செவ்வாய், 25 அக்டோபர், 2011

இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி

வணக்கம் உறவுகளே

சேமம் எப்படி?

      இன்றைய காலகட்டத்தில் பெரிய பெரிய இணையத் தளங்களுடன் போட்டி போடும் அளவுக்கு வலைத் தளங்கள் வளர்ந்துள்ளது போல பெரிய பெரிய முதலீட்டுப் படங்களுடன் போட்டி போடும் அளவுக்கு குறும்படங்கள் தமக்கென தனியிடத்தைப் பிடித்துள்ளது.

அதிகளவான படங்கள் இந்தியாவிலிருந்து வெளியானாலும் இலங்கையிலிருந்தும் பல படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஆண்டு மட்டும் 50 ற்கு மேற்பட்ட குறும்படங்கள் வெளியாகியிருந்தது.
அந்த வகையில் இலங்கைப் பதிவுலகத்திலிருந்தும் ஒரு குறும்படத்தை வெளியிடும் முயற்சியில் பதிவர் கூல்போய் கிருத்திகன் மிக நீண்ட காலமாக முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு சரியான துணையின்மையால் நீண்ட காலம் அது கிடப்பிலேயே இருந்தது.
இறுதியாக பதிவர் ஜனா அண்ணாவின் மகளுடைய பிறந்த நாள் விழாவில் அந்த திரைக்கதையை கூறி எடுக்கப் போகிறேன் என ஆணித்தரமாகக் கூறியவர். ஒரு நாள் இரவு போன் போட்டு “மதிசுதா நாளைக்கு துவங்கப் போகிறேன் நேரம் கிடைத்தால் ஒரு தடவை வந்திட்டுப் போங்கோ“ என்றார்.
நானும் பெரிதாக நினைக்காததால் என்பாட்டுக்கு வேலைக்கு போய் விட்டேன். திடிரேன போன் வரத்தான் கேட்டது நினைவுக்கு வர அந்த நேரம் கொட்டும் மழையாகையால் போட்டிருந்த சேட் நனைந்தாலும் என இன்னுமொரு சேட்டை பையினுள் வைத்துக் கொண்டு ஓடினேன்.
அங்கே பார்த்தால் எனக்கும் ஒரு முக்கிய வேடமாம். பிறந்து இதுவரை காலத்தில் பல மேடை நாடகம் இயக்கி நடித்திருந்தாலும் கமரா முன் போய் நின்றது என்றால் கல்யாண வீடு மற்றும் பூப்புனித நீராட்டு விழா போன்றவற்றில் மட்டுமே.

சரி நடிப்போம் என ஆரம்பித்த பிற்பாடு தான் விடயம் புரிந்தது.


முன்னோட்டத்தை கிழே இணைத்துள்ளேன்.
படத்தில் மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டியவை
1. யாழ்ப்பாணம் அரசகட்டுப்பாட்டுக்கு கிழே வந்த பின்னர் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்காத அதன் மையப்பகுதியில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக பஸ் நிலையத்தின் மையப்பகுதியில் தீபாவளி சனக் கூட்டத்தினுள்ளே கொட்டும் மழையில் ஐந்து ஆறு retake எடுத்து பல காட்சிகளை படமாக்கப்பட்டிருக்கிறது.

2. படம் பிடிக்கவே அனுமதி கிடைக்காத புதிய சங்கிலியன் சிலையடியினில் காட்சிகள் படமாக்கியமை. என பல விடயங்களை குறிப்பிடலாம்.

சங்கிலியனின் அரண்மனை வாசல், மந்திரிமனை, யாழ் நூலகம், கசூர்ணா கடற்கரை, நல்லூர் கந்தசுவாமி கோயில், நல்லூர் பாரதியார் சிலை, யாழ் வைத்தியசாலை முகப்பு, வேம்படி மகளீர் கல்லூரி, யாழ்ப்பாணம இந்துக் கல்லூரி என பல முக்கியமாக இடங்களில் படப்பிடிப்பை மேற்கொண்டிருந்தோம்.
மிகுதியை படத்திலேயே காணுங்கள்.
குறுப்படம் சம்பந்தமான மேலதீக தகவல்களை கீழே உள்ள தொடுக்கில் உள்ள முகநூல் பக்கத்தை லைக் பண்ணுவதன் முலாம் நீங்கள் தொடர்ச்சியாகப் பெற்றுக் கொள்ளலாம்.
CLICK HERE 

மேலதிக கொசுறு ஒன்று - இப்படத்தில் வரும் விபத்துக் காட்சி ஒன்றுக்கு மங்காத்தாவில் அஜித் பயன்படுத்தியது போன்ற மோட்டார் சைக்கிள் ஒன்று யாழ்ப்பாணத்தின் மோட்டார் சைக்கிள் ஓட்ட சாகசக்காரர் ஒருவர் மூலம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

You might also like:

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

46 கருத்துகள்:

உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்...!!!

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்....

rajamelaiyur சொன்னது…

முயற்சிக்கு வாழ்த்துகள் .. வெற்றி நிச்சயம்

rajamelaiyur சொன்னது…
காட்டான் சொன்னது…

வணக்கம் தம்பி நிரூபனின் பதிவிலேயே இத்தகவல் தெரிந்துகொண்டேன் நீங்களும் நடிக்கிறீர்களா? வாழ்த்துக்கள் நம்ம மதுரனின் பங்களிப்பு இதில் இருக்கின்றதா?? நானும் இந்த குறும்படம் பார்க்க ஆவலாய் உள்ளேன். உங்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துக்கள்

வெற்றி பெற வாழ்த்துக்கள். தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

காட்டான் சொன்னது…

அட என்னங்க நீங்க ஹீரோமாதிரி இருக்கீங்க அப்ப நானும் ஒரு படத்திற்கு பூசை போடவா உங்களை ஹீரோவா போட்டு...!!!!???

செங்கோவி சொன்னது…

கலக்கறீங்க மதி..வாழ்த்துகள்.

பெயரில்லா சொன்னது…

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

SURYAJEEVA சொன்னது…

குறும்படம் வெளியில் வந்த பிறகு தெரிவியுங்கள், பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்

K.s.s.Rajh சொன்னது…

வாழ்த்துக்கள் பாஸ் கலக்குங்க நம்மாளுகள் எதை தொடாலும் அது துலங்கும் நம் பெருமை அப்படி அசத்துங்க...........

பெயரில்லா சொன்னது…

அண்ணர் தான் ஹீரோவோ ....?

வலையுகம் சொன்னது…

முண்ணோட்டமே பயங்கரமாக இருக்கு
விரைவில் பிளாக்கர் திரையில் காண ஆவலுடன் இருக்கிறேன்

வலையுகம் சொன்னது…

ஆமா மாடு ஏன் கேமாரவா ஊத்து பாக்குது என்ன பன்னுனீங்கே மாட்டே

shanmugavel சொன்னது…

ஆவலைத் தூண்டுகிறது.வாழ்த்துக்கள்.

அண்ணா ஆரம்பமே சூப்பரா இருக்கே.படம் எப்போ வெளிவரும்?உங்கள் கலைப்பயணம் தொடர என் வாழ்த்துக்களும் சேரட்டும்.

நிரூபன் சொன்னது…

இனிய இரவு வணக்கம் மச்சான்,
ட்ரெயிலர் சூப்பரா வந்திட்டு,
கலக்கலா படம் வரும் என நினைக்கிறேன்.

நிரூபன் சொன்னது…

படக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Angel சொன்னது…

நேற்று நிரூபன் பதிவில் படித்தபோதே நீங்களும் இருப்பீங்கன்னு யோசித்தேன் .ரெண்டு டிரைலரும் நல்லா கலக்கலா வந்திருக்கு .படம் வெளிவந்ததும் சொல்லுங்க பார்க்க ஆவலா இருக்கு . இனிய தீபாவளி வாழ்த்துக்கள் .

Yoga.S. சொன்னது…

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்,யாழ்ப்பாணம்!!!!!அருமையாக என் நினைவுகளை பின்னோக்கி நகர்த்தி விட்டீர்கள், நன்றி!குறும்படத்தை எதிர்பார்த்து...............

எப்பூடி.. சொன்னது…

படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள், சுதா உங்க லுக் செமையா இருக்கு, ஒரு அசப்பில பாத்தா நடிகர் முரளி மாதிரி இருக்கு.

yarl சொன்னது…

வெற்றி நிச்சயம். எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சுதா

Chitra சொன்னது…

Good news! Congratulations!

HAPPY DEEPAVALI TO YOU AND TO YOUR LOVED ONES!

கவி அழகன் சொன்னது…

வாழ்த்துக்கள் மச்சி எப்ப ர்லீஸ்

Minmalar சொன்னது…

தீபாவளி வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

அம்பலத்தார் சொன்னது…

வணக்கம், தங்களுக்கும், தங்களது குடும்பஉறவுகளிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அம்பலத்தார் சொன்னது…

வணக்கம், தங்களுக்கும், தங்களது குடும்பஉறவுகளிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அருமையான முயற்சி வாழ்த்துக்கள் சகோ இனிய தீபாவளி நன்னாளில்
உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றிபெறவும் ,இருக்கும் சங்கடங்கள்
இறையருளால் நீங்கி வாழ்வில் எல்லா நலனும் வளமும் பெற்றிங்கே
நீங்களும் உங்கள் உறவுகளும் மனம் மகிழ்ந்து வாழ என் மனமார்ந்த
வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு ...........

Selmadmoi gir சொன்னது…

தீபாவளி நல் வாழ்த்துக்கள்

Selmadmoi gir சொன்னது…

தீபாவளி நல் வாழ்த்துக்கள்

உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள். தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

test சொன்னது…

சூப்பர் பாஸ்!
என்னா லுக்கு..!
என்னா கெத்து...!
கலக்குறீங்க பாஸ்!

அம்பலத்தார் சொன்னது…

வணக்கம் மதி குறும்படம் வெற்றிபெறவும் உங்கள் திறமை மற்றுமொருதுறையில் பிரகாசமாக வெளிப்படவும் வாழ்த்துக்கள்

சத்ரியன் சொன்னது…

வெற்றிகளின் முதல் தொடக்கம். வாழ்த்துக்கள்.

anuthinan சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணா!!!

Sivakumar சொன்னது…

நிரூபன் வாயிலாக இவ்விஷயம் பற்றி கேள்விப்பட்டேன். உங்கள் அணியில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்.

பெயரில்லா சொன்னது…

தங்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் சகோ...

எனக்கும் உங்கள் படத்தில் வாய்ப்பு கிடைக்குமா? பெரிய வேடம் எல்லாம் வேண்டாம் ஹீரொ போன்ற சிறிய சிறிய வேடம் இருந்தால் போதும்...

பெயரில்லா சொன்னது…

நன்றி சகோ மதி சுதா தங்களின் தளம் பார்த்தேன், பிரமாதம் அனைத்தும் அருமை. பணி சிறக்க சிறப்புவாழ்த்துக்கள் !!

ARV Loshan சொன்னது…

வாழ்த்துக்கள் மதிசுதா...
புதிய முயற்சிகளில் பிரம்மாதமாக கலக்குகிறீர்கள்..
முழு ஆதரவும் உய்ந்து..
என்னால் முடிந்த அளவு பலரிடமும் கொண்டு போய் சேர்க்கிறேன்.
ட்ரெய்லர் ஆவலைத் தூண்டும் விதமாக உள்ளது.

கூல் போய்க்கும் எனது வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள்..

ஷஹன்ஷா சொன்னது…

வாழ்த்துகள் அண்ணா.. புத்தாக்கத்தில் சரித்திரம் படைக்க..

கூல் போய்க்கும் என் வாழ்த்துகள்..

என் ஆதரவு என்றும் இருக்கும்...

Rathnavel Natarajan சொன்னது…

வாழ்த்துக்கள்

Gobinath சொன்னது…

ட்ரெயிலர் சூப்பர் அண்ணா. நம்ம ஊர்ல இருந்து நல்ல படம் வரப்போகுது. நமக்கென்று ஒரு நல்ல ஹீரோ கிடைச்சாச்சு.

Jaleela Kamal சொன்னது…

வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் நண்பரே..

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் தம்பி
முயற்ச்சி திருவினையாக்கும்.

மொத்தப் பக்கக்காட்சிகள்

1207898

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்