இணையமென்பது ஒவ்வொருத்தரும் தனது ஏதோ ஒரு தேவைக்ககப் பயன்படுத்தும் இடமாகும் அதே போலத் தான் அங்கே எழுதுபவர்களும் சிலர் பணத்துக்காக எழுதுகிறார்கள் பலர் தம் பேரை வெளிப்படுத்த எழுதுகிறார்கள்.
பேருக்காக எழுதுபவர்களால் பிரச்சனை குறைவு காரணம் அவர்கள் ஒருவருடைய ஆக்கத்தை எடுத்தாலும் சுட்டிக்காட்டிவிட்டால் ஏற்றுக் கொள்வார்கள்.
ஆனால் இந்த செய்தித் தளங்கள் இருக்கின்றனவே அவர்களை எந்தப்பட்டியலில் இடுவது என்பது மிகவும் குழப்பமான விடயமேயாகும். தமது வாசகர்களை கூட்டுவதற்காக எதையும் செய்வார்கள். அதற்குதாரணமாகத் தான் அண்மைய சம்பவங்களே உங்களுக்கு உணர்த்தியிருக்கும்.
ஒரு ஊடகக் கல்வி படித்தவன் தான் ஒரு ஊடகத்தை வைத்திருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை ஆனால் ஒரு ஊடகம் வைத்திருப்பதானால் அதற்கு சில அடிப்படைத் தகுதிகள் இருக்க வேண்டும். ஒரு பெண் மானபங்கப்படுத்தப்பட்டால் அதை 10 கதை கட்டி சோடித்து அதை வைத்து பணம் சம்பாதிப்பது தான் எமது தமிழ் தளங்களின் இலக்காகும். ஆனால் இது தான் ஒரு ஊடக தர்மமா?
அவர்களுக்கு இந்தளவு துணிவைக் கொடுத்தது யார்? ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். ஒரு பெண்ணைப் பற்றி நீங்கள் இடும் ஆக்கத்தில் (உண்மையோ பொய்யோ) கற்பனைக்காவது உங்கள் உறவுக்காரரின் பெயரை போட முடியுமா?
சரி அடுத்த பக்கத்திற்கு வாருங்கள்.
தமிழ் இணையத்தளங்களுள் ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கிறது. அதாவது ஒருவருடைய செய்தியை ஒருவர் திருடிப் போடுவது. இந்தப் பட்டியலில் பல தளங்கள் இருந்தாலும் நான் வருமானத்தின் அடிப்படையில் அத்திருட்டை வகைப்படுத்துகிறேன்.
அதற்கு முன்னர் இந்தத் திருடர்களுக்கு ஒரு எண்ணமிருக்கிறது வலைத்தளங்களில் எழுதும் பதிவர்கள் எல்லோரும் நித்திரை என்பதாகும். அதுவும் சரிதான் உண்மையில் ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு போக்கு பெரும்பாலான பதிவர்கள் பொதுப்பிரச்சனைக்குக் கூட வாய் திறக்கமாட்டார்கள்.
நான் இந்தப் பதிவை எழுதக் காரணம் எனது சக பதிவரான சிறகுகள் மதுரனாகும் அப்பாவிப் பதிவரான அவனை இலங்கையின் செய்தித் தளமொன்று ரவுண்டு கட்டி அடிக்கிறது. அவன் முதல் எழுதிய பதிவான வேலாயுதம் வெற்றி பெறுமா? ஐ உடனேயே திருடி அதே தலைப்பு அதே படத்துடன் போட்டார்கள். அவன் மெயில் போட்டான் பதில் இல்லை. அதன் பின் 5 நாள் கழித்துப் பார்த்தால் அதே தொடுப்பில் வேறு ஆக்கம் இருக்கிறது.
மீண்டும் அவன் அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா? என்ற தலைப்பில் ஒரு பதிவு போட்டான் போட்டு கொஞ்ச நேரத்தில் தூக்கி அப்படியே போட்டுவிட்டார்கள். அது கூட பரவாயில்லை அங்கே அதற்கான பார்வையாளர்கள் அறுபதாயிரம் எனக் காட்டுகிறது (உண்மையில் பல இணையத்தளங்கள் ஸ்கிரிப்ட் மூலம் காட்டும் பித்தலாட்டம் இது).
10 ற்கு மேற்பட்ட நபர்களை சம்பளத்திற்கு அமர்த்தி தொழிற்படும் இணையத்தளம் ஒன்றுக்கு ஒரு ஆக்கத்திற்கு 300 ரூபாய் கொடுப்பது பெரிய காரியமா? அதை விட கொடுமை என்னவென்றால் அவர்களது மாத வருமானம் குறைந்த பட்சம் இலங்கை ரூபாய்ப்படி 3 லட்சமாகும்.
அட இது கூடப் பரவாயில்லை உலகத்தமிழரின் ஏகபிரதிநிதி போல தொழிற்படும் இணையத்தளமும் இதே கட்சி தான். கிழக்கிலிருந்து எழுதும் இசீக் மற்றும் மத்திய கிழக்கிலிருந்து எழுதிய வி.கே.மகாதேவன் போன்றவரது தொழில் நுட்பப்பதிவை நம்பித் தான் அவர்களது தளமே இயங்கியது. ஆனால் அவர்களின் மாத வருமானம் தெரியுமா இலங்கை ரூபாய்ப்படி 15 லட்சத்திற்கும் மேல் ஆகும். அதன் ஒரு பகுதியான தமிழ் வின் 8 லட்சத்திற்கும் மேல் பெறுகிறது.
இன்னுமொரு பிரபல தளம் இருக்கிறது அண்மைய நாட்களில் யாழ்ப்பாணத்தை அதிகம் கற்பழித்த தளமாக கருதப்படுகிறது. பிரான்சிலிருந்து இயங்கும் இத்தளத்தின் நிர்வாகியும் யாழ்ப்பாணத்தின் ஒரு பிரபலபாடசாலையின் மாணவன் என்பதே கசப்பான செய்தியாகும். முன்னர் எனது பதிவான “அசினின் சமூகப்பணியால் பார்வை இழந்த யாழ் வறியவர்கள்” என்ற பதிவை அவர் எடுத்துப் போட்டதும் அனைவரும் என்னையே வந்து திட்டினார்கள். அதன் பின் பொட்டலம் கார்த்தியின் பதிவுகள், நிகழ்வுகள் கந்தசாமியின் பதிவுகள் என பலரின் பதிவுகள் திருடப்பட்டன.
இணையத் திருட்டு ஒப்பந்தங்களில் இவர்கள் மட்டுமல்ல ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு தளம் திறந்திருக்கிறது. பதிவர் வந்தேமாதரம் சசிகுமருடைய அத்தனை பதிவுகளையும் அது தாங்கி நிற்கிறது.
இந்த இணையத்தளங்கள் எல்லாம் பொறுப்பாகச் செயற்பட்டால் மிகப் பெரும் ஆரோக்கியமான இணையத்தைக் கட்டியெழுப்பலாம். ஆனால் எல்லோருடைய நோக்கமும் அடிப்படையில் வேறாகவே இருக்கிறது. முன்னர் ஒரு இணையத்தளம் ஈழமக்களுக்கு சேர்த்த பணத்தை அப்படியே சுருட்டியதை பலர் மறந்திருக்கமாட்டீர்கள்.
இன்னுமொரு தளம் இலங்கை கொருட்களை புறக்கணிக்கும்படி விளம்பரம் செய்தது ஆனால் கொஞ்சநாளிலேயே இலங்கை தொலைத் தொடர்பு சேவை ஒன்றின் விளம்பரத்தை தன் தளத்தில் இட்டிருக்கிறது.
இந்த விடயத்தில் பேருக்காக ரௌத்திரம் பேசும் பதிவர்கள் எல்லாம் ஒன்றிணைந்தால் ஒரு ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் என்னால் ஒன்றை உறுதிபடக் கூற முடியும். பலர் இந்த ஆக்கத்தில் கருத்திட்டால் கௌரவம் குறைந்துவிடும் என எஸ்கேப் ஆவீர்கள் என்பது உறுதியாகத் தெரியும்.
இன்னும் ஒரு சில மாதத்தில் வெட்டாமல் விட்ட இந்த நகத்தால் கீறல் வாங்கும் போது எல்லோரும் உணர்வீர்கள்.
பின் இணைப்பு - இறுதியாகப் பாதிக்கப்பட்ட நண்பனின் ஆழமான பதிவிற்கு இங்கே சொடுக்குங்கள்.
பின் இணைப்பு - இறுதியாகப் பாதிக்கப்பட்ட நண்பனின் ஆழமான பதிவிற்கு இங்கே சொடுக்குங்கள்.
நன்றிச் செதுக்கலுடன்...
அன்புச் சகோதரன்
43 கருத்துகள்:
இனிய மாலை வணக்கம் மச்சி.
நலமா?
மச்சி, பார்த்தடா..
இந்தப் பதிவையும் தூக்கி கொப்பி பண்ணிப் போட்டாலும் போடுவாங்க.
இவனுங்க தொல்லை தாங்க முடியாது அதிலும் இந்த tamilcnn,newyarl
படு மோசம் நான் ஒரு முறை எங்கள் பதிவர்களுக்கிடையில் காலாய்க்க எழுதிய பதிவையே காப்பி செய்து தங்கள் தளத்தில் வெளியிட்டு இருந்தார்கள் என்னத்தை சொல்ல..
இது போன்ற இணையத்தளங்கள் ஹிட்சுகாக அப்படியான செய்திகளை போடுகிறார்கள் சுதா .இவர்களை திட்டி திட்டி பாதி பேர் மீண்டும் மீண்டும் பார்க்கிறார்கள் .எம் கலாச்சாரத்தை காப்பது போல கேவலமான செய்தி போடுகிறார்கள் . **நல்ல இணையத்தளம் இருந்தால் அதற்கு ஆதரவோ ,வரவேற்போ தமிழர்களில் குறைவானோர் தான் தருகிறார்கள். பதிவில் கூட குறையுள்ள இணையத்தளங்களை விமர்சித்து தான் எழுதுகிறீர்கள் .இந்த விமர்சனம் பார்த்து இன்னும் பிரபலம் அதிகமாகும் .நல்ல தளங்களை பற்றி எழுதி தமிழர்களை சென்றடைய வைக்கலாமே !
நம்ம பதிவுகள் பலரிடம் போகுது என்று சந்தோஸப்படுவம் வேற என்ன செய்ய முடியும் இவர்களை திருடுவது தப்பில்லை என்று உணர்ந்து விட்டார்கள் போலும்!
வணக்கம் மதி, இவர்கள் செய்வதுவும் ஒருவித சுரண்டல்தான் ஒருவரது உழைப்பிற்கு உரிய ஊதியத்தைக் கொடுக்காமல் அடுத்தவர் உழைப்பை திருடும் செயலாகும்
மதுரனின் அஜித் என்ன பெரிய ஆளா? பதிவை என் நண்பர்கள் சிலர் இலங்கையில் இருந்து நடத்தும் இணையம் ஒன்றில் போட்டிருந்தார்கள். நான் உடனேயே அவர்களுக்கு மெயில் பண்ணி அந்த பதிவு அகற்றப்பட்டது. (நீங்கள் வரிசைப்படுத்திய பட்டியலில் அவர்கள் தளம் இல்லை)
பின்னர் அவர்களை விசாரித்ததில் அது மதுரன் வலைப்பூவில் இருந்து எடுக்கவில்லை. வேறொரு தளத்தில் இருந்து தான் எடுத்ததாக கூறினார்கள். சினிமா செய்திகளை இந்திய ஊடகங்களில் இருந்து தான் கொப்பி செய்ய வேண்டும். ஆனால் தங்கள் விமர்சனங்களையும் முன்வைத்து பதிவர்கள் எழுதும் சினிமா ஆக்கங்களை கொப்பியடிப்பது வீண் வேலை.
இலங்கையில் இருக்கும் போது நானும் பகுதி நேரமாக அவ்விணையத்தில் வேலை பார்த்தேன். ஒரு முறை ஒரு சினிமா செய்தியை பிரசுரித்திருந்தேன். அதற்கு ஒருவர் “கொப்பி செய்யும் போது முற்றுப்புள்ளிகளையும் சேர்த்து கொப்பி செய்யுங்கள்” என எழுதி தனது வலைப்பூவின் லிங்கையும் அனுப்பியிருந்தார். ஆனால் நான் அந்த செய்தியை எடுத்தது விடுப்பு.காம் இல் இருந்து. என்ன கொடுமை சார் இது? என நினைத்துக் கொண்டேன்.
யார் ஊடகம் நடத்தி மக்கள் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவந்தாலும் தப்பில்லை. ஆனால் ஊடக தர்மம் என்று ஒண்டு இருக்கின்றது. அதற்கு சில வரைமுறைகள் இருக்கின்றது. அதனை கருத்தில் கொண்டு ஊடகங்களை நடாத்துங்கள். ப்ளீஸ்… அல்லது செய்தி இணையம் என்பதை விடுத்து உங்கள் விருப்பப்படி வலைப்பூவாக நடத்துங்கள் யாரும் குறை கூற மாட்டார்கள்.
தலைப்பு சற்றே நெருடல்...வாழ்த்துக்கள்...
இவ்வளவு விசியங்கள் நடைபெறுதா?அணிமேடிங் படம் பொருத்தமா இருக்கு.
என்னை போருத்தவரி என் பதிவை யாராவது காப்பி அடித்தால் மிகவும் சந்தோஷப் படுவேன்... அறிவு என்பது விலை மதிக்க முடியாதது ஆகையால் அதை இலவசமாய் தருவதில் தவறில்லை என்பது என் வாதம்...
அருமையா சொல்லியிருக்கீங்க சுதா! ஏறத்தாழ இதே தலைப்பில் நானும் ஒரு பதிவு போட்டிருக்கேன்! பார்த்தீங்களா?
aniyayam......aniyayam
திருட்டை யார் செய்தாலும் நியாயப்படுத்த முடியாது!
இந்த நாதாரி இணையத்தளம் நடத்துற ஜந்துக்களிடம் கேட்டுக்கொள்வது ஒன்று தான் உப்பிடி "யாழ் ,தமிழ் .தேசியம் "என்ற பெயர்களை பாவித்து உங்க இனையத்தளத்தை நடத்தாதீர்கள்..உங்கள் நாத்தம் பிடிச்சா செயர்ப்பாடுகளால் எங்கள் மண்ணையும் மக்களையும் நாறடிக்காதீர்கள் . வேண்டுமென்றால் உங்கள் பெயர்களிலோ இல்லை உங்களை பெத்ததுகள் பெயர்களிலோ இணையத்தளத்தை நடத்துங்கள்...
செய்திகளாக உங்கள் குடும்பங்களில் நடக்கும் சீர்கேடுகளையும் வீடியோவோடு போடுங்கள்... இன்னும் வாசகர்கள் அதிகரிப்பார்கள்..
//நிரூபன் said...
மச்சி, பார்த்தடா..
இந்தப் பதிவையும் தூக்கி கொப்பி பண்ணிப் போட்டாலும் போடுவாங்க.///ஹே ஹே.... செய்தாலும் செய்வார்கள்..ஒருமுறை பதிவர்கள் சிலரின் பெயர் போட்டு எழுதிய மொக்கை பதிவு ஒன்றையே காபி பண்ணி போட்டவர்கள் .....அதி புத்திசாலிகள்
லங்கா சிறீ என்ற இணையத்தளம் பதிவர்களான சசிகுமார் மற்றும் பொன்மலர் (பக்கங்கள்)ஆகியோரின் தொழில் நுட்ப பதிவுகளை திருடுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்கள் ...
சரியா சொன்னீங்க சுதா அண்ணா. எமது பதிவுகளை வைத்து பணம் பார்த்துக்கொண்டு ஏதோ பெரிய ஊடகங்கள் என்று பம்மாத்து
அதிலும் உண்மையை சொன்னால் தேசத்துரோகிகளாம்
இணைப்பு கொடுத்ததற்கு நன்றி சுதா அண்ணா
ஹா ஹா படம் அப்பிடியே அவங்களுக்கு பொருத்தமாகவே இருக்குப்பா
காப்பி பேஸ்ட் பண்ணுவோரிடம் எம் பதிவினை நீக்கச் சொல்லி மெயில் அனுப்பினால் அது உங்க பதிவு தானா?
அதனை நீங்கள் தான் எழுதினீங்களா என்று ஆதாரம் வேறு கேட்கிறார்கள்..
ஹே..ஹே...
எப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள்
உங்கள் வேதனை புரிகிறது
நியாயமான கோபம் தான் . இன்றைய பதிவுலகத்தை திருடுகிறது இனைய உலகம்
அந்த குரங்கு கணொளி பதிவின் மொத்த விடயத்தையும் ஒரே பார்வையில் சொல்கிறது மிகப் பொருத்தமான கணொளி
பிழைக்கத் தெரிந்தவர்கள்!பெற்றவளை விற்காத வரை நிம்மதி!
ivarkal aduthavan pillaiku initial podum appakal
திருட்டுப் பதிவு சம்பந்தமான காத்திரமான பதிவினை இட்டுள்ளீர்கள், பாராட்டுக்கள்.
http://kalamm.blogspot.com/2011/10/blog-post_11.html திருட்டுப் பதிவில் ஊடகம் நடாத்தும் இணையம் எனும் தலைப்பில் நான் பதிவு செய்த கட்டுரை இச் சுட்டியில் உள்ளது.
வணக்கம் நீண்ட காலத்திற்கு பிறகு வலைத்தளப்பக்கம் வருகிறேன்! உந்த எருமைகளுக்கு இவை உறைக்காது. அவர்களை நடுவெயிலில் விட்டு கழுத்தை கொஞ்சம் கொஞ்சமா வெட்டோணும்! உவங்கின்ர தளத்திற்கு போறதே கலாச்சார சீர்கேடு!
மற்றது அந்த பிரான்சில இருக்கிற எருமை எங்கட பாடசாலையிலே எனது அதே batch வேற! அது முந்தி யாழில இருக்கேக்க நல்லது மாதிரிதான் இருந்தது. அது எங்கட பாடசாலையில படிச்சதெண்டு சொல்லுறதே அவமானம்!
உந்த நாதாரிகளையும் பிள்ளைகள் எண்டு வளத்துவிட்ட பெற்றோரை என்ன வெண்டு சொல்வது.
எமது ஆக்கங்களை திருடுவதை கூட ஏற்றுக்கொள்ளலாம்! ஆன எம்மவர்களின் மானத்தை கற்பழிக்கும் கேவலம்கெட்ட செயலுக்காக வெட்டிக்கொல்லவேண்டும்!!
சொந்த சுமைய தூக்க வக்கில்லை
அடுத்தவன் சுமையை தன் சுமைன்னு சொல்றாங்களாம்...
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க
முடியாது நண்பரே..
இவர்களெல்லாம் திருடித் தின்றே பழக்கப்பட்டவர்கள்
வேறு என்ன சொல்ல ..
ஒண்ணுமே பண்ணமுடியாது சுதா
திருடனாய் பார்த்து திருந்தனும்
நிச்சயமாக சுதா.. குரங்குகள் கையில் பூமாலைகள் சிக்கிவிட்டது... :(
வணக்கம் நண்பரே, எழுத்து திருட்டு என்பது இன்று நேற்று உருவான ஒரு துஸ்பிரயோகம் அல்ல. ஷேக்ஸ்பியர் காலத்திலேயும், டாவின்சி காலத்திலும் நடந்துதான் இருக்கிறது. அதாவது ஒருத்தருடைய படைப்பை இன்னொருவர் திருடுவது சாதாரண திருட்டை விட பாரிய குற்றம் என சொல்லப்பட்டது. காரணம், இது அடுத்தவர் மூளையையும் அவர் ஆளுமையையும் திறமையையும் திருடுதல் என்று பொருள் கூறலாம். அன்று இது ஆரம்பிக்கபட்டாலும் இன்றுவரை இதை நிறுத்த யாராலும் முடியவில்லை. படைப்பாளிகளுக்கு தங்கள் படைப்பு திருட்டு போகும் போது ஏற்படும் வலியை இந்த திருடர்கள் என்றுதான் உணரப்போகிறார்களோ தெரியவில்லை..
ஆக, உங்கள் இந்த பதிவு மிகவும் முக்கியமான ஒன்று. வாழ்த்துக்கள் மதி.
தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்
உங்கள் தளம் தரமானதா..?
இணையுங்கள் எங்களுடன்..
http://cpedelive.blogspot.com
தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்
உங்கள் தளம் தரமானதா..?
இணையுங்கள் எங்களுடன்..
http://cpedelive.blogspot.com
//இந்த இணையத்தளங்கள் எல்லாம் பொறுப்பாகச் செயற்பட்டால் மிகப் பெரும் ஆரோக்கியமான இணையத்தைக் கட்டியெழுப்பலாம்//
உங்க கருத்தை நானும் வரவேற்கிறேன் அண்ணா.பதிவிற்கான ஆரம்ப கிளிப்பிங் சூப்பர்...
//இந்த இணையத்தளங்கள் எல்லாம் பொறுப்பாகச் செயற்பட்டால் மிகப் பெரும் ஆரோக்கியமான இணையத்தைக் கட்டியெழுப்பலாம்//
உங்க கருத்தை நானும் வரவேற்கிறேன் அண்ணா.பதிவிற்கான ஆரம்ப கிளிப்பிங் சூப்பர்...
சில பதிவர்கள் காப்பி ரைட் எடுத்து வைத்திருக்கிறார்களே..அதன் மூலம் ஏதேனும் நடவடிக்கை எடுக்க இயலாதா மதி?
http://karthikai.com/2011/09/06/stop-article-plagiarism/
இது பலருக்கு பயன்படும் என்று நினைக்கிறேன்.
தரங்கெட்ட தமிழ் தளங்கள் tamilcnn.com, www.newjaffna.com hacked & exposed.http://goo.gl/YAc8J
சிறந்த பகிர்வு நண்பரே!
இணையத்திற்கென்று அரசுகள் சட்டங்களை வகுத்து கடுமையாக பின்பற்றப்படும் போது தான் இது போன்ற இணைய திருட்டுகளைத் தடுக்க முடியும்.
ஒரு விடயம் இன்னொரு இடத்துக்கு சேருவதில் தப்பில்லை ஆனால் அவனது உழைப்புக்கு மரியாதை கொடுக்கவேணும்.மேலும் newjaffna,tamilcnn போன்ற தளங்களுக்கு உரிய முறையில் விரைவில் யாராவது பதில் வழங்குவார்கள் என எதிர்பாக்கிறேன்.
ஆத்தி!...
பாஸ் பதிவை விடுங்கள். மேலே போட்டிருக்கிறீர்களே Animation. சூப்பர். கச்சிதமாக பொருந்துகிறது.
கருத்துரையிடுக