திங்கள், 11 அக்டோபர், 2010

இலங்கை கதை திருடிய பிரபல இயக்குனர்..

-->

            எனது பதிவுலகப்பயணத்தின் 50 வது பதிவுக்குள் தங்களை அன்புடன் வரவேற்கிறேன். பதிவர்கள் நாளான யூன் 14 ம் திகதி திறந்தே ஆகணும் என்ற ஒரு வெறியில் திறந்தது தான் இந்த நனைவோமா? பெயர் வைத்த கதையை கேட்கக் கூடாது அது பெரிய கதை) வலைப் பதிவாகும். சரியாகத் தட்டச்சுத் தெரியாத ஒருவனாக திறக்கப்பட்ட என் வலைப் பதிவிற்கு முதல் பதிவை எப்படி இட்டேன் தெரியுமா? குருஜீ (guruji.com) போய் அங்குள்ள தமிழ் தட்டச்சுப் பலகையால் அதன் தேடு பெட்டிக்குள் (search box) சொடுக்கலின் மூலம் தட்டச்சிட்டு அதைப் பிரதி பண்ணிக் கொண்டு வந்து பதிவகப் பெட்டிக்குள் இட்டேன் அது தான் என் முதல் பதிவானது. ஆனால் இப்போது NHM writter எனக்குப் பெரிதும் உதவியாக மாறியுள்ளது. நான் ஒரு காவி போல் கை வைக்கும் எல்லாக் கணணியிலும் அதை சேமித்து விட்டு வருகிறேன். (யான் பெற்ற துன்பம் பிறர் பெறக் கூடாது என்பதற்காக).
               
.
இனி வாருங்கள் தலைப்பிற்குப் போவோம். இதை நான் எழுதினாலும்அந்தப் புத்தகத்தை எழுதியவரின் கதையை அடிப்படையாக வைத்தே எழுதப்படுகிறது.
முதலில் புத்தகத்தின் கதைக் கருவை சொல்லிக் கொண்டு போகிறேன். எங்காவது திரைப்படத்தில் இப்படி ஒரு கதை பார்த்த நினைவு வருகிறதா சொல்லுங்கள்.
வாடைக்காற்று காலத்தில் வெளியிடங்களிலிருந்து வந்து வாடி போட்டு மீன் பிடிக்கும் வெளியூர்க்காரர்களுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும் ஏற்படும் உறவு, பகை, நட்பு, கோபம் என்பனவற்றை அடிநாதமாகக் கொண்டது இக்கதை. முந்திய வருடத்தில் அங்கு வந்து வாடி போட்டுத் தொழில் செயத சம்மாட்டி செமியோன் (மனோகரன்) உள்ளூர்ப் பெண்ணான பிலோமினா (சந்திரகலா)வுடன் கொண்ட உறவு அவளது தந்தை (பிரான்சிஸ்), தமையன் (கந்தசாமி) ஆகியோருடன் ஏற்பட்ட மனக் கசப்பினால் முறிந்து போய் விடுகிறது. உள்ளூர்க்காரரான பொன்னுக் கிழவர் (ஜேசுரட்னம்) பெற்றார் இல்லாத தன் பேத்தி நாகம்மாவை (ஆனந்தராணி) கண்போல வளர்த்து வருகிறார். முயல் வேட்டையாடிக் கொண்டு திரியும் அவளது முறை மாப்பிள்ளையான விருத்தாசலத்துக்கு (பாலச்சந்திரன்) அவளை திருமணம் செய்து வைக்கவேண்டுமென்ற ஆசை அவருக்கு.
மீண்டும் அடுத்த பருவகாலம் வருகிறது. வெளியூர் மீனவர்கள் வருகிறார்கள். வெகு தூரத்திலிருந்து கூழக்கடாக்கள் என்ற் பறவைகளும் வருகின்றன. ஆனால் இந்தமுறை புதிதாக மரியதாஸ் (இந்திரகுமார்) என்ற சம்மாட்டி வந்து சேர்கிறான். அவனோடு பிரச்சினைகளும் வருகின்றன. செமியோன் சம்மாட்டி வழக்கமாக வாடி போடும் இடத்திலே தான் வாடி போட்டுத் தொழில் செய்கிறான். பணத்தைக் காட்டி உள்ளூர் மீனவத் தொழிலாள்ர்களை தன்பக்கம் இழுத்துக் கொள்கிறான். போதாதற்கு நாகம்மாவையும் மனம் மாற்றி தன்னுடன் அழைத்துப் போய் விடுகிறான். இதனால் விருத்தாசலமும், பொன்னுக்கிழவரும் வேதனையினால் வெந்து போகிறார்கள். செமியோனுக்கும், மரியதாஸுக்கும் நடக்கும் தொழில் போட்டியிலும் மரியதாஸுக்கே வெற்றி கிடைக்கிறது. முறைப்பெண்ணான நாகம்மாவை எங்கிருந்தோ வந்தவனுக்கு பறிகொடுத்த விருத்தாசலத்தை, சுடலைச் சண்முகம் (ஜவாஹர்) கிண்டல் செய்கிறான்.
ஊர்த் திருவிழா நடக்கிறது. செமியோன் சம்மாட்டி தன் காதலி பிலோமினாவை ரகசியமாக சந்திக்கிறான். இந்த நேரத்தில் யாரோ மரியதாஸ் சம்மாட்டியின் வாடிக்கு தீ வைத்து விட்டார்கள். அதைப் பார்க்க செமியோன் அவசரமாகப் போக, தனியாக இருட்டில் போன பிலோமினாவை, சுடலைச் சண்முகம் கற்பழித்து கொலை செய்து விடுகிறான். நடந்ததை ஊகித்து அறிந்து கொண்ட விருத்தாசலம் சுடலைச் சண்முகத்தை துரத்திச் சென்று, தனது ஈட்டியினால் எறிந்து கொல்கிறான். விருத்தாசலமும், செமியோனும் தங்கள் இழப்பினால் வருந்த, மரியதாஸும், நாகம்மாவும் ஊரை விட்டுப் போகிறார்கள். மீண்டும் ஒரு மீன்பிடிப் பருவம் முடிவுக்கு வருகிறது.

இது இருப்பது செங்கையாழியன் என அழைக்கப்படும் கே. குணராசாவால் எழுதப்பட்ட வாடைக்காற்று எனும் புத்தகத்தில் இருக்கும் கதையாகும். இப்புத்தகத்தை 1973 ம் வருடம் கார்த்திகை மாதம் வீரகேசரி பத்திரிகைப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் சுமாராகப் பேசப்பட்ட இப்புத்தகம் அலசையன் என்பவரின் விமர்சனத்தால் பெரும் பரபரப்பைப் பெற்றது (இங்கு அனானி போல் அப்பவும் ஒருத்தர் இருந்திருக்கார்). 17.03.1974 அன்ற அலசையனின் விமர்சனம் வீரகேசரியில் பிரசுரமானது அதில் அவர் குறிப்பிட்டது “நெடுந்தீவின் பகிறு வேலிகள், போர்த்துக்கேயர் விட்டுப் போன குதிரை வாரிசுகள் (Ponies), காலநிலை மாற்றத்தில் வரும் கூழக்கிடா (ஒரு பறவை இனம்) பற்றியெல்லாம் குறிப்பிட்ட ஆசிரியர் அங்குள்ள பெண்களில் காணப்படும் போர்த்துக்கேயரின் பண்புகள் பற்றி ஏன் சொல்லவில்லை) என்று குறிப்பிட்டிருந்தார். இது நெடுந்தீவு மக்களின் பெரும் எதிப்பிற்குள்ளானது. அதன் பின் வீரகேசரிப் பத்திரிகை 1.9.1974 அன்று தனது முதல்ப்பக்கத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.
இனி இக்கதை எப்படிக் களவு போயிருக்கலாம் என ஆசிரியரின் கருத்தைப் பார்ப்போம். நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள் தனது நாடகக் குழுவுடன் ஒரு முறை கொழும்பு வந்திருந்தார். அப்போது வாடைக்காற்று திரைப்படத்தை (திரைப்படம் சம்பந்தமான விடயம் கீழே) பார்த்துவிட்டு வெகுவாகப் புகழ்ந்தாராம். பின்னர் யாழ்ப்பாணம் வந்த பொது இவரைச் சந்திக்க விரும்பியிருக்கிறார். சந்தித்த போது இக்கதையை தான் இந்தியாவில் படம் எடுக்கப் போவதாகக் கேட்டு ஒரு புத்தகத்தையம் வாங்கிப் போயிருக்கிறார்.
என்ன இவன் இன்னும் விசயத்தைச் சொல்லலியே என்று நினைக்காதிங்க. அதை சொல்வதில் ஒரு சின்னத் தயக்கம் காரணம் நானும் அந்த படம் பார்த்து கான காலம் ஆகிவிட்டது. அந்த இயக்குனர் படத்தில் எப்படி கதாசிரியரின் பெயர் போட்டுள்ளார் எனத் தெரியவில்லை.(ஆனால் மேஜர் சுந்தர்ராஜன் என்ற மட்டும் போடவில்லை என்பது செங்கையாழியன் கருத்தில் தெரிகிறது). இரண்டிடத்திலும் கதைக்களம் ஒன்றாக இருந்தாலும் திரைக்கதையில் சிற மாற்றம் எற்படுத்தப்பட்டிருக்கிறது.
புத்தகத்தில் – இரண்டு இளைஞர்கள் மீன்பிடிக்க ஒரு ஊரிற்குப் (நெடுந்தீவு) போகிறார்கள்.
திரைப்படத்தில் - இரண்டு இளைஞர்கள் படம் பிடிக்க ஒரு ஊரிற்குப் போகிறார்கள்.
இரு இடத்திலும் இரு பெண்களை மையப்படுத்தித் தான் கதைக் காட்சிகள் நகரும். இரு இடத்திலும் வித்தியாசமான கதாபாத்திரம் ஒன்று சித்தரிக்கப்பட்டிருக்கும். நாவலில் விருத்தாச்சலம் என அழகைகப்படும் அவன் கையில் ஒரு ஈட்டி (வேல்கம்பு) ஒன்றுடன் வருவான். அதே பாத்திரம் திரைப்படத்திலும் சித்தரிக்கப்பட்டிருக்கும். இது மட்டுமல்ல எதிர் மறைப்பாத்திரமாக நாவலில் சித்தரிக்கப்படும் சண்முகம் ஒரு காமுகனாக வருகிறாவான் அவன் திரைப்படத்திலும் அப்படியே தான் வருகிறான். ஆனால் இந்த இயக்குனர் இது எற்கனவே திரைப்படம் ஆக்கப்பட்டதை அறிந்தாரோ தெரியவில்லை. கமலலாயம் மூவிஸ் உரிமையாளரான ஏ.சிவதாசன், பா.சிவசுப்பிரமணியம் ஆகியோர் அதே பெயரில் இதைப்படமாக்கினார்கள் அதன் காட்சிகளைத் தான் இங்குள்ள புகைப்படத்தில் பார்க்கிறீர்கள். அது மட்டுமல்ல இத்திரைப்படம் ஜனாதிபதி விருதும் பெற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. வணக்கத்திற்குரிய ரத்னவம்சதேரோ அவர்களால் இது சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ்த் திரைப்படமொன்றின் பாடல்கள் இசைத்தட்டாக முதலிலேயே வெளிவந்தது என்ற பெருமையைப் பெற்றது, 'வாடைக்காற்று' பாடல்கள்தான்.
'விருத்தாசலம்' (கே. எஸ். பாலச்சந்திரன்) பாத்திரத்தில் நடிப்பதற்கு பிரபல சிங்கள நடிகர் காமினி பொன்சேகாவைத் தான் முதலில் அணுகினார்கள்.
சரி வாங்க புதிரிற்கான முடிச்சை அவிழ்ப்போம். அவரைப்பற்றி அறியாத தமிழனே இருக்க மாட்டான். அவர் இப்படத்தை 1980ல் படமாக்கினார். அப்படத்தின் பெயர் கல்லுக்குள் ஈரம் என்பதாகும். இயக்குனர் வேறுயாருமல்ல நம்ம பாரதிராஜா தான் அந்த இயக்கனராகும். இதை விட இதற்கான அதாரங்களை என்னால் திரட்ட முடியவில்லை தெரிந்தவர்கள் கட்டாயம் செப்புங்கள். இந்தப் பத்தகத்திற்கான மற்றும் அத் திரைப்படத்திற்கான தொடுப்பையும் பெற முடியவில்லை
சரி படிச்சாச்சா விசயம் புதிசா இருக்கா, பிடிச்சிருக்கா அப்புறம் என்ன வாக்குப் போடலாம் தானே...
குறிப்பு – எனது அசின் சம்பந்தப்பட்ட ஆக்கத்தில் சில அனானிகன் (ஒன்றிரண்டு பேர்) எம் தமிழ் நாட்டு உறவைப் பிளவுபடுத்தும் விதமாகவும் ஈழத்தமிழரைக் கேவலமாகவும் எழுதியிருந்தார்கள். (இவ்வளவும் தாங்கிய எங்களால் இதைத் தாங்க மடியாதா..??) அதனால் இதிலும் விசமம் செய்வொரின் கருத்துக்கள் பிரசுரிக்கப்படமாட்டாது. அத்துடன் ஈழத்தமிழரைப் பிச்சை எடுத்துத் தின்பவர் என கருத்திட்ட அவர்களுக்கு ஒரு சொல்லுச் சொல்லணும் “நாங்கள் பிச்சை எடுத்துத் தான் தின்கிறோம் எற்றுக் கொள்கிறேன் அதற்காக உங்களது எச்சில் கையை நக்கமாட்டோம். பட்டினிகிடந்து சாகத் தயாராகவே இருக்கிறோம்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

76 கருத்துகள்:

jagadeesh சொன்னது…

///ஈழத்தமிழரைப் பிச்சை எடுத்துத் தின்பவர் என கருத்திட்ட அவர்களுக்கு..//
என்னைத் தானே கூறியுள்ளீர்கள், நான் அந்த நோக்கத்தில் சொல்லவே இல்லை. jana அவர்கள் இந்தியாவை அநாகரிக முறையில், கருதுரைதிருந்தார், அவருக்கே சொன்னேன். நாங்கள் என்றும் உங்கள் மேல் அன்பு வைத்துள்ளோம். நன்றி.

Unknown சொன்னது…

அறிந்திராத தகவல் ஒன்று பதிவுக்கு நன்றிகள்.

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்,இப்படியே தொடர்ந்தால் 500வது பதிவையும் தொடலாம்....

தோழி சொன்னது…

50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

கவி அழகன் சொன்னது…

வாழ்த்துக்கள் தோடர்கள உங்கள் பணியை
சிறப்பான படைப்பு அருமை

anuthinan சொன்னது…

அண்ணா வாழ்த்துக்கள் முதலில்!!! தங்கள தகவல் சேகரிப்பு அருமை அண்ணா!!

தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள்!!!

Chitra சொன்னது…

அனலாக ஐம்பதாவது பதிவு.... வாழ்த்துக்கள்!

Subankan சொன்னது…

அரைச் சதத்திற்கு வாழ்த்துகள் அண்ணே :)

ம.தி.சுதா சொன்னது…

jagadeesh said...
ஃஃஃஃ///ஈழத்தமிழரைப் பிச்சை எடுத்துத் தின்பவர் என கருத்திட்ட அவர்களுக்கு..//
என்னைத் தானே கூறியுள்ளீர்கள், நான் அந்த நோக்கத்தில் சொல்லவே இல்லை. jana அவர்கள் இந்தியாவை அநாகரிக முறையில், கருதுரைதிருந்தார், அவருக்கே சொன்னேன். நாங்கள் என்றும் உங்கள் மேல் அன்பு வைத்துள்ளோம். நன்றி.ஃஃஃஃஃ
தங்கள் அன்பிற்கு நன்றிகள் சகோதரா.. என்றும் தங்கள் அன்பு தொடரட்டும்... தாங்கள் மட்டும் கருத்திடவில்லை.. கடைசியாக ஒரு அனானி இட்ட கருத்தைப் பார்க்கவில்லையா..??
ஃஃஃஃஃஃஅகதிகளாக தஞ்சமடைந்து இந்தியாவையும் பகைத்து இலங்கையையும் எதிர்த்து சோத்துக்கே அலையும் உங்களுக்கே இவ்வளவு வாய்க்கொழுப்பு இருக்கும் போது உங்களுக்கு புகழிடமும் தந்து நிவாரணமும் அனுப்பி உங்களுக்காக பாராளுமன்றத்தில் பரிந்து பேசிய எங்கள் ஊர்க்காரர்களை என்னவென்று சொல்வது..?
இனியும் செய்திகளில் அனுதாபத்தை சம்பாதித்து பிளைப்பு நடத்த பார்க்கிறீர்கள்.
தீவிரவாதம் ஒழிந்தபிறகும் எதற்காக தமிழ்நாட்டிலேயே ஒட்டிக்கொண்டுள்ளீர்கள்? ஃஃஃஃஃஃ அவ்வளவு வசனமும் மனதை நெருஞ்சி முள் கொண்டு வருடியது..

ம.தி.சுதா சொன்னது…

மகாதேவன்-V.K said...
////50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்,இப்படியே தொடர்ந்தால் 500வது பதிவையும் தொடலாம்....////
நன்றி சகோதரா...

கவி அழகன் சொன்னது…

சத்தியம் என்பது சரித்திர உண்மை
வேள்விகள் செய்வது தமிழனின் கொள்கை
உண்மைகள் ஒரு நாள் சுட்டிடும் போது
தமிழினம் எழுந்து ஆண்டிடும் நாடு
don't worry

ம.தி.சுதா சொன்னது…

தோழி said...
ஃஃஃஃஃ50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..ஃஃஃ
நீண்ட நாளுக்கப் பின்னர் வந்திருக்கிங்க சகோதரி வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள்...

ம.தி.சுதா சொன்னது…

யாதவன் said...
ஃஃஃஃவாழ்த்துக்கள் தோடர்கள உங்கள் பணியை
சிறப்பான படைப்பு அருமைஃஃஃ
நன்றி அண்ணா...

ம.தி.சுதா சொன்னது…

Anuthinan S said...
ஃஃஃஃஃஅண்ணா வாழ்த்துக்கள் முதலில்!!! தங்கள தகவல் சேகரிப்பு அருமை அண்ணா!!
தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள்!!!ஃஃஃஃ
சகோதரா வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள்...

Kiruthigan சொன்னது…

வாழ்த்துக்கள் மதி.சுதா..
எதிர்பார்த்தது போலவே அக்னி பதிவாக வந்திருக்கிறது..
தொடரட்டும் சாதனைப்பயணம்..

எஸ்.கே சொன்னது…

50 பதிவிற்கு வாழ்த்துக்கள்!
கட்டுரை அதிர்ச்சியாகவும் ஆழமாகவும் உள்ளது!

ம.தி.சுதா சொன்னது…

Chitra said...
ஃஃஃஅனலாக ஐம்பதாவது பதிவு.... வாழ்த்துக்கள்!ஃஃஃ
வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள்... அக்கா

ம.தி.சுதா சொன்னது…

Subankan said...
ஃஃஃஅரைச் சதத்திற்கு வாழ்த்துகள் அண்ணே :)ஃஃஃஃ
மிக்க நன்றி ஆலோசகரே....

ம.தி.சுதா சொன்னது…

யாதவன் said...
/////சத்தியம் என்பது சரித்திர உண்மை
வேள்விகள் செய்வது தமிழனின் கொள்கை
உண்மைகள் ஒரு நாள் சுட்டிடும் போது
தமிழினம் எழுந்து ஆண்டிடும் நாடு
don't worry////
நன்றி அண்ணா எமக்கு நிம்மதியான வாழ்வு ஒன்று கிடைத்தாலே போதும்...

jee சொன்னது…

தம்பி 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
மற்றம் நீங்கள் குறிப்பிட்ட குழக்கடா பறவையின் ஆங்கில பெயர் பெலிகன் (Pelican).மற்றும் சுதா கய்கிற மரத்திற்கு தான் கல எறிவழும். அதற்காக உங்கள் பதிவுகளை வேகம் குறைக்க வேண்டாம். மற்றும் மற்றவர்களுக்காக மேலதிக குறிப்புகள் இடுவது தேவையற்றவை என நினைக்கிறேன்.

ம.தி.சுதா சொன்னது…

Cool Boy கிருத்திகன். said...
ஃஃஃஃஃவாழ்த்துக்கள் மதி.சுதா..
எதிர்பார்த்தது போலவே அக்னி பதிவாக வந்திருக்கிறது..
தொடரட்டும் சாதனைப்பயணம்..ஃஃஃஃ
மிக்க நன்றி ஆலோசகரே....

ம.தி.சுதா சொன்னது…

எஸ்.கே said...
ஃஃஃஃஃ50 பதிவிற்கு வாழ்த்துக்கள்!
கட்டுரை அதிர்ச்சியாகவும் ஆழமாகவும் உள்ளது!ஃஃஃஃ
சகோதரா வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள்...

Bavan சொன்னது…

வெல்பிளேயிட் ஹாப் செஞ்சுரி..:)
இன்னும் பலலட்சம் அரைச்சதங்களைக் குவிக்க வாழ்த்துக்கள் அண்ணே..:D

தம்பியின் 50வது பதிவிற்கும் தம்பிக்கும் எனது வாழ்த்துக்கள்....
"""யாருமல்ல என் உடன் பிறந்த சகோதரியாக மாறியிருக்கம் பிரசாந்தி அருள் தாசன் அவர்கள் தான் அது.""" நன்றி தம்பி...

ம.தி.சுதா சொன்னது…

jee said...
////////தம்பி 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
மற்றம் நீங்கள் குறிப்பிட்ட குழக்கடா பறவையின் ஆங்கில பெயர் பெலிகன் (Pelican).மற்றும் சுதா கய்கிற மரத்திற்கு தான் கல எறிவழும். அதற்காக உங்கள் பதிவுகளை வேகம் குறைக்க வேண்டாம். மற்றும் மற்றவர்களுக்காக மேலதிக குறிப்புகள் இடுவது தேவையற்றவை என நினைக்கிறேன்.//////
நன்றி சகோதரா தங்களது உற்சாகத்திற்கும் பாராட்டுக்கு் மற்றும் தகவலுக்கும் மிக்க நன்றி

ம.தி.சுதா சொன்னது…

Bavan said...
ஃஃஃஃஃவெல்பிளேயிட் ஹாப் செஞ்சுரி..:)
இன்னும் பலலட்சம் அரைச்சதங்களைக் குவிக்க வாழ்த்துக்கள் அண்ணே..:Dஃஃஃஃ
மிக்க நன்றி பவன்

ம.தி.சுதா சொன்னது…

பிரஷா said...
ஃஃஃஃதம்பியின் 50வது பதிவிற்கும் தம்பிக்கும் எனது வாழ்த்துக்கள்....
"""யாருமல்ல என் உடன் பிறந்த சகோதரியாக மாறியிருக்கம் பிரசாந்தி அருள் தாசன் அவர்கள் தான் அது.""" நன்றி தம்பி...ஃஃஃஃ
வருகைக்கும் பாரட்டுக்கும் மிக்க நன்றி அக்கா...

Rajasurian சொன்னது…

50வது பதிவிற்கு வாழ்த்துக்கள்

KANA VARO சொன்னது…

Best of luck

KANA VARO சொன்னது…

please sent ur 4n no?
My Email : vsheron@gmail.com

Unknown சொன்னது…

முதலில் அன்புத்தம்பிக்கு 50 பதிவு வாழ்த்துக்கள். அப்புறம். நானும் ஒரு இந்தியத் தமிழன் என்ற ரீதியில் நண்பர் உதயநிதியின் படத்தில் உள்ள அன்பருக்கு..
நண்பா..ஜனா எழுதிய பின்னூட்டத்தில் அநாகரிகம் தெரியவில்லை. அதுவே உண்மை!
இந்தியா அவர்கள் நிலத்தில் செய்த வினைகள் அப்படி. அதையும்நாம் ஏற்கத்hன் வேண்டும்.
ஆனால் அதற்கு பதிலாக தாங்கள் எழுதிய பதில்தான் மிக அநாகரிகமானது.

இந்தத் தொப்புள் கொடி உறவு நஞ்சுக் கொடி உறவெல்லாம் பேசுவதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருக்கும் ஆனால் ஒரு போதும் இந்தியர்கள், அவர்கள் தமிழர்களாக இருப்பினும், இலங்கையர்களை தம்மவர்களாகப் பார்க்கப்போவதில்லை. என்னதான் உறவு பேசினாலும், உள்ளுக்குள் ஒரு வேற்றுமை இருந்துகொண்டுதான் இருக்கும், அதன் வெளிப்பாடுதான் அந்த வார்த்தைகள்.

நாம் இலங்கையர்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இலங்கை என்ற தேசம் எமக்கும் உரித்துடையது என்பதை மறந்துவிடக்கூடாது. காலைப்பிடித்துக்கொண்டிருக்கும் வரை தான் அவர்களது ஆதரவு வார்த்தைகள் கொஞ்சம் நாம் உண்மையை உரத்துப் பேசினால் உள்ளத்து உண்மைகள் உதிரப்பட்டுவிடும். உலகம் எல்லா விதமான மனிதர்களையும் கொண்டுள்ளது, ஆத்மார்த்தமாக இலங்கையில் துன்புறும் மக்களுக்காகக் கண்ணீர் வடிப்போரை நான் அவமதிக்கவில்லை என்பதறிக ஆனால் சாதாரண மனிதனுக்கு இருக்கக்கூடிய உணர்வினைத் தான் இங்கு குறிப்பிடுகிறேன்.

தமிழன் - மொழி மட்டுமே எங்களை இணைக்கிறது, மற்றதெல்லாம் எங்களைப் பிரிக்கிறது. மொழியினால் எவ்வளவு தூரத்திற்கு எமது உறவைப் பலமானதாக்கி வைத்திருக்க முடியும்?

jagadeesh சொன்னது…

to என்.கே.அஷோக்பரன்:
ஒரு நாட்டில் போய் இன்னொரு நாடு, ஒரு எல்லை வரையில் தான் உதவ முடியும். உதவக் கூடாது என்கிற மனநிலை ஒரு போதும் இருந்தது கிடையாது. அதற்கு மேல் தாண்டி செய்ய வேண்டுமானால், இரு நாட்டின் உறவில் சுமூகம் இருக்காது. மற்ற நாடுகளின் எதிர்ப்பையும் சம்பாதிக்க வேண்டியிருக்கும். போருக்கு வழி வகுக்கும். அதற்காக, அநியாயத்தை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். உலக நாடுகள் முதல் கொண்டு, எல்லாரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
உங்கள் அரசியலில் முதலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். எதுவாயினும் அறவழியில் போராடுங்கள். எல்லாமே மாறிக் கொண்டு தான் வருகிறது.
எமக்கு தமிழர்களும், சிங்களர்களும் ஒருவரே.

@jagdeesh
//எமக்கு தமிழர்களும், சிங்களர்களும் ஒருவரே.//

உண்மைதான். நானும் அதைத்தான் சொல்கிறேன், எங்கள் பிரச்சினையை நாங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆயிரம் தான் இருந்தாலும் நாங்கள் இலங்கையர்கள். நான் ஒரு போதும் தமிழர்களுக்கு இந்தியாதான் தஞ்சம் என்ற மனநிலையைக்கொண்டதில்லை.

இந்திய அமைதிப்படை இங்கு வரைமல் இருந்திருந்தால் எத்தனையோ அப்பாவி உயிர்கள் துன்புற்றிருக்காது... இனியும் இலங்கைத் தமிழர்கள் இந்தியாவை எண்ணிக் எதிர்பார்த்திருக்கக்கூடாது, after all India is another nation.

roshaniee சொன்னது…

50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

congrats for the 50th post...

continue ur good work

அறியாத தகவல்...
50க்கு வாழ்த்துக்கள்... தொடரட்டும்.
அசின் குறித்த உங்கள் பதிவுக்கு வந்த சில பின்னூட்டங்கள் உங்களுக்கு வருத்தமளித்ததற்கும் வருந்துகிறேன்.

டிலான் சொன்னது…

வாழ்த்துக்கள் மதிசுதா. வேலைகள் தலைக்குமேலே போனதால் இணையப்பக்கம் வரவில்லை. வந்துபார்த்தா நீங்கள் 50 போட்டுவிட்டீங்கள் வாழ்த்துக்கள்.
உங்கை என்ன ஒருத்தவர் வந்து அறம் கதைத்துக்கொண்டு ஜனா அண்ணாவுடனும், தம்பி அசோக்பரனுடனும் மல்லு கட்டுரார்போல!
சுப்பிரமணியன்சுவாமிகள் வரைப்பதிவிலும் வலம் வரீனம்போலதான் கிடக்கு.
ஐயா துரை. அநாகரிகம் என்றால் உதயநிதியின் படத்தை போட்டு நீங்கள் பிதத்திறியள்பாருங்கோ அதுதான் முதல் அநாகரிகம்.
நீங்கள் வந்து எங்களுக்கு பாடம் நடத்ததேவை கிடையாது பாருங்கோ. இப்படி உங்கட வடக்கு விசுவாசங்களை தமிழ்நாட்டில் மட்டும் காட்டுங்கோ இங்க புகுந்து மூக்குடைபடவேண்டாம்.
இன்னொரு நாட்டு விடயத்தில் தலையிடக்கூடாதுதான், ஆனால் இன்னொரு நாட்டை பிடித்து எங்கட என்று சொந்தம் கொண்டாடலாம். நாகலாந்து, காஸ்மிர் விவகாரம் எல்லாம் அறியாத மடயர்கள் நாங்கள் அல்ல. முதல்ல உங்கட முதுகை சுத்தம் பண்ணுங்கோ பிறகு மற்றவர்களை பற்றி பேசலாம்.
அது சரி துரை வடக்கர்களை பேசினா உங்களுக்கு ஏன் சுர் என்கிறது. அப்ப 1987களில நிங்க எங்களுக்கு பண்ணின அநீதிகள் இறுதிவரை பண்ணின வேலைகளுக்கு எங்களுக்கு எவ்வளவு சுர் என்று வரவேண்டும்?
பேசுவதாக இருந்தால் அனைத்துவிடயங்களும் வரலாறும் தெரிந்து பேசும். சும்மா உம்மட கருடபுராண புலுடா எல்லாம் இங்க வேண்டாம்.

ஷஹன்ஷா சொன்னது…

50வது பதிவிற்கு எனது வாழ்துகள்.....
இதுவே என் பதிவில் இருந்து நான் அனுப்பும் முதல் கருத்து.....

சமுத்திரன் சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
எப்பூடி.. சொன்னது…

ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

// jagadeesh said..
எமக்கு தமிழர்களும், சிங்களர்களும் ஒருவரே//

எப்படி பட்ட சுய நலக்காரர்களாக இருப்பீர்கள் நீங்கள். இந்த உங்களின் வரியே போதும். நான் விளக்கம் தந்து நேரத்தை வீணடிக்கவில்லை. கருணாநிதி என்ற நடிகனின் ஆட்சியின் கீழ் வாழபவர்கலல்லவா நீங்கள்.

@ சமுத்திரன்

உங்கள் ஆதங்கத்தை முழுமையாக என்னால் உணர முடிகிறது. ஆனால் ஜக்தீஷை த் திட்டி என்ன பயன்? சாதரண மனித சுபாவத்தின் வெளிப்பாடு அது. நான், எனது நாடு வாழ்ந்தால் போதும், அந்நியனைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும், அவனுக்காக நான் ஏன் கத்தி என்னை வருத்தவேண்டும்?

ஆயிரந்தான் இருந்தாலும், இலங்கைத் தமிழர்களை உங்களைப் போன்ற நல்லவர்கள் உடன்பிறப்புக்களாக எண்ணினாலும், நாம் இந்தியர்களாகப் போவதில்லை. இந்த சமுதாய வட்டத்துக்குள் நாம் அந்நியர்களாகத் தான் பார்க்கப்படப்போகிறோம்.

எங்கள் பிரச்சினைகளுக்காக நாங்கள் மற்றவர்களை நம்பிக்கொண்டிருக்காமல் இனியாவது நாம் நாமாக “இலங்கையர்களாக” இருக்கப்பழகிக்கொள்ள வேண்டும்!

jagadeesh சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
jagadeesh சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Free computer tips சொன்னது…

Congratulation for your 50th Post.

http://freecomputertipsnet.blogspot.com/

Riyas சொன்னது…

50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து கலக்குங்கள்..

பெயரில்லா சொன்னது…

அய்கோ, இலங்கை தமிழர்களுக்கு யாரும் எதுவும் செய்ய தேவையில்லை, நாங்கள் சிங்கங்கள், பிரபாகரன் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார் என்று
கதைதுக்க் கொண்டிருக்கிற இலங்கை தமிழர்களே! அப்புறம் எதுக்குடா, மத்த நாட்டுல பிச்ச கேக்குறீங்க. உங்களைத் தா ஓடி ஓடி அடிகரான்களே. ஹ ஹ ஹ!
நாலு குண்டு போட்ட தாங்க மாடீங்க. உங்களுக்கு ஏண்டா இந்த வீராப்பு. போங்க, போயி யாரும் குண்டு போடாத இடமா போயி பம்முங்க. கண்ட எடத்துல சுட்டுற போறானுக.

Unknown சொன்னது…

wish you all the best.. carry on

மொஹமட் ஹனீப் சொன்னது…

இலங்கையில் பௌத்தம் அநுராதபுரத்தில் தேவநம்பிய தீசன் காலத்தில் தான் தோற்றம் பெற்றது. தேவநம்பிய தீசன் பௌத்த மதத்தை தழுவும் முன்னர், அவன் ஒரு சைவனாகவும் தமிழனாகவும் இருந்தவன்.

அவன் மட்டுமல்ல அந்நாளில் அநுராதபுரத்தில் வாழ்ந்த மக்கள் 100% வீதமானோரும் தமிழர்கள் தான். (300 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியரின் ஆட்சியின் போது அநுராதபுரத்தில் தமிழர்களே வாழ்ந்துள்ளனர் என்பதற்கு, தற்போது பிரித்தானிய ஆவணக் காப்பகங்களில் கிடக்கும் காணிப்பதிவுகள், பிறப்புச்சாட்சிப் பத்திரங்கள் போன்ற மூலாவணங்கள் உறுதிச்செய்கின்றன.) அவர்கள் தான் பௌத்தர்களாக மதம் மாறியவர்கள்.

அந்தப் பௌத்த மக்களில் இருந்து தோற்றம் பெற்ற பௌத்த துறவிகள் தான் "மகாவம்சம்" எனும் நூலை, பௌத்தம் மதத்தை போற்றும் நூலாகவும், இலங்கை பௌத்தர்களின் நாடு என்றும் எழுதி வைத்தவர்கள்.

பார்க்கப்போனால் தமிழருக்கு எதிரான வரலாற்று நூலை எழுதி வைத்தவர்களும் தமிழர்கள் தான். தமிழ், பாளி மற்றும் பிற மொழிகளையும் கலந்து "சிங்களம்" எனும் மொழியை அநுராதபுரத்தில் உருவாக்கியவர்களும் தமிழர்கள் தான்.

மொஹமட் ஹனீப் சொன்னது…

நாம் எப்போதும் தமிழர் தரப்பு நியாயத்தை மட்டுமே பார்த்து வருகிறோம். ஆனால் தமிழரின் பிழைகளும் நிறையவே உள்ளன.

தமிழனிடம் ஒற்றுமை இன்மை மட்டுமல்ல. எப்பவும் (Superlative) தன்னை மிஞ்சியோர் எவரும் இல்லை எனும் நோக்கில், எப்போதும் அடுத்த இனத்தை தரம் தாழ்த்தியே பழக்கப்பட்ட இனமாகவே காணப்படுகின்றான்.

குறிப்பாக இலங்கை தமிழரிடம் பேச்சு வழக்கில் இன்றும் காணப்படும் ஒரு வாக்கியம் "மோட்டுச் சிங்களவன்" அதாவது அறிவற்றச் சிங்களவன் என்பதே அதன் பொருள். அதாவது இவ்வாக்கியம் எந்தளவுக்கு சிங்களவனை பாதித்தது என்றால், சிங்களவனே "சிங்களயா மோடயா கெவுங் கண்ட வீரயா" என்று கூறிக்கொள்ளும் அளவிற்குச் சென்றது. (சிங்களவன் மோடயன், பணியாரம் சாப்பிடுவதில் வீரன்)

இலங்கை வரலாறு ஏன் சிங்களவர்களுக்கு சார்பானதாக இருக்கிறது என்ற எண்ணம் உங்களுக்கு எழலாம். இலங்கையை ஆண்ட அரசர்கள் அநுராதப்புரத்தையும், மயிங்கானை பிரதேசத்தையுமே அதிகமாக தலைநகராகக் கொண்ட ஆட்சி செய்துள்ளனர். அதாவது இல்ங்கையின் வடமத்தியப் பகுதிகளில். அந்தப் பகுதிகள் அக்கால ஆட்சிகளின் போது செழுப்புற்றிருந்த பகுதிகளாகவே இருந்துள்ளன. அப்பகுதி மக்களே பௌத்தர்களாக மாறியவர்கள். பௌத்தம் சார்ந்து இலங்கை வரலாற்றை குறித்து வைத்தவர்கள்.

இவை இப்படியிருக்க, இலங்கையில் வடக்கிழக்கு மட்டுமன்றி வடமேற்கு, வடமத்திய பகுதிகள் எங்கும் தமிழர்கள் பரந்து வாழ்ந்தப்போதும், தமிழர் வரலாறாக யாழ்ப்பாண இராச்சியம் என்றும் யாழ்ப்பாணக் குடா நாடு என்றும் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே தமிழர் வரலாறாக எவ்வித ஆய்வுகளும் இன்றி எழுதிவைக்கப்பட்டது. இதற்கான காரணம்...?

காரணம் என்னவென்று சிந்தித்தால், தமிழர்களாக இருந்து பௌத்தர்களாக மாறியவர்களின் மீது கடும் போக்கை, சைவர்களாக இருந்த தமிழர்கள் கொண்டிருந்திருக்கலாம் என்பதை தற்போதைய நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்தி உணர்ந்துக்கொள்ளலாம். பௌத்தர்களாக மாறியோரையெல்லாம் தமிழரல்ல என ஒதுக்கி புறம்தள்ளிய நிலைப்பாட்டை சைவத் தமிழர்கள் கொண்டிருந்தனரோ என்னவோ!

ஆனால் சிங்களவரிடம் இன்றும் சைவம் சார்ந்த இறைவழிப்பாட்டு முறை அவர்களிடம் இருக்கத்தான் செய்கிறது. இதனை தமிழர்கள் சொல்வதில்லை. இன்னும் சொல்லப்போனால் சாதிய அடிப்படையில் தாழ்ந்தவர்களாக தமிழர்களை தமிழர்களே ஒதுக்கியதைப் போன்று, பௌத்தர்களாக மாறிய தமிழர்களையும் சைவக்கோயில்கள் ஒதுக்கியிருக்க நிறையவே வாய்புள்ளது.

இன்று பௌத்தம் பரவிய நாடுகளான சீனாவுக்கோ, ஜப்பானுக்கோ சென்று பாருங்கள், அங்கே அவர்களது தொன்மையான தெய்வங்களுடன் புத்தர் சிலையையும் வைத்து வழிப்படுவார்கள். அதேப்போன்றே இலங்கையில் எந்த பௌத்த விகாரைக்கு சென்றாலும் அங்கே அனைத்து இந்து கடவுள்களும் இருப்பர். பௌத்த பிக்குகள் இந்து கடவுள்களுக்கு பூசை செய்வதையோ, வழிப்படுவதையோ விரும்பாதப் போதும், சிங்கள மக்கள் தொடர்ந்து பூசைகள் செய்து தான் வருகின்றனர்.

இந்து கோயில்கள் எங்கெங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் சென்று அவர்களும் வழிப்பாடுகளில் கலந்தே கொள்வர். ஆனால் தமிழர்கள் 99% வீதமானோர் எந்த பௌத்த விகாரைகளுக்கும் செல்வதில்லை. இலங்கையில் தான் இப்படி என்றால் நான் சென்ற சில வெளிநாடுகளிலும் இந்து கோயில்களை தேடிச்சென்று வழிப்படும் சிங்களவர்களை இன்றும் காணக்கூடியதாகவே உள்ளது.

மொஹமட் ஹனீப் சொன்னது…

தமிழ்மன்றம் குழுமத்தில் இந்தத் திரியையில் வாசித்துப்பாருங்கள் சில விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன.

http://groups.google.com/group/tamilmanram/browse_thread/thread/643d605955cf5c12?hl=ta

பஸ்பன் சொன்னது…

இலங்கையில் வாழ்பவர்கள் இலங்கையர்களே! அவர்கள் இயக்கர் நாகர் இனத்தின் வழிமரபினர்களே ஆகும். தென்னிந்தியர்கள் இலங்கையின் மீது மேற்கொண்ட படையெடுப்புகளாலும், தொடர்புகளாலும் தமிழ் பேசும் மக்களாக மாறியவர்கள் அல்லது மாற்றப்பற்றவர்களே இலங்கைத் தமிழர்கள்.

தென்னிந்திய படையெடுப்புகளுக்கு, அதாவது அந்நியரின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக இருந்த இயக்கர்களும் நாகர்களும் தமக்கென உருவாக்கிக்கொண்ட மொழி தான் சிங்களம். தென்னிந்திய தமிழ் ஆக்கிரமிப்பு அரசுக்கு துணைப்போனவர்களாக இருந்தவர்களே இன்று இலங்கை தமிழராக இனங்காணப்படுகின்றனர்.

கூட்டி கழித்துப் பார்த்தால் நாங்கள் தமிழர்களே அல்ல. தென்னிந்த தமிழ் ஆதிக்கர்களுக்கு துணைப்போனதால் பிரிந்து போய்கிடக்கும் ஓரினம். காலம் விரைவில் எங்களை ஒருங்கிணைக்கும். தென்னிந்திய அரசியல் கோமாளிகளை ஒதுக்கி புறம்தள்ளும் காலம் தொலைவில் இல்லை.

முதலில் 50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.எப்படித்தான் இப்படி எல்லாம் கண்டு பிடிக்கறீங்களோ?வெரி ஸ்மார்ட்

karthikkumar சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பா தொடரட்டும் உங்கள் எழுத்துக்கள்

பஸ்பன் சொன்னது…

-என்.கே.அஷோக்பரன்

//தமிழன் - மொழி மட்டுமே எங்களை இணைக்கிறது, மற்றதெல்லாம் எங்களைப் பிரிக்கிறது.//

ஆம்! மொழி மட்டும் தான் இணைக்கிறது. மற்றைய அனைத்து குணயியல்புகளும் வேறுப்பட்டெ உள்ளன. குஸ்புவுக்கு கோயில்கட்டுவது முதல் அரசியல் கோமாளிக் கூத்துவரை வட இந்தியர்களாக இருக்கட்டும், தென்னிந்தியர்களாக இருக்கட்டும் இவர்களுடன் நாம் எந்த வகையிலும் ஒருமைப்பாடு கொண்டவர்கள் இல்லை. வேண்டுமானால் இன்றிலிருந்து சற்று ஆழமாக அவதானித்துப்பாருங்கள் எமக்கும் சிங்களவருக்கும் பல குணயியல்புகள் பொருந்தியே வருகின்றன. அதேப்போல் தொண்டமான் முதல் ஆறுமுகம் தொண்டமான் வரை தென்னிந்திய வம்சாவளி தமிழர்களுக்கும் தென்னிந்தியர்களுக்கும் இருக்கும் ஒற்றுமையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அவர்களுடையேயான குணயியல்புகள் ஒருமித்தமானதாக இருக்கும். எமது குணயியல்புகளில் இருந்து முற்றும் வேறுப்பட்டவர்களாக இருக்கும். முடிந்தால் அநுராதப்புரம் மையிங்கனை வாழ் சிங்களவர்களோடு சற்று நெருங்கிப் பழகிப்பாருங்கள் ஒரு ஆய்வுக்காக...

அன்புடன் பஸ்பன்

பஸ்பன் சொன்னது…

-என்.கே.அஷோக்பரன்

//எங்கள் பிரச்சினைகளுக்காக நாங்கள் மற்றவர்களை நம்பிக்கொண்டிருக்காமல் இனியாவது நாம் நாமாக “இலங்கையர்களாக” இருக்கப்பழகிக்கொள்ள வேண்டும்!//

உண்மைதான் குறிப்பாக யாழ்ப்பாண மேலத்திக்கத்தினர் எப்போதும் தென்னிந்தியாவுடன் கொண்டிருந்த நெருக்கத்தின் விளைவாலும், நாமும் தென்னிந்தியர்களின் ஒரு பிரிவினர் எனும் கற்பிதங்களுமே எப்பொழுதும் எம்மை தென்னிந்தியத் தமிழருடன் தொடர்பு படுத்தி பார்க்க வைக்கிறது. உண்மையை சற்று உன்னிப்பாக சிந்தித்துப்பார்த்தால் வடயிந்தியனுடனும் தென்னிந்தியனுடனும் வைத்திருந்த உறவுகளின் விளைவுகளால் தான் இன்று இலங்கையின் ஒரே மக்கள் (இயக்கர் நாகர் வழிமரபினர்) பிளவு பட்டு அடிப்பட்டுக்கொள்கின்றோம்.

இந்த வரலாற்று துரோக நரிகளுக்கு நாம் ஒன்றினைந்து, சீனாவுடனான உறவுகளுடன் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.

பஸ்பன்

பி.கு:
கேள்விகள் தொடர்ந்தால் பதில்கள் தர தயாராக உள்ளேன்.

பஸ்பன் சொன்னது…

இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் சாதிகளின் பெயரில் வாக்கு கேட்போரும், சேலை வேட்டி வழங்கினால் வாக்களிக்கும் அற்ப பதர்கள் இலங்கையில் இல்லை எனப் பெறுமை கொள்வோமாக!

இந்தியா இலங்கையில் விதைத்துச்சென்ற சாதிய வேறுப்பாடுகள் 99 வீதம் சிங்கள மொழி பேசும் இலங்கையர்களிடம் கலைந்து எறியப்பட்டுவிட்டன. தமிழ் பேசும் இலங்கையரிடம் இருந்தும் கலைந்தெறியும் செயல்பாடுகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.

LEROCIYAN சொன்னது…

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை
வாழ்த்துக்கள்
உங்கள் குறிப்பில் உள்ள விடயம் ரொம்பவே மனச தொட்டது
அசினுக்கு வால் பிடித்த கழுதை ஒழியட்டும்.

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

jagadeesh சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
sinmajan சொன்னது…

தங்கள் அரைச்சதத்திற்குவாழ்த்துக்கள்..
noolaham.org ல் தேடிப் பாருங்கள்.சில சமயம் செங்கைஆழியானின் அந்த நூல் கிடைக்கலாம்.

பஸ்பன் சொன்னது…

-jagadeesh

உமது கேள்விகள் உமது அடிப்படையறிவின் தரத்தைக் காட்டுகிறது. இந்தியா எனும் எல்லையை கடக்காத கிணற்றுத் தவளை என்பதை உணரக்கூடியதாக உள்ளது. ஒருவரிடம் பேசுவதற்கு சில அடிப்படை தகமைகள் உள. உமது ஊரின் BA பட்டதாரிக்களுக்கு எம்மூர் 8 வயது சிறுவனே பதிலளிப்பான். வேறுயாராவது உமது சார்பில் பேசுவதற்கான திறமைசாளிகள் இருந்தால் அழைத்து வாரும்.

Jana சொன்னது…

சிங்கிள் ரன்னாக அல்லாமல், பவுண்டரிகள், சிக்ஸர்கள் என பெறப்பட்ட 50 உங்கள் பதிவுகள். வாழ்த்துக்கள்.
அடுத்து முக்கியமான விடயம் என்னவென்றால், நான் பெருமதிப்புக்குரிய குணராஜா அவர்களின் மாணவன் என்பதில் பெருமை அடைகின்றேன். எனது உயர்தரக்கல்வியில் மட்டும் அன்றி, பல தடவைகளில் அவரிடமிருந்து வாழ்வியலையே கற்றுக்கொண்டுள்ளேன் என்பதே உண்மை. அதேவேளை இயக்குனர் இமயம் பாரதிராஜா மீதும் எனக்கு மிகப்பெரும் மதிப்பும், மரியாதையும் உண்டு. சர்ச்சைகள் வழமையானவைதானே! சிலவற்றை பெருது பண்ணக்கூடாது என்பதே என் விருப்பம்.

செல்வா சொன்னது…

ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பா ..!!
இப்படிஎல்லாமா படம் எடுக்குறாங்க ..?

Ashwin-WIN சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பா. விரைவில் அரைச்சதத்தில் ஒரு அரைச்சதம் அடிக்க..

Unknown சொன்னது…

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் மதி...தொடர்ந்து சாதிக்கவும்

அன்பரசன் சொன்னது…

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...

அருண் சொன்னது…

@பஸ்பன்
உங்க பதிலில் இருந்து ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது,இலங்கை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் ஒற்றுமை இருக்கு,இந்திய வம்சாவளி தமிழனுக்கும் தென்னிந்திய மக்களுக்கும் ஒற்றுமை இருக்கு,[தொண்டமான் அவர்கள் உட்பட].இப்பிடி ஒற்றுமை இருந்தா ஏன் முப்பது வருஷமா சண்டை போட்டிங்க,அதுனால மலையக இளைஞர்களும் கைது செய்யப்பட்டு சித்ரவதை அனுபவித்தார்களே?
எங்க அம்மாவினுடைய அம்மா வழி சொந்தமெல்லாம் இன்னு திருச்சில சந்தோஷமா வாழ்த்துக்கிட்டு இருக்காங்க,நாங்களும் அவங்கள விட்டு கொடுக்க மனசு இல்லாம வாழ்ரவுங்க தான்.எங்க பாஷையில இன்னும் மதுரை,திருச்சி,புதுக்கோட்டை வாசம் வீசும்.அது மட்டுமில்லாம யுத்தம் நடந்த நேரங்களில் அனைத்தையும் விட்டு விட்டு கைக்குழந்தையோட மலையகத்துக்கு ஓடி வந்தப்போ நாங்க உங்களை வெறுக்கலையே,இன்னும் நல்லாதானே வாழறாங்க.ஏன்னா நாங்க வந்தாரை வாழவைக்கும் பூமியில இருந்து வந்தவுங்க,எங்களுக்கும் அவருதான் தலைவரு,சுதந்திரத்தை வாங்கி கொடுப்பாருன்னு காத்துகிட்டு இருந்தோம் பாருங்க,எங்கள சொல்லணும்.கடைசியில நிறைய இலங்கை தமிழர்கள் சொல்ற மாதிரி எங்கள வேறுபடுத்தி குத்திகாட்டிடிங்க பாருங்க.ரொம்ப சந்தோசம்,நீங்க இனிமேல் சிங்களவர்களுடன் ஒற்றுமையா இருந்து எல்லா வளமும் பெற்று வாழனும்.[முடிஞ்சா அவங்ககிட்ட பேசி எங்கள மறுபடியும் தென்னிந்தியாவுக்கே அனுப்பிருங்க]

பஸ்பன் சொன்னது…

-அருண் நண்பரே!

//உங்க பதிலில் இருந்து ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது,இலங்கை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் ஒற்றுமை இருக்கு//

இப்படி நான் கூறியதாக மட்டும் கருதிவிடாதிர்கள். நீங்களே ஒரு ஆய்வு செய்து பாருங்கள் பல குணயியல்புகள் பொறுந்திவருகின்றன. இதோ இந்த சிங்களத் திரைப்படத்தைப் பாருங்கள். அதுவும் நான் சொன்னதை பிரதிபலிக்கும். http://www.lankawe.com/movies/Pura_Handa_Kaluwara.html

பஸ்பன் சொன்னது…

//இந்திய வம்சாவளி தமிழனுக்கும் தென்னிந்திய மக்களுக்கும் ஒற்றுமை இருக்கு,[தொண்டமான் அவர்கள் உட்பட].//

இருப்பினும் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர் எவறையும் நோகடிக்கும் நோக்குடன் எழுதப்பட்டதல்ல. இவ்வொற்றுமை எல்லோரும் அறிந்ததுதான்.

//[முடிஞ்சா அவங்ககிட்ட பேசி எங்கள மறுபடியும் தென்னிந்தியாவுக்கே அனுப்பிருங்க]//

இவ்வாக்கியத்தை நீங்கள் என்னமாதிரியான மனநிலையில் இருந்து எழுதியுள்ளீர்கள் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது. உண்மையில் 350 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயரின் ஆதிக்கக் காலத்தில் தென்னிந்தியாவில் இருந்து பெருந்தோட்டப் பயிர் செய்கைக்காக இலங்கை, மலேசியா, பீஜி தீவுகள், ஆப்பிரிக்கா என பலநாடுகளுக்கும் தென்னிந்திய தமிழ் மற்றும் மலையாள மக்களை ஆங்கிலேயன் அழைத்துச்சென்று போதிய உணவு, உடை, வசதியான இருப்பிடம், நியாயமான ஊதியம் எதுவுமே இன்றி அடிமைத் தொழில்களில் ஈடுப்படுத்தினான். அவ்வாறே தென்னிந்தியத் தமிழர்களின் (இந்திய வம்சாவளி தமிழர்) வருகை அமைந்தது. உண்மையில் ஆங்கிலேயரின் ஆட்சியில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள் தான். ஆனால் இந்தியா சுதந்திரம் அடைந்த மறு நிமிடமே, இந்தியாவில் இருந்து அழைத்துச்செல்லப்பட்ட தென்னிந்தியரின் நலன் பற்றியோ, அவர்களை ஆங்கிலேயன் அழைத்துச்சென்ற நாடுகளில் இருந்து மீண்டும் மீற்பது பற்றியோ இந்திய அரசாங்கமோ, இந்திய மக்களோ இதுவரை எவ்வித அக்கரையும் கொள்ளவில்லை என்பதையே நீங்கள் சிந்தித்துணர வேண்டும்.

ஆனால் இன்றும் மலையகத்தில் வாழும் மக்கள் இந்தியா மீது பற்றுக்கொண்டவர்களாகவே இருப்பதை நாம் அறிவோம்.

அதேவேளை இலங்கை அழைத்து வரும் போது இந்தியாவில் இவர்களுக்கு சொந்தமான நிலம், வீடு, கால்நடைகள் போன்ற வசதிகள் உள்ளவர்களாகவே இருந்துள்ளனர் என்பதனையும் நாம் அறிவோம். ஆனால் இலங்கை வந்த இவர்கள் ஆங்கிலேயானாலும் அதன் பின்னரான சிங்கள ஆட்சியாளர்களாலும் தொடர்ந்து ஒரு அடிமை வர்க்கமாக மாற்றப்பட்டுவிட்டனர். (தற்போது வளரும் சமுதாயம் பல வளர்ச்சிப்படிகளை எட்டி வருவது வேறுவிடயம்) ஆனால் இந்த நிலையை மாற்ற வேண்டியவர்களான தொண்டமான் முதல் ஆறுமுகம் தொண்டமான் வரை மலையக அரசியலாளர்களே இதற்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள். தென்னிந்திய அரசியலாளர்கள் போலவே இலங்கை அரசாங்கத்துடன் பேரம் பேசலூடாக தமது சுய வருமானத்தைப் பெறுக்கிக்கொள்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டனர். ஆளும் தரப்பு எதுவானாலும் அதனுடன் இணைந்து கொள்வர். இவற்றை மாற்றிட மலையகத் தமிழர் விழிப்படைய வேண்டும்.

பஸ்பன் சொன்னது…

//இந்திய வம்சாவளி தமிழனுக்கும் தென்னிந்திய மக்களுக்கும் ஒற்றுமை இருக்கு,[தொண்டமான் அவர்கள் உட்பட].//

இருப்பினும் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர் எவறையும் நோகடிக்கும் நோக்குடன் எழுதப்பட்டதல்ல. இவ்வொற்றுமை எல்லோரும் அறிந்ததுதான்.

//[முடிஞ்சா அவங்ககிட்ட பேசி எங்கள மறுபடியும் தென்னிந்தியாவுக்கே அனுப்பிருங்க]//

இவ்வாக்கியத்தை நீங்கள் என்னமாதிரியான மனநிலையில் இருந்து எழுதியுள்ளீர்கள் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது. உண்மையில் 350 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயரின் ஆதிக்கக் காலத்தில் தென்னிந்தியாவில் இருந்து பெருந்தோட்டப் பயிர் செய்கைக்காக இலங்கை, மலேசியா, பீஜி தீவுகள், ஆப்பிரிக்கா என பலநாடுகளுக்கும் தென்னிந்திய தமிழ் மற்றும் மலையாள மக்களை ஆங்கிலேயன் அழைத்துச்சென்று போதிய உணவு, உடை, வசதியான இருப்பிடம், நியாயமான ஊதியம் எதுவுமே இன்றி அடிமைத் தொழில்களில் ஈடுப்படுத்தினான். அவ்வாறே தென்னிந்தியத் தமிழர்களின் (இந்திய வம்சாவளி தமிழர்) வருகை அமைந்தது. உண்மையில் ஆங்கிலேயரின் ஆட்சியில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள் தான். ஆனால் இந்தியா சுதந்திரம் அடைந்த மறு நிமிடமே, இந்தியாவில் இருந்து அழைத்துச்செல்லப்பட்ட தென்னிந்தியரின் நலன் பற்றியோ, அவர்களை ஆங்கிலேயன் அழைத்துச்சென்ற நாடுகளில் இருந்து மீண்டும் மீற்பது பற்றியோ இந்திய அரசாங்கமோ, இந்திய மக்களோ இதுவரை எவ்வித அக்கரையும் கொள்ளவில்லை என்பதையே நீங்கள் சிந்தித்துணர வேண்டும்.

ஆனால் இன்றும் மலையகத்தில் வாழும் மக்கள் இந்தியா மீது பற்றுக்கொண்டவர்களாகவே இருப்பதை நாம் அறிவோம்.

அதேவேளை இலங்கை அழைத்து வரும் போது இந்தியாவில் இவர்களுக்கு சொந்தமான நிலம், வீடு, கால்நடைகள் போன்ற வசதிகள் உள்ளவர்களாகவே இருந்துள்ளனர் என்பதனையும் நாம் அறிவோம். ஆனால் இலங்கை வந்த இவர்கள் ஆங்கிலேயானாலும் அதன் பின்னரான சிங்கள ஆட்சியாளர்களாலும் தொடர்ந்து ஒரு அடிமை வர்க்கமாக மாற்றப்பட்டுவிட்டனர். (தற்போது வளரும் சமுதாயம் பல வளர்ச்சிப்படிகளை எட்டி வருவது வேறுவிடயம்) ஆனால் இந்த நிலையை மாற்ற வேண்டியவர்களான தொண்டமான் முதல் ஆறுமுகம் தொண்டமான் வரை மலையக அரசியலாளர்களே இதற்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள். தென்னிந்திய அரசியலாளர்கள் போலவே இலங்கை அரசாங்கத்துடன் பேரம் பேசலூடாக தமது சுய வருமானத்தைப் பெறுக்கிக்கொள்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டனர். ஆளும் தரப்பு எதுவானாலும் அதனுடன் இணைந்து கொள்வர். இவற்றை மாற்றிட மலையகத் தமிழர் விழிப்படைய வேண்டும்.

பஸ்பன் சொன்னது…

//இப்பிடி ஒற்றுமை இருந்தா ஏன் முப்பது வருஷமா சண்டை போட்டிங்க,//

30 வருடமாக அல்ல. கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளாக சண்டை உள்ளது. இன்று தமிழ் சிங்களம் என இரண்டு இனங்களுக்கு இடையிலான முரண்பாடாக தோற்றம் பெற்றிருப்பவை, பௌத்தம் இலங்கைக்கு அறிமுகமான காலங்களில் இருந்தே, சைவர்களுக்கும் பௌத்தர்களுக்குமான முரண்பாடுகளில் இருந்து தோற்றம் பெற்றவை. இன்று யாழ்ப்பாணத்தில் காணப்படும் நாகவிகாரை, கந்தரோடை பௌத்த தூபிகள் போன்றனவும் ஆரம்பக் காலங்களில் தமிழ் பேசிய பௌத்தர்களால் கட்டப்பட்டவை. இத்தமிழ் பேசிய பௌத்தர்கள் என்ன ஆனார்கள்?
இவர்கள் தமிழ் பேசிய சைவர்களால் புறந்தள்ளப் பட்டு, பௌத்தர்களாக மாறியோருடன் (இயக்கர், நாகர்) இணைந்து சிங்களம் பேசுபவர்களாக மாறிவிட்டனர்.

பின்னாளில் தென்னிந்திய சமய, மொழி உறவுகளைப் பேணியவர்களுக்கும் எதிரானவர்களுக்குமான முரண்பாடாகாவே இன்றைய இனமுரண்பாட்டைப் பார்க்கலாம்.

Sathish Murugan . சொன்னது…

@-என்.கே.அஷோக்பரன்

அன்பு சகோதரன் -என்.கே.அஷோக்பரன் கு,

எல்லா ஊரிலும் காட்டி கொடுப்பவனும் கூட்டிகொடுப்பவனும் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள், ஒரு சில பெயர் தெரியாத முட்டாளின் பேச்சை வைத்து எல்லோரையும் தாங்கள் அப்படி தான் என்ற முடிவுக்கு வருவதில் எனக்கு வருத்தம் தான், உண்மையான கொஞ்சு தமிழ் பேசும் ஈழத்து சொந்தங்களை இலங்கையர் என்று நான் நினைக்க மாட்டேன் உங்களை போல. வீரமும் நெஞ்சுறுதியும் போராடும் குணமும் பெற்றதல்ல பாக்கியம், வழி நடத்தும் தன்னலமற்ற தலைவனை பெற்றதும் கூட நீங்கள் செய்த பாக்கியம் தான். போராட்டம் என்று வந்து விட்டால் போராடி பார்ப்பதே வீரம், மறவாதே சகோதரா... எங்கிருந்தாலும் போராடு, உன் மண்ணை மீட்க, அது உன் மண் மட்டுமல்ல உன் உரிமையும், உன் தலைமுறையின் ஏக்கமும் கூட. ஒரு உண்மையான தமிழனாய் என்றும் துணை நிற்போம் நம் ஈழத்திற்கு....

பதிவர் அவர்களுக்கு,
தாங்கள் இலங்கையர் என்பதில் தங்களுக்கு பெருமையா என்று எனக்கு தெரியாது ஆனால் நான் இலங்கையரை மனமார வெறுக்கிறேன், எம் ஈழத்து சொந்தங்களை குருதியிலும் கண்ணீரிலும் நனைய வைக்கும் அவர்களை மனமார வெறுக்கிறேன்...

எங்க பாரதி ராசா அம்புட்டு நல்லவரய்யா?... பாவி பய, எப்ப பார்த்தாலும் என் இனிய கிராமத்து மக்களேன்னு சொல்லியே, திரைக்கு பின்னாடி சுட்டுட்டாரே....

@ Sathish

ஒரு முட்டாளின் பேச்சைக் கேட்டா?

உங்களைப் போன்ற “சில” நல்லுள்ளங்கள் கோடிக் கணக்கில் இருக்கலாம், ஆனால் அந்த ஒருவன் தான் இந்தியாவின் அடையாளமாக, அதிகாரமாக இருக்கின்றான். இந்தியா ஜனநாயக நாடு ஆகையில் அந்த ஒருவன் பெரும்பான்மையின் பிரதிநிதியே ஆகிறான்.

மற்றப்படி எனக்கு இந்தியா ஈழத்துத் தமிழருக்கு உதவும், தமிழருக்காக நடடிவக்கை எடுக்கும் என்பதிலெல்லாம் நம்பிக்கையில்லை - என்னைப் பொருத்தவரை அதற்கான தேவையும் இனியில்லை. செய்ததே போதும். எம்மைப் பார்த்துக்கொள்ள எமக்குத் தெரியும்.

உங்களைப் போன்ற ஈர உள்ளங்களுக்கு நன்றி, ஆனால் இந்தியா எமக்கு இனி வேண்டாம். அதுவே பெரும்பான்மை ஈழத்தமிழர்களின் விருப்பாக இருக்கும் என்றும் நம்புகிறேன்.

அப்பாதுரை சொன்னது…

'வாடைக்காற்று' பாடலை நிறைய கேட்டிருக்கிறேன் - அப்துல் ஹமீது, ராஜேசுவரி ஷண்முகம் இந்தப் பாடலை மதிய வேளைகளில் அடிக்கடி ஒலிபரப்பியிருக்கிறார்கள்.
அருமையான பதிவு மதி. கல்லுக்குள் ஈரம் பார்த்ததில்லை. பொதுவாக தமிழ்த் திரைப்பட கலைஞர்கள் மூலக்கலைஞர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை. வருத்தம் தான். பாதி கமலகாசன் படங்கள் இந்த வகை தான்.

Unknown சொன்னது…

தமிழ்மணத்தில் வாக்களித்துள்ளேன் வெற்றிபெற வாழ்த்துக்கள்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top