திங்கள், 8 செப்டம்பர், 2014

சமூகத்துக்காக உருவாக்கப்பட்ட 3 குறும்படங்கள்

12:27 PM - By ம.தி.சுதா 3

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?

முற்குறிப்பு - கடந்த மாதத்திற்குள் ஈழத்தவரால் வெளியிடப்பட்ட 3 சமூக விழிப்புணர்வுக் குறும்படங்களை பகிர்கின்றேன். இது என் விமர்சனப்பதிவல்ல என் ரசனைப் பதிவேயாகும். இம் மூன்று படைப்பிலும் சொல்லப்பட்ட கருத்துக்கள் சமூகத்துக்கு முக்கியமானவையாகும்.


1 . மாசிலான் குறும்படம்
குடும்பநலனை அக்கறையாகவும் அதற்குள் வதைபட்டுப் போகும் பிஞ்சுகளின் மனநிலையையும் அத்தனை பிச்சுப் பிடுங்கல் குடும்பகாரருக்கும் உறைக்க வைத்த குறும்படமாக ரப் பாடகரும் இயக்குனரும் நடிகருமான சுஜித்.ஜீ  அண்ணாவால் உருவாக்கப்பட்ட படைப்பாகும். மற்றவையும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தாலும் இக்குறுப்படத்தில் ஒவ்வொரு காட்சிக்குமான தொடர்ச்சி என்பது என்னை மிகவும் கவர்ந்தது.



2. அஞ்சல குறும்படம்
இசையமைப்பாளர் தர்சனனின் இயக்கத்தில் வெளிவந்த இரண்டாவது குறும்படமான அஞ்சல முன்னையதை விட மிகுந்த நிகழ்கால சமூக அக்கறையுடன் பிரசவிக்கப்பட்டிருப்பதுடன் இன்யை இளைய தலைமுறைக்கு ஒரு வித அச்சத்தையும் கொடுத்திருந்தது.


3.  கடந்து போகும் குறும்படம்
ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இயக்குனருமான லோககாந்தனால் உருவாக்கப்பட்ட கடந்து பொகும் என்ற குறும்படம் கடந்த வாரம் வெளியாகியிருந்தது. நிகழ்காலத்தில் இடம்பெறும் தற்கொலைகளை மையப்படுத்தி தற்கொலைக்கு துணியும் ஒவ்வாரு மனிதனையும் ஒரு கணம் சிந்திக்க வைக்கிறது இக் குறும்படம்.

மேற் குறிப்பிட்ட குறும்படங்களை பார்வையிட்டு அவர்களுக்கான ஆக்க பூர்வமான கருத்துக்களை வழங்கவும்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

3 கருத்துகள்:

Yoga.S. சொன்னது…

வணக்கம்,நடிகர்+இயக்குனர் சார்!நலமா?///பார்த்து விட்டுக் கருத்துப் பகிர்வேன்,நன்றி பகிர்வுக்கு!

Unknown சொன்னது…

நலமா! தம்பி! நீண்ட நாளாயிற்று!படங்களை பார்த்து விட்டு
எழுதுகிறேன்!

Yarlpavanan சொன்னது…

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top