
கலக்கிட்டீங்க..... ஒவ்வொரு திருமண ஆண்டுக்கும் கொடுக்க சொல்லும் பரிசு வைத்து அசத்திட்டீங்க..... பாராட்டுக்கள்!
/////கலக்கிட்டீங்க..... ஒவ்வொரு திருமண ஆண்டுக்கும் கொடுக்க சொல்லும் பரிசு வைத்து அசத்திட்டீங்க..... பாராட்டுக்கள்!////
மிக்க நன்றி அக்கா....
அசத்தல் கவிதை ..google crome browser malware எச்சரிக்கை காட்டுது என்னனு கொஞ்சம் பாருங்க தல ..
நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒவ்வொரு விழாவின் பெயரை குறிப்பிட்ட உங்கள் திறனுக்கு வாழ்த்துக்கள்.
புதிய மனிதா.. said...
////அசத்தல் கவிதை ..google crome browser malware எச்சரிக்கை காட்டுது என்னனு கொஞ்சம் பாருங்க தல ..///
நன்றி சகோதரா... உலவு தளம் தான் சிக்கலுக்கக் காரணம் தீர்க்கிறேன்...
எப்பூடி.. said...
ஃஃஃஃஃநன்றாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒவ்வொரு விழாவின் பெயரை குறிப்பிட்ட உங்கள் திறனுக்கு வாழ்த்துக்கள்.ஃஃஃஃஃ
ஓடோடி வந்த சகோதரன் ஜீவ்வ்வ்.... ற்கு மிக்க நன்றி
உங்கள் விழாக்கவிதை நன்றாகவேயிருக்கிறது கலக்குங்க..
சூப்பர், ஆண்டு, அதற்கான விழா, அதை கவிதையா அமைத்தது. அருமை அருமை! வாழ்த்துக்கள்!
என்ன சார் ஏன் இந்த கொலை வெறி?
51 வது பதிவுக்கு நல் வாழ்த்துக்கள் நண்பா. 50 வது பதிவினை எலோரும் வாழ்த்தி விட்டார்கள் . வாழ்த்தினால் எனக்கு "கிக்கு இருக்காது " அதுதான் Different ஆ 51 வது பதிவுக்கு நல் வாழ்த்துக்கள். "கிக் ஒ கிக்கு" 101வது 501 வது பதிவினை வாழ்த்த wait பண்றேன் . "கிக் ஒ கிக்கு".
கவிதைகளில் பல வகை .உங்களின் அறிவு கவிதை பக்கம் சற்று வித்தியாசமா இருக்கிறது வாழ்த்துக்கள் தொடருங்கள்
ஆண்டுகளும் விழாக்களுமாய் கவிதை அழகு!
மிக மிக நல்லா இருக்கு.
அசத்தல் கவிதை
அருமை!
வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக