சனி, 27 செப்டம்பர், 2014

ஈழத்தில் பணமிறைக்கும் தயாரிப்பாளர்களுக்கோர் மடல்

11:27 AM - By ம.தி.சுதா 4

எம் ஈழத்து சினிமாக்கலையை வளர்க்க துடிக்கும் எம் புலம்பெயர் உறவுகளுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...

தங்களின் அவாவின் வெளிப்பாடாக பெரும் பெரும் முதலிடுகளுடன் சின்ன சின்ன சின்ன குறும்படங்கள் இங்கு உருவாகியமை பலர் அறிந்ததே.
அதுவும் ஒரு பெரும் படத்துக்கான முதலீட்டில் உருவாக்கப்பட்ட சிறிய குறும்படங்களும் இருக்கின்றது. அது அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்குட்பட்ட விடயம்.

ஆனால் வருத்தத்துக்குரிய விடயம் என்னவென்றால்
1. ஒரு படத்துக்கு இரவு பகலாக சிந்திக்கும் இயக்குனர் சல்லி காசு எடுப்பதில்லை (விதிவிலக்குகளை கண்டு கொள்ள வேண்டாம்)

2. பற்றை பருகு எல்லம் உருண்டு உருண்டு படம் பிடிப்பவன் கமரா தேய்மானத்துக்கு கூட காசு எடுப்பதில்லை,

3. அவ்வளவு வீடியோவையும் வெட்டிக் கொத்தி இயக்குனருடன் குத்து வெட்டுப்பட்டு இரண்டு மூன்று RAM துலைச்ச எடிட்டரும் அதில் தன் நேரச் செலவுக்கான காசும் எடுப்பதில்லை.

போலி குறும்படத்துக்காக யாழ் பஸ்நிலையத்தினுள் இயக்குனர் பிறேம் , ஒளிப்பதிவாளர் பாலமுரளி மற்றும் படத்தொகுப்பாளர் செந்தூரனுடன்

ஆனால் இந்த நடிப்பவருக்கான சம்பளம் என்ற ஒரு விடயத்தை கேட்டால் தான் தலை கிறுகிறுக்கும். உண்மையில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவன் அர்ப்பணிப்போடு இருக்க. தம் சம்பளத் தொகை தான் தமது தகுதிக்கான அடையாளமாக கருதுகிறார்கள்.

குறும்படத்துக்கான தமிழ் நடிகைகளின் சம்பளத் தொகை ஆனாது அக்குறும்படத்துக்கான மொத்த செலவை விட அதிகமாகும். ஆனால் ஒரு உண்மையான உழைப்பாளி வாங்குவதில் தப்பில்லை அதற்காக அவர்கள் அந்தளவுக்கு உழைக்கிறார்களா என்றால் மருந்துக்கும் இல்லை.
இத்தனைக்கும் நல்ல கதையம்சம் இருந்தால் செலவு காசுடன் நடிப்பதற்கு சிங்கள நடிகைகள் தயாராக இருப்பது உண்மையான விடயமாகும்.

ஈழ கலையை வளர்க்க வெண்டும் என்ற உங்கள் அவாவை தப்பாக சொல்லவில்லை ஆனால் நல்ல படைப்புக்கும் நல்ல படைப்பாளிகளுக்கும் செலவழித்து கலையை வளருங்கள். ஒரு படத்துக்காக நீங்கள் அள்ளிக் கொட்டி கொடுத்து குழப்பும் தொகைகள் ஆனாது ஒட்டு மொத்த பாதையையும் சீர் குலைக்கிறது.

இன்னும் இங்கு யாரும் வணிகரீதியாக இத்தொழிலை செய்யவில்லை என்பதும் எல்லோரும் எமக்கான ஒரு அடையாளத்தை நோக்கி பயணிக்கிறோம் என்பதும் தான் தெளிவான உண்மையாகும்.
உண்மையான உழைப்பாளிகளை உயர்த்துங்கள். போடி போக்காக எம் தனித்துவத்தை சீர்குலைக்கும் விடயங்களுக்கு துணை போக வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

4 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
நல்ல அறிவுரைதான் அவர்கள் சிந்திக்கவேண்டும்..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

உங்கள் கருத்து அவர்களுக்கு புரியவேண்டுமே....

Yoga.S. சொன்னது…

வணக்கம்,ம.தி.சுதா!நலமா?///உங்கள் ஆதங்கம் எம(ன)க்குப் புரிகிறது.பெயர் கொடி கட்டிப் பறக்க(?!)...........................ஹ!ஹ!!ஹா!!!

Kiruthigan சொன்னது…

நல்ல ஸ்க்ரிப்ட்டுக்கு தயாரிப்பாளர் கிடைக்கிறதே பெரும் பாடாக இருக்கு. யூட்டியூப்ல கதைகளை விட சதைகளுக்கே பார்வையாளர்கள் அதிகமாருக்கு! அதை தம் திறமை என நினைத்து டிமாண்ட் பண்ணுகிறார்கள், ஷகிலா படங்களின் பார்வையாளர்கள் நூறு கோடி கொட்டி எடுக்கப்படும் படங்களைவிட அதிகமானது என்பதை போலவே இதுவும்.தயாரிப்பளர்கள் முதலில் படத்தின் ஸ்கிரிப்ட்டை பார்த்துவிட்டு முடிவெடுங்கள்.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top