எந்தக் காலத்திலும் திரைப்படங்களுக்கான மவுசு குறைந்ததே இல்லை. அதிலும் முன்னணி நாயகர்கள் என்றால் சொல்லவும் வேண்டுமா?
சென்ற வருடம் பெரும் எதிர்பார்ப்புகளோடு வெளியாகி பெரு வெற்றி பெற்ற திரைப்படம் ரஜனி, சங்கர், ரகுமான் கூட்டணயில் உருவான எந்திரனாகும். அதன் வெற்றியின் பிரதான காரணம் பல்துறைப்பட்ட ரசிகர்களையும் ஒரே நேரத்தில் திருப்திப்படுத்தியமையேயாகும்.
உதாரணத்திற்கு ரஜனி தனது ரசிகரை திருப்திப்படுத்த ரகுமான் இசையாலும், ஐஸ்வர்யராய் ஜொள்ளாலும், சங்கர் அறிவியலாளர்,பிரமிப்பாளர் என எல்லோரையும் திருப்திப்படுத்தினார்கள்.
அப்படத்தில் என்னை மிகவும் திருப்திப்படுத்திய இடம் அறிவியல் தான் உதாரணத்திற்கு சொல்லப் போனால் பிரசவம் பார்ப்பதும், அதிர்வைக் கொண்டே அந்தப் பாடல் பெட்டியை தகர்ப்பதுமாகும்.
அதெல்லாவற்றையும் விட எந்திரனின் வசூல் வியக்க வைத்தது வாருங்கள் அதை தருகிறேன் (தகவலை பில்மிக்ஸ் ல் பெற்றுக் கொண்டேன்)
முதல் 10 வாரத்தில் அதிகார பூர்வமான வசூல் – 375 கோடி
வெளிநாட்டில் 75 கோடிக்கு மேல் வசூலித்த ஒரே இந்தியப்படம்
திரையிட்ட நாடுகள் – 33
மொத்த திரையரங்கம் – 3000
இந்தியாவில் திரையிடப்பட்டது – 2000
ஆந்திரத்தில் 700 திரையரங்கு
சரி தலைப்பிற்கு வருவோமா? எந்திரன் திரைப்படமானது 01.10.2010 அன்றே வெளியிடப்பட்டது. எல்லோருக்கும் ஒரு பிரமாண்டப்படத்திற்கு முதல் விமர்சனம் எழுத வேண்டுமென்ற தீராத ஆசையிருக்கும். அதிலும் அந்தச் சந்தர்ப்பத்தை முதலில் பெறுபவர்கள் பதிவர்களே.
உலகளாவிய ரீதியில் எந்திரனுக்கு முதல் முதல் விமர்சனம் எழுதியது யார்? இந்தக் கேள்விக்கு பதில் என்ன தெரியுமா. யாழ்ப்பாணப்பதிவர்களே என்று சொன்னால் நம்பக் கஸ்டமாகவே இருக்கும்.
ஆனால் இதை நம்புங்களேன். இங்கு 30.09.2010 அன்றே யாழ்ப்பாணத்தின் ராஜா திரையரங்கில் திரையிடப்பட்டுவிட்டது. இதற்கான முதல் விமர்சனத்தை எழுதியவர்
குறைந்த வயதில் பதிவுலகத்திற்குள் நுழைந்து மிக ஜனரஞ்சகமான பதிவுகளைத் தந்த கூல் போய் என செல்லமாக அழைக்கப்படும் கிருத்திகன். பதிவுக்கான தொடுப்பிற்கு தலைப்பைச் சொடுக்குங்கள்.
எந்திரன் ஏமாற்றவில்லை... விமர்சனம்
இரண்டாவதாக எழுதியவர் ரஜனியின் மிகத் தீவிர ரசிகரும் மிகவும் வியக்கத்தக்க தேடல்கள் கொண்ட பதிவுகளை தந்தவருமான எப்பூடி ஜீவதர்சன் என்பவராகும். இவர் ஒரு இலங்கைப் பதிவரென்பது இதுவரை பலருக்குத் தெரியாது. பதிவர்களில் அவர் நேரில் சந்தித்ததும் அவரை நேரில் சந்தித்ததும் நான் மட்டும் தான் எனக் கூறியிருந்தார். (அவர் உறவுக்காரரான பதிவரைத் தவிர) அவர் எழுதிக் கொண்டிருந்த இந்தவார இருவர் பதிவுக்கு எப்போதும் பெரு எதிர் பார்ப்பிருந்து கொண்டே இருந்தது.
அதெல்லாம் சரி இன்னும் ஒருவர் எழுதினேன் என அவரே சொல்லிக் கொள்கிறார். ஆனால் பதிவுலகத்தில் நீ எங்கே விமர்சனம் எழுதினாய் என நீங்கள் அவரைப் பர்த்துக் கேட்கலாம். ஆனால் அவர் தலைப்பிலேயே இது விமர்சனமல்ல என்று பச்சையாச் சென்னதால் தப்பி விட்டார். யாரப்பா அந்த மனுசன் என்று கேட்கத் தோணுதா அது அடியேன் தானுங்கோ. அதற்கான தொடுப்பு இதோ.
32 கருத்துகள்:
முதல் முந்திரன்
>>இங்கே பிரதேசவாதம் சம்பந்தமாக இப்பதிவை முன்னிலைப்படுத்தவில்லை. முதன் முதல் எழுதியதில் வேறு மாவட்டத்தில் ஒருவர் இருந்திருப்பாராயின் இதன் தலைப்பு இலங்கை என்று மாறியிருக்கும். குறிப்பிட்ட பிரதேசமாகையால் குறிப்பிட்டே சொல்லியிருக்கிறேன்.
idhu இது ஒரு உள்குத்துப்பதிவா?ஹி ஹி
அட ரொம்ப ஆச்சரியமாக இருக்கு! அப்போ வேலாயுதத்துக்கு முதலில் எழுதப் போவது யார்????
ஹா ஹா ஹா நான் ஆவலோடு காத்திருக்கிறேன்!
நல்ல பதிவு....
உங்கள் பகிர்வுக்கு நன்றி...
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
அப்புறம் சுதா! நீங்கள் தான் என் பதிவுலக குரு என்பது உலகுக்கே தெரியும்!
இப்போது, திரட்டிகள் பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறேன்! ஒருக்கா எட்டிப்பார்த்து சரி பிழை சொல்லிட்டுப் போங்கோ!
அந்த கையெழுத்து எங்கப்பா? அது நல்ல வடிவா இருந்திச்சு! ஒவ்வொரு பதிவிலேயும் போடுங்கோ! நல்லா இருக்கு!
நல்ல பதிவு....
திரையுலக வரலாற்றில் எந்திரன் மூலம் யாழ்ப்பாணப் பதிவர்களின் சாதனை...
வாழ்த்துக்கள்...
வணக்கம் தம்பி எந்திரனின் வசூல் உண்மையில்லைன்னு கூறுகிறார்களே 2G காச வெள்ளையாக்கத்தான் அப்படிக் கூறுகிறார் என்று ஒரு பலமான பேச்சு இருக்கு..ஹி ஹி
எந்திரன் படம் உண்மையிலேயே பலதரப்பட்ட மக்களையும் திருப்த்திபடுத்திய படம்தான்...!! அதுவும் என்னுடைய பசங்க விரும்பிப்பார்த்த ஓரே ஒரு தமிழ் படம்..!!
எந்திரன் படத்துக்கு முதல் விமர்சணம் எழுதிய அந்தப்பதிவர் இப்ப பதிவுலகில் இருக்காரா பாஸ்?
ஆமா எந்திரனில் ஜஸ்வர்யா ராய் மட்டும் தானே நடிச்சாங்க.ஹி.ஹி.ஹி.ஹி எனக்கு அவங்க மட்டும்தான் கண்ணுக்கு தெரிஞ்சாங்க..ஹி.ஹி.ஹி.ஹி...
வேலாயுததுக்கு முந்தப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?
blog la malware attack னு வருது .. கொஞ்சம் கவனிங்க
//blog la malware attack னு வருது .. கொஞ்சம் கவனிங்க//
எனக்கும் இந்த செய்தி வருகிறது சகோ....
புதுவிதமா இருக்கு :-)
அட” போட வைக்கும் பதிவு
அடடா...வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே என்பது தான் எனக்கு நினைவிற்கு வருகிறது!
///Powder Star - Dr. ஐடியாமணி said...
அட ரொம்ப ஆச்சரியமாக இருக்கு! அப்போ வேலாயுதத்துக்கு முதலில் எழுதப் போவது யார்????
ஹா ஹா ஹா நான் ஆவலோடு காத்திருக்கிறேன்!
/// வேற யாரு நம்ம மைந்தன் சிவா தான் ;))
அட இப்படியும் ஒரு ஆராய்ச்சியா? ;)
ம்ம்ம்.. ஏழாம் அறிவு, வேலாயுதத்துக்கு வெயிட்டிங்
.
நல்ல தகவல் சுதா மீண்டும் ராஜா தியேட்டர் சாதனை என்கிறீங்க பாரம்பரியமாக ராஜா தியேட்டர் பல வெற்றிப்படங்களை திரையிட்டதை வரலாறு இருக்கின்றது!
அட.. இப்புடி ஒரு சாதனை.. இணைப்புகளுக்கு நன்றி சகோதரா.
Powder Star - Dr. ஐடியாமணி said...
//அட ரொம்ப ஆச்சரியமாக இருக்கு! அப்போ வேலாயுதத்துக்கு முதலில் எழுதப் போவது யார்????
ஹா ஹா ஹா நான் ஆவலோடு காத்திருக்கிறேன்!//
இந்தாளு லொள்ளப்பாருய்யா, எத எதோட முடிச்சுப்போடுது..
மாப்ள கலக்கல்யா...வாழ்த்துக்கள்!
ஒ அப்பிடியா...!!!!
நல்ல பதிவு. . .சகா
விபரமாக ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள். interesting
வேலாயுதத்துக்கு செம போட்டி போல படம் வர முதல் நாளே போட்டிட வேண்டியதுதான்
நல்ல விமர்சனம் பாராட்டுகள்.
பொதுவா நான் நீண்ட நாளா சினிமாவே பார்பதில்லை! சுதா!
மனங்கனிந்த தங்கள் பாரட்டுக்கு
மிக்க நன்றி சகோதரி!
புலவர் சா இராமாநுசம்
வாழ்த்துக்கள் அண்ணே....
கருத்துரையிடுக