எம்மவர்களின் திறமையை மீண்டும் நிருபிக்க ஒரு சந்தர்ப்பமாக நேற்று இது அமைந்தது. aaa movies international ஏற்பாட்டில் எடுக்கப்பட இருக்கும் பனைமரக்காடு என்ற குறும்படத்திற்கான பட பூசை வெங்கடேஸ்வர வரதராயப் பெருமாள் கோயிலில் இடம் பெற்றது.
இப்படம் மட்டும் இணையத்திற்கு சொந்தமானது |
அத்துடன் தயாரிப்பாளர் பற்றி சொல்லியே ஆக வேண்டும் இவரை யாழில் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள் காரணம் கடந்த தேர்தல் காலத்தில் ஒவ்வொருவர் வீட்டு மதிலில் சிரித்தபடி நின்றவரான செவ்வேள் தான் தயாரிக்கப் போகிறார் ஒரு வழக்கறிஞர் ஆன இவர் இதற்கு முன் தயாரித்த படங்கள் (காதல்.கொம்,கோடம்பாக்கம், பேசாத கண்ணும் பேசுமே)) பெரிதளவு பெயரை பெற்றுக் கொடுக்காவிட்டாலும் இம்முறை தனது முதலை ஈழத்தில் இட்டிருப்பது வரவேற்கத் தக்க விசயமே
நானே ஒட்டிய சுவரொட்டி அழகாயிருக்கா ? |
எம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பனைமரக்காடு (panaimarakaadu)காட்டுக்குள்ளேயே தங்குமா அல்லது நாட்டையே கலக்குமா காத்திருப்போம்.. வழமை போல் அனைவரும் அறிந்த ஒன்றை எடுக்காமல் புதிதாய் ஒரு விடயத்தை காட்டினால் பலரை ஈர்க்கும் அத்துடன் வெளி நாட்டவரை கவர வேண்டுமானால் சில விசயங்களை கூறக்கூடாது இப்படியெல்லாம் விதிகள் இருப்பதால் சிலதை கவனத்திலெடுத்து பலதை சிந்தித்தால் பிரபலமாவது உறுதியாகும்.
குறிப்பு - இதே தயாரிப்பாளரிடம் நான் கேட்க வேண்டிய சில கேள்விகள் இருக்கிறது. அவர் மீண்டும் என்னை சந்திப்பார என தெரியாததல் இங்கேயே சொல்கிறேன் “ஐயா எனக்கு அடையாள அட்டை பெற்றுத் தருவதாகச் சொல்லி சாமம் சாமமாகவும் , பற்றைகள் பருகுகளிலும் ஐந்து கிலோ மாவை மட்டும் தந்து ஓசியில் வேலை வாங்கினீர்களே. மற்ற கட்சிக்காரன் ஒரு இரவுக்கு 1000 ரூபா சம்பளமும் கொத்துரொட்டியும் கொடுத்து ஆட்களை வைத்திருக்க ஒற்றை ஐசி க்காக அலைந்தேனே என்னை நினைவிருக்கிறதா ?” ஐயா இப்பொதும் என்னிடம் ஐசி இல்லை ஆனால் நான் நடமாடுகிறேன் காரணம் ஓரிரு மனித நேயம் உள்ள மானிடர்களால். என்மேல் உங்களுக்கு கோபம் வரலாம் நியாயமிருக்கிறது.... அப்படி கோபம் வந்தால் இப்போதாவது எனக்கு உதவுங்கள்... நான் உங்கள் சுவரொட்டியை ஒட்ட சுடுதண்ணிர் விடவில்லை அதில் என் வியர்வை தான் இட்டேன்.
என் துணிவைப் பாராட்டுகிறேன் என்று யாரும் கருத்திட வேண்டாம் நான் ஏமாற்றப்பட்டவன். அந்தச் சொல்லுக்கு தகுதியில்லாதவன்.
குறிப்பு - இதே தயாரிப்பாளரிடம் நான் கேட்க வேண்டிய சில கேள்விகள் இருக்கிறது. அவர் மீண்டும் என்னை சந்திப்பார என தெரியாததல் இங்கேயே சொல்கிறேன் “ஐயா எனக்கு அடையாள அட்டை பெற்றுத் தருவதாகச் சொல்லி சாமம் சாமமாகவும் , பற்றைகள் பருகுகளிலும் ஐந்து கிலோ மாவை மட்டும் தந்து ஓசியில் வேலை வாங்கினீர்களே. மற்ற கட்சிக்காரன் ஒரு இரவுக்கு 1000 ரூபா சம்பளமும் கொத்துரொட்டியும் கொடுத்து ஆட்களை வைத்திருக்க ஒற்றை ஐசி க்காக அலைந்தேனே என்னை நினைவிருக்கிறதா ?” ஐயா இப்பொதும் என்னிடம் ஐசி இல்லை ஆனால் நான் நடமாடுகிறேன் காரணம் ஓரிரு மனித நேயம் உள்ள மானிடர்களால். என்மேல் உங்களுக்கு கோபம் வரலாம் நியாயமிருக்கிறது.... அப்படி கோபம் வந்தால் இப்போதாவது எனக்கு உதவுங்கள்... நான் உங்கள் சுவரொட்டியை ஒட்ட சுடுதண்ணிர் விடவில்லை அதில் என் வியர்வை தான் இட்டேன்.
என் துணிவைப் பாராட்டுகிறேன் என்று யாரும் கருத்திட வேண்டாம் நான் ஏமாற்றப்பட்டவன். அந்தச் சொல்லுக்கு தகுதியில்லாதவன்.
52 கருத்துகள்:
உங்க ஐட்டம் எனக்குத்தான் போல, அதுதாங்க சுடு சோறு :-)
ஆமாமா எனக்குத்தான் :-)
ம் ...
வெற்றிபெற வாழ்த்துக்கள், அனால் எனக்கு படத்தின் பெயர் பிடிக்கவில்லை, பனங்கூடல் என்பதே சரியான தமிழ்ச்சொல் என்று நினைக்கிறேன்.
பொறுமையோடு எதிர்பார்ப்போம்......அண்ணா
பனி பொழியுது....
பார்க்கலாம்..
ம்.. பார்க்கலாம்
vazhthukal
ஓ.. ஐ.. சீ...
எல... தலைவர பத்தி குறைவா கதைச்சா பிச்சிப்புடுவேன் பிச்சு...
அண்ணாச்சி எனக்கு ஒரு ஓட்டுக்கு ரெண்டாயிரம்ரூவாவும் கொத்துறொட்டியும் தந்திருக்காரு தெரியுமா..?
பகிர்வுக்கு நன்றி நண்பா
நெகடிவ் ஓட்டு...? பிரபலமாயிட்டீங்க :)
படம் பற்றிய விபரத்தை விட உங்கள் நிலைமை யோசிக்க வைக்கிறது. அதற்கு எங்களால் இயலாது. விரைவில் அதைப் பெறுவதற்கு முயற்சிக்கவும். பதிவர் சந்திப்பில் கூட பலர் சுதாவின் வருகையை எதிர்பார்த்திருந்தார்கள்.
பதிவர் சந்திப்புக்கு நீங்கள் செல்லாதது, சர்வதேச அளவில் ஆச்சர்யம் ஏற்படுத்திவிட்டதே
சுதா,பொதுவாக சினி ஃபீல்டில் நம் உழைப்பை உறிஞ்சுபவர்களும் ,ஏமாற்ற நினைப்பவர்களும் அதிகம்.என்னிடம் கூட காமெடி டிராக் வாங்கி ஏமாற்றி இருக்கிறார்கள்.நாம் ஒதுங்கி இருக்க வேண்டியதுதான்.
நமக்கும் ஒரு காலம் வரும் காத்திருப்போம்
மண்ணின் மணம் இதில் சிறப்பாக இருக்கும் என நம்புவோம்.
பொறுத்திருந்து பார்ப்போம்..
என்னது சுடுசோற்றுக்கே ஏமாற்றமா??நெஞ்சு பொறுக்குதில்லையே....
என்னது? மாவுக்காக சுவரொட்டி ஒட்டினீங்களா??? கொழும்பில சுவரொட்டி ஒட்டுற ரேட் என்ன தெரியுமா? இப்படி அப்பாவியா இருந்திட்டீங்களே.
என்னைக்கேட்டா ஐ.சி. போன்றவற்றைப் பெற அரசியல்வாதிகளைப் பிடிப்பதைவிட அதிகாரிகளைப் பிடிப்பதே நன்று.
ஆமா உங்களை ஏமாற்றிய அரசியவாதி எடுக்கும் படத்துக்கும் ஆதரவாக ஒரு பதிவு இட்டிருக்கிறீர்களே இதுதான் "இன்ன செய்தாரை ஒருத்தல்" என்பதா?
நான் உங்கள் சுவரொட்டியை ஒட்ட சுடுதண்ணிர் விடவில்லை அதில் என் வியர்வை தான் இட்டேன்.///
எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை சார் ..............................
நல்ல பதிவு நண்பா..கடைசி வரிகளைப் படித்தபோது மனம் கனத்தது.
----செங்கோவி
ப்ளாக்கை பிரபலமாக்க 7 சூப்பர் டிப்ஸ்
"பனைமரக்காடு" சிறந்த படமாக வாழ்த்துக்கள்.............
அண்ணா நீங்கள் கூறிய ஒரு விடயத்தை நான் மறுக்க விரும்புகின்றேன்........................
கண்டிப்பாக நீங்கள் ஏமாந்து போனவரல்ல ஏமாற்றப்பட்டவர்என்றோ ஓர் நாள் அதே அரசியல்வாதிக்கு உங்களால் ஏதாவது உதவி தேவைப்படும்
இதுதான் உலக நியதி கவலை கொள்ளாதீர்கள்
படிக்கச் கஷ்டமாதான் இருக்கு... படத்திற்கு வாழ்த்து மட்டும் சொல்லிகரேன்
பனைமரக்காடு வெற்றி வாகை சூட என் வாழ்த்துக்களும் சகோதரா
பனைமரக் காடு வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்.
"பனைமரக்காடு"நினைக்கவே மனம் ஊர் நோக்கிப் பறக்கிறது சுதா.
மண்வாசனையோடு வெற்றிநடை போடட்டும் !
ம்.. இப்படத்தில் பல இலங்கை கலைஞர்கள் நடிக்கப்போவதாக கேள்விப்பட்டேன..நல்ல முயற்சி... எனக்கும் இந்த நிகழ்வுக்கான அழைப்பு கிடைத்தது ஆனாலும் பதிவர்கள் சந்திப்பு ஏற்பாட்டு குழுவில் இருந்தவன் என்ற ரீதியிலும் பதிவர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்ற காரணத்தினாலும் ஆரம்பவிழாவில் கலந்துகொள்ளவில்லை.
அதுசரி நீங்க இன்னும் அடையதள அட்டை இல்லாமல்தான் இருக்கிறியளோ...
உங்களின் ஆதங்கமும் புரிகின்றது. அதேநேரம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
ம்ம்...
உங்களை அப்பாவி என்பதா ஏமாளி என்பதா தெரியவில்லை சுதா..
தயாரிப்பாளர் யோசிக்கட்டும் .
இது மாதிரி எத்தனைப்பேரின் உழைப்பும், ரத்தமும் உறிஞ்சப்பட்டுள்ளதோ?
//ஆமா உங்களை ஏமாற்றிய அரசியவாதி எடுக்கும் படத்துக்கும் ஆதரவாக ஒரு பதிவு இட்டிருக்கிறீர்களே இதுதான் "இன்ன செய்தாரை ஒருத்தல்" என்பதா?//
உண்மையை சொல்லவேண்டும் என்றால் எனக்கு ஏமாற்றுபவர்களின் மீது கோபம் வருவதில்லை!
படம் சிறப்பாக வர வாழ்த்துக்கள்
உங்கள் தேவையை பூர்த்தி செய்ய உரிய தரப்பை நாடுங்கள் .காலை கையை பிடிப்பது சரிப்பட்டு வராது சகோதரா
புரிந்து கொள்
பனங்காடு...இல்லை தேரிக்காடு என்று இருந்தால் நன்றாக இருக்கும்.
பனைமரக்காடு என்று ஒருவரும் கூறுவதில்லை.
நண்பா முடிஞ்சா ஒனக்கு புடிச்ச பத்த பாட்ட ஒரு போடு போடு. தொடர்பதிவு புடிச்சா எழுது
http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/12/10.html
பகிர்வுக்கு நன்றி நண்பா ...
என் கருத்துக்கு மதிப்பளித்து மாற்றம் செய்தமைக்கு நன்றி ஆனால் என்னால் தான் மீண்டும் மாத்திக்குத்த முடியாமல் உள்ளது... நன்றி
படம் வெற்றி அடைய வாழ்த்துகள் . எண்ணம் வெற்றியடையட்டும் பாராட்டுகள் .
//வெளி நாட்டவரை கவர வேண்டுமானால் சில விசயங்களை கூறக்கூடாது//
உண்மை! உண்மை!
//இப்பொதும் என்னிடம் ஐசி இல்லை ஆனால் நான் நடமாடுகிறேன் காரணம் ஓரிரு மனித நேயம் உள்ள மானிடர்களால்//
நானும் உங்களை எதிர்பார்த்தவர்களில் ஒருவன்! விரைவில் ஐ.சி.கிடைக்கட்டும்!
//(காதல்.கொம்,கோடம்பாக்கம், பேசாத கண்ணும் பேசுமே)//
கோடம்பாக்கம் படம் கொஞ்சம் பார்த்திருக்கேன் ..!!
சுதா! நீங்க சொன்ன ஐ.சி., சுவரொட்டி அனுபவம்! இது கூட ஒரு நல்ல குறும்படத்திற்கான கரு!
// மற்ற கட்சிக்காரன் ஒரு இரவுக்கு 1000 ரூபா சம்பளமும் கொத்துரொட்டியும் கொடுத்து ஆட்களை வைத்திருக்க ஒற்றை ஐசி க்காக அலைந்தேனே என்னை நினைவிருக்கிறதா ?” //
//நான் உங்கள் சுவரொட்டியை ஒட்ட சுடுதண்ணிர் விடவில்லை அதில் என் வியர்வை தான் இட்டேன்.//
அட கொடுமையே .? விரைவில் உங்கள் விருப்பம் நிறைவேறட்டும் .. உங்களுக்கு IC கிடைக்கட்டும் ..!!
சில விஷயங்கள் எனக்கு புரியாததால் நான் வந்ததை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன்
நிச்சயமாக உங்களுக்கு அடையாள அட்டை
கிடைக்கும் என்பது என் நம்பிக்கை!
அதற்கு என் வாழ்த்துக்கள்!
//அப்படி கோபம் வந்தால் இப்போதாவது எனக்கு உதவுங்கள்... நான் உங்கள் சுவரொட்டியை ஒட்ட சுடுதண்ணிர் விடவில்லை அதில் என் வியர்வை தான் இட்டேன்.//
இந்தப் பதிவை அவர் பார்த்தாரா?
படத்தில் ஹீரோ, ஹீரோயின் யாரு?
படம் வெற்றி பெற வாழ்த்துவோம்..
நல்ல பதிவு நண்பா..கடைசி வரிகளைப் படித்தபோது மனம் கனத்தது.
விரைவில் ID எடுக்கப்பாருங்க
நல்ல தகவல்
30 வருட இடை வெளிக்கு பின் ஈழத்தில் மீண்டும் உதிக்கிறது தமிழர் வாசனை. அவ் வாசனை முழு ஈழத்திற்கும் பரவி வீறு நடை போட வேண்டும் என்பது என் வாஞ்சை. வாழ்த்துக்கள்.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே.
கருத்துரையிடுக