இது எந்திரனுக்காக நான் ஓடியுள்ள ட்ரெயிலர் மட்டும் தான் விமர்சனமல்ல...
நம்பமுடியவில்லைத் தான். ஆரம்பத்தில் நண்பர் அலைபெசியில் அழைத்த போது விளையாட்டாக அழைப்பதாய் நினைத்தேன். பின்னர் அவருடைய பேச்சில் உள்ள உறுதியை நம்பிக் கிளம்பினேன். அப்பாடி ராஜா திரையரங்கில் என்ன ஒரு கூட்டம். தகவல் வேகமாய் பரவுவதற்கு இதுவும் ஒரு உதாரணம். என்ன ஒரு விடயம் என்றால் யாழின் பிரபல பதிவர்கள் ஆறுமணிக்கே பார்த்தது தான்.
சரி வாங்க படத்தில் நான் பார்த்ததில் பிடித்ததை மட்டும் சொல்கிறேன். ஏன்னா நாளைக்கு நீங்களும் பார்க்கணும். அத்தோடு இது விமர்சனமல்ல என்பதை முதல்லயே சொல்லிக்கொள்கிறேன். (அதுக்கு தானே என் இந்திய நண்பர் சிலர் இருக்கிறார்கள்)
நம்மிடம் ஹெலிவுட் பார்த்துப் பழக வேண்டிய பல விடயத்தை சங்கர் இப்படம் மூலம் சொல்லியிருக்கிறார். அந்தளவுக்கு மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது.
வழமையாக ஒரு விடயத்தை சரியான ஆதாரத்தடன் விளக்கும் சங்கர் இங்கும் சோர விடவில்லை. அது தான் பிரசவ நடைமுறை அங்கு எந்தவித கேள்விக்கும் இடம் வைக்காமல் கதையை நகர்த்தியிருக்கிறார். அதாவது இடுப்பு என்பை விலத்தி பேறை இலகுவாக்குவது பழைய முறையாகும். ஆனால் ரோபோ றொரெட் செய்து பேற்றை இலகுபடுத்துகிறது.
அத்துடன் திரையில் மனித உணர்வுகளை வேறுபடுத்திக் காட்டியிருப்பது இன்னும் சிறப்பானது. தீயில் மாட்டுப்படும் பெண்ணை ரோபோ காப்பாற்றுவதால் வரும் சம்பவத்தில் தீர்க்கமாக விளக்கியிருக்கிறார்.
அத்துடன் ரகுமானின் இசை அதிர வைக்கும் இடத்தில் அதிர்ந்தும் மென்மையான இடத்தில் மென்மையாகவும் இசையை சரியாக புகுத்த வேண்டிய இடத்தில் புகுத்தி எம்மை அதிர வைத்திருக்கிறார் (ரோபோ ஒலியலையைக் கூட்டிக் காட்டுவது).
ஐசின் அழகைப்பற்றிச் சொல்லத்தேவையில்லை அனால் ரஜனியின் அழகைப்பற்றிச் சொல்லியெ தீரணும். நம்பமுடியாத அளவுக்கு மாறியிருக்கிறார்.
ருத்திர நாகம் படத்தில் பார்த்த பாம்பைக் கற்பனை செய்து கொண்டு போன எனக்கு சங்கர் காட்டிய பாம்பைப் பார்த்த்தும் ஒரே பிரமிப்பு. கட்டாயம் இப்படம் ஹொலிவுட் கவனத்தை ஈர்க்கப்பொகிறது என்பது மட்டும் தெரிகிறது.
அத்துடன் சங்கரின் வழமையான முடிவில்லாத முடிவு தான் இன்னும் ஒரு திருப்தியைத் தருகிறது.
இது எந்திரனுக்காக நான் ஓடியுள்ள ட்ரெயிலர் மட்டும் தான் விமர்சனமல்ல...
24 கருத்துகள்:
ட்ரெய்லரே நல்லாயிருக்கு!
எத்தனை மணிக்கு பார்த்தீர்கள், படம் பிடிச்சிருக்கா? மக்கள் கருத்து என்ன? விரிவான விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.
//ஐசின் அழகைப்பற்றிச் சொல்லத்தேவையில்லை//
சாரி, டங்கு ஸ்லிப்பாகி அசின் எண்டு வாசிச்சிட்டன் :p
//கட்டாயம் இப்படம் ஹொலிவுட் கவனத்தை ஈர்க்கப்பொகிறது என்பது மட்டும் தெரிகிறது//
அப்ப ஆஸ்கர் கிடைச்சிடுமா?
மெகாஹிட் பதிவு...
ஈவினிங் Call பண்றேன்..
நல்ல இருக்கு படம் பாக்க தூண்டுது
எஸ்.கே said...
////....ட்ரெய்லரே நல்லாயிருக்கு!...////
நன்றி சகோதரா.. படத்தைப் பாருங்கள் இன்னும் திக்கித்திணறிப் போவீர்கள்...
எப்பூடி.. said...
ஃஃஃஃ...எத்தனை மணிக்கு பார்த்தீர்கள், படம் பிடிச்சிருக்கா? மக்கள் கருத்து என்ன? விரிவான விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்...ஃஃஃஃ
நன்றி ஜீவ்... தங்களை விடவா நான் எழுதப்போகிறேன்... நான் இரண்டாம் காட்சி தான் பார்த்தேன்...
Subankan said...
நன்றி சுபா.. மழை விட்டாலும் விடமாட்டேன் தூறல் பொழிய வைத்தக் கொண்டு தான் இருப்பேன்...
Cool Boy கிருத்திகன். said...
நன்றி கிருத்.... இதைப் போய் இப்படிப் பகழ்வது கொஞ்சம் ஒவராத் தெரியலியா தங்கட இதை விட அருமை...
யாதவன் said...
ஆம் அண்ணா கட்டாயம் பாரங்க... தங்களைப் போல ரசனை விரும்பிகளுக்க இத நல்ல தீனி போடும்...
படம் பாக்கணும் போல இருக்கு உங்க படைப்பை பார்க்க
அனா நல்ல எழுதியிருக்கிங்க
படைப்புகள் வளரட்டும்...வாழ்த்துகள்
எல்லாம் நன்றாக தான் இருக்கு நண்பரே ஆனால் படலுக்கு அப்புறம் ஒரு பரபரப்பான காட்சி! அது தான் உடைத்துப் போட்ட எந்திரனை காட்டும் காட்சி!! அனைவரும் எதிர் பார்த்ததே!!! தமிழ் சினிமா இன்னும் மாறவேண்டும்!!!!!!!!
Hi.. Thanks 4 sharing your idea.
by
TS
ரோபோ ரசிகன்
நல்ல இருக்கு...
நல்லா இருக்கு மதி உங்க பதிவுகள்..
நான் இன்னும் எந்திரன் பாக்கல..!
யாழில் தான் பார்க்கிறேனோ என்னவோ!
:)
Nice Trailer. வாழ்த்துகள்
sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/
rk guru said...
வாழ்த்துக்கம் வருகைக்கம் நன்றி சகோதரா...
தமிழ் பொழுதுபோக்கு.கொம் said...
ஃஃஃஃஃஎல்லாம் நன்றாக தான் இருக்கு நண்பரே ஆனால் படலுக்கு அப்புறம் ஒரு பரபரப்பான காட்சி! அது தான் உடைத்துப் போட்ட எந்திரனை காட்டும் காட்சி!! அனைவரும் எதிர் பார்த்ததே!!! தமிழ் சினிமா இன்னும் மாறவேண்டும்!!!!!!!!ஃஃஃஃ
நீங்க சொல்லறதிலயும் நியாயம் இருக்கிறத சகொதரா... நன்றி
TechShankar said...
ஃஃஃஃHi.. Thanks 4 sharing your idea.ஃஃஃஃஃ
அட உங்களுக்கும் காரணம் விளங்கிடுச்சா... நன்றி சகோதரா...
ஈரோடு தங்கதுரை said...
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரா..
கட்டாயம் வருகிறேன்..
சே.குமார் said...
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரா..
ஜீ... said...
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரா..
கட்டாயம் பாருங்க...
Sunitha said...
நன்றி சகோதரா... கட்டாயம் வருகிறேன்..
கருத்துரையிடுக