புதன், 6 அக்டோபர், 2010

நான் அறிந்த பாரதிராஜா....!!!!


                தனிச்சிறப்புகள் கொண்ட ஒருவன் தான் வாழ்க்கையில் வெல்ல முடியும் அதிலும் ஒரு துறையில் பல போட்டியாளர் மத்தியில் தமக்கென ஒரு தனியிடம் பெறுவது என்பது வித்தியாசம் தான்... முகப்பூச்சு, ஒப்பனை, கொட்டகை என்று பணத்தை அள்ளிவீசி படம் எடுத்துக் கொண்டிருந்தவருக்கு ஒரு புது உலகைக் காட்டியவர் தான் இந்த பாரதிராஜா. 
                1941 ம் ஆண்டு ஆடி மாதம் 17 ம் திகதி தமிழ் நாட்டின் அல்லி நகரம் எனும் இடத்தில் பெரியமாய தேவர் மற்றும் மீனாட்சியம்மா தம்பதிக்கு ஐந்தில் ஒன்றாகப் பிறந்தவர் தான் தமிழ் சினிமாவில் புது மாற்றம் காட்டிய இந்த பாரதிராஜா. இவர் மனைவி பெயர் சந்திர லீலாவதி ஆகும் இவருக்கு மனோஜ் என்றொரு மகனும் ஜனனி என்றொரு மகளும் உள்ளார்கள். வயல் வேலைகளே பிழைப்பென்றிருந்த இவருக்கு 1963 ல் 75 இந்திய ரூபாய் சம்பளத்துடன் அன்ரி மலேரியல் ஊழியராக வேலை கிடைத்தது. இவர் எழுதி நடித்த முதல் நாடகம் “ஊரு சிரிக்கிறது என்தாகும்.

                 இவர் தன் திரைப்படங்கள் பற்றிச் சொல்லும் போது “எனக்கு இந்த கொச்சை மொழியில் தான் பேச முடியும். எதையும் வார்த்தை ஜோடனை இல்லாமல் வெளிப்படையாக பேசுபவன் நான்என்கிறார். தனது நடிப்பனுபவம் பற்றிச் சொல்கையில் மூன்றாம் வகுப்புப் படிக்கையில் நரிக் குறத்தி வேசம் போட்டதை சொல்கிறார். அவர் தனது கிராமத்து அனுபவங்களைத்தான் படமாக்கி வெற்றிகண்டவர் உதாரணமாக ஹெல்த் இன்ஸ்பெக்டராக வேலை செய்கையில் பரிசோதனை முடிந்து வீட்டு வாசலில் இலக்கமிட்டாலே அபசகுணமெனக் கருதும் மக்களிடமிருந்து கதைக்களத்தை எமக்குக் காட்டியவர். அவரது முதல் நாடகம் பற்றிச் சொல்கையில் அதற்கு இசையமைத்த இளையராஜாவை நன்றி கூறுகிறார். அதற்கு பாடலாசிரியனாக இருந்தவர் தான் நம்ம கங்கை அமரன். இவர் இளையராஜாவை நினைவு கூற முக்கிய காரணம் அவர் மூலம் தான் ஜி.கே. வெங்கடேஸ் இடம் அறிமுகமாகி அவர் மூலம் புட்டண்ணாவிடம் உதவி இயக்குனராகச் சேர்ந்தார். அதன் பின் புட்டண்ணா எடுத்த “தாகம்”, எம்.கிருஸ்ணன் நாயர் எடுத்த “தலைப்பிரசவம்”, ஏ.ஜெயக்காந்தன் எடுத்த “அதிஸ்டம் அழைக்கிறது”. என்று தொடர்ந்து ஆறு இயக்கனரிடம் வேலைசெய்திருக்கிறார். தனது முதல் படமான 16 வயதினிலே பற்றிச் சொல்கையில் தனது “மயிலுஎன்ற கதையை FILM CORPPARATION OF INDIA விற்கு அனுப்பியதாகவும் ஆனால் அதை யாரும் எற்றுக் கொள்ளவில்லை எனவும் கூறினார். அதே கதையை 2 ஆண்டுகளின் பின் தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவை சந்திக்கையில் “சிவப்ப ரோஜாக்கள்“ கதையை சொல்லிவிட்டு மேலும் கதைகளைச் சொல்கையில் தான் இந்த “மயிலு குறுக்கே வந்து ராஜ்கண்ணுவை கவர்ந்து விட்டாள் பல கதை மாற்றத்திற்குப் பின் படமாக்கப்பட்ட தமிழ் சினிமாவில் புது அத்தியாயம் வகுத்துச் சென்றது “மயிலு என்று உருவாக்கப்பட்ட கதையை உள்ளடக்கிய “16 வயதினிலே திரைப்படம். அத்துடன் அவர் ஒரு விசயத்தையும் சொன்னார் அவரது மயிலு கதை இப்பவும் பத்திரமாக இருக்கிறதாம். காரணம் இடைவேளையின் பின் மயிலு ஒரே ஒரு வசனம் தான் பேசினாளாம். தான் இயக்கும் படத்திற்கான காட்சிகளை அவர் முதலிலெயே ஒற்றைகளில் குறித்து வைப்பதில்லை. அவர் மனதில் ஊற்றெடுப்பது தான் அவர் திரைக்காட்சிகளாகும்.

          பாரதிராஜா தனக்குப்பிடித்த இயக்குனர்கள் மற்றும் திரைப்படங்கள் பற்றிச் சொல்கையில்
சிறீதரின் திரைப்படங்கள் ஓரளவு பிடிக்கும்.
பாலச்சந்தரின் சில படங்கள் பிடிக்கும்.
மெஹாபுப்கான் இயக்கிய “மதர் இந்தியா“ பார்த்துவிட்டு 3 நாள் நித்திரையின்றித் தவித்தாராம்.
ராமு காரியத்தின் “செம்மீன்“
பி.எம் மேனனின் “உலவு தீரமும்
பிமல்ராயின் படங்கள்
ஷியாம் பெனகலின் முதல் படமும் தன் மனதைப் பாதித்ததாகக் கூறுகிறார்.

சத்யஜித்ரேஜின் பதர் பாஞ்சாலியளவுக்கு அவரின் மற்ற படங்கள் தனக்கு பாதிப்பை ஏற்படுத்த வில்லையாம்.

டேவிட் லீயின் படம் தான் தனக்கு முதல் படத்திற்கான விதையைக் கொடுத்தது என்கிறார்.

          இவர் இளையராஜா பற்றிச் சொல்கையில் “நாணல் தட்டையை அறுத்து சுட வைத்து அதில் துளையிட்டு இனிமையாகப் புல்லாங்குழல் வாசிப்பாராம். அதுமட்டுமல்ல ஜன்னல் கம்பிகளுக்கிடையில் ஒரு மெல்லிய கம்பிகட்டி இனிமையாக வீணையும் மீட்டுவாராம்.

பாரதிராஜா இன்னொருவர் பற்றிச் சொல்கையில் “ஜீன்ஸ் கோட்டுடன் ஹிட்டாரும் கையுமாய் நடித்துக் கொண்டிருந்த ஒருவரிடம் போய் ஒரு படத்திற்கு கோவணத்துடன் நடிக்கணும் இயலுமா எனக் கேட்ட போது கோவணமென்ன நீங்கள் சொன்னால் ஒன்றுமில்லாமலே நடிப்பேன் என்றாராம். அது வேறுயாருமல்ல கமலஹாசன் தான் அது.

             இவரின் கருத்தம்மா படமானது தேசியவிருது பெற்றது இவருக்கு ஒரு வெற்றியாகும். அத்துடன் ஈழத்தமிழர் பிரச்சனையை முக்கியப்படுத்தி தனக்கு மத்திய அரசால் கிடைத்த பத்மசிறி விருதையே நிராகரித்தவர். இவரது தீவிர தமிழ்ப்பற்றுக்கு இன்னும் ஒரு உதாரணம் ஒரு முறை நடிகை திரிஷா மேடையொன்றில் ஆங்கிலிஷ் மொழியில் பேசும் போது மதுரையில் பிறந்த அவரை தமிழ் மொழியில் கதைக்கும்படி மேடையிலெயே கண்டித்தார். (அவர் அழுததைச் சொன்னால் பலருக்கு அழுகை வந்து விடும்). இவரது சில படங்களில் சாதியம் தலை உயர்த்தியுள்ளதையும் சிலர் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இருந்தாலும் அவர் தனது பேட்டிகளில் சரியாக விளக்கியிருக்கிறார்.

     இனி இவரால் திரையுலகிற்குள் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சிலரைப் பார்ப்போம்.

கவுண்டமணி - 16 வயதினிலே
ராதிகா – கிழக்கே போகும் ரயில்
சுதாகர் - கிழக்கே போகும் ரயில்
பாக்கியராஜ் – புதியவார்ப்புகள்
ரதி – புதியவார்ப்புகள்
விஜயசாந்தி – கல்லுக்குள்ஈரம்
அருணா - கல்லுக்குள்ஈரம்
வாகை சந்திரசேகர் - கல்லுக்குள்ஈரம்
நிழல்கள் ரவி – நிழல்கள்
ராஜசேகர் – நிழல்கள்
ரோகினி – நிழல்கள்
வைரமுத்து – நிழல்கள்
கார்த்திக் – அலைகள் ஓய்வதில்லை
ராதா - அலைகள் ஓய்வதில்லை
தியாகராஜன் - அலைகள் ஓய்வதில்லை
பாண்டியன் – மண்வாசனை
ரேவதி – மண்வாசனை
ரஞ்சனி – முதல் மரியாதை
தீபன் - முதல் மரியாதை
ராஜா – கடலோரக்கவிதைகள்
ரேகா – கடலோரக்கவிதைகள்
மணிவண்ணன் – கொடிபறக்குது
நெப்போலியன் – புது நெல்லு புது நாத்து
சுகன்யா - புது நெல்லு புது நாத்து
ருத்ரா - புது நெல்லு புது நாத்து
ராகுல் - புது நெல்லு புது நாத்து
ரஞ்சிதா – நாடோடித் தென்றல்
மனோஜ் – தாஜ்மகால்
ரியா சென் – தாஜ்மகால்
உமா – கடல் பூக்கள்
சிந்து மேனன் - கடல் பூக்கள்
பிரியாமணி – கண்களால் கைது செய்
வசீகரன் - கண்களால் கைது செய்

இவர் இயக்கிய படங்கள் சில

கண்களால் கைதுசெய்(2004)
தாஜ்மகால்(1999)
அந்திமந்தாமரை (1996)
கருத்தம்மா (1995)
பசும்பொன் (1995)
கிழக்கு சீமையிலே (1993)
காப்டன் மகள் (1992)
நாடோடி தென்றல் (1992)
புது நெல்லு புது நாத்து (1991)
என் உயிர் தோழன் (1990)
கொடி பறக்குது (1989)
ஆராதனா (1987)
வேதம் புதிது(1987)
கடலோர கவிதைகள்(1986)
முதல் மரியாதை (1985)
ஒரு கைதியின் டைரி (1984)
மண் வாசனை (1983)
புதுமைப் பெண் (1983)
காதல் ஓவியம் (1982)
வாலிபமே வா வா (1982)
அலைகள் ஓய்வதில்லை (1981)
பன்னீர் புஷ்பங்கள் (1981)
டிக் டிக் டிக் (1981)
ரெட் ரோஸ் (1980)
கல்லுக்குள் ஈரம் (1980)
நிழல்கள் (1980)
நிறம் மாறாத பூக்கள்(1979)
புதிய வார்ப்புகள்(1979)
கிழக்கே போகும் ரெயில்(1978)
சிகப்பு ரோஜாக்கள்(1978)
பதினாறு வயதினிலே (1977)

இவர் எழுதிய படங்கள் சில

கண்களால் கைது செய் (2004)
கருத்தம்மா (1995)
நாடோடித் தென்றல்(1992) (திரைக்கதை)
ஆராதனா (1987) (கதை)
முதல் மரியாதை(1985)
டிக் டிக் டிக்(1981)
ரெட் ரோஸ்(1980) (திரைக்கதை) (கதை)

இவர் தயாரித்த படங்கள் சில
அல்லி அர்ஜூனா (2001)
தாஜ்மகால் (1999)
கருத்தம்மா(1995)

இக்கட்டுரைக்கு இது வரைகாலம் நான் சேகரித்து வைத்திருந்த பத்திரிகைகளும், தகவல் உதவித் தளமான விக்கிபீடியாவும் உதவியாக இருந்தன...




About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

33 கருத்துகள்:

தமிழ் அமுதன் சொன்னது…

good post.!

Bavan சொன்னது…

நான் உங்கள் பாசத்துக்குரிய பவன் பேசுகிறேன்..:P

நல்ல தொகுப்பு தல..:)

பெயரில்லா சொன்னது…

இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்

ravikumar சொன்னது…

Moreover Mr.Bharathiraja's Director's Hiararchy also too big if u compare with Mr.Mani, Mr.KB & Mr.Sridhar
Bharathiraja - Bhagyaraj, Manobala, Manivannan- Parthiban, Pandiarajan- vikraman- KS Ravikumar- Cheran

ம.தி.சுதா சொன்னது…

@ nis (Ravana) said...
வருகைக்கு மிக்க நன்றி சகோதரா...

@ தமிழ் அமுதன் said...
வருகைக்கு மிக்க நன்றி சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

@ Bavan said...
தம்பி பவன் நான் நினைத்தேன் பாரதிராஜா தான் என் புளொக்கிற்கு வந்து விட்டார் என்று...
நன்றி பவன்

Riyas சொன்னது…

பாரதிராஜா பற்றிய அருமையான தொகுப்பு நண்பா.. தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்

Assouma Belhaj சொன்னது…

: )
தெரியாத பல தகவல்ளை அறிந்தேன் நன்றி

பாரதி ராஜா பற்றி..நிறைய தகவல்கள் ஒரே இடத்தில் தந்ததற்கு நன்றி.. :-)

Chitra சொன்னது…

நிறைய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

பெயரில்லா சொன்னது…

அருமை..அருமை..

ம.தி.சுதா சொன்னது…

Riyas said...
வருகைக்கு மிக்க நன்றி சகோதரா...
இன்னும் ஒரு வாரம் காத்திருங்கள் இன்னும் சொல்கிறேன்.

ம.தி.சுதா சொன்னது…

Speed Boy said...
ஃஃஃ...: )
தெரியாத பல தகவல்ளை அறிந்தேன் நன்றி...ஃஃஃ
வருகைக்கு மிக்க நன்றி சகோதரா...
இன்னும் இருக்கிறது காத்திருங்கள்...

ம.தி.சுதா சொன்னது…

Ananthi said...
ஃஃஃஃ...பாரதி ராஜா பற்றி..நிறைய தகவல்கள் ஒரே இடத்தில் தந்ததற்கு நன்றி.. :-).....ஃஃஃஃ
வருகைக்கு மிக்க நன்றி சகோதரி...

ம.தி.சுதா சொன்னது…

Chitra said...
ஃஃஃ...நிறைய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி...ஃஃஃஃ
வருகைக்கு மிக்க நன்றி அக்கா...

ம.தி.சுதா சொன்னது…

padaipali said...
ஃஃஃஃஃ....அருமை..அருமை..ஃஃஃஃஃ
கொஞ்சம் பொறுமை பொறுமை....
வருகைக்கு மிக்க நன்றி சகோதரா.

anuthinan சொன்னது…

தகவலுக்கு நன்றிகள் அண்ணா!!

நல்ல தொகுப்பு!!!

தகவல்களுக்கு நன்றி,
ஆனால் பன்னீர் புஷ்பங்கள் பாரதி-வாசு(சந்தான பாரதி-P.வாசு) இணைந்து இயக்கியது

ம.தி.சுதா சொன்னது…

Anuthinan S said...
வருகைக்கம் வாழ்த்துக்கும் நன்றி அனு...!!!

ம.தி.சுதா சொன்னது…

Kuppathu Raja said...
ஃஃஃஃஃதகவல்களுக்கு நன்றி,
ஆனால் பன்னீர் புஷ்பங்கள் பாரதி-வாசு(சந்தான பாரதி-P.வாசு) இணைந்து இயக்கியதுஃஃஃஃ
நன்றி சகோதரம்.. என் அறிவுக்கெட்டிய விதத்தில் எழுதியதால் தெரிந்ததை மட்டுமெ எழுத முடிந்துது....

எப்பூடி.. சொன்னது…

பாரதிராஜாவை தவிர்த்துப்பார்த்தால் 78 வருட தமிழ் சினிமா வரலாற்றில் மண்வாசனையை பூதக்கண்ணாடிகொண்டு தேடித்தான் பார்க்கவேண்டியிருக்கும். சிகரம் தொட்ட சாதனையாளர்.

பதிவிற்கு வாழ்த்துக்கள்.

ம.தி.சுதா சொன்னது…

எப்பூடி.. said...
////பாரதிராஜாவை தவிர்த்துப்பார்த்தால் 78 வருட தமிழ் சினிமா வரலாற்றில் மண்வாசனையை பூதக்கண்ணாடிகொண்டு தேடித்தான் பார்க்கவேண்டியிருக்கும். சிகரம் தொட்ட சாதனையாளர்.////
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரா...

Jana சொன்னது…

பாராதிராஜா செதுக்கியவைகளில் எனக்கு பிடித்தது பாக்கியராஜா தான். அதிலிருந்து வந்த பார்த்தீபன், பாண்டியராஜனையும் பிடிக்கும்.

பார்த்தீபனைத்தவிர மற்றவர்களை சந்தித்து உள்ளேன்.

தமிழ் சினிமா வரலாற்றில் பாரதிராஜா- இளையராஜா- வைரமுத்து என்ற அந்த முச்சக்கரவர்த்திகளின் கூட்டு. ஒரு வசந்தகால நாட்கள்.

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

பாரதிராஜாவின் சமீபத்திய சிறந்த படமான போம்மலாட்டத்தையும், அதில் அறிமுகமான காஜல் அகர்வாலையும் விட்டு விட்டீரே.....

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

விஜயகாந்தை வைத்து தமிழ்ச்செல்வன் என்று ஒரு படம் கொடுத்தார். சேர்த்துக்கொள்ளவும்.

Unknown சொன்னது…

பாரதிராஜா பற்றி மேலும் தகவலைத் தந்ததிற்க்கு நன்றி நண்பன்

http://rkguru.blogspot.com/ சொன்னது…

நல்ல தொகுப்பு...good post congrats

ம.தி.சுதா சொன்னது…

Jana said...
//////தமிழ் சினிமா வரலாற்றில் பாரதிராஜா- இளையராஜா- வைரமுத்து என்ற அந்த முச்சக்கரவர்த்திகளின் கூட்டு. ஒரு வசந்தகால நாட்கள்.////
உண்மை தான் அண்ணா அவை மீள திரும்பாது.. திரும்பினாலும் நம்மவர் எற்பார்களோ தெரியாது...

ம.தி.சுதா சொன்னது…

ரஹீம் கஸாலி said...
தகவல்கள் தந்தமைக்கு நன்றி சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

மகாதேவன்-V.K said...
ஃஃஃஃபாரதிராஜா பற்றி மேலும் தகவலைத் தந்ததிற்க்கு நன்றி நண்பன்ஃஃஃ
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

rk guru said...
ஃஃஃஃஃநல்ல தொகுப்பு...good post congratsஃஃஃஃ
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரா...

கவி அழகன் சொன்னது…

வாழ்த்துக்கள்

ம.தி.சுதா சொன்னது…

யாதவன் said...
///வாழ்த்துக்கள்///
மிக்க நன்றி அண்ணா..

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top