அண்மைய நாட்களில் பதிவுலகக் கணக்குத் திருட்டு என்பது சாதாரணமாகி விட்டது.
பலர் பாதிக்கப்பட்டு வரிசையில் நிற்கிறோம் அதிஸ்டம் உள்ளவருக்குக் கிடைக்கிறது அதிஸ்டம் இல்லாதவருக்கு காற்றோடு போய்விடுகிறது.
முன்னரும் ஒரு பதிவில் இதைப்பற்றி இட்டிருந்தேன். அவர்களுக்கு சாதகமாக அமைவது எமது மின்னஞ்சல் கணக்காகும். அதை மறைப்பதற்காக பலர் கருத்திடுவதற்காக புதிய மெயில் ஐடி திறந்து வைத்திருப்போம். அதன் பின் பதிவிடுவதானால் புளக்கர் மெயிலுக்குள் ஓடுவோம்.
சில வேளைகளில் சிலரது கருத்திடும் புறோபைலுக்குள்ளால் வந்து பார்த்தால் அவர்கள் புளொக் இருக்காது. அதனால் கருத்திடுபவரது வலைத்தள முகவரி தெரியாமல் போய்விடும்.
அது மட்டுமல்ல எமது புறொபைலுக்கென்று குறிப்பிட்ட பார்வையாளர் இருக்கும். நாம் புதிதாய் தொடங்கினால் பூஜ்ஜியத்தில் இருந்து தான் ஆரம்பிக்கும்.
இதை விட பலருக்கிருக்கும் பிரச்சனை தமது கணக்கை இன்னொரு மெயில் ஐடிக்கு மாற்றத் தெரியாது.
தீர்வு
என்னைப் பொறுத்தவரை தப்பிப்பதற்காக எனக்குத் தெரிந்த தற்காலிகத் தீர்வு இது தான். இன்னுமொரு மெயில் திறந்த எமது புளொக்கிற்கு அக்கணக்கை admin ஆக்குங்கள். அதன் பின் எமது வழமையான கணக்கை admin பொறுப்பிலிருந்து விலக்கிக் கொள்ளுங்கள். அதன் பின் நீங்கள் உங்கள் புளொக்கில் ஒரு அழைக்கப்பட்ட விருந்தாளியாக இருந்து எழுதலாம்.
இதனால் எமது கணக்குத் திருடப்பட்டாலும் அவர் சுதாகரிப்பதற்குள்ளாக நாம் முந்திக் கொள்ளலாம். அதை விட முக்கியம் இப்போது பதிவுலகத்தில் நடைபெறும் கணக்கை முடக்கல் எந்த விதத்திலும் பாதிக்காது.
அத்துடன் எமது புளொக்கிற்கான admin கணக்கை எந்த ஒரு தேவைக்கும் பாவிக்காமல் விட்டால் சரி.
இனி மாற்றுவது எப்படி என பார்ப்போம்
முதலில் உங்கள் blogger ன் dashboard >>> setting >>> permission என்ற ஒழுங்கில் போங்கள்.
அங்கே add authors என்பதை சொடுக்கவும்
invite என்று இருக்கும் பெட்டியினுள் மெயில் ஐடியை இட்டு invite என்பதை சொடுக்கவும். அதன் பின் அழைக்கப்பட்டவரது மெயிலுக்கு அழைப்புச் சென்றிருக்கும். அந்த மெயிலை திறந்து. அழைப்பை ஏற்றுக் கொள்ளவும்.
அதன் பின் படத்தில் உள்ளது போல grant admin privileges என்பதை சொடுக்கி மற்றைய கணக்கை அட்மின் ஆக்கவும்.
அதன் பின் உங்களது வழமையான கணக்கில் உள்ள revoke admin privileges என்பதை சொடுக்கி அட்மின் பதவியை ராஜினாமப செய்யுங்கள்
அதன் பின் உங்களால் அட்மின் ஆக்கப்பட்ட கணக்கினுள் நுழைந்து Share my profile
என்று இருக்குமிடத்தில் உள்ள சுட்டியை எடுத்து விட்டு சேமியுங்கள். காரியம் கச்சிதமாய் முடிந்திருக்கும்.
முக்கிய குறிப்பு - உங்கள் ரெம்ளெட் மாற்றத்தை வேறு எவரிடமாவது கொடுத்து செய்ய வேண்டியிருந்தால் கடவுச் சொல்லைக் கொடுக்காமல் இப்படியே செய்யலாம். கவனமான விடயம் அறிமுகமில்லாதவரிடம் கொடுக்க வேண்டாம்.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
49 கருத்துகள்:
வணக்கம் அண்ணே நல்லதொரு தகவல் சொல்லியிருக்கீங்க! பகிர்வுக்கு நன்றி அண்ணே!
முக்கிய குறிப்பு - உங்கள் ரெம்ளெட் மாற்றத்தை வேறு எவரிடமாவது கொடுத்து செய்ய வேண்டியிருந்தால் கடவுச் சொல்லைக் கொடுக்காமல் இப்படியே செய்யலாம். கவனமான விடயம் அறிமுகமில்லாதவரிடம் கொடுக்க வேண்டாம்.//////////
நான் எனது பாஸ்வேட்டை நண்பர் நிரூபனிடம் கொடுத்துள்ளேன்! அவரால் ஏதேனும் ஆபத்து வருமா?
ஹி ஹி ஹி ஹி ச்சும்மா ஒரு டவுட்!!!
தமிழ்மணத்தில் உங்களுக்கு நீங்களே ஓட்டுப் போடவில்லையே ஏன்?
அண்ணே! பதிவில் உங்க சிக்நேச்சர் சூப்பர்! அது எப்படி போடுவதென்று ஒருக்கா சொல்லித்தாங்க!
அன்பு நண்பரே,
இந்த செய்தி ரொம்ப உதவியாக இருக்கும்.
நானும் இதை செய்து வைக்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி.
இப்படி எல்லாம் கூட நடக்குமா?
காப்பாத்திட்டிங்க!
காப்பாத்திட்டிங்க!
நன்றி சகோ!
வாச்சாத்தி-வன்மத்தின் உச்சம்,வலியின் எச்சம்
http://gokulmanathil.blogspot.com/2011/10/blog-post_02.html
அண்ணா உண்மையில் என்னை போல் எதுவும் தெரியாமல் ப்ளாக் வந்தவர்களுக்கு அசத்தல் பதிவு.. அழகாக சொல்லி தருகிறீர்கள்.. தேங்க்ஸ் அண்ணா.
முக்கிய குறிப்பு - உங்கள் ரெம்ளெட் மாற்றத்தை வேறு எவரிடமாவது கொடுத்து செய்ய வேண்டியிருந்தால் கடவுச் சொல்லைக் கொடுக்காமல் இப்படியே செய்யலாம். கவனமான விடயம் அறிமுகமில்லாதவரிடம் கொடுக்க வேண்டாம்.//////////
நானும் என் பாஸ்வோர்டை மதுரனிடம் கொடுத்து வைத்துள்ளேன்...
மதுவ நம்ம்பலாமா????? ஹீ ஹீ
சரி சரி மது கடுப்பாகாத.. ஜோக் பா
உன்னை நம்பாமலா?????
நன்பேண்டா
அருமையான ஐடியா மக்கா சூப்பர்!!!
அண்ணாச்சி என்ன என் தொடர் பதிவுக்கு சப்போர்ட் பதிவா?
என் புதிய பதிவு http://pc-park.blogspot.com/2011/10/hd-optimized-office-software.html
////அத்துடன் எமது புளொக்கிற்கான admin கணக்கை எந்த ஒரு தேவைக்கும் பாவிக்காமல் விட்டால் சரி.// இது தான் சிறந்த வழி..
கொஞ்சமா புரியுது..........
அதன் பின் உங்களது வழமையான கணக்கில் உள்ள revoke admin privileges என்பதை சொடுக்கி அட்மின் பதவியை ராஜினாமப செய்யுங்கள்//
ராஜினாமா செய்யாமல் அப்படியே வைத்திருந்தால் இரண்டு மெயில் ஐடியிலும் பிளாக் ஓப்பன் பண்ணலாமா?... ஒரு ஐடியை ஹேக் செய்தாலும். ஒன்றை காப்பாற்றிக்கொள்ள முடியுமா... கொஞ்சம் விளக்கவும் சகோ
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி சகோ ........
அட நல்ல பதிவுதான் தம்பி ஆனா காட்டானால இதெல்லாம் நடைமுறைப்படுத்த தெரியவேணுமேய்யா..
நன்றி சகோதரா.
பயன் உள்ள தகவல்
சூப்பர் தகவல் பாஸ்...
பகிர்வுக்கு நன்றி
Thanks a lot Madhi.
அன்பரே! எனக்கு
எதுவும் புரிய வில்லைஆனால்
தற்போது நான் அனுப்பும் கருத்துரைகளோ நன்றி அறிவிப்போ
எதுவும் இண்டர் நெட் எக்ஸ்ப்ளோர்
வழியாக கூகுல் அக்கவுண்ட் மூலம்
செல்வதில்லை மீண்டும் கேட்கிறது
அதுவே பயர் பாக்ஸ் மூலம்
செல்கிறது என்ன செய்ய...
புலவர் சா இராமாநுசம்
பயனுள்ள தொழில்நுட்பக் குறிப்புகள் அருமைம..
பயனுள்ள தொழில்நுட்பக் குறிப்புகள் அருமைம..
முன்பெல்லாம்...
ப்ளாக்கர் பேக்கப் என்றொரு மென்பொருள் கிடைத்தது அதில் நம் வலையில் இதுவரை எழுதிய கட்டுரைளைச் சேமித்து வைக்கமுடிந்தது..
டெம்ளட்ட பதிவிறக்கி சேமித்து வைக்கமுடிந்தது..
இப்போதெல்லாம் எப்படி தாக்கநர்கள் தாக்குவார்கள் என்றே தெரியவில்லை...
முடிந்தவரை கடவுச்சொல்லை அடிக்கடி மாற்றிக் கொள்வது நமக்கு மரியாதை..
ஹி ஹி ஹி....
ஐயாம் இன் ட்ரபிள்....
பிளீஸ் ஹெல்ப் மீ.........
மை கமண்ட்ஸ் இஸ் நாட் டிஸ்ப்ளேயிங் இன் சம் பிளாக்ஸ்...
எனி சொல்யூசன்?
மச்சி.
ஐடியாக்கள் எல்லாம் ஓக்கே. ஆனால் நீ யூஸ் பண்ற மெயில் ஐடிக்கள் தெரிவது போன்று படம் எடுத்துப் போட்டிருக்கிறியே...
இதனையும் திருடர்கள் சுட மாட்டார்களா?
Powder Star - Dr. ஐடியாமணி said...
நான் எனது பாஸ்வேட்டை நண்பர் நிரூபனிடம் கொடுத்துள்ளேன்! அவரால் ஏதேனும் ஆபத்து வருமா?
ஹி ஹி ஹி ஹி ச்சும்மா ஒரு டவுட்!!//
அவ்வ்வ்வ்வ்வ்வ்....
இதனைப் பாஸ்வேர்ட் கொடுப்பதற்கு முன்னாடி யோசிக்கனும்.
நல்லதோர் விழிப்புணர்வுப் பதிவு மச்சி,
பயனுள்ள பதிவிற்கு நன்றிகள்..
பகிர்வுக்கு நன்றி!
Nandri...
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
இனி யாருடைய Facebook account ஐயும் Hack பன்னலாம் வாங்க!
சூப்பரான ஐடியா கொடுத்ததற்கு நன்றி.
பயனுள்ள பகிர்வு.நன்றி.
உபயோகமான பதிவு இதை செயல்படுத்தும் நிலை எனக்குத்தெரியாது அண்ணா!
நல்லதொரு தகவல் சொல்லியிருக்கீங்க!
நன்றி
நல்லதொரு தகவல்.
மிகவும் பயனுள்ள பதிவு
பயனுள்ள தகவல் சகா. . .நன்றி
மிக்க நன்றி சகோ பயனுள்ள பகிர்வுக்கு .இன்று என் தளத்தில் ஒரு பாடல் வரியினை வெளியிட்டுள்ளேன் இதற்குத் தங்களின் கருத்தினை எதிர்பார்க்கின்றேன் .சந்தர்ப்பம் கிடைத்தால் தாருங்கள்
சகோ .
ஆஹா, செம ஐடியா தான்
நிரூபன் said...
மச்சி.
ஐடியாக்கள் எல்லாம் ஓக்கே. ஆனால் நீ யூஸ் பண்ற மெயில் ஐடிக்கள் தெரிவது போன்று படம் எடுத்துப் போட்டிருக்கிறியே...
இதனையும் திருடர்கள் சுட மாட்டார்களா?//
ஹா ஹா ஹா
பயனுள்ள பதிவு.
நன்றி.
பயனுள்ள தகவல் சகோ.!
//உங்கள் ரெம்ளெட் மாற்றத்தை வேறு எவரிடமாவது கொடுத்து செய்ய வேண்டியிருந்தால் கடவுச் சொல்லைக் கொடுக்காமல் இப்படியே செய்யலாம். கவனமான விடயம் அறிமுகமில்லாதவரிடம் கொடுக்க வேண்டாம்.//
யாராக இருந்தாலும் நம் கடவுச்சொல்லை கொடுப்பதை தவிர்ப்பது நன்று.
//முனைவர்.இரா.குணசீலன் said...
.....முடிந்தவரை கடவுச்சொல்லை அடிக்கடி மாற்றிக் கொள்வது நமக்கு மரியாதை..
//
இதனையும் கடைபிடிக்கவும்.
மிக நல்ல விஷயம். நன்றி.
***************
//அண்ணே! பதிவில் உங்க சிக்நேச்சர் சூப்பர்! அது எப்படி போடுவதென்று ஒருக்கா சொல்லித்தாங்க!//
ஆமாம், எங்களுக்கும் சொல்லிக் கொடுங்க...
மிகவும் பயனுள்ள தகவலைப் பதிவிட்டதற்கு நன்றி மதி
உண்மையிலேயே மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே. விழிப்புணர்வு பதிவு என்பது இதுதான். வாழ்த்துக்கள்.
மிகவும் பயனுள்ள தகவலைப் பதிவிட்டதற்கு நன்றி
மிகவும் பயனுள்ள தகவலைப் பதிவிட்டதற்கு நன்றி
கருத்துரையிடுக